என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • அசவுகரியமும் ஏற்படாத வகையில் கச்சிதமான டிசைன் கொண்டிருக்கிறது.
    • பியூர் பாட்ஸ் மாடலில் ஏர் வேவ் தொழில்நுட்பம் உள்ளது.

    இந்திய தொழில்நுட்ப நிறுவனமான நாய்ஸ் முற்றிலும் புதிய ஒபன் வயர்லெஸ் ஸ்டீரியோவை (OWS) இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. பியூர் பாட்ஸ் என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கும் புதிய OWS மிகக் குறைந்த எடையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் நீண்ட நேர பயன்பாடுகளின் போதும், எவ்வித அசவுகரியமும் ஏற்படாத வகையில் கச்சிதமான டிசைன் கொண்டிருக்கிறது.

    பயனர் காதுகளில் சரியாக பொருந்திக் கொள்ளும் வகையில் மினமலிஸ்ட் டிசைன் கொண்டிருக்கும் பியூர் பாட்ஸ் ஏர் கன்டக்ஷன் பயன்படுத்தி சவுண்ட்-ஐ கடத்துகிறது. நாய்ஸ் பியூர் பாட்ஸ் மாடலில் ஏர் வேவ் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இதில் உள்ள ஏர் கன்டக்ஷன் மெக்கானிசம் மேம்பட்ட ஆடியோ அனுபவம் வழங்குகிறது.


     

    நாய்ஸ் பூயர் பாட்ஸ் மூலம் சுற்றுச்சூழலில் ஏற்படும் சத்தத்துடன் சக்திவாய்ந்த ஆடியோ அனுபவம் பெறலாம். இதில் உள்ள 16 மில்லிமீட்டர் நியோடிமியம் டைனமிக் டிரைவர்கள் முழு சார்ஜ் செய்தால் 80 மணி நேரத்திற்கு பிளேடைம் வழங்குகிறது. இதில் உள்ள இன்ஸ்டாசார்ஜ் அம்சம் பத்து நிமிடம் சார்ஜ் செய்தால் 180 நிமிடங்களுக்கு பேக்கப் வழங்குகிறது.

    இதனுடன் கழற்றக்கூடிய பியூர் பேண்ட் வழங்கப்படுகிறது. இதை கொண்டு பாட்ஸ்-ஐ நெக்பேண்ட் போன்றும் மாற்றிக் கொள்ளலாம். நாய்ஸ் பியூர் பாட்ஸ் மாடலில் ப்ளூடூத் 5.3 வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் குவாட் மைக் உள்ளதால், அழைப்புகளின் போதும் தலைசிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். இத்துடன் IPX5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.


     

    இந்திய சந்தையில் புதிய நாய்ஸ் பியூர் பாட்ஸ் ரூ. 2 ஆயிரத்து 999 விலையில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளது. இதன் விற்பனை நாளை (டிசம்பர் 19) ப்ளிப்கார்ட் மற்றும் கோநாய்ஸ் வலைதளங்களில் துவங்குகிறது. இந்த பியூர் பாட்ஸ் மாடல் ஜென் பெய்க் மற்றும் பவர் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    • ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    • வெளியீட்டு நிகழ்வு இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துவங்குகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 12 மற்றும் ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், புதிய ஒன்பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 23-ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன்கள் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த மாதம் ஒன்பிளஸ் தனது பத்தாவது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. அந்த வகையில், ஒன்பிளஸ் 12 மற்றும் ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போன்கள் இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் ஜனவரி 23-ம் தேதி அறிமுகம் செய்யும் என்று அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் இரு ஸ்மார்ட்போன்களின் வெளியீடு இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துவங்குகிறது.

     


    முதல் முறையாக R-சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவை தொடர்ந்து சீனாவிலும் விற்பனை செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இந்த மாடலில் அதிக பிரகாசமான டிஸ்ப்ளே மற்றும் மெட்டல் ஃபிரேம் வழங்கப்படுகிறது.

    • பயனர்களுக்கு 14 ஒ.டி.டி. சேவைகளின் சந்தா வழங்கப்படுகிறது.
    • மூன்று பிரீபெயிட் சலுகைகளை ஜியோ அறிவித்தது.

    ஜியோ நிறுவனம் புதிய ஜியோடிவி பிரீமியம் சந்தாவை இந்திய சந்தையில் அறிவித்து இருக்கிறது. இந்த ஒற்றை சலுகையில் பயனர்களுக்கு அதிகபட்சமாக 14 ஒ.டி.டி. சேவைகளின் சந்தா வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோடிவி பிரீமியம் சந்தா வழங்கும் மூன்று பிரீபெயிட் சலுகைகளையும் ஜியோ அறிவித்து இருக்கிறது.

    புதிய சலுகைகள் மாதாந்திர, காலாண்டு மற்றும் வருடாந்திர அடிப்படையில் வழங்கப்படுகிறது. இவற்றின் விலை ரூ. 398 என்று துவங்குகிறது. இவற்றுடன் அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. அழைப்புகள், எஸ்.எம்.எஸ். மட்டுமின்றி பயனர்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ, சோனி லிவ், ஜீ5 மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.

     


    இந்த சலுகைகள் இன்று (டிசம்பர் 15) முதல் வழங்கப்படுகிறது. அனைத்து சலுகைகளுடன் தினமும் 2 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. ஜியோவின் புதிய சலுகைகளின் விலை ரூ. 398, ரூ. 1198 மற்றும் ரூ. 4 ஆயிரத்து 498 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றுடன் அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். பலன்கள் மற்றும் 14 ஒ.டி.டி. சந்தாக்கள் வழங்கப்படுகின்றன.

    ரூ. 398 சலுகையுடன் 12 ஒ.டி.டி. சந்தாக்களும், ரூ. 1198 மற்றும் ரூ. 4 ஆயிரத்து 498 சலுகைகளுடன் 14 ஒ.டி.டி. சந்தாக்கள் வழங்கப்படுகிறது. ஒரு வருட ரிசார்ஜ் சலுகையுடன் ஜியோ எளிய மாத தவணை முறை வசதியை வழங்குகிறது. மூன்று பிரீபெயிட் ரிசார்ஜ்களிலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

    ஜியோடிவி பிரீமியம் சந்தா ஜியோ சிம் பயனர்களுக்கானது ஆகும். இத்துடன் ரூ. 148 விலையில் டேட்டா ஆட் ஆன் வவுச்சர் வழங்கப்படுகிறது. இதில் 10 ஜி.பி. டேட்டா மற்றும் 12 ஒ.டி.டி. சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் விலை 28 நாட்கள் ஆகும். ஜியோடிவி பிரீமியம் சலுகைகள் நாளை (டிசம்பர் 16) முதல் வழங்கப்படுகிறது.

    • விவோ நிறுவன Y சீரிஸ் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள்.
    • விவோ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு.

    விவோ நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அசத்தல் விலை குறைப்பு அறிவித்து இருக்கிறது. அந்த வகையில், விவோ Y16, விவோ Y17s, விவோ Y02t, விவோ Y02, விவோ Y27 மற்றும் விவோ YY17s போன்ற மாடல்களின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.

    தற்போதைய விலை குறைப்பு காரணமாக இந்த ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 1000 குறைந்திருக்கிறது. விலை குறைப்பு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் அமலுக்கு வந்துள்ளது.


    புதிய விலை விவரங்கள்:

    விவோ Y16 (4ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி) ரூ. 9 ஆயிரத்து 999

    விவோ Y17s (4ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி) ரூ. 11 ஆயிரத்து 499

    விவோ Y17s (4ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி) ரூ. 10 ஆயிரத்து 499

    விவோ Y27 (6ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி) ரூ. 12 ஆயிரத்து 999

    விவோ Y02 (3ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி) ரூ. 7 ஆயிரத்து 999

    விவோ Y02t ரூ. 8 ஆயிரத்து 499

    விலை குறைப்பு மட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் எஸ்.பி.ஐ., டி.பி.எஸ்., ஐ.டி.எஃப்.சி., ஒன் கார்டு, இண்டஸ்இண்ட் மற்றும் எஸ் வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    • ரியல்மி C சீரிஸ் ஸ்மார்ட்போன் மீடியாடெக் பிராசஸர் கொண்டிருக்கிறது.
    • இதில் 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    ரியல்மி நிறுவனம் தனது C67 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. 5ஜி கனெக்டிவிட்டியுடன் அறிமுகமாகி இருக்கும் புதிய C சீரிஸ் ஸ்மார்ட்போன் இது ஆகும். இதில்  6.72 இன்ச் FHD+ 120Hz டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 6100+ பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், 6 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம், 50MP பிரைமரி கேமரா, 2MP போர்டிரெயிட் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    7.89mm அளவில் உருவாகி இருக்கும் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் IP54 சான்று பெற்ற ஸ்பிலாஷ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    ரியல்மி C67 5ஜி அம்சங்கள்:

    6.72 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ ஸ்கிரீன்

    ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6100+ பிராசஸர்

    Arm மாலி - G57 MC2 GPU

    4 ஜி.பி., 6 ஜி.பி. ரேம்

    128 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யு.ஐ. 4.0

    50MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்

    2MP போர்டிரெயிட் கேமரா

    8MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ

    டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2

    யு.எஸ்.பி. டைப் சி

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டகி

    33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

    ரியல்மி C67 5ஜி ஸ்மார்ட்போன் சன்னி ஒயாசிஸ் மற்றும் டார்க் பர்பில் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 999 என்றும், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • சாம்சங் சாதனங்களில் குறைபாடு ஆபத்தை விளைவிக்கும்.
    • பல்வேறு மாடல்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

    மத்திய அரசின் கம்ப்யுட்டர் எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In) இந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. CERT-In எச்சரிக்கை குறிப்பு CIVIN-2023-0360-இல் ஆண்ட்ராய்டு 11, 12, 13 மற்றும் 14 ஒ.எஸ். கொண்ட சாம்சங் மொபைல்களில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த குறைபாடுகள் ஹேக்கர்களுக்கு பயனர்களின் மிகமுக்கிய தகவல்களை அபகரிக்கும் வசதியை வழங்க வாய்ப்பளிக்கும் என்று CERT-In ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். சாம்சங் சாதனங்களில் இந்த குறைபாடுகள் பல வகைகளில் ஆபத்தை விளைவிக்கும் என்று CERT-In அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     


    இவை ஆண்ட்ராய்டு 11, 12, 13 மற்றும் 14 ஒ.எஸ். கொண்டிருக்கும் சாம்சங் சாதனங்கள் மற்றும் சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ், கேலக்ஸி ஃப்ளிப் 5, கேலக்ஸி ஃபோல்டு 5 மற்றும் பல்வேறு மாடல்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இந்த பாதிப்புகளில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

    செக்யுரிட்டி அப்டேட்கள்:

    சாம்சங் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் செக்யுரிட்டி அப்டேட்களை பயனர்கள் தொடர்ச்சியாக அப்டேட் செய்து கொள்ள வேண்டும். சாதனத்தில் அப்டேட் வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள செட்டிங்ஸ் -- சாஃப்ட்வேர் அப்டேட் -- டவுன்லோட் அன்ட் இன்ஸ்டால் போன்ற ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும்.

     


    எச்சரிக்கை அவசியம்:

    அப்டேட் இன்ஸ்டால் செய்யும் வரை, பயனர்கள் பாதிக்கப்பட்ட சாதனங்களில் முன்பின் தெரியாத செயலிகளை இயக்கும் போது எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். சாதனத்தில் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும் செயலிகள் அனைத்தையும் தொடர்ந்து அப்டேட் செய்ய வேண்டும். கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து மட்டுமே செயலிகளை இன்ஸ்டால் செய்ய வேண்டும். மூன்றாம் தரப்பு செயலிகளை டவுன்லோட், இன்ஸ்டால் செய்வதை தவிர்க்க வேண்டும்.

    இணைய முகவரி:

    அறிமுகமில்லாதவர்கள் அனுப்பும் மின்னஞ்சல்கள் மற்றும் குறுந்தகவல்களை க்ளிக் செய்ய வேண்டாம். இந்த இணைய முகவரிகள் உங்களது தனிப்பட்ட தகவல்களை திருடும் வலைதளத்திற்கு செல்லும் வாய்ப்புகள் அதிகம் ஆகும். 

    • ரெட்மி நோட் 13 சீரிஸ் மாடல்கள் ஏற்கனவே சீனாவில் அறிமுகம்.
    • ரெட்மி நோட் 13 சீரிசில் மூன்று மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 13 சீரிஸ் கடந்த செப்டம்பர் மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் ரெட்மி நோட் 13, ரெட்மி நோட் 13 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் என மூன்று மாடல்கள் இடம்பெற்றுள்ளன. சீன வெளியீட்டை தொடர்ந்து ரெட்மி நோட் 13 சீரிஸ் இந்தியா மற்றும் சர்வதேச வெளியீடு பற்றிய தகவல்கள் வெளியாகி வந்தன.

    இந்த நிலையில், ரெட்மி நோட் 13 சீரிஸ் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ரெட்மி நோட் 13 சீரிஸ் மாடல்கள் ஜனவரி 4-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. சீனாவை போன்றே இந்தியாவிலும் ரெட்மி நோட் 13 சீரசின் மூன்று மாடல்களும் அறிமுகம் செய்யப்படலாம்.

     


    எனினும், இது குறித்து சியோமி இந்தியா இதுவரை எந்த தகவலும் இல்லை. மாறாக, ரெட்மி நோட் 13 சீரிஸ் வெளியீட்டு தேதி அடங்கிய போஸ்டர் மற்றும் சிறப்பு வலைப்பக்கத்தை திறந்துள்ளது. இந்த வலைப்பக்கத்தில் ரெட்மி நோட் 13 சீரிஸ் இந்திய வெளியீட்டு தேதி மட்டுமே இடம்பெற்று இருக்கிறது.

    இதுதவிர உலகம் முழுக்க 33.8 கோடி ரெட்மி நோட் சீரிஸ் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சீன சந்தையில் ரெட்மி நோட் 13 சீரிஸ் மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ. 13 ஆயிரத்து 900 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ. 22 ஆயிரத்து 800 ஆகும். 



    • ஐகூ-வின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் குவால்காம் பிராசஸர் கொண்டிருக்கிறது.
    • புதிய ஐகூ ஸ்மார்ட்போன் 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

    ஐகூ நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஐகூ 12 பெயரில் அறிமுகமாகி இருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் 1.5K 144Hz LTPO AMOLED ஸ்கிரீன், 3000 நிட்ஸ் வரையிலான பிரைட்னஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்டிருக்கிறது.

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 14 கொண்டிருக்கும் ஐகூ 12 மூன்று ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு ஒ.எஸ். அப்டேட்களையும், நான்கு ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்களையும் பெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், 64MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு உள்ளது.


    ஐகூ 12 அம்சங்கள்:

    6.78 இன்ச் 2800x1260 பிக்சல் 1.5K LTPO AMOLED ஸ்கிரீன்

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர்

    அட்ரினோ 750 GPU

    12 ஜி.பி., 16 ஜி.பி. ரேம்

    256 ஜி.பி., 512 ஜி.பி. மெமரி

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 14

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, OIS, LED ஃபிளாஷ்

    50MP அல்ட்ரா வைடு கேமரா

    64MP டெலிபோட்டோ கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.4

    யு.எஸ்.பி. டைப் சி

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    120 வாட் அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங்

    இந்திய சந்தையில் புதிய ஐகூ 12 ஸ்மார்ட்போன் லெஜண்ட் மற்றும் ஆல்ஃபா நிறங்களில் கிடைக்கிறது. இதன் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 52 ஆயிரத்து 999 என்றும் 16 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 57 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான் மற்றும் ஐகூ வலைதளங்களில் நடைபெறுகிறது.

    அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் எச்.டி.எஃப்.சி. மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் விவோ மற்றும் ஐகூ அல்லாத பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 3 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. விவோ மற்றும் ஐகூ பிராண்டு ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 5 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது.

    • பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஆண்டு முழுக்க வேலிடிட்டி வழங்கும் சலுகைகளை வழங்குகிறது.
    • அவ்வப்போது சலுகை பலன்களை மாற்றுவதை பி.எஸ்.என்.எல். வழக்கமாக கொண்டுள்ளது.

    பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு வழங்கி வரும் ஒருவருட சலுகையில் வேலிடிட்டியை மாற்றியுள்ளது. அதன்படி பி.எஸ்.என்.எல். ரூ. 2 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கும் ஒரு வருடத்திற்கான பிரீபெயிட் ரிசார்ஜ் சலுகையின் வேலிடிட்டி 30 நாட்கள் வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. பண்டிகை காலம், விசேஷ நாட்களை ஒட்டி பி.எஸ்.என்.எல். தனது சலுகைகளில் வேலிடிட்டி நீட்டிப்பதை அவ்வப்போது செய்து வருகிறது.

    ரூ. 2 ஆயிரத்து 999 பி.எஸ்.என்.எல். ரிசார்ஜ் சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிடெட் காலிங், தினமும் 3 ஜி.பி. அதிவேக டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் தினசரி டேட்டா தீர்ந்து போகும் பட்சத்தில் டேட்டா வேகம் நொடிக்கு 40Kb-யாக குறைக்கப்பட்டு விடும். இந்த சலுகையின் வேலிடிட்டி முன்னதாக 365 நாட்களாக இருந்தது.

     


    அந்த வகையில், தற்போதைய அறிவிப்பின் படி பி.எஸ்.என்.எல். ரூ. 2 ஆயிரத்து 999 பிரீபெயிட் ரிசார்ஜ் வேலிடிட்டி 365 நாட்களுடன் கூடுதலாக 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த சலுகை மார்ச் 1, 2024 வரை வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் பி.எஸ்.என்.எல். செல்ஃப் கேர் செயலியில் பயனர்களுக்கு கூடுதல் டேட்டா மற்றும் இதர பலன்களும் தேர்வு செய்யப்பட்ட ரிசார்ஜ்களில் வழங்கப்படுகிறது. 

    • ஐடெல் நிறுவனத்தின் குறைந்தவிலை ஸ்மார்ட்போன் அறிமுகம்.
    • ஐடெல் A சீரிஸ் ஸ்மார்ட்போனில் டைப் சி சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஐடெல் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் A05s ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. மிகக் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஐடெல் A05s மாடல் 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மட்டுமே கொண்டிருந்தது. இந்த நிலையில், ஐடெல் நிறுவனம் தனது A05s மாடலின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 1600x720 பிக்சல் ரெசல்யூஷன், 60Hz ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் ஆக்டா கோர் பிராசஸர், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, டைப் சி சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

    கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ஐடெல் A05s மாடலில் பிரத்யேக மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் உள்ளது. கனெக்டிவிட்டிக்கு டூயல் 4ஜி வோல்ட்இ, 3.5mm ஆடியோ ஜாக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒ.எஸ். கொண்டிருக்கிறது.

     


    ஐடெல் A05s அம்சங்கள்:

    6.6 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 1600x720 பிக்சல், 60Hz ரிப்ரெஷ் ரேட்

    யுனிசாக் ஆக்டா கோர் பிராசஸர்

    4 ஜி.பி. ரேம்

    64 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    8MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்

    5MP செல்ஃபி கேமரா

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    5 வாட் அடாப்டர்

    கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்

    3.5mm ஆடியோ ஜாக்

    இந்திய சந்தையில் புதிய ஐடெல் A05s மாடலின் விலை ரூ. 6 ஆயிரத்து 099 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் க்ரிஸ்டல் புளூ, குளோரியஸ் ஆரஞ்சு, மீடோ கிரீன் மற்றும் நெபுளா பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. 

    • சாம்சங்கின் கீ ஐலேண்ட் எனும் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • இதன் 5ஜி வெர்ஷனில் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர் உள்ளது.

    சாம்சங் நிறுவனத்தின் சமீபத்திய கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்- கேலக்ஸி A15 மற்றும் கேலக்ஸி A25 பெயர்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. முதற்கட்டமாக வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் கேலக்ஸி A சீரிஸ் ஸ்மாரட்போன்களில் A15 மாடல் மட்டும் 4ஜி வேரியண்டிலும் கிடைக்கிறது. புதிய மாடல்கள் அனைத்திலும் சாம்சங்கின் கீ ஐலேண்ட் எனும் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    புதிய கீ ஐலேண்ட் அம்சம் ஸ்மார்ட்போனில் பிரத்யேக வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இதன் பார்டர் டிசைன் வட்ட வடிவத்தில் உள்ளன. இவை ஸ்மார்ட்போனை கையில் வைத்துக் கொள்ள உறுதியான அனுபவத்தை வழங்குகிறது.

    சாம்சங் கேலக்ஸி A15 4ஜி மற்றும் A15 5ஜி அம்சங்கள்:

    இரு மாடல்களின் பிராசஸர் தவிர மற்ற அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி கேலக்ஸி A15 4ஜி மாடலில் மீடியாடெக் ஹீலியோ G99 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 128 ஜிபி. / 256 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் 5ஜி வெர்ஷனில் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது.

    இவைதவிர இரண்டு மாடல்களிலும் 6.5 இன்ச் S-AMOLED இன்ஃபினிட்டி யு நாட்ச் கொண்ட டிஸ்ப்ளே, Full HD+ ரெசல்யூஷன், 1080x2340 பிக்சல், 90Hz ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 800 நிட்ஸ் பிரைட்னஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 13MP செல்ஃபி கேமரா, 50MP பிரைமரி கேமரா, 5MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP டெப்த் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன் யு.ஐ. 6 வழங்கப்பட்டுள்ளது.

     


    சாம்சங் கேலக்ஸி A25 5ஜி அம்சங்கள்:

    கேலக்ஸி A25 5ஜி மாடலில் 6.5 இன்ச் S-AMOLED இன்ஃபினிட்டி யு நாட்ச் டிஸ்ப்ளே, Full HD+ ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 1000 நிட்ஸ் பிரைட்னஸ், எக்சைனோஸ் 1280 பிராசஸர், 6 ஜி.பி./ 8 ஜி.பி. ேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 13MP செல்ஃபி கேமரா, 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP டெப்த் சென்சார் உள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனிலும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன் யு.ஐ. 6 வழங்கப்பட்டு இருக்கிறது.

    • போக்கோ நிறுவனத்தின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம்.
    • போக்கோ C65 ஸ்மார்ட்போன் மீடியாடெக் பிராசஸர் கொண்டிருக்கிறது.

    போக்கோ பிராண்டின் போக்கோ C65 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. பட்ஜெட் பிரிவில் அறிமுகமான போக்கோ C65 விரைவில் இந்திய சந்தையிலும் அறிமுகமாகிறது. அதன்படி டிசம்பர் 15-ம் தேதி போக்கோ C65 இந்தியாவில் அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இது தொடர்பான அறிவிப்பை போக்கோ இந்தியா பிராண்டு தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு உள்ளது. போக்கோ C65 டீசர்களில் இந்த மாடல் அதன் சர்வதேச வேரியண்டை போன்றே காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

     


    போக்கோ C65 அம்சங்கள்:

    6.74 இன்ச் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், 90Hz ரிப்ரெஷ் ரேட்

    மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்

    அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    50MP பிரைமரி கேமரா

    2MP மேக்ரோ லென்ஸ்

    8MP செல்ஃபி கேமரா

    3.5mm ஹெட்போன் ஜாக், வைபை, ப்ளூடூத்

    யு.எஸ்.பி. டைப் சி போர்ட்

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    ×