என் மலர்
தொழில்நுட்பம்
- வர்த்தக கூட்டமைப்பின் தடை உத்தரவில் மாற்றம் செய்ய முடியாது.
- மேல்முறையீடு செய்து அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல்.
ஆப்பிள் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட ஆப்பிள் வாட்ச் மாடல்களின் இறக்குமதிக்கு அமெரிக்காவில் உள்ள சர்வதேச வர்த்தக கூட்டமைப்பு தடை விதித்தது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் தனது வாட்ச் மாடல்களை அமெரிக்க சந்தையில் விற்பனை செய்ய முடியாத சூழல் உருவானது. இது தொடர்பான உத்தரவில் இறுதி முடிவை அமெரிக்க அதிபர் தலைமையிலான அரசு எடுக்க வேண்டியிருந்தது.
அந்த வகையில், வர்த்தக கூட்டமைப்பின் தடை உத்தரவில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என அமெரிக்க அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக தடை உத்தரவை எதிர்த்து ஆப்பிள் நிறுவனம் மேல்முறையீடு செய்து அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான மசிமோ மற்றும் ஆப்பிள் இடையே கடந்த 2020 முதல் காப்புரிமை விவகாரத்தில் பிரச்சினை இருந்து வருகிறது. மசிமோ சார்பில் பதிவு செய்யப்பட்டிருந்த பிலட் ஆக்சிஜன் சென்சிங் அம்சம் தொடர்பான காப்புரிமையை ஆப்பிள் மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இந்த விவகாரத்தில் ஆப்பிள் காப்புரிமையை மீறியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 போன்ற மாடல்களின் விற்பனைக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவு காரணமாக இரு வாட்ச் மாடல்களை ஆப்பிள் ஆன்லைன் மற்றும் ரீடெயில் ஸ்டோர்களில் வாங்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது.
- டிசைன் பற்றிய விவரங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியானது.
- இந்த ஸ்மார்ட்போன் நான்கு நிறங்களில் அறிமுகமாகும்.
ஐடெல் நிறுவனத்தின் முற்றிலும் புதிய A70 ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 128 ஜி.பி. அல்லது 256 ஜி.பி. மெமரியுடன் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிசைன் பற்றிய விவரங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், புதிய ஐடெல் A70 ஸ்மார்ட்போன் நான்குவித நிறங்களில் அறிமுகமாகும் என்றும் இதில் அளவில் பெரிய நாட்ச் வழங்கப்படுகிறது. மேலும் இது ரூ. 8 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் முதல் 256 ஜி.பி. மெமரி கொண்ட ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறும் என்று கூறப்படுகிறது. இதுதவிர இந்த ஸ்மார்ட்போன் 128 ஜி.பி. மெமரி ஆப்ஷனிலும் கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் தடிமனான பெசல்கள், அகலமான டிஸ்ப்ளே நாட்ச், முன்புறம் எல்.இ.டி. ஃபிளாஷ், பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் வலதுபுறமாகவும், இடதுபுறம் சிம் டிரே வழங்கப்படுகிறது. ஐடெல் A70 இந்திய வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. முன்னதாக ஐடெல் நிறுவம் தனது A05s ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
ஐடெல் A05s 4 ஜி.பி. வெர்ஷனின் விலை ரூ. 6 ஆயிரத்து 099 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் கடந்த அக்டோபர் மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
- தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது.
- இவற்றில் 50MP 1 இன்ச் பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது.
விவோ X100 சீரிஸ் இந்திய வெளியீடு அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விவோ வெளியிட்டு உள்ளது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனிற்கான மைக்ரோசைட் ஒன்றையும் விவோ இந்தியா உருவாக்கி இருக்கிறது.
முன்னதாக விவோ X100 மற்றும் விவோ X100 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் கடந்த நவம்பர் மாத வாக்கில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றில் மீடியாடெக் டிமென்சிட்டி 9300 பிராசஸர் வழங்கப்பட்டு இருந்தன. சீன வெளியீட்டை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையின் தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி விவோ X100 சீரிஸ் இந்திய வேரியண்ட்களிலும் இதே பிராசஸர் மற்றும் 8T LTPO டிஸ்ப்ளே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் 50MP 1 இன்ச் பிரைமரி கேமரா மற்றும் கூடுதலாக இரண்டு கேமரா சென்சார்கள் வழங்கப்படுகின்றன. இந்திய சந்தையில் விவோ X100 ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 4-ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளன.
இதற்காக வெளியிடப்பட்டு இருக்கும் டீசர்களில் விவோ X100 மற்றும் விவோ X100 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ஆஸ்டிராய்டு பிளாக், ஸ்டார்டிரெயில் புளூ மற்றும் சன்செட் போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஃபன்டச் ஒ.எஸ். 14, செய்ஸ் பிரான்டு கேமராக்கள், IP68 சான்று கொண்டிருக்கும் என்று உறுதியாகி இருக்கிறது.
விவோ X100 சீரிஸ் அறிமுகமாகும் அதே நாளில் சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 13 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
- ஜியோ புத்தாண்டு சலுகையில் கூடுதல் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
- இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2024 புத்தாண்டு சலுகையை அறிவித்து இருக்கிறது. ஜியோ பிரீபெயிட் சேவையை பயன்படுத்துவோருக்கு இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பழைய வருடாந்திர பிரீபெயிட் சலுகைகளை ஜியோ மாற்றியமைத்துள்ளது.
இந்த அறிவிப்பு காரணமாக ஜியோ புத்தாண்டு சலுகையில் பயனர்களுக்கு 24 நாட்கள் வரை கூடுதல் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. நீண்ட கால பிரீபெயிட் ரிசார்ஜ் சலுகையான ரூ. 2,999-இல் கூடுதலாக 24 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில், பயனர்கள் வழக்கமான 365 நாட்கள் இன்றி கூடுதலாக 24 நாட்கள் வரை நீண்ட கால சலுகையை பயன்படுத்தலாம். இதன் மூலம் வருடாந்திர ரிசார்ஜ் சலுகையில் பயனர்களுக்கு மொத்தத்தில் 389 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.
இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ். போன்ற பலன்களும் வழங்கப்படுகிறது. மேலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இவைதவிர ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோகிளவுட் போன்ற சேவைகளும் வழங்கப்படுகிறது.
- நத்திங் போன் 2a அம்சங்களும் இடம்பெற்று இருந்தன.
- முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் மட்டும் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.
நத்திங் நிறுவனத்தின் போன் 2a மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது நத்திங் நிறுவனத்தின் மூன்றாவது ஸ்மார்ட்போன் மாடல் ஆகும். புதிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகின. இத்துடன் நத்திங் போன் 2a அம்சங்களும் இடம்பெற்று இருந்தன.
அதன்படி புதிய நத்திங் போன் 2a மாடலில் 6.7 இன்ச் AMOLED பேனல், 1084x2412 பிக்சல் ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 7200 பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், 32MP சென்சார் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதில் உள்ள டிஸ்ப்ளேவை BOE மற்றும் Visionox உற்பத்தி செய்யும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. இதன் பிளாக் நிற வேரியண்ட் ரூப்ரேன் பிளாக் என்றும் வைட் நிற வேரியண்ட் அசுனிம் வைட் வால்பேப்பர்களை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
முதற்கட்டமாக நத்திங் போன் 2a மாடல் இந்தியா, ஜப்பான், ஐரோப்பா மற்றும் சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் "நத்திங் டு சீ" என்ற நிகழ்வுக்கு நத்திங் தயாராகி வருகிறது. எனினும், இந்த நிகழ்வில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
- செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்யும் வழக்கம் பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
- அன்-இன்ஸ்டால் செய்யும் வழக்கம் பற்றி தெரியவந்துள்ளது.
உலகளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்வதில் அதிவேகமாக முடிவெடுக்கின்றனர். செயலிகள் எந்த அளவுக்கு பிரபலமாக உள்ளது என்பதை பொருத்தும், பயனர் தேவைகளை எந்த அளவுக்கு பூர்த்தி செய்கிறது என்பதை பொருத்தும் செயலி ஸ்மார்ட்போனில் வைத்துக் கொள்ளப்படும் காலம் நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த வகையில், டி.ஆர்.ஜி. டேட்டா செண்டர்ஸ் வழங்கியிருக்கும் சமீபத்திய தகவல்களில் ஸ்மார்ட்போன் பயனர்கள் செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்யும் வழக்கம் பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பயனர்கள் எந்த அளவுக்கு செயலிகளை இன்ஸ்டால் மற்றும் அன்-இன்ஸ்டால் செய்கின்றனர் என்ற வழக்கம் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது.

இந்த அறிக்கையின் படி, உலகளவில் 480 கோடி பேர் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இது சர்வதேச மக்கள் தொகையில் 59.9 சதவீதமும், ஒட்டுமொத்த இண்டர்நெட் பயனர்கள் எண்ணிக்கையில் 92.7 சதவீதம் ஆகும். சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் ஒவ்வொரு மாதமும் 6.7 வெவ்வேறு நெட்வொர்க்குகளை பயன்படுத்துகின்றனர். தினமும், 2 மணி 24 நிமிடங்கள் வரை சமூக வலைதளங்களில் செலவிடுகின்றனர்.
சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் உலகளவில் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் "இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ எப்படி அழிக்க வேண்டும்" என்று தொடர்ச்சியாக இணைய தேடலில் ஈடுபட்டுள்ளனர்.

உலகளவில் ஒரு லட்சம் பேரில் 12 ஆயிரத்து 500 பேர் வரை இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ அழிப்பது தொடர்பான இணைய தேடலில் ஈடுபட்டுள்ளனர். சமூக வலைதள உலகில் முன்னணி தளமாக இன்ஸ்டாகிராம் தொடர்ந்து நீடிக்கிறது. உலகளவில் சுமார் 240 கோடி பேர் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமை தொடர்ந்து ஸ்னாப்சாட் தளத்தை பயன்படுத்துவோரில் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் தங்களது ஸ்னாப்சாட் அக்கவுண்ட்-ஐ எப்படி அழிக்க வேண்டும் என்று இணையத்தில் தேடியுள்ளனர். இது இன்ஸ்டாகிராமுடன் ஒப்பிடும் போது குறைவு ஆகும்.
- போக்கோ M சீரிஸ் ஸ்மார்ட்போன் மீடியாடெக் பிராசஸர் கொண்டிருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.
போக்கோ நிறுவனத்தின் புதிய M சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. போக்கோ M6 5ஜி பெயரில் அறிமுகமாகி இருக்கும் புதிய மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI14 வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 18 வாட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP ஏ.ஐ. கேமரா, இரண்டாவது சென்சார் மற்றும் 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

போக்கோ M6 5ஜி அம்சங்கள்:
6.74 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 90Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே
ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர்
ARM மாலி G57 MC2 GPU
அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம்
அதிகபட்சம் 256 ஜி.பி. மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா
5MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யு.எஸ்.பி. டைப் சி போர்ட்
5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
போக்கோ M6 5ஜி ஸ்மார்ட்போன் கேலக்டிக் பிளாக் மற்றும் ஒரியன் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 10 ஆயிரத்து 499 என்று துவங்குகிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய போக்கோ ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு ரூ. 1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஏர்டெல் பிரீபெயிட் பயனர்களுக்கு 50 ஜி.பி. வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- இன்டெல் நிறுவனம் பணி நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
- மேலும் பலர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்.
சர்வதேச அளவில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமாக இன்டெல் உள்ளது. சமீப காலங்களில் ஏற்பட்ட தொடர் நிதி நெருக்கடி காரணமாக இன்டெல் நிறுவனம் பணி நீக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்து, இதுவரை நூற்றுக்கும் அதிமானோரை பணி நீக்கம் செய்துள்ளது.
அந்த வகையில், பணி நீக்க நடவடிக்கையின் ஐந்தாவது கட்டமாக 200-க்கும் அதிக ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இன்டெல் திட்டமிட்டு வருகிறது. இதுதவிர அடுத்த ஆண்டு துவக்கத்தில் இருந்து மேலும் பலர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதைய பணி நீக்க நடவடிக்கை டிசம்பர் 31-ம் தேதி துவங்கும் என்றும் இதில் 235 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். இரண்டு வார காலங்களில் பணி நீக்க நடவடிக்கை முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.
"நிறுவனம் முழுக்க பணியாளர்கள் எண்ணிக்கையை குறைப்பது, செலவீனங்களை குறைத்து நிறுவனத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துவதற்கான யுக்திகள் கையாளப்படுகிறது," என இன்டெல் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
- அமேசான் பிரைம் வீடியோ நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க முடியும்.
- இந்த சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
வி நிறுவனம் தனது பிரீபெயிட் சந்தாதாரர்களுக்கு முற்றிலும் புதிய ரிசார்ஜ் சலுகையை அறிவித்து இருக்கிறது. ரூ. 3 ஆயிரத்து 199 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய வி சலுகையில் ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் வீடியோ சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் ரிசார்ஜ் செய்வோர் எவ்வித கூடுதல் கட்டணம் மற்றும் சந்தா செலுத்தாமல் அமேசான் பிரைம் வீடியோ நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க முடியும்.
ஒரு வருடத்திற்கான ஒ.டி.டி. பலன்கள் மட்டுமின்றி இந்த சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மற்ற முன்னணி நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் இதே போன்ற வருடாந்திர பலன்களை கொண்ட சலுகையை வழங்கி வருகின்றன.

புதிய சலுகை குறித்து வி வலைதளத்தில் இடம்பெற்றுள்ள பதிவில், ரூ. 3 ஆயிரத்து 199 விலை கொண்ட ரிசார்ஜ் சலுகையில் மொத்தம் 730 ஜி.பி. டேட்டா, ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இத்துடன் அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 2 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.
இதுதவிர புதிய சலுகையில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை அன்லிமிடெட் டேட்டாவும் வழங்கப்படுகிறது. மேலும் வார இறுதியில் டேட்டா ரோல் ஓவர் சலுகையும் வழங்கப்படுகிறது. இதில் ஒரு வார காலத்தில் பயன்படுத்தி முடிக்காத டேட்டாவை வார இறுதி நாட்களில் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.
- இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 6080 பிராசஸர் உள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
லாவா நிறுவனத்தின் ஸ்டாம் 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் 6.78 இன்ச் FHD+ 120Hz LCD ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 6080 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 8MP அல்ட்ரா வைடு கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

லாவா ஸ்டாம் 5ஜி அம்சங்கள்:
6.78 இன்ச் 2460x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6080 பிராசஸர்
மாலி G57 MC2 GPU
8 ஜி.பி. ரேம்
128 ஜி.பி. மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
டூயல் சிம் ஸ்லாட்
ஆண்ட்ராய்டு 13
50MP பிரைமரி கேமரா
8MP அல்ட்ரா வைடு லென்ஸ்
16MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
யு.எஸ்.பி. டைப் சி
5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
லாவா ஸ்டாம் 5ஜி ஸ்மார்ட்போன் கேல் கிரீன் மற்றும் தண்டர் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 13 ஆயிரத்து 499 என்று துவங்குகிறது. இதன் விற்பனை டிசம்பர் 28-ம் தேதி அமேசான் வலைதளத்தில் துவங்குகிறது. இத்துடன் வங்கி சலுகையாக அதிகபட்சம் ரூ. 1500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- சாம்சங் நிறுவனம் குறிப்பிடத்தக்க மாடல்களை அறிமுகம் செய்தது.
- ஒப்போ ஃபைண்ட் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது.
ஒவ்வொரு ஆண்டை போலவே, இந்த ஆண்டும் ஸ்மார்ட்போன் சந்தையில் ஏராளமான மாடல்கள் அறிமுகமாகின. முன்னணி நிறுவனங்கள் துவங்கி புதிதாக களமிறங்கிய நிறுவனங்கள் வரை வாடிக்கையாளர்களை எந்த மாடலை வாங்குவது என்று குழம்ப செய்தன. சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் பயனர்கள் அதிகம் எதிர்பார்த்த மாடல்கள் ஒருபுறம் கவனம் ஈர்த்தன.
மறுப்பக்கம் யாரும் எதிர்பாராமல் அறிமுகமாகி பிறகு, நல்ல வரவேற்பை பெற்ற ஸ்மார்ட்போன்களும் சந்தையில் கணிசமான விற்பனையை பதிவு செய்தன. அந்த வரிசையில், 2023 ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

ஐகூ 11 5ஜி:
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜனவரி மாதத்திலேயே அறிமுகமான ஐகூ 11 5ஜி பிரீமியம் டிசைன், அசத்தலான டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இது ஐகூ நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும்.

சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா 5ஜி:
2023 பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் அறிமுகமான கேலக்ஸி S3 அல்ட்ரா 5ஜி மாடல் அசத்தலான அம்சங்கள், சிறப்பான கேமரா சென்சார்கள் மற்றும் அதிரடியான பிராசஸர் கொண்டிருக்கிறது. இது சாம்சங் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும்.

ஒன்பிளஸ் 11:
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் சந்தையில் அப்போது அறிமுகமானதில் மிகவும் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனாக இருந்தது. மெட்டல் மற்றும் கிளாஸ் மூலம் உருவாக்கப்பட்ட ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனில் 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

விவோ X90 ப்ரோ:
பிரீமியம் டிசைன், அழகிய டிஸ்ப்ளே, சிறப்பான கேமரா உள்ளிட்டவை விவோ X90 ப்ரோ மாடலின் மிக முக்கிய அம்சங்களாக உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்:
ஆப்பிள் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல் இது ஆகும். முற்றிலும் புதிய டைட்டானியம் டிசைன், சக்திவாய்ந்த பிராசஸர், தலைசிறந்த கேமரா சென்சார்கள் உள்ளிட்டவை ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலின் குறிப்பிடத்தக்க அம்சங்களாக உள்ளது.
மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பிரிவில் சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு 5, ஒன்பிளஸ் ஓபன் மாடல்கள் குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றன. ஃப்ளிப் போன் பிரிவில் ஒப்போ ஃபைண்ட் N3 அதன் அம்சங்கள், டிசைன் மற்றும் விலை என அனைத்து பிரிவுகளிலும் அனைவரையும் திரும்பி பார்க்க செய்தது.
- ஒ.டி.டி. பலன்களை மட்டுமே வழங்குகிறது.
- வி மூவிஸ் மற்றும் டி.வி. ப்ரோ சந்தா வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபத்தில் ஜியோடிவி பிரீமியம் சந்தா வழங்கும் புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்தது. அந்த வரிசையில், தற்போது வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் வி-யின் ஒ.டி.டி. பலன்களை வழங்கும் புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது.
சத்தமின்றி அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய வி சலுகையின் விலை ரூ. 202 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், இது வி வழங்கி வரும் வழக்கமான சலுகைகள் போன்றில்லாமல் ஒ.டி.டி. பலன்களை மட்டுமே வழங்குகிறது.

கோப்புப்படம்
ஒ.டி.டி. பலன்களை வழங்கும் வி சலுகையுடன் வி மூவிஸ் மற்றும் டி.வி. ப்ரோ சந்தா வழங்குகிறது. இத்துடன் 13-க்கும் அதிக ஒ.டி.டி. சேவைகளை வழங்குகிறது. இதில் வாய்ஸ் காலிங், எஸ்.எம்.எஸ். அல்லது டேட்டா போன்ற எந்த பலன்களும் வழங்கப்படவில்லை. இந்த சலுகை ஒரு மாத காலத்திற்கு வேலிடிட்டி கொண்டுள்ளது.
வி. ரூ. 202 சலுகையுடன் எந்தெந்த ஒ.டி.டி. பலன்கள் வழங்கப்படும் என்பது குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இதில் சோனி லிவ், ஜீ5, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சன் நெக்ஸ்ட், ஹங்காமா மற்றும் பல்வேறு ஒ.டி.டி. பலன்களை வழங்கும் என்று தெரிகிறது. இந்த சலுகை வி செயலி மற்றும் வலைதளங்களில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.






