என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
ரியல்மி நிறுவனத்தின் புதிய C சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்தது.
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் C11 2021 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் HD+ மினி டிராப் டிஸ்ப்ளே, யுனிசாக் பிராசஸர், 2 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமரா, ஜியோமெட்ரிக் டிசைன், 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி C11 2021 அம்சங்கள்
- 6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 20:9 மினி டிராப் டிஸ்ப்ளே
- 1.6GHz ஆக்டாகோர் யுனிசாக் SC9863A பிராசஸர், IMG8322 GPU
- 2 ஜிபி LPDDR4x ரேம்
- 32 ஜிபி eMMC 5.1 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ரியல்மி யு.ஐ. கோ எடிஷன்
- 8 எம்பி பிரைமரி கேமரா, f/2.0, LED பிளாஷ்
- 5 எம்பி செல்பி கேமரா, f/2.2
- 3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- மைக்ரோ யுஎஸ்பி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்
ரியல்மி C11 2021 ஸ்மார்ட்போன் கூல் புளூ மற்றும் கூல் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 6,999 ஆகும். எனினும், இந்த ஸ்மார்ட்போன் அறிமுக சலுகையாக ரூ. 6,799 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் மீண்டும் உயர்த்தப்பட்டது.
சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனினை மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி + 64 ஜிபி மற்றும் 6 ஜிபி + 128 ஜிபி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

அறிமுகமான சில மாதங்களில் இந்த ஸ்மார்ட்போனின் விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது இதன் விலை மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதன்படி ரெட்மி நோட் 10 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 12,999 என மாறி இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரூ. 11,999 விலையில் அறிமுகமாகி பின் ரூ. 12,499 என மாற்றப்பட்டது.
ரெட்மி நோட் 10 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 14,999 என மாறி இருக்கிறது. அதன்படி ரெட்மி நோட் 10 இரு வேரியண்ட்களின் விலையும் ரூ. 500 உயர்த்தப்பட்டு இருக்கிறது. உயர்த்தப்பட்ட புதிய விலை எம்ஐ மற்றும் அமேசான் வலைதளங்களில் மாற்றப்பட்டுவிட்டது. விரைவில் ஆப்லைன் ஸ்டோர்களிலும் மாற்றப்படும் என தெரிகிறது.
விவோ நிறுவனத்தின் புதிய V21e 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் கொண்டிருக்கிறது.
விவோ நிறுவனத்தின் புதிய மிட் ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய விவோ V21e 5ஜி மாடலில் 6.44 இன்ச் FHD+AMOLED டிஸ்ப்ளே, 32 எம்பி செல்பி கேமரா, மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், 8 ஜிபி ரேம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி வைடு ஆங்கில் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்டிருக்கும் விவோ V21e 5ஜி இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4000 எம்ஏஹெச் பேட்டரி, 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.
இந்திய சந்தையில் விவோ V21e 5ஜி மாடல் டார்க் பியல் மற்றும் சன்செட் ஜாஸ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 24,990 ஆகும்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 11 ஒஎஸ் பல்வேறு மாற்றங்களுடன் அறிமுகமாகி இருக்கிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 11 ஒஎஸ்-ஐ அறிமுகம் செய்தது. புது ஒஎஸ் மிக எளிமையான டிசைன், யு.ஐ. கொண்டிருக்கிறது. புதிதாக ஸ்னாப் லே-அவுட்கள், டெஸ்க்டாப், டெஸ்க்டாப்பில் இருந்தபடி மைக்ரோசாப்ட் டீம்ஸ்-இல் இணைவது போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

விண்டோஸ் 11 ஒஎஸ்-இல் ஸ்டார்ட் பட்டன் மற்றும் டாஸ்க்பார் நடுவில் உள்ளது. இதன் மூலம் இரு அம்சங்களையும் வேகமாக இயக்கலாம் என மைக்ரோசாப்ட் தெரிவித்து இருக்கிறது. கிளவுட் மற்றும் மைக்ரோசாப்ட் 365 கொண்டு ஸ்டார்ட் மெனுவில் ரீசன்ட் பைல்ஸ் காண்பிக்கப்படுகிறது.
புது விண்டோஸ் 11 ஒஎஸ் இன்ஸ்டால் செய்ய 1GHz அல்லது அதைவிட வேகமான பிராசஸர், அதிக கோர்கள் அடங்கிய 64-பிட் பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி அல்லது அதற்கும் அதிக ஸ்டோரேஜ், செக்யூர் பூட் வசதி கொண்ட சிஸ்டம் பர்ம்வேர், டைரக்ட் எக்ஸ் 12 அல்லது WDDM 2.0 டிரைவர் கொண்ட கிராபிக்ஸ், மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் உள்ளிட்டவை தேவைப்படும்.
ரியல்மி நிறுவனம் இந்தியாவில் நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது.
ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் நார்சோ 30 மற்றும் நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. நார்சோ 30 மாடலில் 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் LCD ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர், அதிகபட்சம் 6ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி B&W சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 30 வாட் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்கள் உள்ளன.

நார்சோ 30 5ஜி மாடலில் 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் LCD ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், ஆண்ட்ராய்டு 11, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி B&W சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் நார்சோ 30 5ஜி மாடலும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 30 வாட் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
ரியல்மி நார்சோ 30 மற்றும் நார்சோ 30 5ஜி மாடல்கள் ரேசிங் புளூ மற்றும் ரேசிங் சில்வர் நிறங்களில் கிடைக்கின்றன. நார்சோ 30 மாடலின் 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 12,499 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 14,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி நார்சோ 30 5ஜி விலை ரூ. 15,999 ஆகும்.
ரியல்மி நிறுவனத்தின் புதிய புல் ஹெச்டி 32 இன்ச் ஸ்மார்ட் டிவி பில்ட்-இன் க்ரோம்காஸ்ட் வசதி கொண்டுள்ளது.
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது. புது ஸ்மார்ட் டிவி 32 இன்ச் புல் ஹெச்டி மாடல் ஆகும். இதில் ரியல்மியின் பிரத்யேக க்ரோமா பூஸ்ட் பிக்சர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் பில்ட்-இன் க்ரோம்காஸ்ட், நெட்ப்ளிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ மற்றும் இதர செயலிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதில் 24 வாட் குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ வசதிகள் உள்ளன.

ரியல்மி ஸ்மார்ட் டிவி புல் ஹெச்டி 32 இன்ச் அம்சங்கள்
- 32 இன்ச் 1920×1080 பிக்சல் FHD டிஸ்ப்ளே
- க்ரோமா பூஸ்ட் பிக்சர் என்ஜின்
- 7 டிஸ்ப்ளே மோட்கள்
- 1.1GHz குவாட்கோர் கார்டெக்ஸ் A53 மீடியாடெக் பிராசஸர்
- மாலி-470 MP3 GPU
- 1 ஜிபி 2133MHz ரேம்
- 8 ஜிபி மெமரி
- ஆண்ட்ராய்டு டிவி 9.0
- பில்ட்-இன் க்ரோம்காஸ்ட், நெட்ப்ளிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ, லைவ் சேனல்
- வைபை 802.11 b/g/n (2.4GHz), ப்ளூடூத் 5.0, 3 x HDMI, 2 x யுஎஸ்பி
- SPDIF, DVB-T2, ஈத்தர்நெட்
- 24W ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ
ரியல்மி ஸ்மார்ட் டிவி புல் ஹெச்டி 32 இன்ச் மாடல் விலை ரூ. 18,999 ஆகும். இது ஜூன் 29 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.
குறைந்த விலையில் கொரோனாவைரஸ் தொற்று உள்ளதா என கண்டறியும் வழிமுறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மொபைல் போன் ஸ்கிரீன் மீது இருக்கும் மாதிரிகளை கொண்டு ஒருவருக்கு கொரோனாவைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என அறிந்து கொள்ளும் வழிமுறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
லண்டனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஸ்மார்ட்போன் திரையில் இருந்த ஸ்வாப்களை ஆய்வுகளில் பயன்படுத்தினர். ஆய்வில் பிசிஆர் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டபவர்களின் ஸ்மார்ட்போன் ஸ்கிரீனில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்வாப்களை சோதனை செய்தனர். இரு சோதனைகளிலும் தொற்று உறுதியாகி இருந்தது.

போன் ஸ்கிரீன் டெஸ்டிங் (PoST) என அழைக்கப்படும் புது வழிமுறையை கொண்டு கொரோனாவைரஸ் தொற்றை 81 முதல் 100 சதவீதம் வரை சரியாக கண்டறிய முடிகிறது. வழக்கமான பிசிஆர் சோதனையை விட இந்த சோதனைக்கான செலவு குறைவு தான். குறைந்த விலை மட்டுமின்றி சோதனையில் தற்போது இருக்கும் அசவுகரியத்தை தவிர்க்க இந்த சோதனை வழி செய்கிறது.
இந்த சோதனையில் ஒரே நிமிடத்தில் மாதிரியை சேகரிக்க முடியும். இதனை மேற்கொள்ள மருத்துவ நிபுணர்கள் யாரும் தேவையில்லை. இந்த ஆய்வு முடிவுகள் இ-லைப் எனும் இதழில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் இன்று (ஜூன் 24) நடைபெற்றது. இந்த நிகழ்வில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனை அறிவித்தார். இந்த ஸ்மார்ட்போன் கூகுள் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ கூட்டணியில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவின் மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என முகேஷ் அம்பானி தெரிவித்தார். புதிய ஸ்மார்ட்போன் மூலம் இந்தியாவில் 2ஜி சேவையை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இத்துடன் நாட்டில் முழுமையான 5ஜி தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜியோபோன் நெக்ஸ்ட் ஜியோ மற்றும் கூகுள் இணைந்து உருவாக்கிய ஆண்ட்ராய்டு வெர்ஷன் கொண்டிருக்கிறது. இத்துடன் வாய்ஸ் அசிஸ்டண்ட், மொழி பெயர்ப்பு, சிறப்பான கேமரா மற்றும் பல்வேறு இதர அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வில் ஸ்மார்ட்போனின் முழு அம்சங்கள் அறிவிக்கப்படவில்லை. இது செப்டம்பர் 10 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.
4ஜி ஸ்மார்ட்போன் மட்டுமின்றி கூகுள் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ கூட்டணியில் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றும் உருவாக்கப்பட்டு வருவதாக கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்தார். 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
சர்வதேச பங்குச் சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவன மதிப்பு புது உச்சத்தை தொட்டது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்வதேச பங்குச் சந்தை மதிப்பு 2 ட்ரில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,48,50,100 கோடிகளாக உயர்ந்துள்ளது. முன்னதாக ஆப்பிள் நிறுவனம் மட்டுமே பங்குச் சந்தையில் இத்தகைய மதிப்பை எட்டியது.
உலகளவில் 2 ட்ரில்லியன் டாலர்கள் மதிப்பை ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் என இரு நிறுவனங்கள் மட்டுமே எட்டியுள்ளன. முன்னதாக 2019 டிசம்பர் மாத வாக்கில் சவுதி அராம்கோ நிறுவனத்தின் மதிப்பு 1.9 ட்ரில்லியன் அளவு உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

2014 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்ற சத்ய நாதெல்லா அந்நிறுவன வளர்ச்சியை புதிய உச்சத்திற்கு அழைத்து சென்றார். இவரது தலைமையில் கிளவுட்-கம்ப்யூட்டிங் மென்பொருள் விற்பனையில் உலகின் முன்னணி நிறுவனமாக மைக்ரோசாப்ட் உயர்ந்தது.
சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக சத்ய நாதெல்லா தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக மைக்ரோசாப்ட் தலைவராக இருந்த ஜான் தாம்ப்சன் தற்போது அந்நிறுவனத்தின் மூத்த இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
ரியல்மி நிறுவனம் இம்மாத துவக்கத்தில் அறிமுகம் செய்த C25s ஸ்மார்ட்போனின் இந்திய விலை திடீரென மாற்றப்பட்டது.
ரியல்மி நிறுவனத்தின் புதிய C25s ஸ்மார்ட்போன் இம்மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி C25 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்த ஒரே மாதத்தில் இதன் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

விலை உயர்வின் படி ரியல்மி C25s 4ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,499 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 11,499 என்றும் மாறி இருக்கிறது. இது முந்தைய விலையை விட ரூ. 500 அதிகம் ஆகும். உயர்த்தப்பட்ட புது விலை ரியல்மி மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் மாற்றப்பட்டுவிட்டது.
அம்சங்களை பொருத்தவரை ரியல்மி C25s மாடலில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே, ஹீலியோ ஜி85 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் சார்ந்த ரியல்மி யுஐ 2.0 வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ, 2 எம்பி பிளாக் அண்ட் வைட் லென்ஸ், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
லெனோவோ நிறுவனத்தின் புதிய தின்க்பேட் எக்ஸ்1 மடிக்கக்கூடிய லேப்டாப் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.
லெனோவோ நிறுவனம் தனது மடிக்கக்கூடிய தின்க்பேட் எக்ஸ்1 லேப்டாப் மாடலை சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தது. தற்போது இந்த மாடலை லெனோவோ இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. லெனோவோ தின்க்பேட் எக்ஸ்1 விலை ரூ. 3,29,000 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய தின்க்பேட் எக்ஸ்1 மடிக்கக்கூடிய லேப்டாப் லெனோவோ நிறுவனத்தின் விலை உயர்ந்த மாடலாக இருக்கிறது. தின்க்பேட் எக்ஸ்1 விண்டோஸ் 10 ப்ரோ ஒஎஸ் கொண்டுள்ளது. இது மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட முதல் விண்டோஸ் சாதனம் ஆகும்.
இதில் 13.3 இன்ச் 2K ரெசல்யூஷன் OLED டிஸ்ப்ளே, இன்டெல் கோர் ஐ5 பிராசஸர், 11th Gen இன்டெல் UHD கிராபிக்ஸ், 8 ஜிபி ரேம், 512 ஜிபி SSD ஸ்டோரேஜ், 50Wh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 10.4 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது.
இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட இன்டெல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்துள்ளது.
இந்தியாவில் 5ஜி நெட்வொர்கிங் தொழில்நுட்பத்தை உருவாக்க ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் இணைந்துள்ளதாக இன்டெல் அறிவித்து இருக்கிறது. இன்டெல் 5ஜி ரேடியோ அக்சஸ் நெட்வொர்க் உருவாக்க ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

5ஜி தொழில்நுட்பங்களை பெற மற்ற நிறுவனங்களை சார்ந்து இருக்கும் வழிமுறையை ரிலையன்ஸ் ஜியோ பின்பற்றவில்லை. மாறாக தனக்கென சொந்தமாக 5ஜி நெட்வொர்க் உருவாக்கும் பணிகளில் ரிலையன்ஸ் ஜியோ ஈடுபட்டு வருகிறது. இதுபோன்ற முறையை உலகின் பல்வேறு இதர டெலிகாம் நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றன.
இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் மிகப்பெரிய ஒன்றாக அமைய இருக்கிறது. இதனை சாத்தியப்படுத்த ரிலையன்ஸ் ஜியோ ஈடு இணையற்ற வழிமுறைகளை பின்பற்றி வருகிறது என இன்டெல் நிறுவனத்தின் டேட்டா தளங்களுக்கான பொது மேலாளர் மற்றும் துணை தலைவர் நவீன் ஷெனாய் தெரிவித்தார்.






