என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சியோமி நிறுவனம் தனது எம்ஐ 11 அல்ட்ரா பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது.


    இந்திய சந்தையில் எம்ஐ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஏப்ரல் 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வெளியீட்டு தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. எம்ஐ 11 அல்ட்ரா மாடல் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரி, வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், வளைந்த 120 ஹெர்ட்ஸ் QHD+ டிஸ்ப்ளே, மூன்று பிரைமரி கேமரா சென்சார், பின்புறம் இரண்டாவது டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் உள்ளது.

     எம்ஐ 11 அல்ட்ரா

    இந்தியாவில் புதிய எம்ஐ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் துவக்க விலை ரூ. 70 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. எம்ஐ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால், விலை அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

    சீன சந்தையில் எம்ஐ 11 அல்ட்ரா மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஐரோப்பாவில் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இந்தியாவில் எத்தனை வேரியண்ட் விற்பனைக்கு வரும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் மொபைல் பேம்ன்ட் சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் தனது மொபைல் பேமண்ட் சேவையை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றிய அறிவிப்பு 2019 வாக்கில் வெளியானது. தற்போது சீன சந்தையில் ஒன்பிளஸ் பே சேவை பிரத்யேகமாக வழங்கப்பட்டு வருகிறது. 

     ஒன்பிளஸ்

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒன்பிளஸ் பே சேவை மற்ற பகுதிகளிலும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஒன்பிளஸ் நிறுவனம் தனது மொபைல் பேமண்ட் சேவைக்கான டிரேட்மார்க் பெற விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தியாவில் ஒன்பிளஸ் பே எப்போது அறிமுகமாகும் என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், டிரேட்மார்க் கிடைத்துவிட்டதால், விரைவில் ஒன்பிளஸ் பே சேவை ஒன்பிளஸ் பயனர்களுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் ஓபன் சேல் விற்பனைக்கு வந்தது.


    சியோமி நிறுவனம் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் ஆன்லைன் தளங்களில் பிளாஷ் விற்பனை செய்யப்பட்டு வந்தது. பிளாஷ் முறையில் விற்பனை நடைபெற்றதை தொடர்ந்து, ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் எப்போது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ரெட்மி நோட் 10 மாடல் ஓபன் சேல் விற்பனையில் கிடைப்பதாக சியோமி தெரிவித்து இருக்கிறது. சிறப்பம்சங்களை பொருத்தவரை ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் AMOLED ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, 13 எம்பி செல்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 648 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

     ரெட்மி நோட் 10

    இத்துடன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11, புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி போர்டிரெயிட் கேமரா வழங்கப்படுகிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ஐகூ நிறுவனம் சீன சந்தையில் அறிமுகம் செய்த நியோ 5 ஸ்மார்ட்போனினை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.


    ஐகூ நியோ 5 ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஐகூ நியோ 5 பிஐஎஸ் சான்று பெற்று இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஐ2012 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் கூகுள் பிளே கன்சோல் வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. 

     ஐகூ 5

    புதிய ஐகூ நியோ 5 ஸ்மார்ட்போன் ஐகூ 7 லெஜண்ட் மாடலுடன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மார்ச் மாத வாக்கில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ஐகூ 5 நியோ மாடலில் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 870 பிளஸ் பிராசஸர், 8 ஜிபி ரேம், 66 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, OIS, LED பிளாஷ், 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ, 2 எம்பி மோனோ சென்சார் உள்ளது. இத்துடன் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 4400 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.
    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனிற்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி அறிவித்து இருக்கிறது.


    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனின் விலையை குறைத்து இருக்கிறது. முன்னதாக கேலக்ஸி ஏ32 அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், கேலக்ஸி ஏ31 மாடல் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு உள்ளது. விலை குறைப்பை தொடர்ந்து கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போனிற்கு எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது.

    தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு அல்லது செஸ்ட்மனி பயன்படுத்தி கேலக்ஸி ஏ32 வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு கேஷ்பேக் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. கேஷ்பேக் சலுகையை தொடர்ந்து எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது.

     சாம்சங் கேலக்ஸி ஏ31

    விலை குறைப்பின் படி சாம்சங் கேலக்ஸி ஏ31 மாடலின் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 16,999 என மாறி இருக்கிறது. கேலக்ஸி ஏ31 புதிய விலை விரைவில் விற்பனை மையங்கள் மற்றும் சாம்சங் இந்தியா தளங்களில் விரைவில் மாற்றப்பட இருக்கிறது. இதுதவிர தனியார் நிதி நிறுவனங்களின் வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி ஏ32 வாங்குவோரின் பழைய ஸ்மார்ட்போனிற்கு ரூ. 3 ஆயிரம் மதிப்புள்ள அப்கிரேடு வவுச்சர் வழங்கப்படுகிறது. பயனர்கள் தங்களின் பழைய ஸ்மார்ட்போனிற்கு வழங்கப்படும் தொகை பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள மை கேலக்ஸி செயலியில் சாம்சங் அப்கிரேடு -- செக் டிவைஸ் எக்சேன்ஜ் வேல்யூ ஆப்ஷன்களை தேர்வு செய்யலாம்.

    இத்துடன் சாம்சங் கேலக்ஸி ஏ32 வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் / டெபிட் கார்டுகளுக்கு ரூ. 2 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. செஸ்ட்மனி பயன்படுத்துவோருக்கு ரூ. 1500 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
    கூகுள் தேடுப்பொறி சேவையில் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் டூடுள் வெளியிடப்பட்டு இருக்கிறது.


    கூகுள் நிறுவனம் இன்று வெளியிட்டு இருக்கும் டூடுள் பொது மக்களை முகக்கவசம் அணிய வலியுறுத்துகிறது. பொதுநல நோக்கில் வெளியிடப்பட்டு இருக்கும் டூடுளுடன் `முகக்கவசம் அணியுங்கள். உயிர்களை காப்பாற்றுங்கள்' என கோரும் தகவல் இடம்பெற்று இருக்கிறது.

     கூகுள் டூடுள்

    இந்தியாவில் கொரோனாவைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாகி இருக்கிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றக்கோரி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான தேவை அதிகரித்து உள்ளது.

    விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேஷ டூடுளில் கூகுள் எழுத்துக்கள் உருவங்களாக வடிவமைக்கப்பட்டு முகக்கவசம் அணிந்து இருப்பது போன்று உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் `முகக்கவசங்கள் மிகவும் முக்கியமானவை. முகக்கவசம் அணிந்து உயிர்களை காப்பாற்றுங்கள்' எனும் வாசகம் இடம்பெற்று இருக்கிறது.
    நோக்கியாவின் புதிய ப்ளூடூத் ஹெட்செட் மற்றும் வயர்லெஸ் இயர்போன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.


    நோக்கியா ப்ளூடூத் ஹெட்செட் T2000 மற்றும் ட்ரூ வயர்லெஸ் இயர்போன் ANC T3100 ப்ளிப்கார்ட் அறிமுகம் செய்து இருக்கிறது. மெல்லிய மற்றும் அசத்தலான வடிவமைப்பில் பிரீமியம் பொருட்களை வாங்க விரும்புவோருக்காக புதிய ஆடியோ சாதனங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

    நோக்கியா ப்ளூடூத் ஹெட்செட் T2000 குவால்காம் QCC3034 ப்ளூடூத் ஆடியோ சிப்செட் மற்றும் குவால்காம் cVc எக்கோ கேன்சலேஷன் மற்றும் நாய்ஸ் சப்ரெஷ் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இவை 24-பிட் ஹெச்டி ப்ளூடூத் ஆடியோ வசதியை வழங்குகின்றன. இந்த நெக்பேண்ட் ஹெட்செட் ரேபிட் சார்ஜிங் வசதி உள்ளது. இதனால் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 9 மணி நேர பிளேபேக் வழங்குகிறது. 

     நோக்கியா இயர்போன்

    நோக்கியா ட்ரூ வயர்லெஸ் இயர்போன் ANC T3110 ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் IPX7 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இரு ஹெட்போன்களும் ப்ளூடூத் 5.1 கனெக்டிவிட்டி கொண்டுள்ளன. 

    புதிய நோக்கியா ப்ளூடூத் ஹெட்செட் T2000 விலை ரூ. 1,999 என்றும் வயர்லெஸ் இயர்போன் ANC T3110 விலை ரூ. 3,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களும் ப்ளிப்கார்ட் தளத்தில் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகின்றன.
    ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனினை அசத்தல் அம்சங்களுடன் அறிமுகம் செய்தது.


    ஒப்போ நிறுவனம் இந்தியாவில் எப்19 ஸ்மார்ட்போனினை மிட் ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 16 எம்பி செல்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், ஆண்ட்ராய்டு 11 மற்றும் கலர்ஒஎஸ் 11.1 வழங்கப்பட்டு உள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த், 2 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 3D வளைந்த பாடி மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பிளாஷ் சார்ஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. இது பேட்டரியை 72 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விடும்.

     ஒப்போ எப்19

    ஒப்போ எப்19 அம்சங்கள்

    - 6.43 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன்
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
    - அட்ரினோ 610 GPU
    - 6 ஜிபி LPDDR4x ரேம் 
    - 128 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட் 
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் கலர்ஒஎஸ் 11.1
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, LED பிளாஷ்
    - 2 எம்பி 4cm மேக்ரோ சென்சார்
    - 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
    - 16 எம்பி செல்பி கேமரா, f/2.4
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

    ஒப்போ எப்19 ஸ்மார்ட்போன் ப்ரிசம் பிளாக் மற்றும் மிட்நைட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 18,990 ஆகும். இது ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் இதர ஆன்லைன், ஆப்லைன் தளங்களில் ஏப்ரல் 9 முதல் விற்பனை செய்யப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் இரு கேலக்ஸி எப் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.


    சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி கேலக்ஸி எப்02எஸ் மற்றும் கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. கேலக்ஸி எப்12 மாடலில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 850 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3.0 வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த், 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் அடாப்டிவ் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

     சாம்சங் கேலக்ஸி எப்02எஸ்

    கேலக்ஸி எப்02எஸ் மாடலில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3.0 வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த், 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. கேலக்ஸி எப்02எஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.
    சியோமி நிறுவனத்தின் எம்ஐ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் இந்திய விலை குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    சியோமி எம்ஐ 11 அல்ட்ரா பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இன்னும் சில வாரங்களில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், புதிய சியோமி பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்திய விலை குறித்த புது தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    அதன்படி புதிய எம்ஐ 11 ஸ்மார்ட்போன் சியோமி விற்பனை செய்ததில் விலை உயர்ந்த மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், வளைந்த 120 ஹெர்ட்ஸ் QHD+ டிஸ்ப்ளே, மூன்று பிரைமரி கேமரா சென்சார், பின்புறம் இரண்டாவது டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் உள்ளது.

     சியோமி எம்ஐ 11 அல்ட்ரா

    தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்தியாவில் எம்ஐ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் துவக்க விலை ரூ. 70 ஆயிரம் என கூறப்படுகிறது. எம்ஐ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால், இந்த விலை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    சீன சந்தையில் எம்ஐ 11 அல்ட்ரா மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஐரோப்பாவில் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இந்தியாவில் எத்தனை வேரியண்ட் விற்பனைக்கு வரும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
    எதிர்காலத்தில் வெளியாகும் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் கூகுள் உற்பத்தி செய்த பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


    கூகுள் நிறுவனம் சொந்தமாக சிப்செட் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சிப்செட் வைட்சேப்பல் எனும் குறியீட்டு பெயர் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் புதிய சிப்செட் பிக்சல் 6 ஸ்மார்ட்போனில் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய சிப்செட் ஜிஎஸ் 101 எனும் பெயரில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. கூகுள் சிலிகான் எனும் பெயர் தான் ஜிஎஸ் என குறிக்கப்படுவதாக தெரிகிறது. புதிய சிப்செட் மூலம் மூன்றாம் தரப்பு நிறுவனங்களை சார்ந்து இருக்கும் நிலையை குறைக்க கூகுள் முடிவு செய்துள்ளது என கூறப்படுகிறது.

     பிக்சல் ஸ்மார்ட்போன்

    வைட்சேப்பல் சிப்செட் பிக்சல் போன் மட்டுமின்றி குரோம்புக் சாதனங்களிலும் பயன்படுத்தப்படலாம் என தெரிகிறது. முன்னதாக ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்களில் ஏஆர்எம் சார்ந்த சிப்செட்களை தனது ஐபோன் மற்றும் மேக் சாதனங்களில் வழங்கியது.

    புதிய சிப்செட்களை கூகுள் நிறுவனம் தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங்குடன் இணைந்து உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு கூகுள் மற்றும் ஆல்பபெட் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஹார்டுவேர் பிரிவில் பெரும் முதலீடு மற்றும் அதிரடி திட்டங்கள் உள்ளதை சூசகமாக தெரிவித்து இருந்தார். 

    அந்த வகையில் புதிய தகவல் மூலம் கூகுள் உண்மையில் சொந்த பிராசஸர்களை உருவாக்கி வருவதாகவே பல்வேறு முதலீட்டாளர்கள் மற்றும் கூகுள் நிறுவன நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வருவோரும் கருதுகின்றனர். 
    எல்ஜி நிறுவனம் மொபைல் போன் சந்தையில் நீடிப்பது குறித்த முக்கிய முடிவை அடுத்த வாரம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    எல்ஜி நிறுவனம் மொபைல் போன் வியாபாரத்தை விரைவில் நிறுத்தலாம் என கூறும் தகவல்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. எனினும்,  இது குறித்து எல்ஜி சார்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. 

    இந்த நிலையில், கொரிய செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் என்ஜி நிறுவனம் மொபைல் போன் சந்தையில் இருந்து விலகுவது குறித்த அறிவிப்பை அடுத்த வார துவக்கத்தில் வெளியிடலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த அறிவிப்பு ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

     எல்ஜி மொபைல்

    மொபைல் போன் சந்தையில் கடந்த சில காலாண்டுகளாக எல்ஜி நிறுவனம் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. இதனையொட்டி எல்ஜி விரைவில் மொபைல்போன் சந்தையில் இருந்து வெளியேற இருப்பதாக பலமுறை தகவல்கள் வெளியாகி வந்தன. 

    மொபைல் போன் வியாபாரத்தை நிறுத்துவது குறித்த அறிவிப்பை தொடர்ந்து அதில் பணியாற்றும் ஊழியர்கள் மற்ற வியாபார பிரிவுகளுக்கு மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
    ×