search icon
என் மலர்tooltip icon

    கணினி

    • இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய லேப்டாப் மாடல் அலுமினியம் அலாய் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது.
    • புதிய இன்ஃபினிக்ஸ் லேப்டாப் விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது.

    இன்ஃபின்க்ஸ் நிறுவனத்தின் புதிய இன்புக் Y1 பிளஸ் நியோ லேப்டாப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய இன்புக் Y1 பிளஸ் நியோ மாடலில் 15.6 இன்ச் FHD ஸ்கிரீன், மெல்லிய பெசல்கள், இண்டெல் செலரான் N5100 பிராசஸர், 8 ஜிபி +256 ஜிபி மற்றும் 8 ஜிபி + 512 ஜிபி என இருவித மெமரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

    இத்துடன் ஐஸ் ஸ்டார்ம் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது லேப்டாப் வெப்பமாவதை அதிகபட்சம் 4 டிகிரி வரை குறைக்கிறது. அலுமினியம் அலாய் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள இன்புக் Y1 பிளஸ் நியோ மாடல் 1.76 கிலோ எடை கொண்டிருக்கிறது. இந்த லேப்டாப் 18.15mm அளவு தடிமனாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

     

    பேக்லிட் கீபோர்டு, ஆண்டி கிளேர் கிளாஸ் டச்பேட் மற்றும் மல்டி டச் சப்போர்ட், 45 வாட் டைப் சி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதில் உள்ள ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம் லேப்டாப்-ஐ ஒரு மணி நேரத்தில் 75 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிட முடியும்.

    இன்ஃபினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் நியோ அம்சங்கள்:

    15.6 இன்ச் 1920x1080 பிக்சல் FHD டிஸ்ப்ளே, 260 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்

    1.1 ஜிகாஹெர்ட்ஸ் இண்டெல் செலரான் N5100 குவாட் கோர் பிராசஸர்

    இண்டெல் UHD கிராஃபிக்ஸ்

    8 ஜிபி ரேம்

    256 ஜிபி / 512 ஜிபி எஸ்எஸ்டி

    விண்டோஸ் 11 ஹோம் எடிஷன்

    2MP FHD வெப்கேமரா

    வைபை 5, ப்ளூடூத் 5.1

    2x USB 3.0, 1x HDMI 1.4, 1x USB C

    மைக்ரோ எஸ்டி ஸ்லாட்

    3.5mm ஹெட்போன் / மைக்ரோபோன் ஜாக்

    2 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    40 வாட் ஹவர் பேட்டரி

    45 வாட் பிடி டைப் சி ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    இன்ஃபினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் நியோ மாடல் சில்வர், புளூ மற்றும் கிரே என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 20 ஆயிரத்து 990 என்றும் 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 22 ஆயிரத்த 990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அறிமுக விலை ஆகும். விற்பனை ஏப்ரல் 26 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.

    • ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு ஐஆர்சிடிசி சார்பில் புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • பயனர்கள் தப்பித்தவறியும் இவ்வாறு செய்தால், அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ஆண்ட்ராய்டு பயனர்கள் பாதுகாப்பு கருதி ஐஆர்சிடிசி சார்பில் புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு பயனர்கள் "irctcconnect.apk," என்ற பெயர் கொண்ட தரவுகளை தங்களது சாதனங்களில் இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என்று ஐஆர்சிடிசி கேட்டுக் கொண்டுள்ளது. இந்த தரவுகளை டவுன்லோட் செய்யும் பட்சத்தில் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.

    வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற தளங்களின் மூலம் இந்த தரவு வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் இதில் போலி வலைதளமான https://irctc.creditmobile.site முகவரியும் இணைக்கப்பட்டு இருக்கிறது.

    ஐஆர்சிடிசி வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி இந்த தரவை டவுன்லோட் செய்தால், உங்களது ஸ்மார்ட்போனில் அது மால்வேரை இன்ஸ்டால் செய்துவிடும். https://irctc.creditmobile.site வலைதளம் தோற்றத்தில் ஐஆர்சிடிசி வலைதளம் போன்றே காட்சியளிக்கிறது. இதில் உங்களின் தனிப்பட்ட விவரங்களை பதிவிட்டால், ஹேக்கர்கள் அவற்றை தவறாக பயன்படுத்தும் அபாயம் உள்ளது.

     

    இந்த தளத்தை உருவாக்கிய ஹேக்கர்கள் ஐஆர்சிடிசி அதிகாரிகளாக அறிமுகப்படுத்திக் கொண்டு பயனர்களிடம் ஆண்ட்ராய்டு செயலி ஒன்றை டவுன்லோட் செய்ய வலியுறுத்தி வருகின்றனர். இதன் மூலம் பயனர்களின் தனிப்பட்ட வங்கி விவரங்களான நெட் பேங்கிங் பெயர், கடவுச்சொல், யுபிஐ முகவரி, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்களை அபகரிக்க முயற்சிக்கின்றனர்.

    இந்த ஐஆர்சிடிசி முறைகேடில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

    போலி செயலிகளை டவுன்லோட் செய்ய வேண்டாம் என்று ஐஆர்சிடிசி சார்பில் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்யும் போது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்படும் வாய்ப்புகள் அதிகம் ஆகும். இதுபோன்ற முறைகேடில் சிக்காமல் இருக்க பயனர்கள் ஐஆர்சிடிசி செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து மட்டுமே டவுன்லோட் செய்ய வேண்டும்.

    மேலும் ஐஆர்சிடிசி சார்பில் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களான (கடவுச்சொல்), கிரெடிட் கார்டு எண், ஒடிபி, வங்கி கணக்கு எண் அல்லது யுபிஐ உள்ளிட்டவைகளை மொபைல் போன் மூலம் கேட்கப்படாது. 

    • ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர்கள் நிகழ்வு ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது.
    • மென்பொருள் சார்ந்த புதிய அப்டேட்கள் மற்றும் அறிவிப்புகள் இந்த நிகழ்வில் முக்கிய அம்சமாக இருக்கும்.

    ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் மாடலை ஜூன் 5 ஆம் தேதி நடைபெறும் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வான WWDC 2023-இல் அறிமுகம் செய்யும் என்று தகவல் வெளியாகி உள்ளது. WWDC வரலாற்றில் அதிக சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும் நிகழ்வாக இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் WWDC 2023 நிகழ்வு இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    இது குறித்து ஆப்பிள் வல்லுனரான மார்க் குர்மேன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் இந்த ஆண்டின் WWDC நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் புதிய மேக் லேப்டாப்களை அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. வழக்கமாக இந்த நிகழ்வில் ஐபோன், மேக், வாட்ச், டிவி மற்றும் ஐபேட் மாடல்களுக்கான புதிய ஒஎஸ் அப்டேட்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

     

    இந்த ஆண்டு நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஹெட்செட் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் புதிய xrOS-ஐ அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் 15 இன்ச் மேக்புக் ஏர், மேம்பட்ட 13 இன்ச் மேக்புக் ஏர், எண்ட்ரி லெவல் 13 இன்ச் மேக்புக் ப்ரோ, ரிப்ரெஷ் செய்யப்பட்ட 24 இன்ச் ஐமேக் மாடல்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

    இதுதவிர அளவில் பெரிய மேக்புக் ஏர் மாடலை ஆப்பிள் அறிமுகம் செய்யும் என்றும் இதில் அடுத்த தலைமுறை M3 பிராசஸருக்கு மாற்றாக M2 சிப்செட் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் தற்போது ஆப்பிள் நிறுவனம் M1 மற்றும் M2 பிராசஸர் கொண்ட மேக்புக் ஏர் மாடல்களையே விற்பனை செய்து வருகிறது.

    இரண்டு வேரியண்ட்களிலும் 13.3 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. புதிய மாடலில் 15 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படுவதால், இதன் விலை சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 13 இன்ச் மேக்புக் ஏர் (M2 பிராசஸர் மற்றும் 256 ஜிபி எஸ்எஸ்டி மாடல்) விலைரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 900 என்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரத்து 900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    Photo Courtesy: Renders by Ian

    • சியோமி நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடல்கள் வெளியீட்டு விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளன.
    • மூன்று வித நிறங்களில் உருவாகி இருக்கும் புதிய டேப்லெட் மாடலில் கீபோர்டு டாக் மற்றும் ஸ்டைலஸ் சப்போர்ட் வழங்கப்படுகிறது.

    சியோமி நிறுவனம் தனது சியோமி பேட் 6 மற்றும் சியோமி பேட் 6 ப்ரோ மாடல்களின் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. சியோமி 13 அல்ட்ரா மாடலுடன் புதிய டேப்லெட் மாடல்கள் சீன சந்தையில் ஏப்ரல் 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று சியோமி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. டேப்லெட் மாடல்கள் வெளியீட்டை உணர்த்தும் டீசர்களுடன் இவை மூன்று நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

    மேலும் புதிய பேட் 6 சீரிஸ் டேப்லெட்களில் கீபோர்டு டாக் மற்றும் ஸ்டைலஸ் சப்போர்ட் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் 2.8K 144Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட ஸ்கிரீன், ஹார்டுவேர்-லெவல் லோ புளூ லைட் ஐ ப்ரோடெக்ஷன், டூயல் ஐ ப்ரோடெக்ஷன் சான்று கொண்டிருக்கிறது. புதிய சியோமி பேட் 6 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், சியோமி பேட் 6 ப்ரோ மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது.

     

    சியோமி பேட் 6 ப்ரோ மாடலில் 8600 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், புதிதாக டீப் ஸ்லீப் மோட் உள்ளது. இதன் ஸ்டாண்ட்பை நேரம் 47.9 நாட்கள் என்று சியோமி தெரிவித்துள்ளது. இதுதவிர டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி இந்த டேப்லெட் மாடல் மெட்டல் பாடி, யுஎஸ்பி 3.0, கைரேகை சென்சார், 50MP பிரைமரி கேமரா, அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சியோமி 13 அல்ட்ரா மாடலில் 6.7 இன்ச் சாம்சங் LTPO E6 AMOLED QHD+ 120Hz டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி, 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா, 50MP டெலிபோட்டோ மற்றும் பெரிஸ்கோப் லென்ஸ், 32MP செல்ஃபி கேமரா, 4900 எம்ஏஹெச் பேட்டரி, 90 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    • வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட இருக்கும் புதிய அப்டேட் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு வெர்ஷன் செட்டிங்ஸ்-இல் விரைவில் சர்ச் பார் வழங்கப்பட இருக்கிறது.

    மெட்டா நிறுவனத்தின் குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் தனது ஆண்ட்ராய்டு வெர்ஷனில் புதிய அம்சம் வழங்க இருக்கிறது. இதுகுறித்து WABetaInfo வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி செயலியின் செட்டிங்ஸ்-இல் சர்ச் பார் சேர்க்கப்பட இருக்கிறது. கூகுள் பிளே பீட்டா திட்டத்தின் கீழ் இந்த அம்சம் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

    அந்த வகையில், இந்த அம்சம் தற்போது பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து வெளியாக இருக்கும் எதிர்கால அப்டேட்களில் இந்த அம்சம் அனைவருக்குமான ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படலாம். ஆப்பிள் ஐபோன் வெர்ஷனில் சர்ச் பார் மூலம் ஆப் செட்டிங்ஸ்-ஐ இயக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு பயனர்கள் செயலியின் செட்டிங்ஸ்-ஐ குறிப்பிட்டு தேட முடியும்.

     

    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் இந்த அம்சம் எப்படி இயங்கும் என்ற ஸ்கிரீன்ஷாட்கள் வெளியாகி உள்ளன. அதன்படி பயனர்கள் செட்டிங்ஸ்-இன் மேல்புறத்தில் சர்ச் பார் கொண்டு தேட விரும்புவதை டைப் செய்யலாம். இவ்வாறு செய்தபின் தேடலுக்கான பதில்கள் பட்டியலிடப்படும். பீட்டா டெஸ்டர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்பட்டு விட்டதை உணர்த்தும் ஐகான் இடம்பெற்று இருக்கிறது.

    இவ்வாறு வாட்ஸ்அப் செட்டிங்ஸ்-இல் சர்ச் ஐகான் காணப்பட்டால் இந்த அம்சம் வழங்கப்பட்டு விட்டதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். சர்ச் பார் மட்டுமின்றி வாட்ஸ்அப் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த கம்பேனியன் மோட் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் ஏற்கனவே பீட்டா டெஸ்டர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது.

    Photo Courtesy: WABetaInfo

    • ஒபன்ஏஐ நிறுவனத்தின் பக் பவுண்டி திட்டம் இன்று அமலுக்கு வந்தது.
    • திட்டத்தின் கீழ் கண்டறியப்படும் பிழையின் தீவிரத்தன்மையை பொருத்து 200 டாலர்கள் வழங்கப்படுகிறது.

    உலகளவில் பெரும் பேசுபொருளாகி இருக்கும் சாட்ஜிபிடி சேவையை உருவாக்கிய ஒபன்ஏஐ நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு சிஸ்டம்களில் பிழையை கண்டறிவோருக்கு 20 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 16.4 லட்சம் வரை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களது சேவையில் பிழையை கண்டறிவோருக்கு, இதுபோன்ற தொகை வழங்குவதை பக் பவுண்டி (Bug Bounty) திட்டம் என்ற பெயரில் வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளன.

    அந்த வரிசையில், ஒபன்ஏஐ நிறுவனத்தின் பக் பவுண்டி திட்டம் இன்று அமலுக்கு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் கண்டறியப்படும் பிழையின் தீவிரத்தன்மையை பொருத்து குறைந்த பட்சமாக 200 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 16 ஆயிரத்து 412 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

     பக்-கிரவுட் என்ற பக் பவுண்டி பிளாட்ஃபார்மில், ஒபன்ஏஐ நிறுவனம் ஆராய்ச்சியாளர்கள் சாட்ஜிபிடி சேவையில் ஆய்வு செய்ய அழைப்பு விடுத்திருக்கிறது. இதில் சாட்ஜிபிடி செயல்பாடு, ஒபன்ஏஐ சிஸ்டம்கள் எவ்வாறு தகவல் பரிமாற்றம் செய்து, மூன்றாம் தரப்பு செயலிகளுடன் தகவல்களை பரிமாறி கொள்கிறது என்பதை ஆய்வாளர்கள் ஆய்வுக்கு உட்படுத்தலாம்.

    தனியுரிமை விதிகளை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டில் இத்தாலி நாட்டில் சாட்ஜிபிடி சேவைக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த திட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகள் ஜெனரேடிவ் ஏஐ சேவைகளை சம்பந்தப்பட்ட ஆணையங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    • ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் டேப்லெட் மாடலை பிப்ரவரி மாத வாக்கில் அறிவித்தது.
    • புதிய ஒன்பிளஸ் பேட் மாடலில் 9510 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் பேட் கடந்த பிப்ரவரி மாத வாக்கில் அறிவிக்கப்பட்டது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் ஒன்பிளஸ் பேட் ஏப்ரல் மாத வாக்கில் விற்பனைக்கு வரும் என ஒன்பிளஸ் அறிவித்து இருந்தது. தற்போது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் முன்பதிவு துவங்கி இருக்கிறது.

    அறிமுக சலுகையாக ஒன்பிளஸ் பேட் முன்பதிவு செய்வோருக்கு 149 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 12 ஆயிரத்து 230 மதிப்புள்ள மேக்னடிக் கீபோர்டு இலவசமாக வழங்கப்படுகிறது. புதிய ஒன்பிளஸ் பேட் முன்பதிவு கட்டணம் 99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரத்து 130 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒன்பிளஸ் பேட் விலை விவரங்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.

     

    இங்கிலாந்தில் ஒன்பிளஸ் பேட் டேப்லெட் மாடலை ஏப்ரல் 25 ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் வாங்குவோருக்கு சூப்பர்வூக் 80 வாட் அடாப்டர் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் வினியோகம் மே 8 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

    ஒன்பிளஸ் பேட் அம்சங்கள்:

    11.6 இன்ச் 2800x2000 பிக்சல் டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட்

    மீடியாடெக் 9000 பிராசஸர்

    அதிகபட்சம் 12 ஜிபி ரேம்

    5ஜி கனெக்டிவிட்டி

    குவாட் ஸ்பீக்கர்கள்

    டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ்

    9510 எம்ஏஹெச் பேட்டரி

    67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    • அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகம் சார்பில் இந்த காப்புரிமை ஆப்பிள் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
    • இதன் மூலம் ஏர்பாட்ஸ்-இல் பயனர் இசையை கேட்கும் அனுபவம் முற்றிலும் புதிதாக மாறும்.

    ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் பெற்றுருக்கும் காப்புரிமையில், புதிய தொழில்நுட்பம் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது. இந்த தொழில்நுட்பம் அந்நிறுவனம் ஏற்கனவே வழங்கி வரும் ஸ்பேஷியல் ஆடியோ அம்சத்தை மேம்படுத்தும்.

    மெஷர்மண்ட் ஆஃப் விர்ச்சுவல் லிசனிங் என்விரான்மெண்ட் (measurement of virtual listening environment) என்று அழைக்கப்படும் புதிய தொழில்நுபட்பம் ஏர்பாட்ஸ் ப்ரோ-வில் உள்ள பிரத்யேக சிப்செட்களை பயன்படுத்துகிறது. பின் சாஃப்ட்வேர் ஆக்மெண்டேஷன் மற்றும் ஆடியோ சிக்னல் பிராசஸருடன் இணைத்து பயனர் இருக்கும் சூழலுக்கு ஏற்ற வகையில் ஆடியோ அனுபவத்தை மேம்படுத்துகிறது.

     

    அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகம் சார்பில் இந்த காப்புரிமை ஆப்பிள் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஆடியோ பாராமீட்டர்களை அட்ஜஸ்ட் செய்கிறது. இதன் மூலம் ஏர்பாட்ஸ்-இல் பயனர் இசையை கேட்கும் அனுபவம் முற்றிலும் புதிதாக மாறும்.

    திறந்தவெளி, அரங்கம், வீட்டின் உள்புறம், பொது போக்குவரத்து வாகனங்கள் என பல்வேறு வகையான சூழலுக்கு ஏற்ற வகையில் புதிய தொழில்நுட்பம் பயனருக்கு ஆடியோ அனுபவத்தை மேம்படுத்தி கொடுக்கும். இது போன்ற அம்சம் பயனர் இசையை ஆழ்ந்து அனுபவிக்க செய்கிறது.

    மற்ற காப்புரிமை விவரங்களை போன்றே புதிய தொழில்நுட்பம் எப்போது பயனருக்கு வழங்கப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இந்த அம்சம் ஏர்பாட்ஸ் எதிர்கால மாடல்களில் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    • ஃபாஸ்டிராக் நிறுவனத்தின் புதிய லிமிட்லெஸ் FS1 ஸ்மார்ட்வாட்ச் ஏடிஎஸ் சிப்செட் கொண்டிருக்கிறது.
    • புதிய ஸ்மார்ட்வாட்ச் ஹார்ட் ரேட் டிராகிங், ஸ்லீப் டிராகிங், ஸ்டிரெஸ் டிராகிங் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

    ஃபாஸ்டிராக் நிறுவனத்தின் புதிய லிமிட்லெஸ் FS1 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஃபாஸ்டிராக் ரெவோல்ட் FS1 மாடலை தொடர்ந்து புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய லிமிட்லெஸ் FS1 மாடலில் 1.95 இன்ச் ஹாரிசான் கர்வ் டிஸ்ப்ளே, ப்ளூடூத் 5.3, அடுத்த தலைமுறை ஏடிஎஸ் சிப்செட் கொண்டிருக்கிறது. இத்துடன் பல்வேறு உடல்நல டிராகிங் அம்சங்களான ஸ்டிரெஸ் டிராகிங், ஸ்லீப் டிராகிங் மற்றும் 24x7 ஹார்ட் ரேட் டிராகிங் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 150-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ் ஆப்ஷன்கள், 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன.

     

    இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் பத்து நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பிளாக், புளூ மற்றும் பின்க் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஃபாஸ்டிராக் லிமிட்லெஸ் FS1 அம்சங்கள்:

    1.95 இன்ச் ஹாரிசான் கர்வ் டிஸ்ப்ளே, 240x296 பிக்சல் ரெசல்யூஷன்

    அடுத்த தலைமுறை ஏடிஎஸ் சிப்செட்

    ப்ளூடூத் 5.3

    பில்ட்-இன் ஸ்பீக்கர் மற்றும் மைக்

    சிங்கில் சின்க் ப்ளூடூத் காலிங்

    150-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள்

    100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்

    பில்ட்-இன் அலெக்சா சப்போர்ட்

    ஹெல்த் சூட்

    ஃபாஸ்டிராக் ரிப்லெக்ஸ் வொர்ல்டு ஆப்

    300 எம்ஏஹெச் பேட்டரி

    அதிகபட்சம் பத்து நாட்களுக்கான பேட்டரி லைஃப்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    புதிய ஃபாஸ்டிராக் லிமிட்லெஸ் FS1 மாடலின் அறிமுக விலை ரூ. 1995 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச்-இன் விற்பனை அமேசான் வலைதளத்தில் நடைபெறுகிறது. 

    • ஐஃபால்கன் பிராண்டின் புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல் 24 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ வசதி கொண்டுள்ளது.
    • புதிய ஐஃபால்கன் ஆண்ட்ராய்டு டிவி வாங்குவோருக்கு ரூ. 1000 வங்கி சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    டிசிஎல் நிறுவனத்தின் ஐஃபால்கன் பிராண்டு இந்திய சந்தையில் புதிதாக 32 இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மூன்று புறமும் பெசல் லெஸ் டிசைன், வைடு வியூவிங் அனுபவம் வழங்குகிறது.

    மேலும் இதில் HDR, டைனமிக் கலர் என்ஹான்ஸ்மெண்ட் அல்காரிதம், 24 வாட் ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி ஆடியோ வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் குவாட் கோர் 64-பிட் பிராசஸர், G31MP2 GPU, 1 ஜிபி ரேம், 8 ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் உள்ளது.

     

    ஐஃபால்கன் S53 அம்சங்கள்:

    32 இன்ச் 1366x768 பிக்சல் FHD LED ஸ்கிரீன், HDR 10

    குவாட்கோர் 64-பிட் பிராசஸர்

    G31MP2 GPU

    1 ஜிபி ரேம்

    8 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு டிவி 11

    வாய்ஸ் ரிமோட்

    வைபை 802.11 ac, ப்ளூடூத் 5.0

    2x HMDI 2.0 (1xARC), 1x USB, S/PDIF

    AV இன்புட், 1x ஈத்தர்நெட்

    24 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    டால்பி ஆடியோ

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஐஃபால்கன் S53 32 இன்ச் ஆண்ட்ராய்டு டிவி விலை ரூ. 12 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைதளங்களில் நடைபெறுகிறது. அறிமுக சலுகையாக இந்த டிவி வாங்குவோருக்கு ரூ. 1000 வங்கி சலுகை, அதிகபட்சம் 12 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.

    • இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் சியோமி நிறுவனம் இருமடங்கு வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.
    • இந்தியா பிரீமியம் ஸ்மார்ட் டிவி பிரிவில் சோனி நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வந்தது.

    இந்திய ஸ்மார்ட் டிவி சந்தை கடந்த ஆண்டில் மட்டும் 28 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மூன்றாவது காலாண்டு வாக்கில் பண்டிகை காலத்தை ஒட்டி பல்வேறு புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டது, தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டதே விற்பனை வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என ஆய்வு நிறுவனமான கவுண்டர்பாயிண்ட் தெரிவித்து இருக்கிறது.

    இதுதவிர குறைந்த விலையில் கிடைக்கும் பெரிய அளவிலான டிவி மாடல்களுக்கு கிடைத்த வரவேற்பும் விற்பனை வளர்ச்சிக்கு காரணம் ஆகும். டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டில் பண்டிகை கால விற்பனைக்கு பின் ஸ்மார்ட் டிவி விற்பனை வருடாந்திர அடிப்படையில் இரண்டு சதவீதமாக இருந்தது. 2022 ஆண்டு ஸ்மார்ட் டிவி சந்தையில் சியோமி நிறுவனம் தொடர்ந்து முன்னணியில் இருந்து வந்துள்ளது. ஸ்மார்ட் டிவி சந்தையில் சியோமி நிறுவனம் 11 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது.

     

    சியோமியை தொடர்ந்து சாம்சங், எல்ஜி, ஒன்பிளஸ் மற்றும் டிசிஎல் போன்ற பிராண்டுகள் வேகமாக வளர்ந்து வரும் இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் அடுத்தத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. 2022 ஆண்டில் ஒன்பிளஸ் மற்றும் டிசிஎல் பிராண்டுகள் அதிவேக வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இதுதவிர சோனி நிறுவனம் பிரீமியம் பிரிவில் பலரும் தேர்வு செய்யும் பிராண்டாக உள்ளது.

    2022 ஆண்டில் மட்டும் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட் டிவிக்களில் 99 சதவீத யூனிட்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். சில பிராண்டுகளின் உயர் ரக ஸ்மார்ட் டிவி மாடல்கள் மட்டுமே வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட் டிவிக்களில் 96 சதவீதம் எல்இடி டிவிக்கள் ஆகும், இவற்றில் பெரும்பாலும் மீடியாடெக் சிப்செட்களே வழங்கப்பட்டுள்ளன.

    டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டில் சியோமி, சாம்சங், எல்ஜி, ஒன்பிளஸ் மற்றும் டிசிஎல் உள்ளிட்டவை ஸ்மார்ட் டிவி சந்தையில் 42.6 சதவீத பங்குகளை பெற்றுள்ளன.

    • நாய்ஸ் நிறுவனத்தின் புதிய HRX ஸ்ப்ரிண்ட் ஸ்மார்ட்வாட்ச் அசத்தல் டிசைன், ஏஐ வாய்ஸ் அசிஸ்டண்ட் கொண்டிருக்கிறது.
    • நாய்ஸ் HRX ஸ்ப்ரிண்ட் மாடலில் 150-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள், 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன.

    நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக HRX ஸ்ப்ரிண்ட் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. நாய்ஸ் கலர்ஃபிட் ஐகான் 3 வெளியீட்டை தொடர்ந்து புதிய HRX ஸ்ப்ரிண்ட் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய HRX ஸ்ப்ரிண்ட் மாடலில் சதுரங்க வடிவம் கொண்ட டயல், ப்ளூடூத் காலிங் வசதி போன்ற அம்சங்கள் உள்ளது. 1.91 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் நாய்ஸ் HRX ஸ்ப்ரிண்ட் அசத்தலான டிசைன், கியூஆர் கோட், ஏஐ வாய்ஸ் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்கள் உள்ளன.

    150-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்களை கொண்டிருக்கும் நாய்ஸ் HRX ஸ்ப்ரிண்ட் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டுள்ளது. புதிய HRX ஸ்ப்ரிண்ட் கொண்டு பயனர்கள் தங்களின் அன்றாட நடவடிக்கைகளை டிராக் செய்து கொள்ள முடியும். இத்துடன் IP67 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட், இன்-பில்ட் கேம்ஸ், அதிகபட்சம் பத்து காண்டாக்ட்களை ஸ்டோர் செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    இவைதவிர மேம்பட்ட நாய்ஸ் ஹெல்த் சூட் கொண்டு ஹார்ட் ரேட் மாணிட்டர், SpO2 டிராக்கர், ஸ்லீப் மாணிட்டர், மன அழுத்தம் டிராக் செய்யும் வசதி, மூச்சு பயிற்சி உள்ளிட்டவைகளை டிராக் செய்யும் வசதியை வழங்குகிறது. இன்-பில்ட் ப்ரோடக்டிவிட்டி சூட் கொண்டு அன்றாட ரிமைண்டர்கள், வானிலை விவரங்கள், இதர ஸ்மார்ட் அலர்ட் அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

    நாய்ஸ் HRX ஸ்ப்ரிண்ட் அம்சங்கள்:

    1.91 இன்ச் 240x296 பிக்சல் டிஸ்ப்ளே

    150-க்கும் அதிக கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள்

    ப்ளூடூத் 5.2

    பில்ட்-இன் மைக் மற்றும் ஸ்பீக்கர்

    240 எம்ஏஹெச் பேட்டரி

    100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்

    ஹார்ட் ரேட், SpO2, அக்செல்லோமீட்டர்

    நாய்ஸ் ஹெல்த் சூட்

    IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட்

    ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்

    நாய்ஸ் ஃபிட் ஆப்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    நாய்ஸ் HRX ஸ்ப்ரிண்ட் மாடலின் விலை ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை மிந்த்ரா, அமேசான் மற்றும் கோநாய்ஸ் வலைதளங்களில் நடைபெறுகிறது. புதிய நாய்ஸ் HRX ஸ்ப்ரிண்ட் மாடல் விண்டேஜ் பிரவுன் மற்றும் ஜெட் பிளாக் ஸ்டிராப் ஆப்ஷன்களிலும், ஆக்டிவ் புளூ, ஆக்டிவ் பிளாக் மற்றும் ஆக்டிவ் கிரே என மூன்று வித ஸ்போர்ட் ஸ்டிராப் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.

    ×