என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சார்பில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    வள்ளலாரின் 200-வது ஆண்டு விழாவை முன்னிட்டு கடந்த அக்டோபர் முதல் 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் முப்பெரும் விழா நடத்தவும், வள்ளலார் 200 தொடர் அன்னதானம் திட்டம் செயல்படுத்தவும் தமிழக அரசு அறிவித்து உள்ளது.

    அதைத் தொடர்ந்து நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சார்பில் கிரிவலப்பாதையில் உள்ள கோவிலின் திருமண மண்டபத்தில் தொடர் அன்னதானம் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.

    நிகழ்ச்சிக்கு கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பக்தர்களுக்கு அன்னதானம் பரிமாறினார்.

    இந்த அன்னதானம் நிகழ்ச்சி 28-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    இதில் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • செயற்கை ரசாயனத்தின் தீமைகள் குறித்து விளக்கம்
    • 101 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

    போளூர்:

    போளூர் அடுத்த வசூர் கிராமத்தில் கலவை ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி மாணவிகள் வேளாண்மை அனுபவம் பற்றி கிராமப்புற குழு உறுப்பினர்கள் முன்னிலையில் இயற்கை விவசாயம் மற்றும் செயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பயிற்சி முறை பற்றியும் செயற்கை ரசாயன உரத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மற்றும் இயற்கை விவசாயம் அதன் முக்கியத்துவம் வேறுபாடுகள் குறித்து, விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதில் பங்கேற்ற பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி மாணவிகள் சார்பில் 101 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

    • அதிகாரிகள் வேண்டுகோள்
    • தவறும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

    போளூர்:

    போளூர் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிபாக்கி பொதுமக்கள் செலுத்துமாறு, பேரூராட்சி தலைவர் ராணி சண்முகம், செயல் அலுவலர் முகமது ரிஜ்வான் ஆகியோர் கூட்டாக அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    அதில் கூறியுள்ளதாவது பொதுமக்கள் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், மற்றும் வாடகை இனங்கள் வரும் 31-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    எனவே அனைவரும் வரி இனங்களை உடனே செலுத்தி பேரூராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சாமிக்கும், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • கடந்த 6-ந்தேதி மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது.

    இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 6-ந்தேதி காலையில் கோவிலில் பரணிதீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்பட்டும் மலையின் உச்சியில் மகாதீபமும் ஏற்றப்பட்டது. அன்று முதல் தொடர்ந்து 11 நாட்கள் மகாதீபம் மலை உச்சியில் காட்சி அளித்தது. மலையில் காட்சி அளித்த மகா தீபத்தை காண பக்தர்கள் பலர் மலை உச்சிக்கு சென்று வந்தனர்.

    திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்படுவதால் அத்தகைய சிறப்பு வாய்ந்த மலையின் உச்சிக்கு பக்தர்கள் ஏறி சென்று வருவதால் வழக்கமாக தீபத் திருவிழா நிறைவுற்ற பிறகு பிராயசித்த பூஜை நடத்தப்படும்.

    அதன்படி தீபத் திருவிழா நிறைவடைந்த பிறகு இந்த ஆண்டிற்கான பிராயசித்த பூஜை நேற்று நடந்தது. இதனையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் புனிதநீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து சிறப்பு ஹோமம் நடத்தி சாமிக்கும், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து புனிதநீர் கலசத்தை மலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிராயசித்த பூஜை நடந்தது.

    பின்னர் மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    இதில் கோவில் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • உபகரணங்கள், சீருடைகள் வழங்கினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணிதிட்ட சிறப்புமுகாம் நேற்று தொடங்கியது.

    பள்ளி தலைமை ஆசிரியர் பா.ஜெயக் குமாரி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் வெங்கடேசன், தட்சணாமூர்த்தி ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

    நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் தாமோ 5தரன் வரவேற்றார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் முகாமை தொடங்கி வைத்து தூய் மைப்படுத்தும் பணிக்கான உபகரணங்கள், சீருடைகள் வழங்கி பேசினார்.

    7 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் தூய்மைப்படுத்துதல் பணி, ஹோமியோபதி மருத்துவம், வன உயிரினங்கள் முக் கியத்துவம், யோகாவின் முக்கியத்துவம், சட்டப்பாதுகாப்பு மற்றும் மாணவர்களின் கடமைகள் மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்து மாணவர்களுக்கு ஒவ்வொரு நாளும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இறுதியாக மரக்கன்று நடுதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சண்முகம், ஆசிரியர் சங்க செயலாளர் ஜான்வெலிங்டன், ஆசிரியர்கள் கு உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் முதுகலை ஆசிரியர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.

    • தேர்வு எழுத பள்ளிக்கு சென்றவர்கள் வீடு திரும்பவில்லை
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு தாலுகா பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயதுடைய பள்ளி மாணவிகள் 2 பேர் அரையாண்டு பொதுத் தேர்வு எழுத பள்ளிக்கு சென்றனர்.

    அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகளின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் செய்யாறு போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கஞ்சா விற்ற வாலிபர் கைது
    • 14 கிலோ பறிமுதல் போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை திருக்கோ விலூர் சாலை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெ றுவதாக திருவண்ணாமலை கிழக்குபோலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஆண் கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள மைதானத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசா ரணை நடத்தினர்.

    விசாரணையில் திருவண்ணாமலை-போளூர் சாலையை சேர்ந்த முருகன் (வயது 30) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • வளைவில் திரும்பிய போது விபத்து
    • போலீசார் விசாரணை

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் அடுத்த வேடநத்தம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பச்சமுத்து (வயது 62) விவசாயி, சதீஷ் (32) டிரைவர். இருவரும் பக்கத்து பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள்.

    இந்த நிலையில் நேற்று இருவரும் வேடநத்தம் கிராமத்தில் இருந்து கீழ்பென்னாத்தூருக்கு வந்தனர். பின்னர் இருவரும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வேடநத்தம் கிராமத்திற்கு திரும்பினர்.

    கீழ்பென்னாத்தூரை அடுத்த குண்ணங்குப்பம்- தேப்பனந்தல்குளம் அருகில் உள்ள வளைவில் சென்ற போது திடீரென கரும்பு லோடு ஏற்றிவந்த டிராக்டரும் பைக்கும் மோதியது.

    இதில் பச்சமுத்து, சதீஷ் ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பக்கத்து வீட்டை சேர்ந்த 2 பேர் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • நள்ளிரவு 12 மணிக்கு ஏசு பாலகன் பிறக்கும் நிகழ்ச்சி நடந்தது
    • நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய கிறிஸ்தவ ஆலயங்களிலும் நேற்று நள்ளிரவு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

    திருவண்ணாமலை தாசில்தார் அலுவலகம் அருகில் அமைந்துள்ள உலக மாதா ஆலயத்தில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு ஏசு பாலகன் பிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். இதேப்போல் பெரியார் சிலை அருகில் அமைந்துள்ள ஆற்காடு லுத்தரன் திருச்சபையிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றன.

    வந்தவாசி காஞ்சிபுரம் சாலையில் உள்ள தூய இருதய ஆலயத்தில் பங்குத்தந்தை பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் பல்வேறு கிறிஸ்துவ பாடல்களை பாடிக்கொண்டு திருப்பலியில் ஈடுபட்டனர்.

    இதை தொடர்ந்து நள்ளிரவு 12 மணி அளவில் இயேசுநாதர் கிறிஸ்து பிறந்த குழந்தை இயேசுவை கிறிஸ்துவ குடிலில் வைக்கப்பட்டது.

    கூட்டு திருப்பலி நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • 100-க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டது
    • 10 பேர் காயம்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் மாடு விடும் திருவிழா பிள்ளையார் கோவில் தெருவில் நடைபெற்றது.

    இதில் 100க்கும் மேற்பட்ட மாடுகள் வேகமாக ஓடியது.இதில் வேடிக்கை பார்க்க வந்த கொங்கராம்பட்டு யுகேஷ் (24), மூஞ்சூர்பட்டு ராஜேஷ்குமார் (27) கேளூர் சந்தைமேடு குமார் (51) உள்பட 10 பேர் காயமடைந்தனர்.

    • மாணவியின் முகத்தில் சூடு வைத்ததால் நடவடிக்கை
    • பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மணிமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொ டக்கப்பள்ளி செயல்பட்டு வருகின்றது.

    இந்த பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியை என 2 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் கெடாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த முனியன் என்பவரின் மகள் கவுதமி (வயது 9) 4-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

    இவள், சரிவர படிக்கவில்லை என்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீக்குச்சியை பற்ற வைத்து மாணவியின் முகத்தில் தலைமை ஆசிரியை உஷாராணி சூடு வைத்ததாக கூறப்படுகிறது.

    மாணவியின் பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியை உஷாராணி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.

    இதனை தொடர்ந்து தலைமை ஆசிரியை உஷாராணி சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    • சிறப்பு மகா வேள்வி பூஜை நடைபெற்றது
    • பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமம் ஏரிக்கரை ஓரத்தில் 81 அடி உயரமும் 18 கரங்களும் கொண்ட சர்வ மங்கள காளி முத்துமாரியம்மன் ேகாவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் மார்கழி மாத அமாவாசை முன்னிட்டு சர்வ மங்களகாளி அம்மன் காலை முதல் சிறப்பு பூஜைகள் மற்றும் பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மற்றும் மூலிகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பல்வேறு மூலிகைகள் கொண்ட சிறப்பு மகா வேள்வி பூஜை நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து மூலவர் அம்மன் மார்கழி மாதத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அலங்காரத்தி லும், உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இரவு பக்தர்கள் பங்கேற்று அம்மனை தோளில் சுமந்தவாறு கோயிலை மூன்று முறை சுற்றி வந்து ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சி நடைபெற்று நிறைவு பெற்றது.

    ×