என் மலர்
நீங்கள் தேடியது "விவசாயம் விழிப்புணர்வு"
- செயற்கை ரசாயனத்தின் தீமைகள் குறித்து விளக்கம்
- 101 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது
போளூர்:
போளூர் அடுத்த வசூர் கிராமத்தில் கலவை ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி மாணவிகள் வேளாண்மை அனுபவம் பற்றி கிராமப்புற குழு உறுப்பினர்கள் முன்னிலையில் இயற்கை விவசாயம் மற்றும் செயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பயிற்சி முறை பற்றியும் செயற்கை ரசாயன உரத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மற்றும் இயற்கை விவசாயம் அதன் முக்கியத்துவம் வேறுபாடுகள் குறித்து, விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் பங்கேற்ற பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி மாணவிகள் சார்பில் 101 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.






