என் மலர்
நீங்கள் தேடியது "சிலம்ப போட்டி"
- சிறப்பு விருந்தினராக உலக சிலம்ப விளையாட்டு சங்க நிறுவனத் தலைவர் டாக்டர் சுதாகரன் கலந்து கொண்டார்.
- வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பழனிநாடார் எம்.எல்.ஏ. பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கினார்.
தென்காசி:
உலக சிலம்ப விளையாட்டு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் பாவூர்சத்திரத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. போட்டிகளை தொழிலதிபர் ஆர்.கே. காளிதாசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினராக உலக சிலம்ப விளையாட்டு சங்க நிறுவனத் தலைவர் டாக்டர் சுதாகரன் கலந்து கொண்டார். இதில் திரைப்பட இயக்குனர் அம்மா விஜய் மற்றும் ஆறறிவு திரைப்பட நடிகர் அம்பேத்கர், சின்னத்திரை புகழ் தனபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக பாலசுப்பிரமணியன் மற்றும் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பழனிநாடார் எம்.எல்.ஏ. பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பாவூர்சத்திரம் காமராஜர் மார்க்கெட் சங்க நிர்வாகிகள் தலைவர் பாலசுப்பிரமணியன், வணிகர்கள் சங்க செயலாளர் விஜய சிங்கராஜ், பொருளாளர் ஆரோக்யராஜ், வக்கீல் உமாபதி ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டி ஏற்பாடுகளை தென்காசி உலக சிலம்ப விளையாட்டுச் சங்கத் தலைவர் சத்தியசீலன், செயலாளர் சுதர்சன் மற்றும் சங்க நிர்வாகிகள் கோபி, ஜெயராஜ், சுந்தர் ஆகியோர் செய்து இருந்தனர்.






