என் மலர்
- நெட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் வட்டார சுகாதார பொது அலகு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
- அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பில் வட்டார சுகாதார பொது அலகு கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நாளை மறுநாள் (ஞாயிற்றுகிழமை) நடைபெறுகிறது.
அமைச்சர் திறப்பு
திறப்பு விழாவில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார். அமைச்சர் வருகையை யொட்டி தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து புதிய கட்டிடத்தை சுற்றி பார்த்தார்.
அப்போது அவருடன் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், ஆலங்குளம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்லத்துரை, வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவன்பாண்டியன், மாவட்ட பொறியாளர் அணிதுணை அமைப்பாளர் மணி கண்டன், ஒன்றிய கவுன்சி லர்கள் சேக் முகமது, சுபாஷ் சந்திரபோஸ், தொழில திபர் மாரித்துரை, நெட்டூர் வட்டார சுகாதார மருத்துவர் டாக்டர் ஆறுமுகம், வட்டார சுகா தார மேற்பார்வையாளர் கங்காதரன், நெட்டூர் பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ்வரி, ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், கிளைச் செயலாளர் கணேசன், பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் முகிலன்,முகமது அப்துல்லா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
- வெற்றி பெற்ற மாணவர்கள் ஆசிய பசிபிக் யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் -2023-க்கு தேர்ச்சி பெற்றனர்.
தென்காசி:
செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் யோகா பவுண்டேஷன் கரூர் மாவட்டத்தில் நடத்திய ஆசிய பசிபிக் யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் -2023 தேர்ச்சி போட்டியில் கலந்து கொண்டனர்.
பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி 5-ம் வகுப்பு மாணவன் முகிலன், 6-ம் வகுப்பு மாணவன் முகமது அப்துல்லா முதலிடத்திலும், 7-ம் வகுப்பு மாணவன் இஷாந்த் ராகவன், முகமது இலியாஸ் மற்றும் 5-ம் வகுப்பு மாணவன் தருண் பிரசாத் ஆகியோர் 2-ம் இடத்திலும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் தாய்லாந்தில் நடைபெறக்கூடிய ஆசிய பசிபிக் யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் -2023-க்கு தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களுக்கு யோகா ஆசிரியை மாதவி பயிற்சி அளித்தார். வெற்றி பெற்று தாய்லாந்திற்கு பயணம் மேற்கொள்ளும் மாணவர்களை பள்ளியின் தாளாளர், பள்ளி முதல்வர் ஆகியோர் பாராட்டினர்.
- விழாவில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
- நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளிகளில் இருந்து 40 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றனர்.
தென்காசி:
தென்காசி அருகே உள்ள மேலகரம் அரசுப்பொது நூலகம் மற்றும் குறிஞ்சி வாசகர் பேரவை இணைந்து தென்காசி வட்டார பள்ளிகளில் முதலிடம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு குறிஞ்சி வாசகர் பேரவை தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார். பொருளாளர் காசிவிஸ்வநாதன் முன்னிலை வகித்தார். வாசகர் பேரவை செயலர் சங்கரநாராயணன் வரவேற்று பேசினார்.
விழாவில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். பல்வேறு பள்ளிகளில் இருந்து 40 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றனர். முன்னதாக தென்காசி நூலகர் சுந்தர் வாழ்த்துரை வழங்கினார். நன்நூலகர் செங்கோட்டை ராமசாமி விழாவை தொகுத்து வழங்கினார்.
இவ்விழாவில் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோற்கள் மற்றும் குறிஞ்சி வாசகர் பேரவையினர் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மேலகரம் பொறுப்பு நூலகர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
- ஊர்வலமாக சென்ற தி.மு.க.வினர் சுரண்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- கலைஞர் கோட்டத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தென்காசி:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சுரண்டையில் அமைக்கப்பட்ட கலைஞர் கோட்டம் திறப்பு விழா நடைபெற்றது.
முன்னதாக சுரண்டை பஸ் நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட கருணாநிதி உருவப் படத்திற்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தி பொது மக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
பின்னர் ஊர்வலமாக சென்ற தி.மு.க.வினர் சுரண்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து சங்கரன்கோவில் ரோட்டில் அமைக்கப்பட்ட கலைஞர் கோட்டத்தை தென்காசி தெற்கு மாவட்ட பொறுப் பாளர் ஜெயபாலன், ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் திறந்து வைத்து அங்கிருந்த கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தொடர்ந்து பொதுமக்க ளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தொழிலதிபர் ஆர்.கே.காளிதாசன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், செல்லத்துரை,ரவிசங்கர், அழகு சுந்தரம், சீனித்துரை, ராமச்சந்திரன், வெற்றி விஜயன், பெரியதுரை, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி போஸ்,
ஒன்றிய தலைவர்கள் தென்காசி சேக் அப்துல்லா, துணை தலைவர் கனகராஜ் முத்து பாண்டியன், ஆலங் குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் பி.எம்.எஸ்.ராஜன், அரசு ஒப்பந்ததாரர் கரையாளனூர் சண்முகவேல் , தொழிலதிபர் மணிகண்டன், வீராணம் சேக், கீழப்பாவூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் பொன்னறிவழகன், சாம்பவர் வடகரை மாறன், கீழப்பாவூர் முன்னாள் ஊராட்சி தலைவர் செல்லப்பா, வக்கீல் ஏ.பி. அருள், மாவட்ட பிரதிநிதி பொன் செல்வன், தங்கச்சாமி,
கல்லூரணி முன்னாள் ஊராட்சி தலைவர் அருணோதயம், நாராயண சிங்கம், கல்லூரணி ஊராட்சி தலைவர் ராஜ்குமார், மாணவரணி ரமேஷ், மேல பட்ட முடையார் புரம் ராமராஜ், குற்றாலம் பேரூர் செயலாளர் சங்கர் குட்டி, தெற்கு மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ், தகவல் தொழில் நுட்ப துணை அமைப்பாளர் ஸ்ரீதர், இளைஞர் அணி அமைப்பாளர் கிருஷ்ணா, வக்கீல் அணி அமைப்பாளர் வேலுச்சாமி, ஆவின் முருகன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- அங்கன்வாடி கட்டிடம்,ரேசன் கடை கட்டிடம் கட்டும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் ஆய்க்குடி பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான முகாம்களை நேரில் பார்வை யிட்டார்.
ஆய்க்குடி பேரூராட்சியில் நபார்டு திட்டம் 2022-23-ன் தார்சாலை அமைத்தல் பணிகள், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2022-23-ன் அங்கன் வாடி கட்டிடம் மற்றும் 13-வது வார்டு பகுதியில் ரேசன் கடை கட்டிடம் கட்டும் பணிகள் , 15-வது நிதிக்குழு திட்டம் 2021-22-–ன் கீழ் மேற்கொ ள்ளப்பட்டு வரும் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுதல் மற்றும் போர்வெல் அமைத்தல் ஆகியவற்றை கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் ஆய்க்குடி தனியார் திருமண மண்ட பத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் பகுதி –2-ன் கீழ் நடை பெறும் முகாமையும் பார்வை யிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ந.சாந்தி, துணைத் தலைவர் ச.மாரியப்பன் , 4-வது வார்டு உறுப்பினர் புண மாலை, முன்னாள் பேரூ ராட்சி மன்றத்தலைவர் சிவ குமார், இளநிலை பொறி யாளர் கோபி, பேரூ ராட்சி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- நெல்லையில் இருந்து வியாழக்கிழமை தோறும் தென்காசி வழியாக சென்னைக்கு நிரந்தர ரெயில் இயக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- தென்காசிக்கு, சென்னை தவிர வேறு ஊர்களுக்கு ரெயில்களே இல்லாத நிலைதான் நிலவுகிறது.
தென்காசி:
தென்காசி ரெயில் நிலையமானது நெல்லை-தென்காசி, விருதுநகர்- தென்காசி-கொல்லம் வழித்தடங்களின் மிக முக்கியமான சந்திப்பு ஆகும்.
இதில் கொல்லம்-தென்காசி-அம்பை-நெல்லை வழித்தடமானது கடந்த 1904-ம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதையாக அமைக்கப்பட்டு கொல்லத்தில் இருந்து சென்னைக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 2012-ம் ஆண்டு அந்த பாதையானது அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு தற்போது ரெயில்கள் அதிக அளவில் இயங்கி வருகின்றன.
தென்காசி-ராஜ பாளையம்-விருதுநகர் வழித்தடமானது கடந்த 1927-ம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதையாக அமைக்கப்பட்டு பின்னர் 2004-ல் அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டது. அந்த தடத்தில் தற்போது பொதிகை, சிலம்பு, கொல்லம், மெயில் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தென்காசி மாவட்ட பொதுமக்கள் சார்பாக பல்வேறு கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், மத்திய அரசிடம் தமிழக எம்.பி.க்கள் அதிக அளவில் அழுத்தம் கொடுத்து தமிழகத்திற்கு புதிய வழித்தடங்களில் ரெயில்கள் கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கோரிக்கையாக உள்ளது. அதே நேரத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்க தேவையான அடிப்படை கட்டமைப்புகள் என்னென்ன தேவை என்பது குறித்து ரெயில் பயணிகள் சங்கத்தினர் விளக்கி உள்ளனர்.
செங்கோட்டை-தென்காசி இடையே இரட்டை அகல ரெயில் பாதை அமைத்தல், தென்காசி ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டிகளை பராமரிக்கும் வசதிகளை ஏற்படுத்தி டெர்மினல் ரெயில் நிலையமாக மாற்றுதல், நெல்லையில் இருந்து அம்பை, ராஜபாளையம் வழியாக செல்லும் ரெயில்களுக்கு என்ஜின் மாற்றாமலேயே பைபாசில் செல்லும் வகையில் தென்காசி ரெயில் நிலையத்தில் பைபாஸ் லைன் அமைத்தல், பாவூர்சத்திரம், கடையம், அம்பை, சேரன்மகாதேவி ரெயில் நிலைய நடைமேடைகளின் நீளத்தை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டித்தல் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு கோரிக்கைகள் பிரதான தேவையாக உள்ளது.
புதிய ரெயில்கள்
வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் நெல்லையில் இருந்து அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம் வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் சிறப்பு ரெயிலை நிரந்தர ரெயி லாக மாற்றுதல், பிலாஸ்பூர் ரெயிலின் காலிப்பெட்டி களை கொண்டு நெல்லையில் இருந்து வியாழக்கி ழமை தோறும் தென்காசி வழியாக சென்னைக்கு நிரந்தர ரெயில் இயக்குதல், பாவூர்சத்திரம் வழியாக செல்லும் செங்கோட்டை- தாம்பரம் வாரம் மும்முறை ரெயிலின் வேகத்தை அதிகரித்து தினசரி ரெயிலாக இயக்குதல் போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசின் ரெயில்வே துறையிடம் வலியுறுத்த வேண்டும்.அதேபோல், நெல்லையில் இருந்து பாவூர்சத்திரம், தென்காசி, சங்கரன்கோவில் வழியாக பெங்களூருக்கு தினசரி ரெயில் இயக்குதல், பாவூர்சத்திரம், தென்காசி, கொல்லம் வழியாக கர்நாடக மாநிலம் மங்களூருக்கு ரெயில் இயக்குதல், குருவாயூரில் இருந்து புனலூர் வரை இயங்கும் ரெயிலை தென்காசி, ராஜபாளையம் வழியாக மதுரைக்கு நீட்டிப்பு செய்தல், எர்ணாகுளத்தில் இருந்து கொல்லம், தென்காசி, ராஜபாளையம் வழியாக வேளாங்கண்ணிக்கு வாரம் இருமுறை ரெயில், பாலருவி விரைவு ரெயிலை நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு நீட்டிப்பு செய்தல், மதுரையோடு நிற்கும் புதுடெல்லி - மதுரை சம்பர்க்கி ராந்தி ரெயிலை ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம் வழியாக நெல்லைக்கு நீட்டித்தல், ஈரோடு-நெல்லை ரெயிலை பாவூர்சத்திரம் வழியாக செங்கோட்டைக்கு நீட்டித்தல், நெல்லை- கொல்லம் இடையே நேரடி ரெயில்கள் இயக்குதல் உள்ளிட்டவை தென்காசி மாவட்ட மக்களின் பிரதான கோரிக்கைகளாக உள்ளது.
மின்மயமாக்கல்
விருதுநகர்- செங் கோட்டை- கொல்லம், தென்காசி-நெல்லை ஆகிய வழித்தடங்களில் ரெயில்வே மின்மயமாக்கல் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதால் கூடுதல் ரெயில்களை இயக்குவதற்கு இவை சாதகமாக அமையும். இதுகுறித்து தென்காசி மாவட்ட ரெயில் பயணிகள் கூறுகையில், ரெயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் அனைத்து ரெயில்களையும் விரைவில் ஒப்புதல் அளித்து இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தட்சிண காசி என்று அழைக்கப்படும் தென்காசிக்கு, சென்னை தவிர வேறு ஊர்களுக்கு ரெயில்களே இல்லாத நிலைதான் நிலவுகிறது.
எனவே தேர்தல் நெருங்கும் வேளை என்பதால் மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு பெங்களூரு, கோவை மற்றும் வட மாநிலங்களுக்கு தென்காசி வழியாக ரெயில்களை இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- சாலைக்கு சற்று தொலைவில் ஒரு சிறிய பள்ளத்தில் இறங்கிய நிலையில் லாரி நின்றுள்ளது.
- லாரி ‘பிரேக்’ பிடிக்காததால் ரமேஷ் லாரியிலிருந்து கீழே குதித்துள்ளார்.
ஆலங்குளம்:
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் முகத்தலா அருகே உள்ள பெரும்பாலத்து புத்தன் வீடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 39). லாரி டிரைவர். நேற்று தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நாலாங் குறிச்சியில் செயல்பட்டு வரும் ஒரு எம்.சாண்ட் குவாரிக்கு லாரி ஓட்டி வந்த ரமேஷ் லாரியை குவாரிக்கு வெளியே நிறுத்த சென்றுள்ளார்.
வெகு நேரமாகியும் லாரியின் டிரைவர் வராத தால் அந்த வண்டியில் கிளீனர் ஆக இருந்த கொல்லத்தை சேர்ந்த ஏசு தாஸ் என்பவர் கிரசருக்கு வெளியே சென்று பார்த்துள்ளார். அப்போது சாலைக்கு சற்று தொலைவில் ஒரு சிறிய பள்ளத்தில் இறங்கிய நிலையில் லாரி நின்றுள்ளது. உடனே அங்கு சென்று பார்த்த போது ரமேஷ் லாரி டயர் ஏறி இறந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
லாரி 'பிரேக்' பிடிக்காமல் பள்ளத்தில் இறங்கியதால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ் லாரியிலிருந்து கீழே குதித்துள்ளார். அப்போது அங்கிருந்த இரும்பு வலையில் விழுந்து லாரியின் பின்பக்க டயரில் சிக்கி அவர் இறந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ சார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரமேஷ் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். உயிரிழந்த ரமேசுக்கு திருமண மாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
- ராகுல்காந்தி மீண்டும் எம்.பி.யாக பொறுப்பேற்று, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டார்.
- அடைக்கலப்பட்டணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளிமுருகன் தலைமை தாங்கினார்.
தென்காசி:
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி ராகுல்காந்திக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதால், மீண்டும் எம்.பி.யாக ராகுல்காந்தி பொறுப்பேற்று, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டார். இதை கொண்டாடும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். கீழப்பாவூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் அடைக்கலப்பட்டணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளிமுருகன் தலைமை தாங்கினார். வட்டார பொறுப்பாளர் மகாராஜா, செல்லப்பா, ஜெயபால், ஞானசெல்வன், சாலமோன்டேவிட், யேசுவடியான், மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் தங்கரத்தினம் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.
மாநில இலக்கிய அணி தலைவர் ஆலடி சங்கரய்யா, மாவட்ட துணைத்தலைவர் ச.செல்வன், மாநில இலக்கிய அணி செயலாளர் பொன் கணேசன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் பால்துரை, வடக்கு வட்டார பொறுப்பாளர் தாயார்தோப்பு ராமர், ஆலங்குளம் வட்டார தலைவர் ரூபன்ராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், ஐ.என்.டி.யூ.சி.வைகுண்டராஜா, கீழப்பாவூர் பேரூராட்சி துணைத்தலைவர் ராஜசேகர், ஒன்றிய கவுன்சிலர் ராதா குமாரி, மாரிமுத்து, வட்டார செயலாளர் மாரியப்பன், சொல்லின்செல்வன், ரத்தினவேல்சாமி, சிவகுமார், ரத்தினசாமி, வேல்பாண்டி, மாரிச்செல்வம், சீவலப்பேரியான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- நிகழ்ச்சியில் அரசு நகர்புறம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் டாக்டர் ராஜகோபால் வரவேற்று பேசினார்.
செங்கோட்டை:
செங்கோட்டை நகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள அரசு நகர்புறம் ஆரம்ப சுகாதார நிலைய நகர் நல மையத்தில் செங்கோட்டை ரோட்டரி கிளப் சார்பில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. செங்கோட்டை ரோட்டரி கிளப் தலைவா் பால்ராஜ் தலைமை தாங்கினார். செயலர் சீதாராமன் முன்னிலை வகித்தார். அரசு நகர்புறம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் டாக்டர் ராஜகோபால் வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மரம் வளா்ப்பு சேவை பிரிவு மாவட்ட தலைவா் ராஜகுலசேகர பாண்டியன் கர்ப்பிணி பெண்களுக்கு ஆப்பிள், ஆரஞ்ச், உலர்திராட்சை, பிஸ்தா, பாதாம்பருப்பு, சத்துமாவு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி வாழ்த்தி பேசினார். ஊட்டச்சத்து பெட்டகத்திற்கான நிதிஉதவியை சங்கத்தின் குடும்ப தலைவா் சதீஷ் என்ற லெட்சுமணன் செய்திருந்தார். நிகழ்ச்சியில் பட்டயத்தலைவா் எம்.எஸ்.சரவணன், முன்னாள் தலைவா் திருமலைக்குமார், முன்னாள் செயலா் அபுஅண்ணாவி, உறுப்பினா் தேன்ராஜ் காதர்மைதீன், செவிலியா்கள், பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
- தீ விபத்தால் அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள் எரிந்து நாசமாகி உள்ளது.
- மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசும்போது தீ விபத்து ஏற்பட்டு விடுகிறது.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அடிக்கடி தீ பற்றி எரிவது வாடிக்கையாகி விட்டது.
இந்நிலையில் கடையநல்லூரில் மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ள கிருஷ்ணா புரம் வனப்பகுதியில் திடீரென பயங்கர காட்டு தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள் எரிந்து நாசமாகி உள்ளது. இந்த தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்து குறித்து வனத்துறையினர் கூறுகையில், கடந்த சில மாதங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் அங்குள்ள மரங்களில் உள்ள இலைகள் எல்லாம் உதிர்ந்து காய்ந்து கிடக்கின்றது.
காற்றின் வேகத்தால் அந்த மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசும்போது தீ விபத்து ஏற்பட்டு விடுகிறது. தற்போதும் அதேபோல் மலையில் தீ விபத்து ஏற்பட்டு, மளமளவென பரவி வருகிறது.
அதனை அணைக்கும் முயற்சியில் வன ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
- கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- நிகழ்ச்சியில் சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் செண்பகவிநாயகம், தென்காசி வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகிரி:
சிவகிரி, வாசுதேவநல்லூர் பகுதியில் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளரும், யூனியன் சேர்மனுமான பொன் முத்தையா பாண்டியன் தலைமையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் செண்பகவிநாயகம், தென்காசி வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன், பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, மாவட்ட வக்கீல் அணி மருதப்பன், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் முத்துலட்சுமி, சுமதி, தங்கராசு, தங்கேஸ்வரன், அவைத் தலைவர் துரைராஜ், துணை செயலாளர் முனியாண்டி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி கார்த்திக், ஆனந்தா ஆறுமுகம், புல்லட் கணேசன், இளையராஜா, சி.எஸ். மணி, வாசு. பேரூர் செயலாளர் ரூபி பாலசுப்பிரமணியன், மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், சிக்கந்தர் பாபு, குட்டியப்பன், மாரிமுத்து, கட்டபொம்மன், பாண்டி, முருகன், சுந்தர், மாரியப்பன், செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மாற்றுத்திறனாளிகள் 13 பேருக்கு மடக்கு சக்கர நாற்காலிகள், 5 பேருக்கு காதொலி கருவிகள் வழங்கப்பட்டது.
- கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா உள்பட 430 மனுக்கள் பெறப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டார்.
நலத்திட்ட உதவிகள்
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் மாற்று த்திறனாளிகள் நல துறையில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 13 பேருக்கு மடக்கு சக்கர நாற்காலிகள், 5 பேருக்கு காதொலி கருவிகள் உள்பட ரூ. 1 லட்சத்து 50,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.
மேலும் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டாமாறுதல், மாற்றத்தி றனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என 430 மனுக்கள் பெறப்பட்டது.
கலந்து கொண்டவர்கள்
மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து அதன் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து த்துறை அலுவ லர்களுக்கும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
இதில் டி.ஆர்.ஓ. பத்மா வதி, உதவி கமிஷனர் (கலால்) ராஜமனோகர், மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் நல அலுவலர் சங்கரநாராயணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணி யன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.







