வியாபாரி வீட்டில் நகை, பணம் கொள்ளை

தனிப்படை விசாரணை கதவு உடைத்து துணிகரம்
வியாபாரி வீட்டில் நகை, பணம் கொள்ளை
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை வேல் நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 57). இவரது மனைவி சாந்தா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் சேலத்தில் இருந்து கட்டப் பை வாங்கி வந்து மொத்த வியாபாரம் செய்து வருகின்றனர்.

கடந்த 24-ந் தேதி மூர்த்தியும், அவரது மனைவியும் வியாபாரம் தொடர்பாக வெளியூர் சென்றிருந்தனர். மறுநாள் அதிகாலை வீடு திரும்பினர். பின்னர் அன்று இரவு அசதியில் இவர்கள் படுத்து தூங்கி விட்டனர்.

25-ந்தேதி காலையில் அவர் கள் கொண்டு வந்த பணத்தை பீரோவில் வைப்பதற்காக சென்ற போது பீரோவின் கதவு உடைக்கப்பட் டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பீரோவில் இருந்த கம்மல், மோதிரம், செயின் உள்ளிட்ட 20 பவுன் நகை, ரூ.4 லட்சம் ரொக்கம், 40 கிராம் வெள்ளி பொருட்கள் மர்ம உங்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து மூர்த்தி திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் கை ரேகை நிபு ணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகை மற்றம் தடயங்களை சேகரித்தனர். கொள்ளை யடித்துச் சென்ற நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.8 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் தனி படை அமைத்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com