என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ரியல்மி நிறுவனம் உருவாக்கி வரும் புது டேப்லெட் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
    ரியல்மி பேட் சாதனம் விரைவில் வெளியாகும் என ரியல்மி ஏற்கனவே அறிவித்து இருந்தது. தற்போது இந்த மாடலின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. புகைப்படத்தில் உள்ள ரியல்மி பேட் சோதனை செய்யப்படுகிறது. தற்போது லீக் ஆகி இருக்கும் புகைப்படங்கள் தெளிவற்ற நிலையில் உள்ளது.

    கோப்புப்படம்

    லீக் ஆகி இருக்கும் புகைப்படங்களில் ரியல்மி பேட் கேமரா திறனை ரியல்மி நிறுவன ஊழியர் சோதனை செய்கிறார். புகைப்படங்களின்படி ரியல்மி டேப்லெட் அலுமினியம் அல்லது மெட்டல் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இதில் ஒற்றை கேமரா சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை ரியல்மி பேட் மாடலில் ஆண்ட்ராய்டு 11 ஒ.எஸ்., 4ஜி எல்.டி.இ. கனெக்டிவிட்டி, 64 ஜிபி மெமரி மற்றும் பெரிய டிஸ்ப்ளே வழங்கப்படும் என தெரிகிறது. விரைவில் ரியல்மி பேட் வெளியீட்டு விவரங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் புது மேக்புக் ப்ரோ மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

    ஆப்பிள் மேக்புக் ப்ரோ புது மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், சந்தை வல்லுநரான மிங்-சி கியோ புது டிசைன், மினி-எல்.இ.டி. டிஸ்ப்ளே கொண்ட மேக்புக் ப்ரோ மாடலை ஆப்பிள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யும் என தெரிவித்து இருக்கிறார்.

     மேக்புக் ப்ரோ

    மேலும் புதிய 14 இன்ச் மற்றும் 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்களுக்கான உற்பத்தி மூன்றாவது காலாண்டு வாக்கில் துவங்கும் என அவர் தெரிவித்தார். இதுதவிர மினி-எல்.இ.டி. டிஸ்ப்ளே பேனல்களை பெற ஆப்பிள் அதிக முதலீடு செய்கிறது. எதிர்காலத்தில் இந்த பேனல்களை பெரும்பாலன சாதனங்களில் பயன்படுத்த ஆப்பிள் திட்டமிட்டு இருப்பதாக அவர் கூறுகிறார்.

    முன்னதாக மினி-எல்.இ.டி. பேனல் கொண்ட முதல் சாதனத்தை ஆப்பிள் அறிமுகம் செய்தது. ஆப்பிள் இந்த ஆண்டு அறிமுகம் செய்த 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மாடல் மினி-எல்.இ.டி. பேனல் கொண்டிருக்கிறது. ஐபேட் மாடல்களை தொடர்ந்து மினி-எல்.இ.டி. பேனல்கள் விரைவில் மேக்புக் ப்ரோ சாதனத்திலும் வழங்கப்படலாம். 
    போக்கோ நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் டீசர் ஒன்பிளஸ் நிறுவனத்தை சீண்டும் வகையில் உள்ளது.


    போக்கோ நிறுவனம் ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு 2 ஸ்மார்ட்போன் டீசரை கேலி செய்யும் வகையில் புது டீசரை வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் ஒன்பிளஸ் நார்டு 2 ஸ்மார்ட்போன் ஜூலை 22 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது.

     போக்கோ F3 GT டீசர்

    இதுதவிர போக்கோ F3 GT ஸ்மார்ட்போனும் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புது டீசர் மூலம் நார்டு 2 மாடலை விட போக்கோ F3 GT அதிக அம்சங்களை வழங்கும் என போக்கோ தெரிவித்து உள்ளது. அந்த வகையில் நார்டு 2 ஸ்மார்ட்போனிற்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் அம்சங்களுடன் போக்கோ F3 GT வெளியாகும் என தெரிகிறது.

    முன்னதாக ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு 2 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 ஏ.ஐ. பிராசஸரை வழங்க இருப்பதாக அறிவித்தது. தற்போது போக்கோ F3 GT மாடலிலும் இதற்கு இணையான பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய போக்கோ F3 GT சீனாவில் அறிமுகமான ரெட்மி கே40 கேம் என்ஹான்ஸ்டு எடிஷனின் ரி-பிராண்டு செய்யப்பட்ட மாடல் ஆகும். 
    லெனோவோ நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புது லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.

    லெனோவோ நிறுவனம் இந்தியாவில் இரண்டு கழற்றக்கூடிய லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்தது. இவை யோகா டூயட் 7i மற்றும் ஐடியாபேட் டூயட் 3ஐ என அழைக்கப்படுகின்றன. 

    லெனோவோ யோகா டூயட் 7i மாடலில் கழற்றும் வசதி, பேக்லிட் ப்ளூடூத் 5 கீபோர்டு வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கிக்-ஸ்டான்டு வழங்கப்படுகிறது. இதனை டேப்லட் மற்றும் லேப்டாப் என இருவிதங்களில் பயன்படுத்த முடியும்.

    இதில் லெனோவோ வாய்ஸ் அசிஸ்டண்ட், பேஷியல் லாக்-இன், 11th Gen இன்டெல் கோர் ஐ5 பிராசஸர், இன்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ், டால்பி ஆடியோ, டால்பி விஷன் போன்ற அம்சங்கள் உள்ளன. 

    லெனோவோ ஐடியாபேட் டூயட் 3i

    கழற்றக்கூடிய ப்ளூடூத் 5 கீபோர்டு கொண்ட முதல் ஐடியாபேட் லேப்டாப் மாடலாக ஐடியாபேட் டூயட் 3ஐ அறிமுகமாகி இருக்கிறது. இதில் இன்டெல் செலரான் பிராசஸர், இன்டெல் UHD கிராபிக்ஸ், 10.3 இன்ச் FHD IPS பேனல் டிஸ்ப்ளே, 4 ஜிபி மெமரி உள்ளது. இதில் உள்ள பேட்டரி அதிகபட்சம் 7 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது.

    லெனோவோ யோகா டூயட் 7i விலை ரூ. 79,999 மற்றும் ஐடியாபேட் டூயட் 3ஐ விலை ரூ. 29,999 ஆகும். இரு மாடல்களின் விற்பனை ஜூலை 12 ஆம் தேதி லெனோவோ மற்றும் அமேசான் வலைதளங்களில் துவங்குகிறது.

    சாம்சங் நிறுவனம் விரைவில் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போனின் புது வேரியண்டை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சாம்சங் கேலக்ஸி ஏ52 இந்த ஆண்டு அந்நிறுவனம் வெளியிட்டதில் சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் இந்த ஸ்மார்ட்போனின் மற்றொரு வேரியண்டை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

     சாம்சங் கேலக்ஸி ஏ52

    கேலக்ஸி ஏ52 புது வேரியண்ட் SM-A528B எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி பெயரில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பி.ஐ.எஸ். சான்று பெற்றுவிட்டதால், விரைவில் இது வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

    சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி மாடல் அம்சங்கள் முந்தைய ஏ52 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும். எனினும், இதில் வித்தியாசமான கேமரா செட்டப், பெரிய பேட்டரி, அதிவேக பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மேம்பட்ட அம்சங்கள் நிறைந்த நின்டென்டோ ஸ்விட்ச் புது மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    நின்டென்டோ ஸ்விட்ச் (OLED மாடல்) புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது முந்தைய மாடலை விட மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது. இது இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை இந்த ஆண்டு இறுதியில் துவங்கும் என தெரிகிறது. 

     நின்டென்டோ ஸ்விட்ச்

    புதிய நின்டென்டோ ஸ்விட்ச் மாடல் தற்போது கிடைக்கும் அனைத்து நின்டென்டோ ஸ்விட்ச் கேம்கள் மற்றும் ஜாய்-கான் கண்ட்ரோலர்களை சப்போர்ட் செய்யும். புதிய OLED மாடலில் சற்றே பெரிய டிஸ்ப்ளே, முந்தைய மாடலை விட இருமடங்கு இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    பெரிய டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருந்தாலும், புதிய கன்சோல் அளவில் முந்தைய மாடலை போன்றே காட்சியளிக்கிறது. புதிய நின்டென்டோ ஸ்விட்ச் OLED மாடல் விலை 349.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 26,100 ஆகும். முன்னதாக 2017-இல் அறிமுகம் செய்யப்பட்ட நின்டென்டோ ஸ்விட்ச் விலை 299.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 22,400 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.  
    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி F22 ஸ்மார்ட்போன் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகிறது.

    சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் கேலக்ஸி F22 பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புது ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் HD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த், 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. இது 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

     சாம்சங் கேலக்ஸி F22

    சாம்சங் கேலக்ஸி F22 அம்சங்கள்

    - 6.4 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 20:9 இன்பினிட்டி-யு HD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர்
    - ARM மாலி-G52 2EEMC2 GPU
    - 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி (eMMC 5.1) மெமரி
    - 6 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி (eMMC 5.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி 
    - டூயல் சிம் ஸ்லாட் 
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன்யு.ஐ. கோர் 3.1
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
    - 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - 2 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
    - 13 எம்பி செல்பி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார் 
    - 3.5mm ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்
    - சாம்சங் பே மினி 
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி 
    - 6000 எம்ஏஹெச் பேட்டரி
    - 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

    சாம்சங் கேலக்ஸி F22 ஸ்மார்ட்போன் டெனிம் பிளாக் மற்றும் டெனிம் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 12,499 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 14,499 ஆகும். எனினும், அறிமுக சலுகையாக புது ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்வோருக்கு ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    ஹெச்எம்டி குளோபல் அறிமுகம் செய்து இருக்கும் நோக்கியா G20 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்டிருக்கிறது.


    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் நோக்கியா G20 இந்த வாரம் அறிமுகமாகும் என தெரிவித்துள்ளது. மேலும் புது ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    அம்சங்களை பொருத்தவரை புது நோக்கியா G20 மாடலில் 6.5 இன்ச் HD+V நாட்ச் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ G35 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி மேக்ரோ, 2 எம்பி டெப்த் லென்ஸ் மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

     நோக்கியா G20

    நோக்கியா G20 அம்சங்கள்

    - 6.52 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 20:9 வி-நாட்ச் டிஸ்ப்ளே
    - 2.3GHz ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ G35 பிராசஸர்
    - IMG PowerVR GE8320 GPU
    - 4 ஜிபி LPDDR4x ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி eMMC 5.1 மெமரி 
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட் 
    - ஆண்ட்ராய்டு 11
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
    - 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
    - 8 எம்பி செல்பி கேமரா 
    - 3.5mm ஆடியோ ஜாக், FM ரேடியோ
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் 
    - ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IPX2)
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 5050 எம்ஏஹெச் பேட்டரி
    - 10 வாட் சார்ஜிங் 

    நோக்கியா G20 ஸ்மார்ட்போன் நைட் மற்றும் கிளேசியர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 12,999 ஆகும். புது நோக்கியா ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ஜூலை 7 ஆம் தேதி துவங்குகிறது. 
    விவோ நிறுவனம் உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


    விவோ நிறுவனம் டிரோன் செயல்பாடுகள் கொண்ட பறக்கும் கேமரா தொழில்நுட்பத்தை ஸ்மார்ட்போனில் வழங்க திட்டமிட்டுள்ளது. பறக்கும் கேமரா கொண்ட புது ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமையை பெற விவோ விண்ணப்பித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள கேமரா டிரோன் போன்று பறக்கும் திறன் கொண்டிருக்கிறது.

     விவோ ப்ரோடோடைப் ஸ்மார்ட்போன்

    சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் விவோ விண்ணப்பித்து இருக்கும் புது தொழில்நுட்பம் ஜூலை 1 ஆம் தேதி வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் புகைப்படங்களும் இடம்பெற்று இருக்கின்றன. அதன்படி பறக்கும் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் தோற்றத்தில் தற்போது அனைவரும் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் போன்றே காட்சியளிக்கிறது.

    ஸ்மார்ட்போனில் உள்ள புதுவிதமான கேமராவை பறக்க வைக்க நான்கு ப்ரோப்பெல்லர்கள் உள்ளன. இதற்கென தனியாக பேட்டரி வழங்கப்படுகிறது. இந்த கேமரா மாட்யூலில் இரண்டு கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. பரிசோதனை கட்டத்தில் உள்ள புது தொழில்நுட்பம் உண்மையில் சாத்தியமாக மேலும் சில ஆண்டுகள் ஆகும்.
    இசட்.டி.இ. நிறுவன அதிகாரிகளில் ஒருவர் புது ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட்டு இருக்கிறார்.


    இசட்.டி.இ. நிறுவனம் 20 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புது ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும், இதுபற்றிய தகவலை அந்நிறுவன அதிகாரி ஒருவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

     இசட்.டி.இ. ஸ்மார்ட்போன்

    சமீப காலங்களில் அசுஸ் மற்றும் லெனோவோ போன்ற நிறுவனங்கள் 18 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளன. இந்த நிலையில், இசட்.டி.இ. உருவாக்கும் 20 ஜிபி ரேம் ஸ்மார்ட்போன் சந்தையில் நிலவும் போட்டியை மேலும் கடுமையாக்கும் என தெரிகிறது. இதுதவிர அன்டர்-டிஸ்ப்ளே செல்பி கேமரா தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளிலும் இசட்.டி.இ. ஈடுபட்டு வருகிறது.

    இசட்.டி.இ. நிறுவன இயக்குனர்களில் ஒருவரான லு கியன் ஹௌ 20 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டுள்ளார். இத்துடன் அதிகபட்சம் 1000 ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போன்களை எதிர்காலத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் லு கியன் ஹௌ தெரிவித்தார்.
    ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புது ஐபேட் மாடல் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனம் புதிதாக மூன்று ஐபேட் மாடல்களை உருவாக்கி வருவதாக கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இவற்றில் இரு ஐபேட் மாடல்கள் 2023 ஆண்டு வெளியாகும் என்றும் மற்றொன்று அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது. மூன்று புது ஐபேட் மாடல்களிலும் OLED டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

     ஐபேட்

    2022 ஆண்டு வெளியாகும் புது ஐபேட் மாடல் 10.86 இன்ச் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த மாடல் ஐபேட் ஏர் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. OLED பேனல்களை பாதுகாக்க ஆப்பிள் நிறுவனம் Film Encapsulation எனும் வழிமுறையை பயன்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

    2023 வாக்கில் வெளியாகும் ஐபேட்களில் ஆப்பிள் நிறுவனம் 120Hz LTPO பேனல்களை பயன்படுத்தும் என்றும் இவை 12.9 இன்ச் மற்றும் 11 இன்ச் அளவுகளில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. புது ஐபேட்களில் வழங்கப்பட இருக்கும் LTPO தொழில்நுட்பம் சாதனத்தின் மின்சக்தி பயன்பாட்டை வெகுவாக குறைக்கும் என கூறப்படுகிறது.
    டெக்னோ மொபைல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போனினை மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது.


    டெக்னோ மொபைல் நிறுவனத்தின் புதிய ஸ்பார்க் கோ 2021 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புது ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் HD+ டாட் நாட்ச் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஏ20 குவாட்கோர் பிராசஸர், அதிகபட்சம் 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 13 எம்பி + ஏ.ஐ. டூயல் கேமரா, டூயல் எல்இடி பிளாஷ், 8 எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

     டெக்னோ ஸ்பார்க் கோ 2021

    டெக்னோ ஸ்பார்க் கோ 2021 அம்சங்கள்

    - 6.52 இன்ச் 1500x720 பிக்சல் HD+ டிஸ்ப்ளே
    - 1.8GHz குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ20 பிராசஸர்
    - 2 ஜிபி ரேம்
    - 32 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைஒஎஸ் 6.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன் 
    - டூயல் சிம் ஸ்லாட் 
    - 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, டூயல் எல்இடி பிளாஷ்
    - ஏஐ கேமரா
    - 8 எம்பி செல்பி கேமரா, பிளாஷ் 
    - பின்புறம் கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - மைக்ரோ யுஎஸ்பி 
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி 

    டெக்னோ ஸ்பார்க் கோ 2021 மாடல் மால்தீவ்ஸ் புளூ, ஹாரிசான் ஆரஞ்சு, கேலக்ஸி புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 7 ஆம் தேதி வரை ரூ. 6699 அறிமுக விலையில் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்பின் இதன் விலை ரூ. 7299 என மாறிவிடும். 
    ×