என் மலர்
புதிய கேஜெட்டுகள்
ரியல்மி பிராண்டு தனது புதிய டாப்-எண்ட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இவை ரியல்மி X சீரிசில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரியல்மி பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி ரியல்மி X சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. ரியல்மி X ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆறாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. சோனி IMX586 பிரைமரி சென்சார், ஏ.ஐ. வசதி, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 16 எம்.பி. சோனி IMX471 பாப்-அப் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கிரேடியன்ட் கிளாஸ் பேக் கொண்டிருக்கும் ரியல்மி X ஸ்மார்ட்போன் 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி X சிறப்பம்சங்கள்
- 6.53 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 616 GPU
- 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
- டூயல் சிம் ஸ்லாட்
- கலர் ஓ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2.0″ சோனி IMX586 சென்சார், f/1.7, 6P லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX471 சென்சார், f/2.0
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

ரியல்மி X ஸ்மார்ட்போன் ஸ்டீம் வைட் மற்றும் பன்க் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 219 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.15,325) என்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 232 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.16,345) என்றும் டாப்-எண்ட் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 261 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.18,395) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் இந்த ஸ்மார்ட்போனின் மாஸ்டர் எடிஷன் ஆனியன் மற்றும் கார்லிக் வைட் போன்ற நிறங்களில் பிரத்யேக பேட்டன்களுடன் கிடைக்கிறது. இதன் விலை 276 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.19,410) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி X லைட் சிறப்பம்சங்கள்:
- 6.3 இன்ச் 2340x1080 ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 616 GPU
- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- கலர் ஓ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
- 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1/2.6″ சோனி IMX519 1.22μm சென்சார், f/1.7, EIS
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
- 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1/2.8″
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யு.எஸ்.பி.
- 4045 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்
ரியல்மி X லைட் ஸ்மார்ட்போன் நைட்ரோ புளு மற்றும் லைட்னிங் பர்ப்பிள் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 174 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.12,260) என்றும், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 189 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.13,290) என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் 218 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.15,334) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் இன்-ஸ்கிரீன் செல்ஃபி கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. மோட்டோரோலா ஒன் விஷன் என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 21:9 சினிமா விஷன் எல்.சி.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
எக்சைனோஸ் 9609 பிராசஸர் கொண்டிருக்கும் புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் 25 எம்.பி. இன்-ஸ்கிரீன் செல்ஃபி கேமரா வழங்கப்ட்டுள்ளது. இத்துடன் 1.8µm குவாட் பிக்சல் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருப்பதால் குறைந்த வெளிச்சத்திலும் சிறப்பான செல்ஃபிக்களை எடுக்க முடியும்.

புகைப்படம் எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, நைட் விஷன் மோட், OIS மற்றும் குவாட் பிக்சல் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் நான்கு பிக்சல்களை ஒன்றிணைத்து தெளிவான 12 எம்.பி. தரத்தில் புகைப்படங்களை வழங்குகிறது. இத்துடன் 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போனின் பின்புறம் 4D கார்னிங் கொரில்லா கிளாஸ் பேக் மற்றும் கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கைரேகை சென்சார் பேக் பேனலில் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டிருக்கும் மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இதனை வேகமாக சார்ஜ் செய்ய 15 வாட் டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா ஒன் விஷன் சிறப்பம்சங்கள்:
- 6.3 இன்ச் 1080x2520 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி.
- 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் 9609 பிராசஸர்
- 4 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7, OIS
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
- 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டூயல் மைக்ரோபோன்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 15 வாட் டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங்
மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் சஃபையர் புளு, பிரவுன் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 299 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.23,520) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் சவுதி அரேபியா மற்றும் தாய்லாந்தில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்பின் ஆசிய, மத்திய கிழக்கு மற்றும் ஆஸ்திரேலியா உள்ள நாடுகளில் விற்பனைக்கு வருகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் அதிரடி சிறப்பம்சங்களுடன் தனது புதிய ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 7 ப்ரோ மாடலை அறிமுகம் செய்துள்ளது.
புதிய ஒன்பிளஸ் 7 ப்ரோ மாடலில் 6.67 இன்ச் ஃபுளுயிட் AMOLED நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஆக்சிஜன் 9.0 இயங்குதளம், பில்ட்-இன் ஸ்கிரீன் ரெக்கார்டர் மற்றும் சென் மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
சென் மோட் ஆக்டிவேட் செய்தால் அவசர அழைப்புகள் மற்றும் கேமரா மூலம் புகைப்படங்களை எடுக்க முடியும். மற்ற நோட்டிஃபிகேஷன்கள் எதுவும் வராது. இந்த அம்சம் 20 நிமிடங்களுக்கு இயங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. செல்ஃபி எடுக்க ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 16 எம்.பி. பாப்-அப் ரக கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பின்புறம் 48 எம்.பி. சோனி IMX586 பிரைமரி சென்சார், f/1.6, OIS மற்றும் EIS வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் 78 எம்.எம். 8 எம்.பி. டெலிஃபோட்டோ லென்ஸ், f/2.4, 1μm பிக்சல் OIS 3X லாஸ்-லெஸ் சூம் வசதி வழங்கப்படுகிறது. இவற்றுடன் 16 எம்.பி. 117° அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், f/2.2 வழங்கப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ஒன்பிளஸ் 7 ப்ரோ மாடலில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் வழங்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட்போனின் பின்புறம் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 மற்றும் வாட்டர் ரெசி்ஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், இதில் IP சான்று எதுவும் கொண்டிருக்கவில்லை. 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 7 ப்ரோ சிறப்பம்சங்கள்:
- 6.67 இன்ச் 3120x1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. + 19.5:9 ஃபிளுயிட் AMOLED டிஸ்ப்ளே
- 3D கார்னிங் கொரில்லா கிளாஸ்
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 640 GPU
- 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
- 8 ஜி.பி. / 12 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஆக்சிஜன் ஓ.எஸ். 9.5
- டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.6, 1/2.25″ சோனி IMX586, 0.8μm பிக்சல், OIS, EIS
- 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, 1.0 μm பிக்சல், OIS
- 16 எம்.பி. 117° அல்ட்ரா-வைடு ஆங்கிள் லென்ஸ், f/2.2
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX471, f/2.0, 1.0μm பிக்சல்
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப்-சி, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ராப் சார்ஜ் 30 ஃபாஸ்ட் சார்ஜ்
ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் நெபுளா புளு, மிரர் கிரே மற்றும் ஆல்மண்ட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.48,999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.52,999 என்றும் டாப் எண்ட் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.57,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அறிமுக சலுகை
- தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.2000 கேஷ்பேக்
- ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.9,300 மதிப்புள்ள பலன்கள்
- சர்விஃபை வழங்கும் 70 சதவிகித பைபேக் சலுகை
- ஆறு மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை சலுகை
சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்20 மற்றும் கேலக்ஸி எம்30 போன்ற ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இவற்றை தொடர்ந்து சாம்சங் மற்றொரு புதிய கேலக்ஸி எம் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேலக்ஸி எம்40 என்ற பெயரில் அறிமுகமாக இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. வழக்கமாக சாம்சங் ஸ்மார்ட்போன்களில் எக்சைனோஸ் பிராசஸர் வழங்கப்படும் நிலையில், இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் பிராசஸருடன் அறிமுகமாகும் என தெரிகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா, 128 ஜி.பி. மெமரி, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் இல் சாம்சங் அறிமுகம் செய்த ஃபிளாக்ஷிப் அம்சங்கள் புதிய கேலக்ஸி எம் ஸ்மார்ட்போனில் வழங்கப்படலாம் என தெரிகிறது.
அந்த வகையில் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனில் ஹோல்-இன்-டிஸ்ப்ளே தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 6 ஜி.பி. ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் கீக்பென்ச் வலைதளத்தில் லீக் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் அடுத்த மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இதன் விலை ரூ.25,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அசுஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போன் நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரிகிறது.
அசுஸ் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் சென்ஃபோன் 6 ஸ்மார்ட்போனின் டம்மி யூனிட் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது.
அதன்படி புதிய அசுஸ் ஸ்மார்ட்போன் நாட்ச்-லெஸ் வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் ஸ்மார்ட்போனில் மேனுவல் ஸ்லைடர் வடிவமைப்பு, கிளாஸ் பேக், பின்புறம் டூயல் பிரைமரி கேமரா, கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ஸ்மார்ட்போனின் முன்புறம் ஸ்லைடு செய்யும் போது டூயல் செல்ஃபி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. இதில் ஒரு சென்சார் வைடு ஆங்கிள் கேமராவாக இருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் ஸ்லைடரின் மேல் ஸ்பீக்கர் கிரில் காணப்படுகிறது. இதன் ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் டியூன் செய்யப்பட்டிருக்கும் என தெரிகிறது.

கேமரா சென்சாரின் அருகில் எல்.இ.டி. ஃபிளாஷ் காணப்படுகிறது. ஸ்மார்ட்போனின் கீழ்புறம் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்படுகிறது. இதேபோன்ற புகைப்படங்கள் கடந்த மாதமும் வெளியானது. எனினும், இதன் பிளாக் நிற வெர்ஷன் வித்தியாசமாக காட்சியளிக்கிறது.
புதிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட், நோட்டிஃபிகேஷன் எல்.இ.டி. மற்றும் பிரத்யேக ஸ்மார்ட் பட்டன் உள்ளிட்டவை வழங்கப்படும் என அசுஸ் ஏற்கனவே உறுதிப்படுத்தி இருந்தது.
அசுஸ் சென்ஃபோன் 6 ஸ்மார்ட்போன் மே 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. அறிமுக நிகழ்வு அந்நிறுவன வலைதளத்தில் நேரலை செய்யப்படும் என அசுஸ் தெரிவித்திருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் 2019 ஐபோன் XR கேமரா அம்சங்கள் பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. #Apple
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது. சமீபத்தில் வெளியான தகவல்களில் புதிய ஐபோன்களில் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படும் என்றும் இத்துடன் சிறிய ஐபோன் மாடல் பற்றிய விவரங்களும் வெளியாகின.
அந்த வரிசையில் தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் 2019 ஐபோன் XR மாடலில் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய ஐபோன் XR மாடலின் பின்புறம் பெரிய சதுரத்தினுள் செங்குத்தாக பொருத்தப்பட்ட டூயல் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் 150.9 x 76.1 x 7.8 எம்.எம். அளவு கொண்டிருக்கும் என்றும் இதன் கேமரா பம்ப் 8.5 எம்.எம். அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019 ஐபோன்களின் நாட்ச் அளவில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய ஐபோனும் கடந்த ஆண்டு வழங்கப்பட்டதை போன்ற நாட்ச் கொண்டிருக்கும் என தெரிகிறது.

புதிய ஐபோன் XR மாடலில் ஆப்பிள் ஏ13 பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் மேம்பட்ட ஃபேஸ் ஐ.டி. தொழில்நுட்பம் வழங்கப்பட்டு, முன்புறம் டெப்த் கேமரா சிஸ்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என கூறப்படுகிறது. இதுதவிர 2019 ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களில் மூன்று பிரைமரி கேமரா அமைப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
2019 ஐபோன்களில் முன்புறம் 12 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு வெளியான ஐபோன்களில் 7 எம்.பி. கேமரா வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு செப்டம்பரில் ஆப்பிள் நிறுவனம் மூன்று புதிய ஐபோன்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புகைப்படம் நன்றி: @OnLeaks @Pricebaba
கூகுள் நிறுவனத்தின் IO2019 நிகழ்வில் அந்நிறுவன சேவைகளில் வழங்கப்பட இருக்கும் புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. #IO2019
கூகுள் நிறுவனத்தின் IO2019 டெவலப்பர் நிகழ்வு கீநோட் உரையுடன் துவங்கியது. இதில் கூகுள் நிறுவன சேவைகளான கூகுள் சர்ச், லென்ஸ் உள்ளிட்டவற்றில் விரைவில் வழங்கப்பட இருக்கும் புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதுமட்டுமின்றி கூகுளின் எதிர்கால திட்டங்கள் சார்ந்த முக்கிய தகவல்களும் அறிவிக்கப்பட்டன.
அந்த வகையில் கூகுள் சர்ச் செய்யும் போது கேமரா வழியே ஏ.ஆர். சார்ந்த பதில்கள், கூகுள் நியூஸ் சேவையில் பாட்காஸ்ட் சார்ந்த அறிவிப்புகள் உள்ளிட்டவை புதிதாக சேர்க்கப்படுகின்றன. இத்துடன் கூகுள் லென்ஸ் சேவையில் கட்டணம் செலுத்தும் வசதி, கூகுள் மென்பொருள் தானாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இனி பாட்கேஸ்ட்கள் நேரடியாக கூகுள் தேடல்களில் ஒன்றிணைக்கப்படுகிறது. இதன் மூலம் பயனர் விரும்பும் பாட்கேஸ்ட்களை எளிமையாக கண்டறிய முடியும். மேலும் பாட்கேஸ்ட்களை பின்னர் கேட்க சேமித்து வைக்கும் வசதியும் வழங்கப்படுகிறது. இத்துடன் கூகுள் சர்ச் செய்யும் போது ஏ.ஆர். சார்ந்த தகவல்கள் பதில்களாக பட்டியலிடப்படுகின்றன. இவை இம்மாத இறுதியில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கென கூகுள் நாசா, நியூ பேலண்ஸ், சாம்சங், டார்கெட், விசிபிள் பாடி, வால்வோ மற்றும் வேஃபேர் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இதன்மூலம் கூகுள் தேடல்களில் 3D பொருள்களை காண்பிக்க முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் பயனர்கள் 3D பொருட்கள் மற்றும் ஏ.ஆர். அனுபவத்தை நேரடியாக பெற முடியும். இதனால் பயனர் தேடும் விவரங்களை மிக எளிமையாக புரிந்து கொள்ள முடியும்.

கூகுள் லென்ஸ் சேவையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றங்களை கொண்டு பயனர்கள் உணவகங்களில் கிடைக்கும் பிரபல உணவு வகைகளை பற்றி அறிந்து கொள்ள முடியும். மேலும் அந்த உணவு எவ்வாறு காட்சியளிக்கும் என்பதையும் பார்த்து தெரிந்து கொண்டு அவற்றுக்கு மற்றவர்கள் வழங்கியிருக்கும் விமர்சனங்களை படிக்கலாம்.
இவற்றுடன் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன்களுக்கென கூகுள் கோ எனும் சர்ச் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதிலும் கேமரா வசதிகள் வழங்கப்படுகின்றன. இதை பயன்படுத்தி பயனர்கள் மிக எளிமையாக மொழி மாற்றம் செய்ய முடியும். மொழி தெரியாத அல்லது படிக்கத் தெரியாதவர்கள் எழுத்துக்களின் மேல் கூகுள் கேமராவை காண்பிக்க வேண்டும். இனி கூகுள் உங்களுக்கு திரையில் மொழி பெயர்ப்பு, வாசித்தல் போன்ற ஆப்ஷன்களை பட்டியலிடும். அவற்றை தேர்வு செய்தால் உடனடி மொழிமாற்றம் பெறுவதோடு, எழுதப்பட்டிருக்கும் வாசகத்தை கூகுள் கேமரா வாசித்துக் காட்டும்.
ரெட்மியின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் இன்டெர்னல் மெமரி விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது. #Redmi
ரெட்மியின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது. இதைத் தொடர்ந்து ரெட்மி பொது மேளாலர் லு வெய்பிங் புதிய ஸ்மார்ட்போனில் சூப்பர் வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் என்.எஃப்.சி. மற்றும் 3.5 எம்.எம். ஜாக் உள்ளிட்டவை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் ரஃபேல் என்ற குறியீட்டு பெயரில் உருவாகும் ரெட்மி ஸ்மார்ட்போனின் விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.

அதன்படி புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் 256 ஜி.பி. இன்டெர்னல் மெமரி, ஜி.பி.யு. ஓவர்லாக்கிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க ரெட்மி ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. சென்சார், 14 எம்.பி. சென்சார் மற்றும் 8 எம்.பி. சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இவற்றில் 13 எம்.பி. சென்சார் சூப்பர் வைடு ஆங்கிள் லென்ஸ் ஆக இருக்கலாம் என தெரிகிறது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்கலில் புதிய ரெட்மி ஸ்மார்டபோனில் பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்படாது என்றும் இதில் பன்ச்-ஹோல் டிஸ்ப்ளே, பின்புறம் மூன்று பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் பாப்-அப் கேமரா வழங்கப்படலாம் என கூறப்பட்டது.
இந்த ஸ்மார்ட்போனின் மற்ற சிறப்பம்சங்களை பொருத்தவரை 8 ஜி.பி. ரேம், 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 9 பை மற்றும் MIUI 10 இயங்குதளம் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புகைப்படம் நன்றி: Sudhanshu Ambhore
ரியல்மி பிராண்டு விரைவில் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #Realme
ரியல்மி பிராண்டு சமீபத்தில் இந்தியாவில் ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து ரியல்மி பிராண்டு விரைவில் ரியல்மி X எனும் புதிய ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ரியல்மி X ஸ்மார்ட்போன் இந்திய தரத்துக்கான சான்றை உறுதிப்படுத்தும் பி.ஐ.எஸ். (Bureau of Indian Standards - BIS) பெற்றிருக்கிறது. இதன் மூலம் ரியல்மி X இந்திய வெளியீடு கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது.
முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவின் TENAA வலைதளத்தில் சான்று பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பி.ஐ.எஸ். சான்றுகளின் படி RMX1901 மற்றும் RMX1945 மாடல் நம்பர்களை கொண்ட ஸ்மார்ட்போன் ரியல்மி X வேரியண்ட்களாக இருக்கும் என கூறப்படுகிறது.

குவால்காம் ஸ்னாப்டிரான் 730 பிராசஸர் கொண்ட முதல் ரியல்மி ஸ்மார்ட்போனாக ரியல்மி X சீரிஸ் இருக்கும். சிறப்பம்சங்களை பொருத்தவைர ரியல்மி X ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் நாட்ச் இல்லா டிஸ்ப்ளே, பாப்-அப் செல்ஃபி கேமரா, பின்புறம் டூயல் ஏ.ஐ. கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.
இதன் பிரைமரி கேமராவை பொருத்தவரை 48 எம்.பி. மற்றும் 5 எம்.பி. சென்சார்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் சார்ந்த கலர் ஒ.எஸ். 6.0, 3680 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்கள் முதற்கட்டமாக சீனாவில் அறிமுகமாகி அதன்பின் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறு. அந்த வகையில் சீனாவில் மே மாத வாக்கில் அறிமுகம் என தெரிகிறது.
அமேசான் இந்தியா வலைதளத்தில் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு துவங்கியுள்ளது. #OnePlus
சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் அமேசான் இந்தியா வலைதளத்தில் துவங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்வோருக்கு புதிய ஸ்மார்ட்போன் முதலில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஸ்மார்ட்போனினை முன்பதிவு செய்வதற்கென அமேசான் இந்தியா தளத்தில் பிரத்யேக வலைப்பக்கம் திறக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்வோர் மே 3 ஆம் தேதி முதல் மே 7 ஆம் தேதிக்குள் ரூ.1000 மதிப்புள்ள கிஃப்ட் கார்டு ஒன்றை வாங்க வேண்டும்.

இவ்வாறு வாங்கும் போது உங்களுக்கான கிஃப்ட் கார்டு பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். இனி விற்பனை துவங்கிய 60 மணி நேரத்திற்குள் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும். ஸ்மார்ட்போனை வாங்கும் போது கிஃப்ட் கார்டு தொகை ஸ்மார்ட்போனின் விலையில் இருந்து குறைக்கப்படும்.
வெற்றிகரமாக பணம் செலுத்தியதும் ரூ.15,000 மதிப்புள்ள ஸ்கிரீன் ரீபிலேஸ்மென்ட் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த காப்பீடு ஸ்மார்ட்போன் வாங்கியதில் இருந்து முதல் ஆறு மாதங்கள் வரை செல்லுபடியாகும்.
மே 8 ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு அருகாமையில் இருக்கும் ஒன்பிளஸ் ஸ்டோர், க்ரோமா அல்லது ரிலையன்ஸ் ஸ்டோர்களுக்கு நேரடியாக சென்று ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்யலாம். இவ்வாறு முன்பதிவு செய்வோருக்கும் ஸ்கிரீன் ரீபிலேஸ்மென்ட் வசதி வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 7 சீரிஸ் அறிமுக விழா மே 14 ஆம் தேதி இரவு 8.15 மணிக்கு துவங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உருவாக்கி வரும் புதிய செயலி பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Jio
இந்தியாவில் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களுக்கு போட்டியாக ரிலையன்ஸ் ஜியோ சொந்தமாக வலைதளம் ஒன்றை துவங்க இருப்பதாக தகவல் வெளியானது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ரிலையன்ஸ் ஜியோ சூப்பர் ஆப் ஒன்றை உருவாக்கி வருவதாகவும், இதில் ஒரே தளத்தில் 100 சேவைகளை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சூப்பர் ஆப் கிட்டத்தட்ட 100 சேவைகளை இயக்க வழி செய்யும் என்றும் இதில் டிஜிட்டல் பேமண்ட்ஸ் முதல் ஆன்லைன் முன்பதிவு என பல்வேறு சேவைகள் இடம்பெறும் என கூறப்படுகிறது. சீனாவில் வீசாட் போன்று பல்வேறு சேவைகளை வழங்கும் செயலியின் மூலம் ஃப்ரீசார்ஜ், ஹைக், பேடிஎம் மற்றும் ஸ்னாப்டீல் போன்ற செயலிகளுக்கு இது போட்டியாக இருக்கும்.

சமீப காலங்களில் ரிலையன்ஸ் ஜியோ பல்வேறு நிறுவனங்களை கைப்பற்றுவதும், முதலீடு செய்வதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இவற்றில் செயற்கை நுண்ணறிவு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த கல்வி மற்றும் குரல் சார்ந்த தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றுக்கு ஜியோ முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது.
சூப்பர் ஆப் மூலம் பயனர்கள் ஆன்லைன் முன்பதிவு, ஆன்லைன் வணிகம், கட்டணங்கள் செலுத்துவது மற்றும் மொபைல் ரீசார்ஜ் என மொத்தம் 100 சேவைகளை இயக்கலாம். மேலும் இந்த சேவையில் இருந்து ஆர்டர் செய்யவும் முடியும். ஜியோவின் சூப்பர் ஆப் மக்களின் தேவைகளை ஸ்மார்ட்போனிலேயே பூர்த்தி செய்யும் ஒற்றை தளமாக இருக்கும் என கூறப்படுகிறது.
முன்னதாக உலகின் ஆன்லைன் - ஆஃப்லைன் வணிக தளத்தை ஜியோ உருவாக்கி வருவதாக முகேஷ் அம்பானி தெரிவித்திருந்தார். இதன் மூலம் ஆன்லைன் விற்பனையாளர்கள் செய்யும் அனைத்தையும் சில்லறை விற்பனையாளர்கள் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேற்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.
ரியல்மி பிராண்டு புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 730 மற்றும் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் என இருவித வேரியண்ட்களில் உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது. #Realme
ரியல்மியின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. ஃபிளாக்ஷிப் ரகத்தில் உருவாகும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 730 மற்றும் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர்களுடன் இருவித வேரியண்ட்களில் உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இவை முறையே ரியல்மி X மற்றும் ரியல்மி X ப்ரோ என அழைக்கப்படும் என கூறப்படுகிறது.
ரியல்மி X மாடலில் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸரும், ரியல்மி X ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது.
முன்னதாக பாப்-அப் செல்ஃபி கேமரா கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதில் நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே வழங்கப்படுவது உறுதியாகியிருந்தது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ரியல்மி X மற்றும் ரியல்மி X ப்ரோ ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கிறது.

அதன்படி ரியல்மி X ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், பாப்-அப் ரக செல்ஃபி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புகைப்படம் எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. டெப்த் கேமரா வழங்கப்படலாம்.
மெமரியை பொருத்தவரை 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என ரியல்மி X மூன்று வித வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. முதற்கட்டமாக ரியல்மி X ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
ரியல்மி X ப்ரோ சிறப்பம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் இதில் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என இருவித வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. மற்றபடி ஸ்மார்ட்போனின் இதர அம்சங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும் என்றே தெரிகிறது.
புகைப்படம் நன்றி: TENAA | I_Leak_VN






