என் மலர்

  நீங்கள் தேடியது "Realme X Lite"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரியல்மி பிராண்டு தனது புதிய டாப்-எண்ட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இவை ரியல்மி X சீரிசில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  ரியல்மி பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி ரியல்மி X சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. ரியல்மி X ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆறாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

  புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. சோனி IMX586 பிரைமரி சென்சார், ஏ.ஐ. வசதி, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 16 எம்.பி. சோனி IMX471 பாப்-அப் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கிரேடியன்ட் கிளாஸ் பேக் கொண்டிருக்கும் ரியல்மி X ஸ்மார்ட்போன் 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.  ரியல்மி X சிறப்பம்சங்கள்

  - 6.53 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே
  - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
  - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
  - அட்ரினோ 616 GPU
  - 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
  - 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
  - டூயல் சிம் ஸ்லாட்
  - கலர் ஓ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
  - 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2.0″ சோனி IMX586 சென்சார், f/1.7, 6P லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்
  - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
  - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX471 சென்சார், f/2.0
  - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
  - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
  - 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி
  - VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்  ரியல்மி X ஸ்மார்ட்போன் ஸ்டீம் வைட் மற்றும் பன்க் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 219 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.15,325) என்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 232 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.16,345) என்றும் டாப்-எண்ட் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 261 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.18,395) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

  இத்துடன் இந்த ஸ்மார்ட்போனின் மாஸ்டர் எடிஷன் ஆனியன் மற்றும் கார்லிக் வைட் போன்ற நிறங்களில் பிரத்யேக பேட்டன்களுடன் கிடைக்கிறது. இதன் விலை 276 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.19,410) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  ரியல்மி X லைட் சிறப்பம்சங்கள்:

  - 6.3 இன்ச் 2340x1080 ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
  - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
  - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
  - அட்ரினோ 616 GPU
  - 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
  - 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
  - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  - டூயல் சிம் ஸ்லாட்
  - கலர் ஓ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
  - 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1/2.6″ சோனி IMX519 1.22μm சென்சார், f/1.7, EIS
  - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
  - 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1/2.8″
  - கைரேகை சென்சார்
  - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யு.எஸ்.பி.
  - 4045 எம்.ஏ.ஹெச். பேட்டரி
  - VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

  ரியல்மி X லைட் ஸ்மார்ட்போன் நைட்ரோ புளு மற்றும் லைட்னிங் பர்ப்பிள் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 174 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.12,260) என்றும், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 189 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.13,290) என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் 218 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.15,334) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  ×