என் மலர்
தொழில்நுட்பம்
- நாய்ஸ் பட்ஸ் ஏரோ மாடல் பிரத்யேக கேமிங் மோட் மற்றும் 50ms லோ லேடன்சி வசதி உள்ளது.
- இந்த இயர்பட்ஸ் சார்கோல் பிளாக் மற்றும் ஸ்னோ வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் நாய்ஸ் பட்ஸ் ஏரோ பெயரில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. மெல்லிய மேட் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கும் நாய்ஸ் பட்ஸ் ஏரோ மாடலில் க்ரோம் அக்சென்ட்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த இயர்பட்ஸ் அழகிய தோற்றம் மற்றும் அசத்தலான ஆடியோ அனுபவம் வழங்குகிறது.
இசை ப்ரியர்கள், கேமர்கள் மற்றும் பலருக்கும் பயனளிக்கும் அம்சங்களை இந்த இயர்பட்ஸ் கொண்டிருக்கிறது. நாய்ஸ் பட்ஸ் ஏரோ மாடலில் உள்ள பிரத்யேக கேமிங் மோட் மற்றும் 50ms லோ லேடன்சி வசதியை வழங்குகிறது. இந்த இயர்பட்ஸ்-ஐ முழு சார்ஜ் செய்தால் 45 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது.

இத்துடன் 13mm டிரைவர்கள், ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. இதில் உள்ள ஹைப்பர்சின்க் தொழில்நுட்பம் இயர்பட்ஸ்-ஐ வேகமாக ஸ்மார்ட்போனுடன் இணைந்து கொள்ளும் வசதியை வழங்குகிறது. இத்துடன் IPX5 வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் நாய்ஸ் பட்ஸ் ஏரோ மாடலின் விலை ரூ. 799 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் சார்கோல் பிளாக் மற்றும் ஸ்னோ வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஜூலை 1-ம் தேதி துவங்குகிறது.
- சாம்சங் கேலக்ஸி S21 FE மாடல் 2022 ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
- சாம்சங் கேலக்ஸி S21 FE மாடலின் ஸ்னாப்டிராகன் வேரியன்ட் விவரங்கள் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S23 FE ஸ்மார்ட்போன் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் இந்த ஸ்மார்ட்போன் 2023 மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி வந்தது. சில நாடுகளில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S21 FE மாடலை மீண்டும் அறிமுகம் செய்ய இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது பற்றிய தகவலை டிப்ஸ்டரான தருன் வட்சா வெளியிட்டுள்ளார். சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S21 FE மாடலை 2022 ஜனவரி மாதம் அறிமுகம் செய்தது.

இதில் எக்சைனோஸ் 2100 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய கேலக்ஸி S21 FE மாடலில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி S21 FE மாடலின் ஸ்னாப்டிராகன் வேரியன்ட் அடுத்த மாதம் (ஜூலை) அறிமுகமாகும் என்று வட்சா தெரிவித்துள்ளார்.
ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்ட கேலக்ஸி S21 FE விலை ரூ. 40 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. பிராசஸர் தவிர இந்த ஸ்மார்ட்போன் அம்சங்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது என்றே கூறப்படுகிறது.
- ஒப்போ K11 ஸ்மார்ட்போனின் படங்கள் FCC வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.
- மிட் ரேன்ஜ் பிரிவில் 100 வாட் சார்ஜிங் வசதி பெறும் முதல் ஒப்போ ஸ்மார்ட்போன் இது என தகவல்.
ஒப்போ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. மிட் ரேன்ஜ் பிரிவில் அறிமுகமாக இருக்கும் ஒப்போ K11 ஸ்மார்ட்போன் அந்நறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ஒப்போ K10 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் TENAA வலைதளத்தில் லீக் ஆகி இருந்தது.
இந்த வரிசையில் தற்போது சீனாவின் 3சி தளத்தில் இடம்பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. ஒப்போ நிறுவன ஸ்மார்ட்போன்களிலேயே ஃபைன்ட் X6 ப்ரோ, ரெனோ 10 ப்ரோ மற்றும் ரெனோ 10 ப்ரோ பிளஸ் என மூன்று மாடல்களில் மட்டுமே அதிவேக சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி மிட் ரேன்ஜ் பிரிவில் 100 வாட் சார்ஜிங் வசதி பெறும் முதல் ஒப்போ ஸ்மார்ட்போன் என்ற பெருமையை K11 பெறும் என்று எதிர்பார்க்கலாம். சீனாவின் 3சி லிஸ்டிங்கின் படி ஒப்போ K11 ஸ்மார்ட்போன் PJC110 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் 5ஜி நெட்வொர்க் வசதி கொண்டிருக்கும் என்றும் VCBAHBCH அடாப்டர் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஒப்போ K11 ஸ்மார்ட்போனின் படங்கள் FCC வலைதளத்தில் இடம்பெற்றுள்ளது. அதில் இந்த ஸ்மார்ட்போன் மூன்று கேமரா சென்சார்கள் மற்றும் எல்இடி ஃபிளாஷ் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போனின் வலதுபுறம் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் இடம்பெற்று இருக்கிறது.
எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 782G பிராசஸர்
6 ஜிபி, 8 ஜிபி, 12 ஜிபி ரேம்
128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மெமரி
50MP பிரைமரி கேமரா, OIS
8MP அல்ட்ரா வைடு லென்ஸ்
2MP மேக்ரோ சென்சார்
16MP செல்ஃபி கேமரா
5000 எம்ஏஹெச் பேட்டரி
100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
- இந்தியாவில் பேட் 6 மாடலின் ஸ்டான்டர்டு வேரியண்ட் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது.
- புதிய சியோமி டேப்லெட் விவரங்கள் ப்ளூடூத் எஸ்ஐஜி வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.
சியோமி நிறுவன டேப்லெட் மாடல்கள் தொடர்ந்து விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. சமீபத்தில் சியோமி அறிமுகம் செய்த பேட் 6 மாடல் கடந்த வாரம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்தது. சியோமி பேட் 6 மாடலில் அசத்தலான ஹார்டுவேர் உள்ளது. இதன் விலை கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சீனா போன்று இல்லாமல், இந்தியாவில் பேட் 6 மாடலின் ஸ்டான்டர்டு வேரியண்ட் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. இதன் டாப் எண்ட் சியோமி பேட் 6 ப்ரோ மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை. எனினும், இந்த நிலை விரைவில் மாறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. எனினும், புதிய டேப்லெட் சியோமி பேட் 6 மேக்ஸ் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

மேலும் இந்த டேப்லெட் விவரங்கள் ப்ளூடூத் எஸ்ஐஜி வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி இந்த மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சியோமி நிறுவனத்தின் சர்வதேச சந்தை வெளியீடுகளில் புதிய டேப்லெட் ஆக சியோமி பேட் 6 மேக்ஸ் இணைய இருக்கிறது. ப்ளூடூத் எஸ்ஐஜி வலைதளத்தில் இந்த டேப்லெட் 230778KB5BC எனும் மாடல் நம்பருடன் பட்டியலிடப்பட்டு உள்ளது.
ப்ளூடூத் லிஸ்டிங்கில் சியோமி பேட் 6 மேக்ஸ் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை. எனினும், இதன் வெளியீடு விரைவில் நடைபெறும் என்று மட்டும் எதிர்பார்க்க முடியும். சர்வதேச சந்தையில் சியோமி பேட் 6 மேக்ஸ் சியோமி பேட் 5 ப்ரோ 12.4 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக அறிமுகமாகிறது. மேலும் இது சியோமி பேட் 6 ப்ரோ மாடலின் ரிபிரான்டு செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.
அம்சங்களை பொருத்தவரை சியோமி பேட் 6 மேக்ஸ் மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 8600 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.
- நத்திங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல் ஜூலை மாதம் அறிமுகமாகிறது.
- புதிய நத்திங் போன் 2 முன்பதிவு செய்வோருக்கு அசத்தலான சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
நத்திங் நிறுவனத்தின் முற்றிலும் புதிய போன் 2 மாடல் முன்பதிவு இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய நத்திங் போன் 2 முன்பதிவுகளை ஊக்குவிக்கும் நோக்கில், நத்திங் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
முன்பதிவு செய்வது எப்படி?
- நத்திங் போன் 2 முன்பதிவு ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது.
- விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் ரூ. 2 ஆயிரம் செலுத்தி நத்திங் போன் 2 மாடலை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
- முன்பதிவு செய்தவர்கள், ஜூலை 11-ம் தேதி ஸ்மார்ட்போன் வெளியீட்டை தொடர்ந்து அதன் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வேரியன்டை உறுதிப்படுத்தி, அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
- முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் ஜூலை 20-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை ஸ்மார்ட்போனிற்கான கட்டணத்தை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்படுகிறது.
- நத்திங் போன் 2 மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 2 ஆயிரத்தை வாடிக்கையாளர்கள் மனம் மாறினால் திரும்ப பெற்றுக் கொள்ள முடியும்.

அறிமுக சலுகை விவரங்கள்:
- நத்திங் போன் 2 மாடலை முன்பதிவு செய்வோருக்கு குறிப்பிட்ட வங்கிகள் மூலம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- நத்திங் போன் 2 முன்பதிவு செய்வோர் ரூ. 1,299 மதிப்புள்ள போன் 2 மாடலுக்கான அதிகாரப்பூர்வ பேக் கேஸ்-ஐ வெறும் ரூ. 499-க்கு வாங்கிட முடியும்.
- ரூ. 999 மதிப்புள்ள நத்திங் போன் 2 மாடலுக்கான ஸ்கிரீன் ப்ரோடெக்டரை ரூ. 399 விலையில் வாங்கிட முடியும்.
- ரூ. 8 ஆயிரத்து 499 மதிப்புள்ள நத்திங் இயர் ஸ்டிக் மாடலை ரூ. 4 ஆயிரத்து 250 விலையில் வாங்கிடலாம்.
- ரூ. 2 ஆயிரத்து 499 மதிப்புள்ள நத்திங் பவர் சாதனத்தை ரூ. 1,499 விலையில் வாங்கிட முடியும்.
வெளியீடு மற்றும் இதர விவரங்கள்:
இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் ஜூலை 11-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய நத்திங் போன் 2 மாடலில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படுகிறது. இத்துடன் 4700 எம்ஏஹெச் பேட்டரி வழங்குவதாக நத்திங் ஏற்கனவே அறிவித்துவிட்டது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி நத்திங் போன் 2 மாடலில் நத்திங் ஒஎஸ் 2.0, 6.7 இன்ச் டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 50MP பிரைமரி கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 40 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.
- ரெட்மி நோட் 12R ஸ்மார்ட்போன் மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.
- புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI ஒஎஸ் கொண்டிருக்கிறது.
ரெட்மி நோட் 12R ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 பிராசஸர் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இதில் 6.79 இன்ச் ஃபுல் HD+ 2400x1080 பிக்சல் IPS LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது.
டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் ரெட்மி நோட் 12R ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14 ஒஎஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் 8 ஜிபி ரேம், அதிகபட்சம் 256 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP சென்சார், மேக்ரோ லென்ஸ் மற்றும் 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரெட்மி நோட் 12R ஸ்மார்ட்போன் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

ரெட்மி நோட் 12R அம்சங்கள்:
6.79 இன்ச் ஃபுல் HD+ 2400x1080 பிக்சல் IPS LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்
ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 பிராசஸர்
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14 ஒஎஸ்
8 ஜிபி ரேம்
அதிகபட்சம் 256 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
50MP பிரைமரி கேமரா
2MP சென்சார், மேக்ரோ லென்ஸ்
8MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
ஃபேஸ் அன்லாக் வசதி
IP53 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்
5000 எம்ஏஹெச் பேட்டரி
18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
ரெட்மி நோட் 12R ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், ஸ்கை ஃபேன்டசி மற்றும் டைம் புளூ என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. சீன சந்தையில் இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 11 ஆயிரத்து 300 என்று துவங்குகிறது.
- கல்வித்துறை சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்ய அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள புதிய முயற்சி.
- ஏஐ சாட்பாட் ஒபன்ஏஐ நிறுவனத்தின் அதிநவீன சாட்ஜிபிடி 4 மாடல்களை தழுவி உருவாக்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்பை பறித்துக் கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலகளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கை இதனை உண்மையாக்கும் வகையில் உள்ளது.
சாட்ஜிபிடி சேவையின் திறன்களை கொண்ட ஏஐ சாட்பாட் ஒன்றை கணினியியல் துறை பாடப்பிரிவுக்கு ஆசிரியராக நியமனம் செய்ய ஹார்வார்டு பல்கலைக்கழகம் திட்டமிட்டு வருகிறது. இதுபற்றிய திட்டமிடல் பணிகளில் ஈடுபட்டு வரும் வரிவுரையாளர்கள், ஏஐ சாட்பாட் ஒபன்ஏஐ நிறுவனத்தின் அதிநவீன சாட்ஜிபிடி 3.5 அல்லது ஜிபிடி 4 மாடல்களை தழுவி உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

கல்வித்துறை சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்ய அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதன்படி ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் ஏஐ சாட்பாட் டீச்சர் செப்டம்பர் மாதம் பணியமர்த்தப்பட இருக்கிறது.
''கணினியியல் துறையின் குறிப்பிட்ட பாடப்பிரிவுக்கு ஏஐ சாட்பாட் 1:1 ஆசிரியர்: மாணவர் வீதம் வழங்கப்பட இருக்கிறது. மாணவர்களுக்கு இது தொடர்பான மென்பொருள் டூல்கள் வழங்கப்பட இருக்கிறது. இவை 24/7 நேரமும் பயன்படும் என்பதோடு, மாணவர்களுக்கு சிறப்பாகவும் செயல்படும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் கணினியியல் துறையை சேர்ந்த பேராசிரியர் டேவிட் மலன் தெரிவித்துள்ளார்.
- ஏற்கனவே மோட்டோரோலா ரேசர் 40 சீரிஸ் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.
- அமேசான் தளத்தில் மோட்டோரோலா ரேசர் 40 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் லீக் ஆனது.
மோட்டோரோலா ரேசர் 40 ஸ்மார்ட்போன் ஜூலை 4-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இத்துடன் மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா மாடலும் அறிமுகமாகிறது. இந்த நிலையில், வெளியீட்டுக்கு ஒருவாரம் காலம் இருக்கும் நிலையில், மோட்டோரோலா ரேசர் 40 விலை விவரங்கள் அமேசான் தளத்தில் தவறுதலாக இடம்பெற்று விட்டது.
புதிய மோட்டோ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் 6.9 இன்ச் pOLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என்று டீசர்களில் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே மோட்டோரோலா ரேசர் 40 சீரிஸ் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. அந்த வகையில், இந்த மாடலின் இதர அம்சங்களும் ஏற்கனவே அறிந்த ஒன்றுதான்.

தற்போது அமேசான் தளத்தில் மோட்டோரோலா ரேசர் 40 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் இடம்பெற்றது. அதன்படி இதன் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்படும் என அமேசான் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. தவறுதலாக இடம்பெற்ற நிலையில், மோட்டோரோலா ரேசர் 40 விலை விவரங்கள் உடனடியாக நீக்கப்பட்டு விட்டது.
சீன சந்தையில் மோட்டோரோலா ரேசர் 40 மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ. 46 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதன் டாப் எண்ட் மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 54 ஆயிரத்து 500 என்று நிர்ணயம் செய்யப்பட்டது.

மோட்டோரோலா ரேசர் 40 அம்சங்கள்:
6.9 இன்ச் FHD+ 1080x2640 பிக்சல் மடிக்கக்கூடிய pOLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர்
12 ஜிபி ரேம்
64MP பிரைமரி கேமரா
12MP அல்ட்ரா வைடு கேமரா
32MP செல்ஃபி கேமரா
ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ்
டூயல் சிம் ஸ்லாட்
வைபை, ப்ளூடூத்
4200 எம்ஏஹெச் பேட்டரி
33 வாட் டர்போசார்ஜிங்
- டிசிஎல் நெக்ஸ்ட்பேப்பர் 11 மற்றும் டேப் 11 மாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
- டிசிஎல் டேப் 10 ஜென் 2 மாடலில் 10.36 இன்ச் டிஸ்ப்ளே, 8-கோர் பிராசஸர் உள்ளது.
டிசிஎல் நிறுவனம் தொடர்ந்து புதிய சாதனங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே வருகிறது. இந்த வரிசையில், தற்போது டிசிஎல் டேப் 10 ஜென் 2 மாடல் விரைவில் இணைய இருக்கிறது. முன்னதாக டிசிஎல் அறிமுகம் செய்த நெக்ஸ்ட்பேப்பர் 11 மற்றும் டேப் 11 மாடல்கள், சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், புதிய டேப்லெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

புதிய டிசிஎல் டேப் 10 ஜென் 2 மாடலில் 10.36 இன்ச் டிஸ்ப்ளே, 8-கோர் பிராசஸர், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், 4ஜி எல்டிஇ வசதி, ஆக்டிவ் ஸ்டைலஸ் போன்ற அம்சங்கள் உள்ளன. இத்துடன் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் வழங்கப்படுகிறது. இந்த டேப்லெட் 2025 ஜூலை மாதம் வரை செக்யுரிட்டி அப்டேட்களை பெறும் என்று கூறப்படுகிறது.
6000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் டேப் 10 ஜென் 2 மாடல் 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது. இத்துடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது. பட்ஜெட் விலையில் ஆன்ட்ராய்டு டேப்லெட் வாங்க நினைப்போருக்கு இந்த மாடல் பயனுள்ளதாக இருக்கும். வரும் வாரங்களில் இந்த மாடலின் வெளியீடு நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.
- ரெட்மி 12 மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர் வழங்கப்படுகிறது.
- புதிய ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
சியோமி நிறுவனம் விரைவில் தனது ரெட்மி 12 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பட்ஜெட் பிரிவில் நிலை நிறுத்தப்படும் ரெட்மி 12 ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. சமீபத்தில் தான் இதே ஸ்மார்ட்போன் தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. ஆனால், புதிய ரெட்மி 12 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிகிறது. இதுபற்றிய விவரங்கள் MIUI சர்வெரில் இடம்பெற்று இருக்கிறது. இந்த ஒஎஸ் இந்திய பயனர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ரெட்மி 12 ஸ்மார்ட்போன் ஜூலை மாதத்தின் முதல் வாரத்திலேயே அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அம்சங்களை பொருத்தவரை ரெட்மி 12 மாடலில் 6.79 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், 1080x2400 பிக்சல் ரெசல்யூஷன், பன்ச் ஹோல் கட்-அவுட், மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர், மாலி G52 EEMC2 GPU வழங்கப்படுகிறது.
இத்துடன் 4 ஜிபி, 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி, 256 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ சென்சார், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. மேலும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
இந்திய சந்தையில் புதிய ரெட்மி 12 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. புதிய ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
- ஆப்பிள் நிறுவனம் தனது ஐகிளவுட் சேவைக்கான கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது.
- பொருளாதார மந்த நிலையே, இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
ஆப்பிள் பயனர்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய சேவைகளில் ஒன்றாக ஐகிளவுட் உள்ளது. ஐகிளவுட் சேவையில் பயனர்கள் 5 ஜிபி வரையிலான டேட்டாவை இலவசமாக பயன்படுத்த முடியும். இதை கடந்து அதிக ஸ்டோரேஜ் வேண்டுமெனில் பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் தனது ஐகிளவுட் சேவைக்கான கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது. தற்போது ஐகிளவுட் சேவை கட்டணம் பிரிட்டனில் மற்றும் குறிப்பிட்ட சில நாடுகளி்ல் உயர்த்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலையே, இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

விலை உயர்வில் இந்திய பயனர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்தியாவில் ஐகிளவுட் சேவைக்கான கட்டணத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்திய பயனர்கள் முன்பை போன்றே, 50 ஜிபி ஐகிளவுட் ஸ்டோரேஜுக்கு மாதம் ரூ. 75, 200 ஜிபி ஐகிளவுட் ஸ்டோரேஜூக்கு மாதம் ரூ. 219, 2 டிபி ஸ்டோரேஜூக்கு மாதம் ரூ. 749 கட்டணம் செலுத்தினால் போதும்.
இந்தியா போன்றே அமெரிக்காவிலும் ஐகிளவுட் கட்டணம் மாற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. தற்போதைய விலை உயர்வு பிரிட்டன் மட்டுமின்றி போலாந்து, ரோமானியா, சவுதி அரேபியா, தென்னாப்ரிக்கா, ஸ்வீடன், டான்சானியா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளிலும் அமலுக்கு வந்துள்ளது.
- இந்தியாவில் டெக்னோ 20 சீரிசில் மொத்தம் மூன்று மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
- டெக்னோ நிறுவனத்தின் கேமான் 20 ப்ரோ 5ஜி மாடல் சிறப்பான கேமரா அம்சங்களை கொண்டுள்ளது.
டெக்னோ மொபைல் நிறுவனம் இந்திய சந்தையில் தனது டெக்னோ கேமான் 20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது. குறுகிய காலக்கட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் விலை குறைப்பு ஜூன் 30-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.
கடந்த மாதம் தான் டெக்னோ மொபைல் தனது கேமான் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் கேமான் 20, கேமான் 20 ப்ரோ 5ஜி மற்றும் கேமான் 20 பிரீமியர் 5ஜி உள்ளிட்ட மாடல்கள் அடங்கும். இவற்றில் கேமான் 20 ப்ரோ 5ஜி, சிறப்பான மொபைல் போட்டோகிராபி வழங்குவதற்கு பெயர் பெற்றுள்ளது.

தற்போதைய குறுகிய கால விலை குறைப்பின் மூலம் டெக்னோ நிறுவனத்தின் கேமான் 20 ப்ரோ 5ஜி முன்பை விட வாங்குவதற்கு சிறப்பான தேர்வாக இருக்கும். வாடிக்கையாளர்கள் விலை குறைப்பை பயன்படுத்தி தலைசிறந்த கேமரா அனுபவம் வழங்கும் ஸ்மார்ட்போனினை வாங்கிட முடியும் என்று டெக்னோ மொபைல் இந்தியா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
தள்ளுபடி விவரங்கள்:
ஜூன் 30-ம் தேதி வரை டெக்னோ கேமான் 20 ப்ரோ 5ஜி மாடல் வாங்குவோருக்கு ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல்களுக்கும் பொருந்தும். விலை குறைப்பின் படி பயனர்கள் டெக்னோ கேமான் 20 ப்ரோ 5ஜி மாடல்களை முறையே ரூ. 17 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 19 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும்.
முன்னதாக டெக்னோ கேமான் 20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்றும், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 21 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. டெக்னோ கேமான் 20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் டார்க் வெல்கின் மற்றும் செரினிட்டி புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. விற்பனை அமேசான் வலைதளத்தில் நடைபெறுகிறது.

டெக்னோ கேமான் 20 ப்ரோ 5ஜி அம்சங்கள்:
6.67 இன்ச் FHD AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
மீடியாடெக் டிமென்சிட்டி 8050 பிராசஸர்
அதிகபட்சம் 16 ஜிபி ரேம்
அதிகபட்சம் 256 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
64MP பிரைமரி கேமரா
32MP செல்ஃபி கேமரா
ஆன்ட்ராய்டு 13 ஒஎஸ்
5000 எம்ஏஹெச் பேட்டரி
33 வாட் ஃபிளாஷ் சார்ஜிங்






