என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விரக்தி
    • உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விரக்தி போலீசார் விசாரணை

    போளூர்:

    போளூர் மேல் சாவடி தெருவில் வசிப்பவர் ஏழுமலை (வயது 55). கூலித் தொழிலாளி. இவருக்கு பல நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார்.

    இதனால் ஏழுமலை தொடர்ந்து சிகிச்சை பெற்றும் சரியாகயாகாததால் மன உளைச்சலுக்கு ஆளானார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    தீயில் கருகி அலறிய அவரது குரலை கேட்டு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் பதறி அடித்து எழுந்து பார்த்தனர். பின்னர் ஏழுமலையின் உடலில் எரிந்த தீயை அணைத்து திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த னர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்து விட்டார்.

    இது குறித்து அவரது மனைவி லட்சுமி அளித்த புகாரின் பேரில் போளூர் சப் -இன்ஸ்பெக்டர் கோவிந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • சாவில் மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டு
    • கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு

    திருவண்ணாமலை:

    கீழ்பென்னாத்தூர் அருகில் உள்ள கழிக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 47). இவர் மேக்களூர் டாஸ்மாக் கடையில் சூப்பர் வைசராக பணியாற்றி வந்தார்.

    பைக்ககள் மோதி விபத்து

    நேற்று மாலை திருவண்ணாமலைக்கு சென்று விட்டு பைக்கில் திரும்பிக்கொண்டிருந்தார். சோமாசிபாடி அருகில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு பைக் மீது இவரது பைக் மோதியது. இதில் ராஜேந்திரனுக் எதிரே வந்த நபருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

    அக்கம்பக்கத்தில் இருந்த வர்கள் அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணா மலை அரசு மருத்துவம னைக்கு கொண்டு சென்றனர்.

    மேலும் உடல்நிலை மோசமான நிலையில் இருந்த ராஜேந்திரனை அந்த வழி யாக காரில் வந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    இதற்கிடையில் காரில் வந்த வர்களுக்கும், ராஜேந்திரனுக் கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ராஜேந்திரன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    காரை மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனையின் அருகில் கொண்டு சென்று நிறுத்தி உள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த ராஜேந்தி ரனின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர்.

    அப்போது பிரேத பரிசோதனை அறை அருகில் காரில் ராஜேந்திரன் உடல் இருந்ததை கண்ட அவர்கள் காரில் வந்தவர்களிடம் முன்விரோ தம் காரணமாக வேண்டும் என்றே கால தாமதமாக கொண்டுவந்து கொன்றுவிட் டதாக கூறி காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து தகராறில் ஈடுபட்டனர்.

    போலீசார் சம்பவ இடத் திற்கு வருவதற்குள் காரில் வந்தவர்களை அவர்கள் தாக் கியதால் பரபரப்பு ஏற்பட் டது. அப்போது வந்த போலீ சார் அவர்களை மீட்டு சிகிச் சைக்காசுமருத்து வமனையில் சேர்த்தனர். இதனிடையே ராஜேந்திரனின் உடலுடன் காரை மருதுவமனைக்கு முன்பு எடுத்து வந்து புறவழிச்சாலையில் நடு வில் நிறுத்தினர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவ ரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையி லான போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது ராஜேந்திரனில் சாவில் சந்தேகம் உள்ளது என்று கூறினர். எழுத்து பூர்வ மாக புகார் மனு அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்த னர்.

    போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் அங் கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    • நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    • இணை உரத்தை கட்டாயப்படுத்தி விற்பதாக புகார்

    வந்தவாசி:

    வந்தவாசி பகுதியில் உள்ள சில தனியார் உரக் கடைகளில் தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து விற்கப்படுவதாக கூறிவந்தவாசி தாலுகா அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநில செய்தி தொடர்பாளர் வாக்கடை புருஷோத்தமன் தலைமை வகித்தார். பின்னர் விவசாயிகள் கூறுகையில், "வந்தவாசி பகுதியில் உள்ள சில தனியார் உரக் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் விவசாயிகள் யூரியா உரம் வாங்கும்போது, அதனுடன் சுமார் ரூ.1,500 மதிப்புள்ள இணை உரத்தை கட்டாயப்படுத்தி விற்கின்றனர்.

    இது குறித்து வேளாண் துறையிடம் புகார் செய்தால் அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை. எனவே இதனை கண்டித்து நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டுள்ளோம்" என்றனர். ஆர்ப்பாட்டத்தின்போது சிலுவை போன்று அமைத்த ஒன்றை தூக்கிக்கொண்டும்,ஒருவர் கிறிஸ்துமஸ்தாத்தா போன்று வேடமிட்டும் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.

    இது தொடர்பாக தாலுகா அலுவலகத்தில் துணை தாசில் தார் சதீஷிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

    • பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை
    • பாதுகாப்பான பயணத்துக்கு வழிவகை செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்

    ஆரணி:

    ஆரணியில் இருந்து வந்தவாசி பகுதிக்கு செல்லும் பஸ்களில் அளவுக்கு அதிகமான பயணிகள் ஏற்றப்பட்டு செல்கின்றனர். கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் இடம் கிடைக்கா மல் பஸ்சின் கூரையிலும் பின்பக்கம் உள்ள ஏணிப்படியில் நின்றும் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.

    மாணவிகளும், பெண்களும் பஸ்சுக்குள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். இது சம்பந்தமாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பல முறை புகார் தெரிவித்தும் அவர்கள் பாராமுகமாகவே உள்ளனர்.

    எனவே இதுபோன்ற பயணிகள் பயணம் செய்வதை தவிர்க்க காலை 7 மணி முதல் 10 மணி வரையும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையும் தேவையான அளவுக்கு கூடுதல் பஸ்களை இயக்கி பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என அனைத்து தரப் பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • மகனுக்கு போலி டாக்டர் எச்.ஐ.வி. ஊசி போட்டதாக புகார்
    • அதிகாரிகள் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகே கொளக்கரவாடி அடுத்த ஈச்சங்குப்பம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி ஒருவர், தனது மனைவி மற்றும் மாற்றுத்திறனாளி மகனுடன் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நேற்று தர்ணாவில் ஈடுபட்டார்.

    பின்னர் அவர், தனது 18 வயது மகனின் உடல் நிலை பாதிப்புக்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலையில் உருண்டு புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது செயலை, போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

    அப்போது விவசாயி கூறியதாவது:-

    தனது மகனின் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்து வமனைக்கு சிகிச் சைக்காக அழைத்து சென்றோம். அவரது ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோ தனை செய்யப்பட்டது. அதில், மகனுக்கு எச்ஐவி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எங்கள் குடும்பத்தில் வேறு யாருக்கும் எச்ஐவி தொற்று கிடையாது.

    2018-ம் ஆண்டு என்னுடைய அனுமதி இல்லாமல், போலி மருத்துவரை அழைத்து வந்து எனது மகனுக்கு கடந்த 2018-ல் உறவினர்கள் ஊசி போட்டுள்ளனர்.

    ஊசி போட்ட நபர், போலி மருத்துவர். அவரிடம் கேட்ட போது, காய்ச்சலுக்கு ஊசி போட்டதாக தெரிவித்தார். சொத்து பிரச்சினை காரணமாக, எனது மகனுக்கு போடப்பட்ட ஊசியின் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    ஊசி போட்டவர் மற்றும் அவரை அழைத்து வந்த உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க மனு அளித்தும் போலீசார், சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை" என்றார். பின்னர் அவர், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினியிடம் மனு அளித்தார். மனுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனிப்படை விசாரணை
    • கதவு உடைத்து துணிகரம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை வேல் நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 57). இவரது மனைவி சாந்தா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் சேலத்தில் இருந்து கட்டப் பை வாங்கி வந்து மொத்த வியாபாரம் செய்து வருகின்றனர்.

    கடந்த 24-ந் தேதி மூர்த்தியும், அவரது மனைவியும் வியாபாரம் தொடர்பாக வெளியூர் சென்றிருந்தனர். மறுநாள் அதிகாலை வீடு திரும்பினர். பின்னர் அன்று இரவு அசதியில் இவர்கள் படுத்து தூங்கி விட்டனர்.

    25-ந்தேதி காலையில் அவர் கள் கொண்டு வந்த பணத்தை பீரோவில் வைப்பதற்காக சென்ற போது பீரோவின் கதவு உடைக்கப்பட் டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பீரோவில் இருந்த கம்மல், மோதிரம், செயின் உள்ளிட்ட 20 பவுன் நகை, ரூ.4 லட்சம் ரொக்கம், 40 கிராம் வெள்ளி பொருட்கள் மர்ம உங்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து மூர்த்தி திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    பின்னர் கை ரேகை நிபு ணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகை மற்றம் தடயங்களை சேகரித்தனர். கொள்ளை யடித்துச் சென்ற நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.8 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

    இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் தனி படை அமைத்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    • நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
    • அரசு தரப்பில் உதவிகள் வழங்கப்படவில்லை என புகார்

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கத் தில் தொடரும் மழையால் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெல்வயல்கள் சேதமடைந் துள்ளன. கலசப்பாக்கம், புதுப்பாளையம், துரிஞ்சா புரம் ஆகிய ஒன்றிய பகு திகளில் கடந்த ஆடி மாதம் சம்பா பயிரான பொன்னி விதைக்கப்பட்டது.

    நெல் விதைத்து நடவு செய்து 6 மாதத்துக்குப் பின் தற்போது அறுவடை செய்யும் நிலையில் பயிர் தயாரானது. பல இடங்க ளில் பயிர் அறுவடை முடிந்த நிலையில் மழை தொடர்ந்துவருகிறது.

    அறுவடை செய்வதற்கு ஏந்திரங்களும், தொழிலாளர்களும் கிடைக்காத நிலையில் அறுவடைப் பணிகளை விவசாயிகள் தொடங்காமல் உள்ளனர்.

    இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல்களில் விடப்பட்டுள்ள நெற்கதிர்கள் நீரில் மூழ்கி நாசமானது. இதனால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகினர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    கலசப்பாக்கம் பகுதியில் எந்த தொழிற்சாலையும் கிடையாது. இதனால் வெளி மாநிலங்களில் சென்று தான் வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    கொரோனா தாக்குதலினால் கடந்த 2 ஆண்டுகள் விவசாயிகள் கடும் நெருக்கடியை சந்தித்து வந்தனர். ஆறுதலாக சம்பா பருவம் கைகொடுக்கும் என நம்பினோம். தற்போது நெல்கொள்மு தல் விலையும் சற்று அதி கரித்துள்ளது. இந்நிலை யில் அறு வடைக்காலத்தில் மழைபெய்தால் பயிர்கள் நீரில் மூழ்கின.

    கடந்த 2 ஆண்டுகளாக விவசாயம் பாதித்த பகுதிகளில் பயிர்க்காப்பீடு செய்தவர்களுக்கு மட்டுமே நிவாரணம் கிடைத்தது. அரசு தரப்பில் நிவாரண உதவிகள் அளிக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் வேதனைக்குள்ளா கியுள்ளனர்.

    தற்போது, மாவட்ட நிர்வாகம் மூலம் மழை பாதிப்புக்குள்ளான நெற் பயிர்களை கணக்கீடு செய்து உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    • பேத்திக்கு நீச்சல் கற்றுகொடுத்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த கீழ்வில்லிவலம் கிராமத்தை சேர்ந்தவர் பூங்காவனம் (வயது 60). விவசாயி.

    இவர் வழக்கம் போல் தனது மாடுகளை விவசாய நிலம் அருகில் மேய்ப்பது வழக்கம்.

    இந்நிலையில் நீச்சல் கற்று கொடுக்க அருகே உள்ள கிணற்றுக்கு பூங்காவனம் பேத்தியுடன் சென்றார். தாத்தாவும் , பேத்தியும் கிணற்றின் படிக்கட்டு வழியாக இறங்கி கொண்டு இருந்தனர். அப்போது நிலை தடுமாறி பூங்காவனத்தின் பேத்தி விழுந்தார். பேத்தியை காப்பாற்றுவதற்காக பூங்காவனம் கிணற்றில் குதித்தார்.

    உடனே அருகில் இருந்த உறவினர் ஒருவர் பூங்காவனத்தின் பேத்தியை கிணற்றில் இருந்து காப்பாற்றினார்.

    நீண்ட நேரம் ஆகியும் பூங்காவனம் கிணற்றில் இருந்து வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த உறவினர் கூச்சலிட்டு அக்கம் பக்கம் உள்ள கிராம மக்களை வர வழைத்தார். அவர்கள் கிணற்றில் விதித்து பூங்காவனத்தை தேடினர். பூங்காவனம் கிடைக்காததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி வெகு நேரம் தேடியும் பூங்காவனம் கிடைக்கவில்லை.

    பின்னர் ராட்சத மோட்டார் பம்ப் மூலமாக கிணற்று நீரை இறைத்து 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பூங்காவனத்தின் உடலை மீட்டனர்.

    இறந்து போன பூங்காவனத்திற்கு தனக்கோட்டி என்ற மனைவியும் ஜெயபால் என்ற மகனும் மகேஸ்வரி தேவி என்ற 2 மகள்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ் கொடுங்காலூர் போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேத்திக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க சென்று கிணற்றில் குதித்து பூங்காவனம் உயிரிழந்த சம்பவம் கீழ் வில்லிவலம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • விருதுகள் வழங்கப்பட்டது
    • ஏராளமாேனார் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வி.ஜெ.ஆர் திருமண மண்டபத்தில் ஏ.பி.ஜே அறக்கட்டளை சார்பாக கலாம் கனவு விருதுகள் 2022 என்ற தலைப்பில் விருதுகள் வழங்கப்பட்டது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறப்பாக சமூக பணி செய்த ரோட்டரி மாவட்ட தலைவர் பரத்கு மாருக்கு சிறந்த சமூக சேவைக்கான விருதினை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

    மேலும் அறக்கட்டளை நிகழ்வுகள் கொண்ட 2023 புத்தகத்தை நவீன் முரளிதார் மற்றும் ஆனந்த் பாண்டி வெளியிட அறக்கட்டளை தலைவர் கோபிநாத் பெற்றுக்கொண்டர்.

    மேலும் இந்த விழாவில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    • பொதுமக்கள் அவதி
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து தெருக்களில் கடந்த சில ஆண்டுகளாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.

    அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மாணவ மாணவிகளை, மோட்டார் சைக்கிளில் செல்வோரை துரத்திச் செல்கிறது.

    நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லையை போக்க, கண்ணமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் நாய்களை பிடித்து காடுகளிலோ அல்லது யாரும் இல்லாத இடத்திலோ விட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கண்ணமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் பேருராட்சி அலுவலகம் சுற்றி தற்போது வாகனங்கள் நிறுத்து மிடமாக மாறி வருகிறது.

    எனவே வாகனங்கள் நிறுத்த பேரூராட்சி சார்பில் மாற்று இடம் ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நெடுஞ்சாலையில் நடந்து சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புதுப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் முனியம்மாள் (75).

    இன்று காலையில் ஆரணி விழுப்புரம் நெடுஞ்சாலையில் நடந்து சென்ற போது வேலூரில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற கார் முனியம்மாள் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மூதாட்டியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து காரை காரை ஓட்டி வந்த வேலூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பரை விசாரணை செய்து வருகின்றனர்.

    • பல ஆண்டுகளாக சேதமடைந்து கிடப்பதாக குற்றச்சாட்டு
    • மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகே பாலானந்தல்-மங்கலம் சாலையை சீரமைக்க வலியுறுத்தி நேற்று நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.

    திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் பாலானந்தல் கிராமத்தில் ஏராளமானோர் வசிக்கின்றனர். இவர்கள், அனைவரும் மருத்துவமனை, பள்ளி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க, மங்கலம் செல்லும் சாலையை பயன் படுத்துகின்றனர். இந்த சாலை கடந்த பல ஆண்டுகளாக சேதமடைந்து கிடப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

    குண்டும், குழியுமாக உள்ள சாலையில் குளம்போல் மழை நீர் தேங்கிக் கிடக்கிறது. இதனால், வாகனங்களை ஓட்டி செல்ல முடியாமல் அவதிப்படுவதாகவும், இரவு நேரங்களில் நிலை தடுமாறிகீழே விழுந்து காயமடைவதாக வேதனையுடன் தெரிவிக் கின்றனர்.

    இதேபோல், மங்கலம்-வெளுங்கனந்தல் இடையே உள்ள சாலைபடுமோசமாக உள்ளன. இதன் மொத்த தொலைவு 7 கி.மீ., ஆகும்.

    இது குறித்து ஊராட்சி நிர்வாகம், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் முறையிட்டும் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், சேதமடைந் துள்ள சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். மேலும், தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் காகித கப்பல் விட்டு, தங்களது எதிர்ப்பை இளைஞர்கள் பதிவு செய்தனர்.

    அப்போது அவர்கள், சாலையை சீரமைத்து புதிய சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    ×