search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புனலூர் வரை இயக்கப்பட்டு வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் மதுரை வரை நீட்டிப்பு-ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கையை ஏற்று ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை
    X

    புனலூர் வரை இயக்கப்பட்டு வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் மதுரை வரை நீட்டிப்பு-ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கையை ஏற்று ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை

    • வண்டி எண்: 16327 வருகிற 27-ந் தேதி முதல் மதுரையில் மதியம் 11.20 மணிக்கு கிளம்பி அதிகாலை 2.10 மணிக்கு குருவாயூர் வரும்.
    • ரெயிலில் 11 முன்பதிவில்லா பெட்டிகள் உள்பட 14 பெட்டிகள் இணைத்து இயக்கப்படும்.

    சங்கரன்கோவில்:

    கேரள மாநிலம் குருவாயூர் முதல் புனலூர் வரை செல்லும் ரெயிலை மதுரை வரை நீட்டிக்க வேண்டும் என திருவனந்தபுரம் ரெயில்வே பயணிகள் சங்க ஆலோசனைக்குழு உறுப்பினரும், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான ராஜா எம்.எல்.ஏ. தென்னக ரெயில்வே மேலாளரை சந்தித்து மனு அளித்தார். அதன் அடிப்படையில் அந்த ரெயில் மதுரை வரை நீட்டிக்க ப்பட்டுள்ளது. வருகிற 27-ந் தேதி முதல் குருவாயூர்- மதுரை- குருவாயூர் விரைவு வண்டியாக இயங்கும் இந்த ரெயில் மதுரையில் இருந்து விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லி புத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பு கோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை வழியாக இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மேலும் வண்டி எண்: 16327 வருகிற 27-ந் தேதி முதல் மதுரையில் மதியம் 11.20 மணிக்கு கிளம்பி அதிகாலை 2.10 மணிக்கு குருவாயூர் வரும் எனவும், வண்டி எண்: 16328 (குருவாயூர்-மதுரை) மறுநாள் 28-ந் தேதி குருவாயூரில் இருந்து காலை 5.50 மணிக்கு கிளம்பி இரவு 7.15 மணிக்கு மதுரைக்கு வந்து சேரும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த ரெயிலில் 11 முன்பதிவில்லா பெட்டிகள், 2 படுக்கை பெட்டிகள், 1 மூன்றடுக்கு ஏ.சி. பெட்டி என மொத்தம் 14 பெட்டிகள் இணைத்து இயக்கப்படும். இதற்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் எனவும் தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இனி விருதுநகர் மேற்கு, நெல்லை மேற்கு மற்றும் தென்காசி மாவட்ட மக்கள் நேரடியாக குருவாயூர் செல்வதற்கு இது ஏதுவாக அமையும். மக்களின் ரெயில் கோரிக்கைகளை உரிய அதிகாரிகளிடம் எடுத்து சென்று தொடர்ந்து ரெயில்களையும், ரெயில் நிறுத்தங்களையும் பெற்று தந்த ராஜா எம்.எல்.ஏ.விற்கு தென் மாவட்ட ரெயில் பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×