search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    டூயல் பிரைமரி கேமராவுடன் உருவாகும் 2019 ஐபோன் XR
    X

    டூயல் பிரைமரி கேமராவுடன் உருவாகும் 2019 ஐபோன் XR

    ஆப்பிள் நிறுவனத்தின் 2019 ஐபோன் XR கேமரா அம்சங்கள் பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. #Apple



    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது. சமீபத்தில் வெளியான தகவல்களில் புதிய ஐபோன்களில் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படும் என்றும் இத்துடன் சிறிய ஐபோன் மாடல் பற்றிய விவரங்களும் வெளியாகின. 

    அந்த வரிசையில் தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் 2019 ஐபோன் XR மாடலில் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய ஐபோன் XR மாடலின் பின்புறம் பெரிய சதுரத்தினுள் செங்குத்தாக பொருத்தப்பட்ட டூயல் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது. 

    இந்த ஸ்மார்ட்போன் 150.9 x 76.1 x 7.8 எம்.எம். அளவு கொண்டிருக்கும் என்றும் இதன் கேமரா பம்ப் 8.5 எம்.எம். அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019 ஐபோன்களின் நாட்ச் அளவில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய ஐபோனும் கடந்த ஆண்டு வழங்கப்பட்டதை போன்ற நாட்ச் கொண்டிருக்கும் என தெரிகிறது. 



    புதிய ஐபோன் XR மாடலில் ஆப்பிள் ஏ13 பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் மேம்பட்ட ஃபேஸ் ஐ.டி. தொழில்நுட்பம் வழங்கப்பட்டு, முன்புறம் டெப்த் கேமரா சிஸ்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என கூறப்படுகிறது. இதுதவிர 2019 ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களில் மூன்று பிரைமரி கேமரா அமைப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    2019 ஐபோன்களில் முன்புறம் 12 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு வெளியான ஐபோன்களில் 7 எம்.பி. கேமரா வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு செப்டம்பரில் ஆப்பிள் நிறுவனம் மூன்று புதிய ஐபோன்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புகைப்படம் நன்றி: @OnLeaks @Pricebaba
    Next Story
    ×