search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் சுதந்திர போராட்ட தியாகிகள் வாரம் கடைபிடிப்பு
    X

    சுதந்திர போராட்ட தியாகிகளை போல் வேடம் அணிந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளை படத்தில் காணலாம்.

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் சுதந்திர போராட்ட தியாகிகள் வாரம் கடைபிடிப்பு

    • புதன்கிழமை 3-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தேசிய சின்னங்களை பற்றி பேசினர்.
    • மாணவி கார்த்திகா திருப்பூர் குமரனின் வாழ்க்கை வரலாற்று குறித்து எடுத்துரைத்தார்.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் விடுதலைப் போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு நாளும் ஒரு தேசதலைவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் நாட்டிற்காக செய்த தியாகம், பங்களிப்பு போன்ற நிகழ்ச்சி களானது நடைபெற்றது.

    வாரத்தில் முதல் நாளான திங்கட்கிழமை காந்தி வாழ்க்கை வரலாறு, செவ்வாய்க்கிழமை நாட்டின் சுதந்திர தினவிழா, புதன்கிழமை தேசிய சின்னங்களின் முக்கியத்துவம், வியாழக்கிழமை பாரதியாரின் விடுதலைப் போராட்டத்தின் பங்களிப்பு, வெள்ளிக்கிழமை கொடிகாத்த குமரனின் வாழ்க்கை வரலாறு, சனிக்கிழமை கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் விடுதலை வேட்கை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளியின் கல்வி ஆலோசகர் உஷாரமேஷ் மற்றும் பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் தலைமை தாங்கினர். காந்தியின் வாழ்க்கை வரலாறு பற்றி மாணவன் சப்வான் பேசினார். மாணவி சைனி ப்ரீத்தி காந்தியின் குடும்ப உறுப்பினர்களை பற்றியும் அவர்களின் தியாகம் பற்றிய கருத்து க்களை எடுத்துரைத்தார்.

    நிகழ்ச்சியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் காந்தி மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் போல்வேடம் அணிந்தனர். நாட்டின் சுதந்திர தினவிழாவானது தேசிய கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது. புதன்கிழமை 3-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தேசிய சின்னத்தினை போற்றும் வகையில் மலர் போன்று குழுவாக அணிவகுத்து நின்று தேசிய சின்னங்களை பற்றி பேசினர்.

    வியாழக்கிழமை விடுதலைப் போராட்டத்தில் பாரதியாரின் பங்கு குறித்து மாணவி நித்யஸ்ரீ பேசினார். மாணவன் பாலசேஷன் பாரதியார் போல் வேடம் அணிந்திருந்தார். வெள்ளிக்கிழமை கொடிகாத்த குமரன் தியாகத்தினை போற்றும் வகையில் மாணவன் கோதண்டராமன் அவரைப் போல வேடம் அணிந்து பேசினார். மாணவி கார்த்திகா திருப்பூர் குமரனின் வாழ்க்கை வரலாற்று குறித்து எடுத்துரைத்தார்.

    சனிக்கிழமை வ.உ. சிதம்பரனாரின் விடுதலை வேட்கையை எடுத்துரைக்கும் விதமாக அவரைப்போல வேடமணிந்து மாணவன் ஸ்ரீஜித் வ.உ.சி. வாழ்க்கை வரலாற்றை எடுத்து கூறினார். வாரம் முழுவதும் நடைபெற்ற விடுதலைப் போராட்ட தியாகிகளின் நினைவுகளை நிகழ்ச்சிகள் மூலம் அரங்கேற்றப்பட்டது.

    நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தமிழ் ஆசிரியர்கள் மஞ்சுளா, தங்கம்மாள் மற்றும் மாணவ, மாணவிகளை பாரத் கல்வி குழுமத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதா பிரியா மற்றும் பள்ளியின் முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் பாராட்டினர்.

    Next Story
    ×