என் மலர்
தொழில்நுட்பம்
- ஐபோனின் பாதுகாப்பு கேஸ் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
- ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலின் மியூட் ஸ்விட்ச் பற்றிய புது தகவல் வெளியானது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐபோன் 15 சீரிஸ் விவரங்கள் ஏற்கனவே பலமுறை வெளியாகி விட்டது. தற்போது ஐபோன் சீரிஸ் வெளியீடு நெருங்கி வருவதை அடுத்து, மேலும் அதிக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் 2023 ஐபோன் மாடல்கள் டிசைன் மற்றும் ஹார்டுவேரில் அதிக மாற்றங்களை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் பழைய மியூட் ஸ்விட்ச் நீக்கப்பட்டு, புதிய பட்டன் வழங்கப்பட இருக்கிறது. இதுபோன்ற தகவல் வெளியாவது இதுவே முதல் முறை ஆகும்.

ஐபோனின் பாதுகாப்பு கேஸ் புகைப்படங்களின் மூலம் இது தெரியவந்துள்ளது. டிப்ஸ்டர் மஜின் பு வெளியிட்டு இருக்கும் ஐபோன் கேஸ் புகைப்படங்களில், இதன் டிசைன் எப்படி இருக்கும் என்று தெரியவந்துள்ளது. அதன்படி ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலின் மியூட் ஸ்விட்ச் பட்டன் பொருத்தப்படும் இடம் மாற்றப்பட இருக்கிறது.
இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் ஆப்பிள் நிறுவனம் 16 ஆண்டுகளுக்கு பிறகு இத்தகைய மாற்றத்தை மேற்கொள்ளும். ஐபோன் கேஸ் ரென்டர்களில் புதிய ஐபோன் சற்று அகலமான, வட்ட வடிவம் கொண்ட பட்டன் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் மியூட் ஸ்விட்ச்-க்கு மாற்றாக பிரத்யேக கஸ்டம் பட்டன் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஐபோன் மாடலில் கேமராவை இயக்கவும், போனினை ஸ்விட்ச் ஆஃப் செய்ய புதிய பட்டன் வழங்கப்படுகிறது. மேலும் புதிய ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலின் கேமரா பம்ப் சற்றே பெரியதாக இருக்கும் என்றும், இதில் மேம்பட்ட கேமரா சென்சர்கள் வழங்கப்படுகின்றன.
- ரியல்மி நிறுவனம் 16 ஜிபி ரேம், 1 டிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது.
- அதிக ரேம் அம்சம் ரியல்மி நிறுவனத்தின் பிளாக்ஷிப் GT சீரிஸ் மாடல்களில் வழங்கப்படும் என்று தெரிகிறது.
ரியல்மி நிறுவனம் 24 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்களை சீன சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றிய விவரங்களை சீன டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கிறார். 24 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் சீன வலைதளமான வெய்போவில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் 24 ஜிபி ரேம் கொண்ட உலகின் முதல் சாதனம் என்ற பெருமையை பெறும் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் மட்டுமின்றி ரியல்மி நிறுவனமும் 24 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இத்தகைய ரேம் வசதி ரியல்மி நிறுவனத்தின் பிளாக்ஷிப் GT சீரிஸ் மாடல்களில் வழங்கப்படும் என்று தெரிகிறது.

கோப்புப்படம்
முன்னதாக ரியல்மி நிறுவனம் 16 ஜிபி ரேம், 1 டிபி ஸ்டோரேஜ் வசதிகளை ரியல்மி GT நியோ 5 மாடலில் வழங்கி இருந்தது. இந்த ஸ்மார்ட்போனும் சீன சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர ரியல்மி விற்பனை செய்து வரும் இதர ஸ்மார்ட்போன் மாடல்களில் ரியல்மி யுஐ ஸ்கின் மூலம் விர்ச்சுவல் மெமரி வடிவில் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஸ்மார்ட்போன்களில் 24 ஜிபி ரேம் வசதி ஹார்டுவேர் வடிவிலேயே வழங்கப்பட இருக்கிறது. அதிக திறன் கொண்ட ரேம் மாட்யுல்கள் சாம்சங் செமிகன்டக்டர் வினியோகம் செய்யும் என்று தெரிகிறது. இதே நிறுவனம் தான் ஒப்போ, ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி என மூன்று நிறுவனங்களுக்கும் ரேம் வினியோகம் செய்து வருகிறது.
- புதிய சோனி பிரேவியா XR X90L மாடல் மூன்று விதமான அளவுகளில் கிடைக்கிறது.
- சோனி பிரேவியா X90L மாடலில் காக்னிடிவ் XR பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
சோனி இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய பிரேவியா XR X90L சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாடல்களில் மேம்பட்ட காக்னிடிவ் பிராசஸர் XR வழங்கப்பட்டு இருக்கின்றன. பிரேவியா XR OLED A80L சீரிஸ் மாடல்களை தொடர்ந்து புதிய ஸ்மார்ட் டிவிக்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் தலைசிறந்த காட்சி அனுபவத்தை வழங்குகிறது. இதில் உள்ள காக்னிடிவ் XR பிராசஸர் காட்சி மட்டுமின்றி, சிறப்பான ஆடியோ அனுபவத்தையும் வழங்குகிறது. முற்றிலும் புதிய சோனி பிரேவியா XR X90L மாடல் 55 இன்ச், 65 இன்ச் மற்றும் 75 இன்ச் அளவுகளில் கிடைக்கிறது. இந்த டிவி மாடல் தனித்துவம் மிக்க எல்இடி ஜோன்கள், சிறப்பான கான்டிராஸ்ட் வெளிப்படுத்துகிறது.

இத்துடன் XR 4K அப்ஸ்கேலிங் மற்றும் XR சவுன்ட் பொசிஷன், டிவி பார்க்கும் போது ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள ஆம்பியனட் ஆப்டிமைசேஷன் பிரைட்னசை அட்ஜஸ்ட் செய்து, ஆட்டோ HDR டோன் மேப்பிங் செய்து பிளே ஸ்டேஷன் 5 கேமிங்கை ஆப்டிமைஸ் செய்கிறது.
இந்த டிவியில் கேம் மெனு வழங்கப்பட்டு உள்ளது. இதை கொண்டு பயனர்கள் VRR மற்றும் மோஷன் பிளர் ரிடக்ஷன் செட்டிங்களை கஸ்டமைஸ் செய்ய முடியும். கூகுள் டிவி இன்டர்ஃபேஸ் மூலம் அதிக செயலிகள், தனிப்பட்ட பரிந்துரைகளை வழங்குகிறது. இத்துடன் வாய்ஸ் சர்ச் அம்சமும் வழங்கப்பட்டு இருக்கிறது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
சோனி XR 55X90L மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 990 என்றும் சோனி XR- 65X90L மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 79 ஆயிரத்து 990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களின் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
சோனி XR-75X90L மாடலின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று சோனி தெரிவித்து உள்ளது. புதிய சோனி ஸ்மார்ட் டிவி மாடல்களின் விற்பனை சோனி சென்டர்கள், முன்னணி மின்சாதன விற்பனை மையங்கள், ஆன்லைன் வலைதளங்களில் நடைபெறுகிறது.
- ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போன், இயர்பட்ஸ் விரைவில் அறிமுகமாகிறது.
- புதிய சாதனங்களுக்கென ஒன்பிளஸ் நிறுவனம் பிர்தயேகமாக மைக்ரோசைட் உருவாக்கி இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு 3 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் ஜூலை 5-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறது. இதே நிகழ்வில் ஒன்பிளஸ் நார்டு CE3 5ஜி, ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் 2R மற்றும் புல்லட்ஸ் Z2 ANC இயர்பட்ஸ் உள்ளிட்ட சாதனங்களையும் அறிமுகம் செய்வதாக ஒன்பிளஸ் அறிவித்து இருக்கிறது.
ஒன்பிளஸ் நார்டு 3 5ஜி மற்றும் நார்டு பட்ஸ் 2R மாடல்கள் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. ஒன்பிளஸ் நார்டு 3 5ஜி மற்றும் நார்டு CE 3 5ஜி ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நார்டு 2 மற்றும் நார்டு CE 2 ஸ்மார்ட்போன்களின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
புதிய சாதனங்களுக்கென ஒன்பிளஸ் நிறுவனம் பிர்தயேகமாக மைக்ரோசைட் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இதில் சாதனங்கள் எப்படி காட்சியளிக்கும் என்று தெரியவந்துள்ளது. ஒன்பிளஸ் நார்டு 3 5ஜி மற்றும் நார்டு CE 3 5ஜி மாடலின் பின்புறம் இரண்டு ரிங்குகள் உள்ளன. இவற்றில் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் அலர்ட் ஸ்லைடர் காணப்படுகிறது.
நார்டு CE 3 5ஜி மாடலின் மேல்புறம் ஐ.ஆர். பிலாஸ்டர் உள்ளது. நார்டு 3 5ஜி மாடல் டெம்பஸ்ட் கிரே மற்றும் மிஸ்டி கிரீன் நிறங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. நார்டு CE 3 5ஜி மாடல் அக்வா சர்ஜ் நிறத்தில் கிடைக்கும். ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் 2R மாடல் டீப் கிரே மற்றும் டிரிபில் புளூ நிறங்களில் கிடைக்கிறது.
நார்டு பட்ஸ் 2 இயர்போன் அதன் முந்தைய மாடலை போன்ற டிசைன் கொண்டிருக்கிறது. ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் Z2 ANC மாடல் பற்றி ஒன்பிளஸ் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை. பெயருக்கு ஏற்றார்போல் இந்த இயர்பட்ஸ் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
- நத்திங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
- நத்திங் போன் 2 மாடல் அந்நிறுவனத்தின் முதல் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும்.
நத்திங் நிறுவனம் ஜூலை 11-ம் தேதி தனது நத்திங் போன் 2 மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், புதிய நத்திங் போன் 2 மாடலுக்கான முன்பதிவு ஜூன் 29-ம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்கும் என்று நத்திங் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. மேலும் புதிய ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்வோருக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
முன்பதிவு சலுகை விவரங்கள்:
நத்திங் இயர் ஸ்டிக் மாடலின் ஸ்டாக் இருக்கும் வரை 50 சதவீதம் தள்ளுபடி
நத்திங் அக்சஸரீ பேக்கேஜுக்கு 50 சதவீதம் தள்ளுபடி
முன்னணி வங்கிகள் வழங்கும் உடனடி கேஷ்பேக் பலன்கள்
புதிய நத்திங் போன் 2 மாடலுக்கான முன்பதிவு ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ஜூன் 29-ம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்க இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு ரூ. 2 ஆயிரம் முன்பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஜூலை 11-ம் தேதி இரவு 9 மணியில் இருந்து ஜூலை 20 நள்ளிரவு 11.59 மணிக்குள் மீண்டும் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் வேரியண்டை தேர்வு செய்ய வேண்டும். ஸ்மார்ட்போனிற்கான மீதித் தொகையை செலுத்தி முன்பதிவு சலுகைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
விற்பனை துவங்கிய பிறகு நத்திங் போன் 2 மாடலை வாங்கிக் கொள்ளலாம். இந்தியாவில் நத்திங் போன் 2 மாடலின் விற்பனை ஜூலை 21-ம் தேதி துவங்க இருக்கிறது. கடந்த ஆண்டு இதே நாளில் நத்திங் போன் 1 விற்பனை துவங்கியது குறிப்பிடத்தக்கது.
- சாம்சங் அறிமுகம் செய்து இருக்கும் புதிய அம்சம் சீகலர்ஸ் மோட் என்று அழைக்கப்படுகிறது.
- புதிய அம்சம் பயனர்களுக்கு ஒன்பது பிக்சர் பிரீசெட்களை வழங்குகிறது.
சாம்சங் நிறுவனம் தொடர்ச்சியாக பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஸ்மார்ட்போன், தொலைகாட்சி சந்தைகளில் முன்னணி நிறுவனமாக இருக்கும் சாம்சங் சமீபத்தில் தான் கேலக்ஸி F54 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
இந்த வரிசையில் சாம்சங் நிறுவனம் தனது 2023 டிவி மற்றும் மானிட்டர் மாடல்களில் புதிய அம்சத்தை வழங்குகிறது. புதிய அம்சம் சீகலர்ஸ் மோட் (SeeColorsMode) என்று அழைக்கப்படுகிறது. புதிய அம்சம் நிறங்களை கண்டறியும் குறைபாடு கொண்டவர்களுக்கும் சிறப்பான வியூவிங் அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டுள்ளது.

சீகலர்ஸ் மோட் பயனர்களுக்கு ஒன்பது வித்தியாசமான பிக்சர் பிரீசெட்களை வழங்குகிறது. இந்த அம்சம் ரெட், கிரீன் மற்றும் புளூ நிற அளவுகளை மாற்றியமைத்து, திரையில் பயனர்கள் நிறங்கள் இடையே வித்தியாசப்படுத்திக் கொள்ள உதவுகிறது. 2017 ஆண்டு ஆப் வடிவில் வழங்கப்பட்ட சீகலர்ஸ் அம்சம் தற்போது டிவி மற்றும் மமானிட்டர்களின் அக்சபிலிட்டி மெனுக்களில் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

2023 மாடல்களை ஏற்கனவே வாங்கி பயன்படுத்தி வருபவர்களுக்கும் இந்த அம்சத்தை வழங்குவதற்கான மென்பொருள் அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. இதுதவிர சாம்சங் நிறுவனம் கலர் விஷன் அக்சஸபிலிட்டி சான்றினை டியுவி ரெயின்லேன்ட்-இடம் பெற்றுள்ளது. எங்கும் ஸ்கிரீன், அனைவருக்கும் ஸ்கிரீன்கள் என்ற சாம்சங் நிறுவன இலக்கை நோக்கிய பயணத்தில் புதிய அக்சஸிபிலிட்டி அம்சம் வழங்கப்படுகிறது.
- ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் ஆக்மென்டெட் ரியாலிட்டி, விர்ச்சுவல் ரியாலிட்டி ஆப்களின் சப்போர்ட் கொண்டிருக்கிறது.
- அடுத்த ஆண்டு ஆப்பிள் விஷன் ப்ரோ விற்பனை அமெரிக்காவில் துவங்க இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆப்பிள் சர்வதேச வருடாந்தர டெவலப்பர்கள் மாநாட்டில் (WWDC) தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட்-ஐ ஆப்பிள் விஷன் ப்ரோ பெயரில் அறிமுகம் செய்தது. புதிய சாதனம் பற்றி அந்நிறுவனம் ஏாளமான தகவல்களை விளக்கியது. அடுத்த ஆண்டு விஷன் ப்ரோ மாடல் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய சாதனம் உலகளவில் பேசு பொருளாகி இருக்கிறது. ஆப்பிள் விஷன் ப்ரோ அம்சங்களில் ஆப்பிள் அறிவித்தவை மற்றும் அறிவிக்காமல் வழங்கப்பட இருப்பவை என்று, புதிய மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் பற்றி தினந்தோரும் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த சாதனத்தில் 3D நிட் செய்யபப்ட்ட ஃபேப்ரிக் கொண்ட ஹெட்பேன்ட் வழங்கப்படுகிறது.

இத்துடன் ஆப்பிள் அதிகம் பேசாமல் விட்ட மற்றொரு ஹெட்பேன்ட் ஸ்டிராப் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது. இந்த ஸ்டிராப் ஹெட்செட் தலையை சுற்றி, சீரான பேலன்ஸ் வழங்குவதை உறுதிப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதுபற்றியும் ஆப்பிள் சில தகவல்களை WWDC நிகழ்விலேயே வழங்கி இருந்தது. எனினும், அதிக விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.
புதிய விஷன் ப்ரோ ஹெட்செட் எடை பற்றி ஆப்பிள் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை. எனினும், இதன் எடை சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. இதன் காரணமாக கூடுதலாக மற்றொரு ஸ்டிராப், ஹெட்செட் எடையை தாங்கி பிடித்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

இந்த ஸ்டிராப் பற்றி ஆப்பிள் நிறுவனம் அதிக தகவல்களை வழங்காதது, இதற்கான விளம்பரங்களிலும் தகவல்கள் இடம்பெறாதது போன்ற நடவடிக்கைகளை பார்க்கும் போது, இது கூடுதல் அக்சஸரீயாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எனினும், இதுபற்றி ஆப்பள் சார்பில் இதுவரை எந்த தகவல்களும் வழங்கப்படவில்லை.
அமெரிக்க சந்தையில் ஆப்பிள் விஷன் ப்ரோ மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் விலை 3 ஆயிரத்து 499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 2 லட்சத்து 90 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹெடிஸ்ட் விலை ஏற்கனவே அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கான ஸ்டிராப் தனி அக்சஸரீயாக விற்பனை செய்யப்படும் என்று தகவல், இதனை வாங்க திட்டமிட்டவர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.
- நோக்கியா C12 ப்ரோ ஸ்மார்ட்போன் ஏற்கனவே மூன்று வித நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
- நோக்கியா C12 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் ஒஎஸ் வழங்கப்பட்டு உள்ளது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் தனது என்ட்ரி லெவல் நோக்கியா C12 ப்ரோ ஸ்மார்ட்போனின் புதிய நிற வேரியண்டை அறிமுகம் செய்தது. முன்னதாக இதற்கான டீசர் மட்டும் வெளியான நிலையில், தற்போது ஸ்மார்ட்போனின் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அம்சங்களை பொருத்தவரை நோக்கியா C12 ப்ரோ மாடலில் 6.3 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே, 1600x720 பிக்சல் ரெசல்யூஷன், யுனிசாக் SC9863A1 பிராசஸர், ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 4000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

நோக்கியா C12 ப்ரோ அம்சங்கள்:
6.3 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே, 1600x720 பிக்சல் ரெசல்யூஷன்
யுனிசாக் SC9863A1 பிராசஸர்
2 ஜிபி, 3 ஜிபி, 4 ஜிபி ரேம்
2 ஜிபி விர்ச்சுவல் ரேம்
64 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் ஒஎஸ்
8MP பிரைமரி கேமரா
5MP செல்ஃபி கேமரா
வைபை, ப்ளூடூத்
எப்எம் ரேடியோ
ஃபேஸ் அன்லாக்
3.5mm ஹெட்போன் ஜாக்
மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
4000 எம்ஏஹெச் பேட்டரி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
புதிய நோக்கியா C12 ப்ரோ மாடலின் 2 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 6 ஆயிரத்து 999 என்றும், 3 ஜிபி மற்றும் 4 ஜிபி மெமரி மாடல்கள் விலை ரூ. 7 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை விரைவில் துவங்க இருக்கிறது.
- நாய்ஸ் பட்ஸ் வெர்வ் இயர்பட்ஸ் ENC மற்றும் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது.
- சார்ஜிங் கேஸ் சேர்த்து, இந்த இயர்பட்ஸ்-ஐ முழு சார்ஜ் செய்தால் 45 மணி நேர பேக்கப் பெறலாம்.
நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. நாய்ஸ் பட்ஸ் வெர்வ் என்று அழைக்கப்படும் புதிய இயர்பட்ஸ் ரூ. 2 ஆயிரத்து 500 விலை பிரிவில் விற்பனைக்கு கிடைக்கிறது.
புதிய நாய்ஸ் பட்ஸ் வெர்வ் மாடலில் இன்-இயர் ரக டிசைன், ஸ்டெம் மற்றும் சிலிகான் இயர் டிப்கள் வழங்கப்படுகின்றன. இந்த ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்டு பிரீமியம் தோற்றம் கொண்டிருக்கிறது. IPX5 தர சான்று பெற்று இருக்கும் நாய்ஸ் பட்ஸ் வெர்வ் மாடலின் பல்வேறு அம்சங்களை, இயர்பட்ஸ்-இன் ஸ்டெம் பகுதியில் டச் மூலம் கட்டுப்படுத்த முடியும்.

ஆடியோவை பொருத்தவரை நாய்ஸ் பட்ஸ் வெர்வ் மாடலில் 10mm டிரைவர், குவாட் மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அழைப்புகளின் போதும், ஆடியோ தரம் மேம்படும். இந்த ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் லோ-லேடன்சி வசதியை கொண்டிருக்கிறது.
நாய்ஸ் பட்ஸ் வெர்வ் மாடலில் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி வசதி உள்ளது. இத்துடன் வாய்ஸ் அசிஸ்டன்ட், 10mm டிரைவர், குவாட் மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் உடன் பெபில் வடிவம் கொண்ட ஸ்டோரேஜ் மற்றும் சார்ஜிங் கேஸ் வழங்கப்படுகிறது. இதை கொண்டு இயர்பட்ஸ்-இல் 45 மணி நேரத்திற்கு பேக்கப் பெற முடியும்.
இந்திய சந்தையில் புதிய நாய்ஸ் பட்ஸ் வெர்வ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விலை ரூ. 2 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் கார்பன் பிளாக், கிளவுட் வைட் மற்றும் ஃபாரஸ்ட் கிரீன் என மூன்றுவிதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் நாய்ஸ் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் நடைபெறுகிறது.
- இந்திய சந்தையில் ஆப்பிள் கிரெடிட் கார்டு சேவையை வழங்க அந்நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்.
- ஆப்பிள் நிறுவனம் தேசிய பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் உடன் இணைந்து ஆப்பிள் பே சேவையை அறிமுகம் செய்யலாம்.
ஆப்பிள் நிறுவனம் தனது கிரெடிட் கார்டை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் இது ஆப்பிள் கார்டு பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்காவில் ஆப்பிள் கிரெடிட் கார்டு சேவை, அந்நாட்டு சர்வதேச முதலீட்டு வங்கி மற்றும் நிதி சேவைகள் நிறுவனமான கோல்டுமேன் சாக்ஸ் உடன் இணைந்து வெளியிடப்பட்டு இருக்கிறது.

கோப்புப்படம்
இந்திய சந்தையில் ஆப்பிள் கிரெடிட் கார்டு சேவையை வழங்குவதற்காக இந்திய வங்கிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஆப்பிள் நிறுவனம் பேச்சுவார்த்தையை துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா வந்திருந்த ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக், ஹெச்டிஎப்சி வங்கி தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் ஜகதீசனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

கோப்புப்படம்
ஆப்பிள் நிறுவனம் தேசிய பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் உடன் இணைந்து ஆப்பிள் பே சேவையை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. எனினும், இந்த பேச்சுவார்த்தைகள் கிரெடிட் கார்டு தொடர்பானதா அல்லது தேசிய பேமன்ட் கார்ப்பரேஷன் வழங்கி வரும் யுபிஐ சார்ந்த பேமன்ட் வழங்குவதற்காகவா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்தியாவில் வங்கிகள் மட்டுமே கிரெடிட் கார்டுகளை வெளியிட அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்மார்ட்போன்களில் பேமன்ட் செய்வதற்காக ஏராளமான வசதிகள் கிடைக்கின்றன. ஆப்பிள் மட்டுமின்றி கூகுள், அமேசான் மற்றும் சாம்சங் நிறுவனங்களும் பேமன்ட் பிரிவில் தங்களது சேவைகளை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
- ஒப்போ ஃபைன் N2 ஃப்ளிப் மாடல் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
- ஒப்போ ஃபைன்ட் N3 ஃப்ளிப் மாடல் கேமரா செட்டப் வித்தியாசமாக காட்சியளிக்கிறது.
ஒப்போ நிறுவனம் தனது ஃபைன்ட் N2 மாடலின் மேம்பட்ட வெர்ஷனை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒப்போ ஃபைன்ட் N3 ஃப்ளிப் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக ஃபைன் N2 ஃப்ளிப் மாடல் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மார்ச் மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த வரிசையில் தான் ஒப்போ ஃபைன்ட் N3 ஃப்ளிப் அறிமுகம் நடைபெற இருக்கிறது. டிசைனை பொருத்தவரை புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனும், கிளாம்ஷெல் போன்ற மடிக்கக்கூடிய டிசைன் கொண்டிருக்கிறது. ஃபைன்ட் N3 ஃப்ளிப் மாடலின் கேமரா செட்டப் சற்று வித்தியாசமாக வழங்கப்படும் என்று தெரிகிறது.

கோப்புப்படம்
இந்த ஸ்மார்ட்போனின் ரென்டர்களில் பெரிய டிஸ்ப்ளே வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இத்துடன் வளைந்த எட்ஜ்கள், ஸ்மார்ட்போனின் பின்புறம் கீழ் பகுதியில் ஒப்போ பிரான்டிங் செய்யப்படுகிறது. மேலும் மூன்று கேமரா சென்சார்கள் அடங்கிய கேமரா செட்டப் வழங்கப்படுகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒப்போ ஃபைன்ட் N3 ஃப்ளிப் மாடலின் கேமரா செட்டப், ஒப்போ ரெனோ 10 ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என்று தெரிகிறது. அதன்படி ஒப்போ ஃபைன்ட் N3 ஃப்ளிப் மாடலில் 50MP சோனி பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் மற்றும் 32MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது.

கோப்புப்படம்
ஒப்போ ஃபைன்ட் N3 ஃப்ளிப் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
6.8 இன்ச் E6 AMOLED Full HD+ டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
3.26 இன்ச் AMOLED 729x382 பிக்சல், 60Hz, ரிப்ரெஷ் ரேட்
மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர்
8ஜிபி ரேம்
256 ஜிபி மெமரி
32MP செல்ஃபி கேமரா
4300 எம்ஏஹெச் பேட்டரி
- 2023 கூகுள் IO நிகழ்வில் பிக்சல் டேப்லெட் மாடல் அறிவிக்கப்பட்டது.
- இதன் சார்ஜிங் டாக், டேப்லெட்-ஐ ஸ்மார்ட் ஸ்பீக்கராக மாற்றுகிறது.
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் டேப்லெட் மாடலுக்கான அக்சஸரீக்கள் பற்றிய தகவல் தெரியவந்துள்ளது. அதன்படி பிக்சல் டேப்லெட்-க்காக கீபோர்டு மற்றும் ஸ்டைலஸ் உருவாக்கப்படுவது கூகுள் கோட்-களில் அம்பலமாகி இருக்கிறது. 2023 கூகுள் IO நிகழ்வில் பிக்சல் டேப்லெட் மாடல் அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டதில் இருந்தே பிக்சல் டேப்லெட் பற்றிய விவரங்கள் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில், தான் பிக்சல் டேப்லெட் மாடலுடன் கீபோர்டு மற்றும் ஸ்டைலஸ் போன்ற அக்சஸரீக்கள் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. இத்துடன் சார்ஜிங் டாக் ஒன்றும் வழங்கப்படுகிறது. இது டேப்லெட்-ஐ ஸ்மார்ட் ஸ்பீக்கராக மாற்றுகிறது. ஆண்ட்ராய்டு 14 ஒஎஸ் உடன் வரும் பிக்சல் டேப்லெட், வெளியீட்டுக்கு பிறகு அதிக அக்சஸரீக்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.
புதிய கீபோர்டு மற்றும் ஸ்டைலஸ் அக்சஸீர்கள், கீபோர்டு ஃபார் பிக்சல் டேப்லெட் மற்றும் ஸ்டைலஸ் ஃபார் பிக்சல் டேப்லெட் எனும் பெயர்களில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பிக்சல் அக்சஸரீக்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி இருந்தது. தற்போதைய தகவல் பிக்சல் ரிடெயில் டெமோ செயலி மூலம் தெரியவந்துள்ளது.
கூகுள் நிறுவனம் புதிய சாதனங்களை அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் ஹார்டுவேர் நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. பிக்சல் 8, பிக்சல் 8 ப்ரோ மற்றும் பிக்சல் வாட்ச் 2 மாடல்கள் இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதே நிகழ்வில் பிக்சல் டேப்லெட் மாடல் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.






