என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
விவோ நிறுவனத்தின் V21e 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. பல்வேறு முன்னணி நிறுவனங்களும் 5ஜி மாடல்களை அறிமுகம் செய்ய துவங்கி இருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது விவோ நிறுவனமும் இணைந்துள்ளது.
விவோ நிறுவனம் விரைவில் புதிய 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விவோ நிறுவனத்தின் புதிய விவோ V21e 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் கூகுள் பிளே கன்சோல் வலைதளத்தில் இடம்பெற்று வெளியாகி உள்ளது.

புது விவோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ஓரளவு குறைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக விவோ V21e 4ஜி வேரியண்ட் மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் 5ஜி வேரியண்ட் இதுவரை வெளியாகவில்லை.
அம்சங்களை பொருத்தவரை விவோ V21e 5ஜி மாடலில் 6.44 இன்ச் FHD+AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 64 எம்பி பிரைமரி சென்சார், 8 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ், 32 எம்பி செல்பி கேமரா மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம்.
சியோமி நிறுவனம் எம்ஐ வாட்ச் ரிவால்வ் ஆக்டிவ் மாடலின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.
சியோமி நிறுவனம் எம்ஐ 11 லைட் ஸ்மார்ட்போனினை ஜூன் 22 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், எம்ஐ வாட்ச் ரிவால்வ் ஆக்டிவ் மாடலும் இதே நாளில் அறிமுகமாகிறது. இதனை சியோமி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் தெரிவித்து உள்ளது.
டீசரின் படி புது ஸ்மார்ட்வாட்ச் SpO2 மாணிட்டரிங் வசதி கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. தோற்றத்தில் இது எம்ஐ வாட்ச் ரிவால்வ் போன்றே காட்சியளிக்கிறது. மேலும் இதில் அமேசான் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது.

முன்னதாக எம்ஐ வாட்ச் கலர் சீன சந்தையில அறிமுகம் செய்யப்பட்டது. இதே மாடல் இந்திய சந்தையில் எம்ஐ வாட்ச் ரிவால்வ் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் எம்ஐ வாட்ச் கலர் ஸ்போர்ட்ஸ் எடிஷன் இந்தியாவில் எம்ஐ வாட்ச் ரிவால்வ் ஆக்டிவ் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை புது ஸ்மார்ட்வாட்ச் 1.39 இன்ச் AMOLED ஸ்கிரீன், பில்ட்-இன் ஜிபிஎஸ், 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டணட் வசதி, இதய துடிப்பு சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.
ரியல்மி நிறுவனத்தின் நார்சோ 30 மற்றும் நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன்கள் ஜூன் மாதத்திலேயே அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
ரியல்மி நிறுவனம் நார்சோ 30 மற்றும் நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன்கள் இம்மாதத்திலேயே அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த தகவலை ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
முன்னதாக பிப்ரவரி மாத வாக்கில் நார்சோ 30 ப்ரோ மற்றும் நார்சோ 30ஏ ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இதுதவிர நார்சோ 30 ஸ்மார்ட்போன் மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ரியல்மி 8 மாடலின் டோன்-டவுன் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.

ரியல்மி நார்சோ 30 அம்சங்கள்
- 6.5 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர்
- 900MHz மாலி-G76 3EEMC4 GPU
- 6 ஜிபி LPPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யுஐ 2.0
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
- 2 எம்பி B&W போர்டிரெயிட் கேமரா
- 2 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
- 16 எம்பி செல்பி கேமரா, f/2.1
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 30 வாட் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்
ஏர்டெல் நிறுவனம் மேற்கொண்டு வரும் 5ஜி சோதனை குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் 5ஜி வெளியீடு விரைவில் நடைபெற இருக்கிறது. பல்வேறு டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவைக்கான சோதனையை துவங்கி இருக்கின்றன. டெலிகாம் நிறுவனங்களுக்கு மத்திய அரசு 5ஜி ஸ்பெக்ட்ரமை ஒதுக்கீடு செய்ய இருக்கிறது. எனினும், பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வி போன்ற நிறுவனங்களை 5ஜி சோதனையை துவங்க அனுமதி அளித்தது.
Airtel’s #5G trial network speeds in Gurgaon. Running on Ericsson gear. pic.twitter.com/nLctWjIHuX
— Danish (@DanishKh4n) June 14, 2021
அந்த வகையில் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களும் 5ஜி சோதனையை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. ஏர்டெல் நிறுவனம் குருகிராமில் 3.5GHz பேண்ட் மூலம் 5ஜி சோதனையை மேற்கொண்டு வருகிறது. ஏர்டெல் 5ஜி சோதனையில் அதிகபட்சம் 1Gbps வேகத்தில் டவுன்லோட் வேகம் கிடைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் ட்விட்டரில் வெளியாகி இருக்கும் வீடியோவில், ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போனில் ஏர்டெல் 5ஜி 1Gbps டவுன்லோட், 100Mbps அப்லோட் வேகம் வழங்குகிறது. ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி நெட்வொர்க் எரிக்சன் உபகரணங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் FHD+SAMOLED டிஸ்ப்ளே, 64 எம்பி குவாட் கேமரா சென்சார்களுடன் உருவாகி இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூன் 21 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவித்து இருக்கிறது. புது கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் FHD+SAMOLED ஸ்கிரீன், 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 64 எம்பி குவாட் கேமரா சென்சார்கள், 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது.
புதிய கேலக்ஸி எம்32 அமேசான் மற்றும் சாம்சங் ஷாப் வலைதளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.

முன்னதாக கீக்பென்ச் தளத்தில் வெளியான விவரங்களின்படி கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3.1, 48 எம்பி பிரைமரி கேமராவுடன், குவாட் கேமராக்கள், பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக குறிப்பிடப்பட்டது.
முன்புறம் 20 எம்பி செல்பி கேமராவும் கனெக்டிவிடிக்கு டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி, 6000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும் என தெரிகிறது.
புதிய சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் லைட் புளூ நிறங்களில் கிடைக்கும். இதன் விலை ரூ. 15 ஆயிரத்தில் துவங்கும் என்றும் கூறப்பட்டது.
ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புது ஐபேட் மினி யுஎஸ்பி டைப் சி, பாக்சி டிசைன் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் மினி 6th Gen மாடல் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புது ஐபேட் மினி விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி வருகின்றன. எனினும், முதல் முறையாக புது ஐபேட் மினி டிசைன் விவரங்கள் ரென்டர் வடிவில் வெளியாகி இருக்கிறது.
முன்னதாக பலமுறை இணையத்தில் வெளியான ரென்டர்களில் அதிக விவரங்கள் வெளியாகவில்லை. தற்போதைய ரென்டர்கள் நேரடி புகைப்படங்கள், ஸ்கீமேடிக் மற்றும் சி.ஏ.டி. பைல்களை சார்ந்து உருவாகி இருக்கிறது.

புதிய ரென்டர்களின் படி புதிய தலைமுறை ஐபேட் மினி கடந்த ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக ரி-டிசைன் செய்யப்பட்டுள்ளது. 6th Gen ஐபேட் மினி தோற்றத்தில் 4th Gen ஐபேட் ஏர், புது ஐபேட் ப்ரோ மற்றும் ஐபோன் 12 சீரிஸ் போன்ற பாக்சி டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
புது ஐபேட் மினி 8.4 முதல் 8.9 இன்ச் டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த மாடலில் ஹோம் பட்டன் இருக்காது என்றும் டச் ஐடி பவர் பட்டனுடன் பொருத்தப்பட்டு இருக்கும் என தெரிகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் டிரோன்களின் மூலம் தடுப்பூசி மற்றும் மருந்துகளை வினியோகம் செய்யும் திட்டம் துவங்கப்பட இருக்கிறது.
ப்ளிப்கார்ட் நிறுவனம் தெலுங்கானா அரசாங்கத்துடன் இணைந்து டிரோன் டெலிவரி திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் போக்குவரத்து வசதி குறைவாக இருக்கும் ஊரக பகுதிகளில் மருந்து வினியோகம் செய்யப்பட இருக்கிறது.

ஜியோ மேப்பிங், ஷிப்மென்ட் ரூட்டிங், டிராக் அண்ட் டிரேஸ் லொகேஷன் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இவை அனைத்தையும் கடந்த ஆண்டுகளாக ப்ளிப்கார்ட் உருவாக்கி வந்தவை ஆகும்.
இந்த திட்டம் மூலம் மாநிலத்தினுள் சாலை மூலம் விரைவில் சென்றடைய முடியாத ஊரக பகுதிகளில் மருந்துகளை வேகமாக வினியோகம் செய்ய முடியும். திட்டத்தை செயல்படுத்தும் முன் இதனை ஆறு நாட்களுக்கு சோதனை செய்யப்பட இருக்கிறது.
போக்கோ நிறுவனத்தின் பட்ஜெட் ரக எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது.
இந்திய சந்தையில் போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. முதல் விற்பனையில் மட்டும் போக்கோ எம்3 மாடல் சுமார் 1.5 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையானது. விற்பனை துவங்கிய ஒரே மாதத்தில் இந்த ஸ்மார்ட்போன் சுமார் 5 லட்சம் யூனிட்களை கடந்தது.

இந்த நிலையில், போக்கோ எம்3 விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது. விற்பனை துவங்கி சுமார் மூன்று மாதங்களில் போக்கோ எம்3 சுமார் 7.5 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்த தகவலை போக்கோ இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
முந்தைய போக்கோ எம்2 மற்றும் போக்கோ சி3 மாடல்களை போன்றே போக்கோ எம்3 மாடலும் விற்பனையில் பத்து லட்சம் யூனிட்களை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமி நிறுவனத்தின் எம்ஐ 11 லைட் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் எம்ஐ 11 லைட் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. புது ஸ்மார்ட்போனிற்கென ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேக வலைப்பக்கம் துவங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் எம்ஐ 11 லைட் ஸ்மார்ட்போன் ஜூன் 22 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. சர்வதேச சந்தையில் 5ஜி மற்றும் 4ஜி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்தியாவில் இதன் 4ஜி வேரியண்ட் மட்டுமே அறிமுகமாகும் என தெரிகிறது.
ஸ்மார்ட்போனின் தடிமன் மற்றும் எடை தவிர வேறு எந்த தகவலும் ப்ளிப்கார்ட் தளத்தில் இடம்பெறவில்லை. புதிய எம்ஐ 11 லைட் மாடல் 6.8 எம்எம் அளவில், 157 கிராம் எடை கொண்டிருக்கும். ஐரோப்பிய சந்தையில் எம்ஐ 11 லைட் விலை 299 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 26 ஆயிரம் என துவங்குகிறது.

எம்ஐ 11 லைட் 4ஜி குளோபல் வேரியண்ட் அம்சங்கள்
- 6.55 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2400 பிக்சல் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர்
- அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
- 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.79
- 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
- 5 எம்பி டெலிமேக்ரோ சென்சார், f/2.4
- 16 எம்பி செல்பி கேமரா, f/2.45
- 4ஜி, வைபை, ப்ளூடூத் 5.1
- யுஎஸ்பி டைப் சி
- 4250 எம்ஏஹெச் பேட்டரி
- 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்
ஒன்பிளஸ் நிறுவனம் U1S சீரிஸ் ஸ்மார்ட் டிவியை மூன்றுவித அளவுகளில் இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் டிவி U1S சீரிஸ் ஸ்மார்ட் டிவிக்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய U1S ஸ்மார்ட் டிவி 50-இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என மூன்று அளவுகளில் கிடைக்கிறது. இவை அனைத்தும் 4K திறன் கொண்டிருக்கின்றன.
பெசல் லெஸ் டிசைன் கொண்டிருக்கும் புது ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிக்கள் 95% அதிக ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, HDR10, HLG, HDR 10+ போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

ஒன்பிளஸ் டிவி U1S அம்சங்கள்
- 50 / 55 / 65-இன்ச் 3840x2160 4K LED பேனல், டால்பி விஷன், HDR10, HDR10+,HLG
- காமா என்ஜின் மற்றும் MEMC, சூப்பர் ரெசல்யூஷன், நாய்ஸ் டிக்ஷன்
- கலர் ஸ்பேஸ் மேப்பிங், டைனமிக் காண்டிராஸ்ட், AI-PQ
- ஆண்ட்ராய்டு டிவி 10 மற்றும் ஆக்சிஜன்பிளே 2.0
- பில்ட்-இன் கூகுள் அசிஸ்டண்ட்
- வைபை, ப்ளூடூத் 5.0 LE, 3x HDMI, 2x USB, ஆப்டிக்கல், ஈத்தர்நெட்
- 30W ஸ்பீக்கர், DTS-HD, டால்பி ஆடியோ

ஒன்பிளஸ் டிவி U1S மாடலுடன் ஒன்பிளஸ் நிறுவனம் புதிதாக ஒன்பிளஸ் டிவி கேமராவையும் அறிமுகம் செய்தது. இது வைடு ஆங்கில் வீடியோ, 1080 பிக்சல் தர புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இதில் டூயல் மைக்ரோபோன்கள், நாய்ஸ் கேன்சலேஷன் அல்காரிதம்களுடன் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஒன்பிளஸ் டிவி கேமரா விலை ரூ. 2499 ஆகும்.
இந்தியாவில் புதிய ஒன்பிளஸ் டிவி U1S 50 இன்ச் விலை ரூ. 39,999, 55 இன்ச் விலை ரூ. 47,999 மற்றும் 65 இன்ச் விலை ரூ. 62,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட், அமேசான் தளங்களில் நடைபெறுகிறது.
டெக்னோ நிறுவனத்தின் ஸ்பார்க் 7டி ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 10 வாட் சார்ஜிங் கொண்டிருக்கிறது.
டெக்னோ நிறுவனத்தின் புதிய ஸ்பார்க் 7டி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புது ஸ்பார்ட் 7டி 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், 4 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது. இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, ஏஐ லென்ஸ், குவாட் எல்இடி பிளாக் மற்றும் 8 எம்பி செல்பி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ் உள்ளது.
ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் சார்ந்த ஹைஒஎஸ் 7.6 கொண்டிருக்கும் டெக்னோ ஸ்பார்க் 7டி டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மற்றும் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.

டெக்னோ ஸ்பார்க் 7டி அம்சங்கள்
- 6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 20:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 2.3GHz ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
- IMG PowerVR GE8320 GPU
- 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஹைஒஎஸ் 7.6
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, குவாட் LED பிளாஷ்
- ஏஐ கேமரா
- 8 எம்பி செல்பி கேமரா, f/2.0, டூயல் எல்இடி பிளாஷ்
- பின்புறம் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- 6000 எம்ஏஹெச் பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்
டெக்னோ ஸ்பார்க் 7டி ஸ்மார்ட்போன் நெபுலா ஆரஞ்சு, மேக்னட் பிளாக் மற்றும் ஜூவல் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும், அமேசான் தளத்தில் ஜூன் 15 ஆம் தேதி நடைபெற இருக்கும் முதல் விற்பனையில் ரூ. 1000 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 7999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
மைக்ரோசாப்ட் உருவாக்கி வரும் புது கேமிங் சேவை விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிதாக கேம் ஸ்டிரீமிங் சாதனங்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் எக்ஸ்பாக்ஸ் கேம் பாஸ் சேவையை ஸ்மார்ட் டிவிக்களுக்கும் அறிமுகம் செய்ய மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளது. எக்ஸ்பாக்ஸ் மற்றும் கேமிங் சேவை குறித்த விவரங்களை மைக்ரோசாப்ட் வெளியிட்டு உள்ளது.

எக்ஸ்பாக்ஸ் அனுபவத்தை ஸ்மார்ட் டிவிக்களில் வழங்க மைக்ரோசாப்ட் உலகின் முன்னணி தொலைகாட்சி உற்பத்தியாளர்களுடன் பணியாற்றி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக விரைவில் கேமிங் கன்சோல் இன்றி, வெறும் கண்ட்ரோலர்களை மட்டுமே வாங்கினால் டிவிக்களிலேயே கேமிங் செய்யலாம்.
தொலைகாட்சி அல்லது மானிட்டர் மூலம் அதிக கேமிங் பயனர்களை ஈர்க்க கிளவுட் கேமிங் சேவையை வழங்கும் ஸ்டிரீமிங் சாதனங்களை சொந்தமாக உருவாக்க மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளது.






