என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    விரைவில் இந்தியா வரும் ரெட்மி 12 - இணையத்தில் லீக் ஆன தகவல்!
    X

    விரைவில் இந்தியா வரும் ரெட்மி 12 - இணையத்தில் லீக் ஆன தகவல்!

    • ரெட்மி 12 மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர் வழங்கப்படுகிறது.
    • புதிய ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    சியோமி நிறுவனம் விரைவில் தனது ரெட்மி 12 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பட்ஜெட் பிரிவில் நிலை நிறுத்தப்படும் ரெட்மி 12 ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. சமீபத்தில் தான் இதே ஸ்மார்ட்போன் தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

    இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. ஆனால், புதிய ரெட்மி 12 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிகிறது. இதுபற்றிய விவரங்கள் MIUI சர்வெரில் இடம்பெற்று இருக்கிறது. இந்த ஒஎஸ் இந்திய பயனர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ரெட்மி 12 ஸ்மார்ட்போன் ஜூலை மாதத்தின் முதல் வாரத்திலேயே அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அம்சங்களை பொருத்தவரை ரெட்மி 12 மாடலில் 6.79 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், 1080x2400 பிக்சல் ரெசல்யூஷன், பன்ச் ஹோல் கட்-அவுட், மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர், மாலி G52 EEMC2 GPU வழங்கப்படுகிறது.

    இத்துடன் 4 ஜிபி, 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி, 256 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ சென்சார், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. மேலும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    இந்திய சந்தையில் புதிய ரெட்மி 12 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. புதிய ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    Next Story
    ×