என் மலர்
- நெட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கான வினாடி- வினா போட்டி நடைபெற்றது.
- மாநில சுற்றுச் சூழல் அணி தலைவரும், முன்னாள் அமைச்சருமான பூங்கோதை ஆலடி அருணா மாணவ- மாணவிகளுக்கு வினா, விடை போட்டி நடத்தி பரிசளித்தார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே நெட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தி.மு.க. மாநில சுற்றுச்சூழல் அணி சார்பில் மரம் நடும் விழா மற்றும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான வினாடி- வினா போட்டி நடைபெற்றது.
விழாவிற்கு தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் சபி சுலை மான், ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மாநில சுற்றுச் சூழல் அணி தலைவரும், முன்னாள் அமைச்சருமான பூங்கோதை ஆலடி அருணா சிறப்புரையாற்றி மரம் நடும் விழாவை தொடங்கி வைத்து பள்ளி மாணவ- மாணவிகளுக்கு வினா, விடை போட்டி நடத்தி பரிசளித்தார். விழாவில் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், கீழப்பாவூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் பொன் அறிவழகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவக்குமார், மாஞ்சோலை துரை, நெட்டூர் கிளைச் செயலாளர் கணேசன், மகேஷ் பாண்டியன், தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
- செந்தில்குமாருக்கு திருமணமாகி மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
- மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செந்தில் குமார் பரிதாபமாக இறந்தார்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள வேலாயுதபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் செந்தில்குமார் (வயது 36). மெக்கானிக். இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை திடீரென செந்தில்குமார் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே செந்தில் குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குடும்பத்தகறாறு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறைச்சாலை அதிகாரிகள் சிறையின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை மாணவர்களிடத்தில் எடுத்துரைத்தனர்.
- சிறைச்சாலை பார்வையானது வழக்கறிஞர் தொழில் புரிந்திட மேலும் ஆர்வத்தை அதிகப்படுத்தி உள்ளது என மாணவர்கள் கூறினர்.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி சார்பில் பாளையில் உள்ள மத்திய சிறைச்சாலையினை எஸ். தங்கப்பழம் சட்டக் கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டனர். நிகழ்ச்சியை எஸ். தங்கப்பழம் சட்டக் குழுமங்களின் தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆலோசனையின் பேரிலும் தங்கப்பழம் சட்டக் கல்லூரி முதல்வர் ரஜேலட்சுமி மற்றும் துணை முதல்வர் காளிச்செல்வி அறிவுறுத்தலின் பேரிலும் எஸ். தங்கப்பழம் சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் வெங்கடேஷ் ராஜேஷ்குமார் மற்றும் ஆரிபா தலைமையில் மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.
சிறைச்சாலை அதிகாரிகள் சிறையின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை மாணவர்களிடத்தில் எடுத்துரைத்தனர். மாணவர்கள் சிறைச்சாலையில் கைதிகளின் செயல்பாடு, வாழ்க்கை முறைகள் மற்றும் தொழில் பற்றி கேட்டறிந்தனர். மேலும் இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், இந்த சிறைச்சாலை பார்வையானது வழக்கறிஞர் தொழில் புரிந்திட மேலும் ஆர்வத்தை அதிகப்படுத்தி உள்ளது. இதனை சிறந்த அனுபவமாக கருதுகிறோம் என்றனர்.
இந்த சிறைச்சாலை பார்வையிடலில் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரியின் 53 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
- சாயச்சாலை கட்டிடத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
- சங்கரன்கோவிலில் சாயச்சாலை தொடங்கப்பட்டதால் கைத்தறி தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்ட கைத்தறிதுறை சார்பில் விருது நகர் மாபெரும் கைத்தறி குழுமத்திட்டம் மற்றும் கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் ரூ. 72.11 லட்சம் திட்ட மதிப்பீட்டில் சங்கரன்கோவி லில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட அளவிலான சாயக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய சாயச்சாலை கட்டிடத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
தொழிலாளர்கள் மகிழ்ச்சி
அதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கைத்தறி உதவி இயக்குனர் சங்கரேஸ்வரி தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், கைத்தறி அலுவலர்கள் சுலோச்சனா, பிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி அங்கு செய்யப்படும் பணிகள் குறித்து பேசினார். இந்த திட்டத்தின் மூலம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதி மட்டுமல்லாமல் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கைத்தறி உற்பத்தியாளர்களும் இதுவரை விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் சென்று சாய சாலைகளில் நூல்களை சாயம் போட்டு வந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவிலில் இந்த நிலையம் தொடங் கப்பட்டதால் கைத்தறி தொழி லாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதன் மூலம் தங்களது நேரம், செலவுகள் குறைவது மட்டுமல்லாமல், தமிழக அரசின் விலையில்லா வேட்டி சேலைகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய முடியும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் புனிதா, ஒன்றிய செயலாளர் பெரியதுரை, மாவட்ட நெசவாளரணி துணை அமைப்பாளர் ராஜா ஆறுமுகம், மாவட்ட விவசாய அணி தலைவர் பாலசுப்ரமணியன், மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் மரியலூயிஸ் பாண்டியன், இலக்கிய அணி துணை அமைப்பாளர் செல்வராஜ், பொதுகுழு உறுப்பினர் மகேஸ்வரி, மாணவரணி துணை அமைப்பாளர் வீரமணி, மாவட்ட இளைஞ ரணி துணை அமைப்பாளர் கார்த்தி, நகர அவைத் தலைவர் முப்பிடாதி, நகர துணைச் செயலாளர் முத்துக் குமார், அஜய் மகேஷ் குமார் மற்றும் கைத்தறி அலுவ லர்கள், நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்களை அநாகரிகமான முறையில் பேசி செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.
- அவதூறாக பேசியவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சனிடம், தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. ஆகியோரை பற்றி மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டில் அநாகரிக மான முறையில் அவதூறாக பேசியும் பாட்டு படித்ததை கைத்தட்டி கேலி செய்துள்ளனர். எனவே அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அப்போது தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், செங்கோட்டை ரஹீம், தென்காசி யூனியன் துணைத்தலைவர் கனகராஜ் முத்துபாண்டியன், இளைஞர் அணி அமைப்பாளர் கிருஷ்ணராஜ் மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
- கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- அதிகமான வாக்காளர்களை கொண்ட வாக்கு சாவடிகளை பிரிப்பது தொடர்பாக கூட்டத்தில் கருத்துக்கள் கேட்கப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் தொடர்பாக அனைத்து அங்கீகரி க்கப்பட்ட அரசியல் கட்சி யினருக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பாரதீய ஜனதா, ஆம்ஆத்மி, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் தே.மு.தி.க. கட்சிகளின் சார்பாக அதன் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி தற்போது ள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு இணங்க 1,500 வாக்காளர்களுக்கு அதிகமான வாக்காளர்களை கொண்ட வாக்கு சாவடி களை இரண்டாக பிரித்து வாக்குசாவடி மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக விளக்க மளிக்கப்பட்டு அரசியல் கட்சியை சேர்ந்த பிரதிநிதிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது.
இதில் தென்காசி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) முருகானந்தம், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் டி.ஆர்ஓ., லா வண்யா, தேர்தல் தனி தாசில்தார் ஹென்றி பீட்டர் மற்றும் வருவாய் தாசில் தார்கள், தேர்தல் தனித் துணை தாசில்தார்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- கடந்த 2002-ல் ஏற்பட்ட வெள்ளபெருக்கால் பாலம் பாதிப்படைந்தது.
- புதியபாலம் கடந்த 2021-ல் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
செங்கோட்டை:
தென்காசி மாவட்டத்தில் உள்ள தமிழக-கேரள எல்லையை இணைக்க செங்கோட்டை குண்டாற்று பாலம் பெரும்பங்கு வகித்து வருகிறது. இந்த பாலம் கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் செங்கோட்டை நகருக்கு செல்லும் மிக முக்கிய பாலமாக உள்ளது. இந்த பாலத்தின் வழியாக நாள்தோறும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் வந்து செல்லுகிறது.
புதிய பாலம்
இந்நிலையில் இந்த பாலமானது மிகவும் பழமையானதால் அதன் சுற்று சுவர்களின் உறுதித் தன்மை குறைந்து விட்டது. கடந்த 2002-ல் ஏற்பட்ட வெள்ளபெருக்கால் இந்த பாலம் பாதிப்படைந்தது. இதனால் அந்த பாலத்தின் அருகில் புதிய பாலம் அமைக்க வேண்டும் என பல்வேறு கட்சியினரும், பொதுமக்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்ததுடன் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர். இதையடுத்து ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, கடந்த 2019-ம் ஆண்டு பணிகளை தொடங்க உத்தர விடப்பட்டது. தொடர்ந்து பணிகள் முடிவடைந்த நிலையில் புதியபாலம் கடந்த 2021-ல் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை இந்த பாலத்தில் வழியாக கனரக வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் வந்து செல்லுகிறது.
பயன்பாட்டிற்கு வந்து 2 ஆண்டுகளில் இந்த பாலத்தின் மேல்பகுதியில் இணைப்பு பட்டையை யொட்டிய பகுதி யில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் செல்லும்போது மேல் பட்டை அதிர்வு ஏற்பட்டு வருகிறது. இதனால் பட்டையை யொட்டிய பகுதிகளில் கூடுதலாக அரிப்பு ஏற்பட்டு கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும்படியாக இருக்கிறது. இந்த விரிசல் நாளடைவில் பெரிதாக வாய்ப்பு உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி பேராபத்து ஏற்படும் முன்பாக அதனை சரிசெய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- வண்டி எண்: 16327 வருகிற 27-ந் தேதி முதல் மதுரையில் மதியம் 11.20 மணிக்கு கிளம்பி அதிகாலை 2.10 மணிக்கு குருவாயூர் வரும்.
- ரெயிலில் 11 முன்பதிவில்லா பெட்டிகள் உள்பட 14 பெட்டிகள் இணைத்து இயக்கப்படும்.
சங்கரன்கோவில்:
கேரள மாநிலம் குருவாயூர் முதல் புனலூர் வரை செல்லும் ரெயிலை மதுரை வரை நீட்டிக்க வேண்டும் என திருவனந்தபுரம் ரெயில்வே பயணிகள் சங்க ஆலோசனைக்குழு உறுப்பினரும், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான ராஜா எம்.எல்.ஏ. தென்னக ரெயில்வே மேலாளரை சந்தித்து மனு அளித்தார். அதன் அடிப்படையில் அந்த ரெயில் மதுரை வரை நீட்டிக்க ப்பட்டுள்ளது. வருகிற 27-ந் தேதி முதல் குருவாயூர்- மதுரை- குருவாயூர் விரைவு வண்டியாக இயங்கும் இந்த ரெயில் மதுரையில் இருந்து விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லி புத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பு கோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை வழியாக இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் வண்டி எண்: 16327 வருகிற 27-ந் தேதி முதல் மதுரையில் மதியம் 11.20 மணிக்கு கிளம்பி அதிகாலை 2.10 மணிக்கு குருவாயூர் வரும் எனவும், வண்டி எண்: 16328 (குருவாயூர்-மதுரை) மறுநாள் 28-ந் தேதி குருவாயூரில் இருந்து காலை 5.50 மணிக்கு கிளம்பி இரவு 7.15 மணிக்கு மதுரைக்கு வந்து சேரும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த ரெயிலில் 11 முன்பதிவில்லா பெட்டிகள், 2 படுக்கை பெட்டிகள், 1 மூன்றடுக்கு ஏ.சி. பெட்டி என மொத்தம் 14 பெட்டிகள் இணைத்து இயக்கப்படும். இதற்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் எனவும் தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இனி விருதுநகர் மேற்கு, நெல்லை மேற்கு மற்றும் தென்காசி மாவட்ட மக்கள் நேரடியாக குருவாயூர் செல்வதற்கு இது ஏதுவாக அமையும். மக்களின் ரெயில் கோரிக்கைகளை உரிய அதிகாரிகளிடம் எடுத்து சென்று தொடர்ந்து ரெயில்களையும், ரெயில் நிறுத்தங்களையும் பெற்று தந்த ராஜா எம்.எல்.ஏ.விற்கு தென் மாவட்ட ரெயில் பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
- சபரிமலைக்கு மாலை அணிவிந்த பக்தர்களும் அருவிகளில் குளித்து விட்டு குற்றாலநாதர் கோவிலுக்கு செல்வார்கள்.
- சுமார் 850 கிலோ பச்சரிசி பலமுறை பயன்படுத்தப்பட்டு கெட்டுப்போன நிலையில் இருந்தது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பழமை வாய்ந்த குற்றாலநாதர் கோவில் அமைந்துள்ளது. தினமும் ஏராளமான பக்தர்கள் மட்டுமின்றி குற்றால சீசன் காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள்.
தரமற்ற பொருட்கள்
இதேபோன்று சபரி மலைக்கு மாலை அணிவிந்த அய்யப்ப பக்தர்களும் குற்றாலம் அருவிகளில் குளித்து விட்டு குற்றாலநாதர் கோவிலுக்கு செல்வார்கள். குற்றாலநாதர் கோவிலில் சுவாமிக்கு படைக்கப்படும் உணவும், பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதமும் தரமற்றதாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
இந்நிலையில் தென்காசி வட்டார உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் நாக சுப்பிர மணியன் மற்றும் அதிகாரிகள் குற்றாலநாதர் கோவிலில் உணவு மற்றும் பிரசாதம் தயாரிக்கும் அறையில் திடீர் ஆய்வை செய்தனர். அப்போது அங்கு சுமார் 850 கிலோ பச்சரிசி பலமுறை பயன்படுத்தப்பட்டு கெட்டுப்போன நிலையில் இருந்தது. மேலும் 48 லிட்டர் எண்ணெய் மற்றும் 15 கிலோ பச்சரிசி மாவு, 21/2 கிலோ வெல்லம் உள்ள உள்ளிட்ட தரமற்ற பல்வேறு பிரசாதம் தயாரிக்கும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கும் அவர்கள் தகவல் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தனர் .
ஏற்கனவே குற்றாலத்தில் பல ஓட்டல்களில் உணவுத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி தரம் இல்லாத உணவுகளை அழித்த நிலையில் தற்போது குற்றாலநாதர் கோவிலில் தரமற்ற உணவுப் பொருட்களை உணவுத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளளர்.
- சாலை அமைப்பதற்காக தெருவில் ஒருபுறம் வாறுகால் கட்டப்பட்டு, ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியது.
- சாலைப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இவ்வழியாக செல்பவர்கள் அவதியடைகின்றனர்.
கடையம்:
கடையம் ஊராட்சி ஒன்றியம் பாப்பான்குளம் அருகே உள்ள மயிலப்பபுரம் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கும் அருகில் இருக்கும் மற்றொரு கிராமமான மலையான்குளம் கிராமத்திற்கும் இடையே உள்ள ஒரு தெருவில் மணல் சாலையாக காணப்பட்ட நிலையில் அந்த பகுதியில் புதிய சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெருவில் சாலை அமைப்பதற்காக ஒருபுறம் வாறுகால் கட்டப்பட்டு, ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியது. அப்போது சாலை அமைக்க, சிறியரக கற்களை அதாவது ஜல்லிகளை கொட்டாமல், கிணறுகளில் வெட்டி எடுக்கக்கூடிய பெரிய அளவிலான கற்களை கொட்டி சாலையை அமைக்கும் முயற்சியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் சாலை பலமாக இருக்காது என கருதிய அப்பகுதியினர் இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது சாலை போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், சாலைப்பணி நடக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இவ்வழியாக செல்பவர்கள் அவதியடைகின்றனர். மேலும் தரமான முறையில் இந்த சாலையை அமைக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
- புதன்கிழமை 3-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தேசிய சின்னங்களை பற்றி பேசினர்.
- மாணவி கார்த்திகா திருப்பூர் குமரனின் வாழ்க்கை வரலாற்று குறித்து எடுத்துரைத்தார்.
தென்காசி:
இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் விடுதலைப் போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு நாளும் ஒரு தேசதலைவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் நாட்டிற்காக செய்த தியாகம், பங்களிப்பு போன்ற நிகழ்ச்சி களானது நடைபெற்றது.
வாரத்தில் முதல் நாளான திங்கட்கிழமை காந்தி வாழ்க்கை வரலாறு, செவ்வாய்க்கிழமை நாட்டின் சுதந்திர தினவிழா, புதன்கிழமை தேசிய சின்னங்களின் முக்கியத்துவம், வியாழக்கிழமை பாரதியாரின் விடுதலைப் போராட்டத்தின் பங்களிப்பு, வெள்ளிக்கிழமை கொடிகாத்த குமரனின் வாழ்க்கை வரலாறு, சனிக்கிழமை கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் விடுதலை வேட்கை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் கல்வி ஆலோசகர் உஷாரமேஷ் மற்றும் பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் தலைமை தாங்கினர். காந்தியின் வாழ்க்கை வரலாறு பற்றி மாணவன் சப்வான் பேசினார். மாணவி சைனி ப்ரீத்தி காந்தியின் குடும்ப உறுப்பினர்களை பற்றியும் அவர்களின் தியாகம் பற்றிய கருத்து க்களை எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் காந்தி மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் போல்வேடம் அணிந்தனர். நாட்டின் சுதந்திர தினவிழாவானது தேசிய கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது. புதன்கிழமை 3-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தேசிய சின்னத்தினை போற்றும் வகையில் மலர் போன்று குழுவாக அணிவகுத்து நின்று தேசிய சின்னங்களை பற்றி பேசினர்.
வியாழக்கிழமை விடுதலைப் போராட்டத்தில் பாரதியாரின் பங்கு குறித்து மாணவி நித்யஸ்ரீ பேசினார். மாணவன் பாலசேஷன் பாரதியார் போல் வேடம் அணிந்திருந்தார். வெள்ளிக்கிழமை கொடிகாத்த குமரன் தியாகத்தினை போற்றும் வகையில் மாணவன் கோதண்டராமன் அவரைப் போல வேடம் அணிந்து பேசினார். மாணவி கார்த்திகா திருப்பூர் குமரனின் வாழ்க்கை வரலாற்று குறித்து எடுத்துரைத்தார்.
சனிக்கிழமை வ.உ. சிதம்பரனாரின் விடுதலை வேட்கையை எடுத்துரைக்கும் விதமாக அவரைப்போல வேடமணிந்து மாணவன் ஸ்ரீஜித் வ.உ.சி. வாழ்க்கை வரலாற்றை எடுத்து கூறினார். வாரம் முழுவதும் நடைபெற்ற விடுதலைப் போராட்ட தியாகிகளின் நினைவுகளை நிகழ்ச்சிகள் மூலம் அரங்கேற்றப்பட்டது.
நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தமிழ் ஆசிரியர்கள் மஞ்சுளா, தங்கம்மாள் மற்றும் மாணவ, மாணவிகளை பாரத் கல்வி குழுமத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதா பிரியா மற்றும் பள்ளியின் முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் பாராட்டினர்.
- தெற்கு கடையம் பஞ்சாயத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக அங்கன்வாடி கட்டிடம், ரேசன் கடை கட்டப்பட்டது.
- கட்டிடம் கட்டப்பட்டு பல மாதங்களாகியும் அவை திறக்கப்படாத நிலையில் காட்சியளிக்கிறது.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தெற்கு கடையம் பஞ்சாயத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக அங்கன்வாடி கட்டிடம் மற்றும் ரேசன் கடை சுமார் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.
இந்நிலையில் கட்டிடம் கட்டப்பட்டு பல மாதங்களாகியும் அவை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படாத நிலையில் காட்சியளிக்கிறது. இது குறித்து அப்பகுதி பொது மக்கள் கூறுகையில், அதிகாரி களின் அலட்சியத்தால் கட்டிடங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல், மக்கள் பணம் வீணாகி கொண்டிருக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகமும் உள்ளாட்சித் துறையும் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







