என் மலர்
- முதல்-அமைச்சர் கருணாநிதி படத்துக்கு தென்காசி நகர தி.மு.க. சார்பில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் தி.மு.க. தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
தென்காசி:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்துக்கு தென்காசி நகர தி.மு.க. சார்பில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி நகராட்சி தலைவரும், நகர தி.முக. செயலாளருமான சாதிர் தலைமை தாங்கினார்.
இதில் தென்காசி நகர்மன்ற துணை தலைவர் கே.என்.எல். சுப்பையா, முன்னாள் மாவட்ட துணை செயலாளர் ஆயான் நடராஜன், தென்காசி நகர தி.மு.க. நிர்வாகிகள் துணை செயலாளர்கள் பால்ராஜ், ராம்துரை பொருளாளர் ஷேக்பரீத், மாவட்ட பிரதிநிதி முகைதீன் பிச்சை, வக்கீல் அணி முருகன் ஜெகதீசன், ராஜா, ரகுமான் சாதத், மாவட்ட பொறியாளர் அணித்தலைவர் தங்கபாண்டியன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அப்துல் ரஹீம், மாவட்ட விவசாய அணி ராஜேந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட ம.தி.மு.க. அவைத் தலைவர் வெங்கடேஸ்வரன் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
- தலைமை மருத்துவர் அனிதாபாலின் கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் அவசியம் குறித்து பேசினார்.
- வினாடி-வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் கடந்த 1-ந்தேதி முதல் நேற்று வரை தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தலைமை பொறுப்பு மருத்துவர் அனிதாபாலின் தலைமையில் சிறப்பு மருத்துவர்கள் மீனாட்சி, குழந்தைகள் நல மருத்துவர்கள் முரளிதரன், ராஜ்குமார், பொதுநல அறுவை சிகிச்சை மருத்துவர் சரவணகுமார் மற்றும் செவிலிய கண்காணிப்பாளர், செவிலியர்கள், மருத்துவ மனை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். தலைமை மருத்துவர் அனிதாபாலின் கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு தாய்ப்பா லின் அவசியம் குறித்து பேசினார். விழாவில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு மருத்துவமனை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் சந்தேகங்களுக்கு குழந்தைகள் நல மருத்துவர் ராஜ்குமார் விளக்க மளித்தார். மருத்துவர் மீனாட்சி நன்றி கூறினார்.
- அருண்பாண்டி புதுப்பட்டி காட்டுப் பகுதியில் கிடை அமைத்து ஆடுகள் மற்றும் மாடுகள் வளர்த்து வருகிறார்.
- அருண் பாண்டிக்குச் சொந்தமான ஆட்டை சந்தையில் விற்பனை செய்வதற்காக 2 பேர் வைத்திருந்தது தெரிய வந்தது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகேயுள்ள கீழக் குத்தப்பாஞ்சான் பகுதியை சேர்ந்தவர் அருண்பாண்டி(வயது 26). இவர் புதுப்பட்டி காட்டுப் பகுதியில் கிடை அமைத்து ஆடுகள் மற்றும் மாடுகள் வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வந்த சுமார் ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள சினை ஆடு ஒன்று நேற்று முன்தினம் காணவில்லை. காணாமல் போன தனது ஆட்டைத் தேடி அருண்பாண்டி, கடையம் சந்தையில் சென்று பார்த்த போது, 2 பேர் அருண் பாண்டிக்குச் சொந்தமான ஆட்டை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் பிடித்து அருண்குமார் கடையம் போலீசாரிடம் ஒப்படைத்தார். கடையம் போலீசார் ஆலங்குளம் போலீசாரைத் தொடர்பு கொண்டு இரு ஆடு திருடர்கள் மற்றும் ஆட்டை ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள் ஆலங்குளம் அருகேயுள்ள லெட்சுமியூர் பொன்னுசாமி(58) மற்றும் அருணாசலம்(60) ஆகியோர் என்பதும், ஆட்டைத் திருடி விற்பனைக்குக் கொண்டு சென்றவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து,2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த ஆலங்குளம் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
- 2 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒன்றிய, நகர, பேரூர் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
- கருணாநிதியின் 5-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என ராஜா எம்.எல்.ஏ., பேசினார்.
சங்கரன்கோவில்:
தென்மண்டலத்துக்கு உட்பட்ட 19 மாவட்டங்களின் உள்ள தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கூட்டம் வருகிற 17-ந் தேதி ராமநாதபுரம் தேவிபட்டினம் சாலை பேராவூர் என்ற இடத்தில் நடைபெறுகிறது.
ஆலோசனை கூட்டம்
கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். தென்காசி வடக்கு மாவட்டத்தை சேர்ந்த சங்கரன்கோவில் மற்றும் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் இந்த பயிற்சி பட்டறைக்கு கலந்து கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. இதில் ராஜா எம்.எல்.ஏ. பேசியதாவது:-
2 சட்டமன்ற தொகுதியிலும் உள்ள வாக்குச்சாவடி முகவர்களை மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் அழைத்து வர வேண்டும். இது தொடர்பாக 2 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒன்றிய, நகர, பேரூர் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். நிர்வாகிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு தென்காசி வடக்கு மாவட்டத்தில் இருந்து அனைத்து வாக்குச்சாவடி முகவர்களும் பயிற்சி பாசறையில் கலந்து கொள்ள வேண்டும்.
மேலும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி விளையாட்டுப் போட்டிகள், கருத்தரங்கங்கள், கலைஞரின் சாதனை விளக்க கூட்டங்கள், ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் கட்சி கொடி ஏற்றுதல், கட்சி மூத்த முன்னோர்களுக்கு பொற்கிழி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் யூ.எஸ்.டி. சீனிவாசன், பரமகுரு, மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபன், மாவட்ட துணை செயலாளர்கள் ராஜதுரை, புனிதா, ஒன்றிய செயலாளர்கள் லாலா சங்கரபாண்டியன், கடற்கரை, பொன் முத்தையா பாண்டியன், பூசை பாண்டியன், ராமச்சந்திரன், மதி மாரிமுத்து, கிறிஸ்டோபர், சேர்மத்துரை, வெற்றி விஜயன், பொதுக்குழு உறுப்பினர்கள் வேல்சாமி பாண்டியன், சங்கரன்கோவில் மாரிச்சாமி, பராசக்தி, மகேஸ்வரி, வெள்ளத்துரை, நகர செயலாளர்கள் சங்கரன்கோவில் பிரகாஷ், புளியங்குடி அந்தோணிசாமி பேரூர் செயலாளர்கள் ரூபி பாலசுப்ரமணியன், மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
- சிறப்பு விருந்தினராக உலக சிலம்ப விளையாட்டு சங்க நிறுவனத் தலைவர் டாக்டர் சுதாகரன் கலந்து கொண்டார்.
- வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பழனிநாடார் எம்.எல்.ஏ. பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கினார்.
தென்காசி:
உலக சிலம்ப விளையாட்டு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் பாவூர்சத்திரத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. போட்டிகளை தொழிலதிபர் ஆர்.கே. காளிதாசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினராக உலக சிலம்ப விளையாட்டு சங்க நிறுவனத் தலைவர் டாக்டர் சுதாகரன் கலந்து கொண்டார். இதில் திரைப்பட இயக்குனர் அம்மா விஜய் மற்றும் ஆறறிவு திரைப்பட நடிகர் அம்பேத்கர், சின்னத்திரை புகழ் தனபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக பாலசுப்பிரமணியன் மற்றும் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பழனிநாடார் எம்.எல்.ஏ. பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பாவூர்சத்திரம் காமராஜர் மார்க்கெட் சங்க நிர்வாகிகள் தலைவர் பாலசுப்பிரமணியன், வணிகர்கள் சங்க செயலாளர் விஜய சிங்கராஜ், பொருளாளர் ஆரோக்யராஜ், வக்கீல் உமாபதி ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டி ஏற்பாடுகளை தென்காசி உலக சிலம்ப விளையாட்டுச் சங்கத் தலைவர் சத்தியசீலன், செயலாளர் சுதர்சன் மற்றும் சங்க நிர்வாகிகள் கோபி, ஜெயராஜ், சுந்தர் ஆகியோர் செய்து இருந்தனர்.
- மத்திய அரசை கண்டித்து தென்காசி புதிய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஆர்ப்பாட்ட கோஷங்களை நகர காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் ஹலால் சலீம் தொடங்கி வைத்தார்.
தென்காசி:
தென்காசி சமூக நல்லிணக்க கூட்டமைப்பு மற்றும் காங்கிரஸ் ஏ.ஐ.பி.சி. பிரிவு சார்பில் மணிப்பூர், அரியானா வன்முறையை தடுக்க தவறியதாகவும், பொதுசிவில் சட்டத்தை கொண்டு வர துடிப்பதாகவும் கூறி மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தென்காசி புதிய பஸ் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் தென்மண்டல ஏ.ஐ.பி.சி. தலைவர் டாக்டர் சங்கரகுமார் தலைமை தாங்கினார். சமூக நல்லிணக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முதலியார் பட்டி அப்துல் காதர் தொகுத்து வழங்கினார்.
வி.சி.க. மாவட்ட துணை செயலாளர் சித்திக் வரவேற்றார். நகர் மன்ற துணைத்தலைவர் கே.என்.எல்.சுப்பையா, கடைய நல்லூர் நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், ம.தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் வெங்க டேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்ட கோஷங்களை நகர காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் ஹலால் சலீம் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் செய்யது சுலைமான், மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் எம்.எல்.ஏ., தி.மு.க. தெற்கு மாவட்ட பொறு ப்பாளர் ஜெயபாலன், நகர செயலாளர் சாதிர், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை உட்பட பலர் பங்கேற்றனர்.
- ஆலோசனை கூட்டத்திற்கு நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார்.
- கூட்டத்தில் சிற்றுண்டி திட்டத்தின் கீழ் எவ்வாறு உணவு தயாரிக்க வேண்டும்? என்பது உள்ளிட்ட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நகராட்சியில் உள்ள நகராட்சி பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில் அந்தத் திட்டப் பணியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார். நகராட்சி மேற்பார்வையாளர் கோமதிநாயகம் முன்னிலை வகித்தார். இதில் காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் எவ்வாறு உணவு தயாரிக்க வேண்டும்?. உணவு விநியோகம் செய்வது, குறிப்பிட்ட கால அளவில் உணவை பள்ளி மாணவர்களுக்கு அனுப்புவது குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் காலை சிற்றுண்டி திட்டப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
- தென்காசி ரெயில் நிலையத்தின் 2-வது நுழைவாயிலை அபிவிருத்தி செய்தல், உள்ளிட்ட பணிகள் நடைபெறுகிறது.
தென்காசி:
நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 508 ரெயில் நிலையங்களை புனரமைக்கப்பட உள்ளது. இதற்காக ரெயில்வே அமைச்சகம் ரூ.24,470 கோடிக்கு மேல் ஒதுக்கியது. இந்த பணிகளுக்கு பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
தமிழகத்தில் தென்காசி உள்பட 18 ரெயில் நிலையங்களில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தென்காசி ரெயில் நிலையத்தின் அபிவிருத்தி ரூ.7.08 கோடியில் நடைபெறுகிறது. அதாவது ரெயில்
நிலையத்தின் 2-வது நுழைவாயிலை அபிவிருத்தி செய்தல், அந்த நுழை வாயிலில் புதிய நிலையக் கட்டிடத்தை நிர்மாணித்தல், அணுகு சாலைகளை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் நடைபெறுகிறது.
விழாவில் தனுஷ் குமார் எம்.பி., பழனி நாடார் எம்.எல்.ஏ., தென்காசி நகராட்சி சேர்மன் சாதிர், அமர்சேவா சங்கம் ராமகிருஷ்ணன்,
கூடுதல் கோட்ட ரெயில்வே மேலாளர் ரமேஷ் பாபு, தென்காசி பா.ஜனதா மாவட்டத் தலைவர் ராஜேஷ் ராஜா, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் மருது பாண்டியன், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன், ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா மற்றும் ரெயில்வே ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஆலங்குளம் பேரூராட்சியில் அமைக்கப்பட்ட சாலையை முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்பு திறந்து வைத்தார்.
- புதிய சாலை அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தொடங்கி வைத்தார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் பேரூராட்சி 3-வது வார்டில் பேவர் பிளாக் சாலை திறப்பு மற்றும் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.
ஆலங்குளம் பேரூராட்சியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாலையை முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்பு திறந்து வைத்தார். அப்பகுதியில் பேரூராட்சி பொது நிதி ரூ.7 லட்சத்தில் புதிய சாலை அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளில் பேரூராட்சி துணைத் தலைவர் ஜாண் ரவி, பேரூராட்சி உறுப்பினர்கள் எஸ்.டி.சாலமோன்ராஜா, சுபாஷ் சந்திரபோஸ், ஆரோக்கியமேரி, காங்கிரஸ் நகரத் தலைவர் வில்லியம் தாமஸ், வட்டாரத் தலைவர் ரூபன் தேவதாஸ், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர்கள் அருணாசலம், மோகன்லால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
- தி.மு.க. வை வெற்றிபெற இப்போது முதலே தொண்டர்கள் அனைவருடன் இணைந்து களப்பணி ஆற்றுவேன் என்று ஜெயபாலன் பேசினார்.
தென்காசி:
தென்காசி அருகே இலஞ்சி யில் நடைபெற்ற தெற்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி னார்.
வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை தாங்கி பேசியதாவது:-
தேர்தலில் தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 3 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட்டணி கட்சி வெற்றி பெற்றது. ஆனால் இனிவரும் தேர்தல்களில் 3 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. வை வெற்றிபெற இப்போது முதலே தொண்டர்கள் அனைவருடன் இணைந்து களப்பணி ஆற்றுவேன். வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் தென்காசி தொகுதியை தி.மு.க. கைப்பற்ற இப்போது முதல் கட்சி நிர்வாகிகளுடனும், தொண்டர்களுடன் இணைந்து உழைப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு புதிய மாவட்ட பொறுப்பாளராக ஜெயபாலனை நியமித்த தி.மு.க. தலைவர், முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக ஏற்பட்ட பாலியல் வன்கொ டுமைக்கு துணை போகும் மத்திய அரசை கண்டித்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ள இளைஞர் அணி மாநாட்டில் தெற்கு மாவட்டம் சார்பாக திரளாக கலந்து கொள்வது, ராமநாதபுரத்தில் நடைபெற உள்ள பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான கூட்டத்தில் தெற்கு மாவட்டம் சார்பாக திரளாக கலந்து கொள்வது எனவும், தென்காசி மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமையும் என அறிவிப்பு வெளியிட்ட முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
தொடர்ந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசும்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் எல்லோருக்கும் நல்லது நடக்கும். வருகிற மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அதற்கு அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் சுந்தர மகாலிங்கம், பொருளாளர் ஷெரிப், துணைச் செயலா ளர்கள் கனிமொழி, தமிழ்ச்செல்வன், கென்னடி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, முத்துப்பாண்டி, ஜேசுராஜன், ஆறுமுகச்சாமி பொதுக்குழு உறுப்பினர்கள் சீவநல்லூர் சாமித்துரை, அருள், ராஜேஸ்வரன், தமிழ்ச்செல்வி, ரஹீம், ரவிச்சந்திரன், சேக் தாவூத், சமுத்திரபாண்டி, எழில்வாணன், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, அப்துல் காதர் செல்லப்பா, ஒன்றிய செயலாளர்கள் அழகு சுந்தரம், செல்லத்துரை, மாரி வண்ணமுத்து, அன்பழகன், சிவன், பாண்டியன், சீனித்துரை, ஜெயக்குமார், மகேஷ் மாயவன், திவான் ஒலி, ரவிசங்கர், சுரேஷ், தென்காசி நகர்மன்ற தலைவரும், தென்காசி நகர செயலாள ருமான சாதிர், செங்கோட்டை நகரச் செயலாளர் வெங்கடேசன், அப்பாஸ், பேரூர் செயலாளர்கள் சுடலை, பண்டாரம், ராஜராஜன், வெள்ளத்துரை, தங்கப்பா, லட்சுமணன், ஜெகதீசன், அழகேசன், முத்து, சிதம்பரம், நெல்சன், கோபால், மாவட்ட வக்கீல் அணி வேல்சாமி, மேலகரம் பேரூராட்சிமன்ற துணைத் தலைவர் ஜீவானந்தம், மாவட்ட பொறியாளர் அணி தங்கபாண்டியன், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணராஜா, தொண்டரணி அமைப்பாளர் இசக்கி பாண்டியன், துணை அமைப்பாளர் குற்றாலம் சுரேஷ், இலஞ்சி பேரூராட்சி தலைவர் சின்னத்தாய், இலஞ்சி பேரூர் கழகச் செயலாளர் முத்தையா பாண்டியன், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன், மேலகரம் பேரூராட்சிமன்ற தலைவர் வேணி வீரபாண்டி யன், குத்துக்கல்வலசை ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ், மேலகரம் பேரூராட்சி மன்ற உறுப்பி னர்கள் சண்முகம் என்ற சேகர், கபில், நாகராஜ்சரவணார், குத்துக்கல்வலசை கிளைச் செயலாளர் காசிகிருஷ்ணன், அரசு முதல் நிலை ஒப்பந்ததாரர் கரையாளனூர் சண்முகவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- அடிக்கல் நாட்டு விழாவிற்கு மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமை தாங்கினார்.
- நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் கீழநீலிதநல்லூர் முதல் மருதன்கிணறு வரை செல்லும் சாலையில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடி மதிப்பில் பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடந்தது. மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பாலம் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இதில் சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், ஊராட்சிமன்ற தலைவர் தங்கதுரை, ஒன்றிய கவுன்சிலர் நாகராஜன், முத்தரசு, மாரியப்பன், சுவாமிதாஸ், பாபு, பொறியாளர் அணி மாதவன், இளைஞர் அணி ரமேஷ், ஒப்பந்ததாரர் மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஆட்டோவை சோதனை செய்த போது அதில் குட்கா புகையிலை கடத்தி வந்தது தெரியவந்தது.
- புகையிலை பொருட்களை சுற்றுலா பயணிகளுக்கு அதிக லாபத்திற்கு விற்பனை செய்வதாக கைதானவர்கள் கூறினர்.
தென்காசி:
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி டி.எஸ்.பி. நாகசங்கர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளபாண்டி, முதல்நிலை போலீசார் சரவணகுமார், சிவப்பிரகாஷ், சேர்மக்கண்ணன், அன்பரசன் ஆகியோர் குத்துக்கல்வலசை பகுதியில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த ஒரு ஆட்டோவை சோதனை செய்த போது வெள்ளமடை மாணிக்கம் மகன் சுரேஷ், ஆட்டோவை ஒட்டிவந்த கீழப்புலியூரை சேர்ந்த சதீஷ் ஆகியோர் தமிழக அரசால் தடை செய்யபட்ட குட்கா புகையிலை கடத்தி வந்தது தெரியவந்தது.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் கரடி குளத்திலிருந்து கொண்டு வந்ததாகவும், மேலும் பொருட்கள் இருப்பதாக கூறியதின் அடிப்படையில் கரடிகுளம் சென்று மேலும் குட்கா புகையிலை கைப்பற்றி, அதை வைத்திருந்த கரடிகுளம் குருசாமி மகன் சுரேஷ் (வயது 31) உள்பட 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் குற்றாலத்திற்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு அதிக லாபத்திற்கு விற்பனை செய்வதாகவும், குற்றாலம் காசிமேஜர்புரத்தை சேர்ந்த ஒரு நபர் தலைமையில் நடப்பதாகவும் கூறினார். அந்த நபரை போலீசார் தேடி வருகின்ற னர். மேலும் சுமார் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலை கைப்பற்றபட்டது.







