iFLICKS தொடர்புக்கு: 8754422764

ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகத்தின் நிழல் படிந்திருக்கிறது என்றும், ஜெயலலிதா மரணம் குறித்து ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.

செப்டம்பர் 25, 2017 09:08

கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை பாதுகாப்போம்: அமைச்சர் கே.பாண்டியராஜன்

கீழடியில் விரைவில் மத்திய-மாநில அரசுகள் இணைந்து கூட்டாக அகழாய்வு மேற்கொள்ள உள்ளோம், என்றும் கீழடியில் கிடைத்த பொருட்களை பாதுகாப்போம், என்றும் அமைச்சர் கே.பாண்டியராஜன் உறுதிபட தெரிவித்தார்.

செப்டம்பர் 25, 2017 08:55

ஜார்கண்ட்: பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து - 8 பேர் பலி

ஜார்கண்ட மாநிலம் குமார்துபியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 8 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

செப்டம்பர் 25, 2017 08:48

டிரம்ப்பின் பயணத்தடை பட்டியலில் இணைந்த வடகொரியா, வெனிசுலா, சாத் நாடுகள்

அமெரிக்காவுக்குள் நுழைய ஏற்கனவே தடைவிதிக்கப்பட்ட 6 நாடுகளுடன் தற்போது மேலும் மூன்று நாடுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

செப்டம்பர் 25, 2017 08:22

பிரபல எழுத்தாளர் அருன் சாது உடல்நலக்குறைவால் காலமானார்

பத்திரிக்கையாளராகவும், பிரபல எழுத்தாளராகவும் திகழ்ந்த அருன் சாது (76) இதயநோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானார்.

செப்டம்பர் 25, 2017 07:40

செந்தில்பாலாஜி நண்பர்கள் நிறுவனங்களில் 4 நாட்களாக நடந்த வருமான வரி சோதனை நிறைவு

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நண்பர்களது நிறுவனங்களில், 4 நாட்களாக நடந்த வருமான வரி சோதனை முடிவடைந்தது. இதில் கணக்கில் வராத ரூ.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

செப்டம்பர் 25, 2017 07:37

தால் ஏரியில் இருந்து குப்பை அகற்றிய பிலால் தர்: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு

ஜம்மு-காஷ்மீரின் தால் ஏரியில் இருந்து 12,000 கிலோ குப்பைகளை அகற்றிய பிலால் தர் என்ற வாலிபருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 25, 2017 06:58

புரோ கபடி லீக்: கடைசி நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் வெற்றி

புரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ் அணி கடைசி நிமிடத்தில் பெங்கால் வாரியர்சை வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்தது.

செப்டம்பர் 25, 2017 05:59

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் போலி புகைப்படத்தை காட்டி மூக்குடை பட்ட பாகிஸ்தான்

ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் நிரந்தர பிரதிநிதி மலீஹா லோஹி நேற்று ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் இந்தியாவிற்கு எதிராக போலி புகைப்படத்தை காண்பித்து மூக்குடைபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செப்டம்பர் 25, 2017 05:51

‘உங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க தயாரா?’: கர்நாடக மந்திரியிடம் கேள்வி கேட்ட பள்ளி மாணவி

“உங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க தயாரா?” என்று கர்நாடக மந்திரியிடம் மாணவி கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

செப்டம்பர் 25, 2017 05:38

வெடி விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதி: எடப்பாடி பழனிசாமி உத்தரவு

பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

செப்டம்பர் 25, 2017 05:26

நியூசிலாந்து பாராளுமன்றத்துக்கு 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் தேர்வு

நியூசிலாந்து பாராளுமன்றத்துக்கு டாக்டர் பரம்ஜீத் பார்மர், பிரியங்கா ராதாகிருஷ்ணன் ஆகிய 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

செப்டம்பர் 25, 2017 05:12

பல்கலைக்கழக மாணவிகள் மீது போலீஸ் தடியடி: ராகுல் காந்தி கடும் கண்டனம்

பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவிகள் மீது போலீசார் நடத்திய தடியடி தாக்குதலுக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 25, 2017 05:02

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட்: பிளங்கட்டின் துல்லியமான பந்துவீச்சால் இங்கிலாந்து வெற்றி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

செப்டம்பர் 25, 2017 04:22

குஜராத் மாநிலத்தில் ராகுல் காந்தி தேர்தல் பிரசார யாத்திரை இன்று தொடங்குகிறார்

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் இன்று தேர்தல் பிரசார யாத்திரையை தொடங்குகிறார்.

செப்டம்பர் 25, 2017 03:25

லிபியா: அமெரிக்க படை நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 17 பேர் பலி

அமெரிக்க படையினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் லிபியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் 17 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

செப்டம்பர் 25, 2017 02:47

டெல்லியில் கடன் விவரங்களை காட்டி விவசாயிகள் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் 71-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

செப்டம்பர் 25, 2017 02:43

ஜெர்மன் பொது தேர்தல்: ஏஞ்சலா மெர்கல் 4-வது முறையாக அபார வெற்றி

ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஏஞ்சலா மெர்கல், நான்காவது முறையாக வெற்றி பெற்று அதிபராக தேர்வு செய்யப்படுகிறார்.

செப்டம்பர் 25, 2017 02:47

அமெரிக்காவில் சர்ச்சில் புகுந்து மர்ம நபர் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி, 7 பேர் காயம்

அமெரிக்காவின் டென்னிஸ் மாகாணத்தில் உள்ள சர்ச்சில் புகுந்து மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார். மேலும் 7 பேர் காயம் அடைந்தனர்.

செப்டம்பர் 25, 2017 01:12

அணிக்காக எந்த வரிசையில் வேண்டுமானாலும் விளையாடுவேன்: ஹர்திக் பாண்டியா

அணியின் வெற்றிக்காக எந்த வரிசையில் வேண்டுமானாலும் களமிறங்கி விளையாடுவேன் என இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 25, 2017 00:16

5

ஆசிரியரின் தேர்வுகள்...