search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    அறிமுக சலுகைகளுடன் நத்திங் போன் 2 முன்பதிவு துவக்கம்
    X

    அறிமுக சலுகைகளுடன் நத்திங் போன் 2 முன்பதிவு துவக்கம்

    • நத்திங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல் ஜூலை மாதம் அறிமுகமாகிறது.
    • புதிய நத்திங் போன் 2 முன்பதிவு செய்வோருக்கு அசத்தலான சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    நத்திங் நிறுவனத்தின் முற்றிலும் புதிய போன் 2 மாடல் முன்பதிவு இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய நத்திங் போன் 2 முன்பதிவுகளை ஊக்குவிக்கும் நோக்கில், நத்திங் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

    முன்பதிவு செய்வது எப்படி?

    - நத்திங் போன் 2 முன்பதிவு ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது.

    - விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் ரூ. 2 ஆயிரம் செலுத்தி நத்திங் போன் 2 மாடலை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    - முன்பதிவு செய்தவர்கள், ஜூலை 11-ம் தேதி ஸ்மார்ட்போன் வெளியீட்டை தொடர்ந்து அதன் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வேரியன்டை உறுதிப்படுத்தி, அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

    - முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் ஜூலை 20-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை ஸ்மார்ட்போனிற்கான கட்டணத்தை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்படுகிறது.

    - நத்திங் போன் 2 மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 2 ஆயிரத்தை வாடிக்கையாளர்கள் மனம் மாறினால் திரும்ப பெற்றுக் கொள்ள முடியும்.

    அறிமுக சலுகை விவரங்கள்:

    - நத்திங் போன் 2 மாடலை முன்பதிவு செய்வோருக்கு குறிப்பிட்ட வங்கிகள் மூலம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    - நத்திங் போன் 2 முன்பதிவு செய்வோர் ரூ. 1,299 மதிப்புள்ள போன் 2 மாடலுக்கான அதிகாரப்பூர்வ பேக் கேஸ்-ஐ வெறும் ரூ. 499-க்கு வாங்கிட முடியும்.

    - ரூ. 999 மதிப்புள்ள நத்திங் போன் 2 மாடலுக்கான ஸ்கிரீன் ப்ரோடெக்டரை ரூ. 399 விலையில் வாங்கிட முடியும்.

    - ரூ. 8 ஆயிரத்து 499 மதிப்புள்ள நத்திங் இயர் ஸ்டிக் மாடலை ரூ. 4 ஆயிரத்து 250 விலையில் வாங்கிடலாம்.

    - ரூ. 2 ஆயிரத்து 499 மதிப்புள்ள நத்திங் பவர் சாதனத்தை ரூ. 1,499 விலையில் வாங்கிட முடியும்.

    வெளியீடு மற்றும் இதர விவரங்கள்:

    இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் ஜூலை 11-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய நத்திங் போன் 2 மாடலில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படுகிறது. இத்துடன் 4700 எம்ஏஹெச் பேட்டரி வழங்குவதாக நத்திங் ஏற்கனவே அறிவித்துவிட்டது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி நத்திங் போன் 2 மாடலில் நத்திங் ஒஎஸ் 2.0, 6.7 இன்ச் டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 50MP பிரைமரி கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 40 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    Next Story
    ×