என் மலர்
உள்ளூர் செய்திகள்

போளூர் பேரூராட்சிக்கு வரி செலுத்த வேண்டும்
- அதிகாரிகள் வேண்டுகோள்
- தவறும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை
போளூர்:
போளூர் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிபாக்கி பொதுமக்கள் செலுத்துமாறு, பேரூராட்சி தலைவர் ராணி சண்முகம், செயல் அலுவலர் முகமது ரிஜ்வான் ஆகியோர் கூட்டாக அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதில் கூறியுள்ளதாவது பொதுமக்கள் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், மற்றும் வாடகை இனங்கள் வரும் 31-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே அனைவரும் வரி இனங்களை உடனே செலுத்தி பேரூராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






