search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    கேலக்ஸி S24 சீரிஸ் இந்திய முன்பதிவு துவக்கம்.. வெளியீடு எப்போ தெரியுமா?
    X

    கேலக்ஸி S24 சீரிஸ் இந்திய முன்பதிவு துவக்கம்.. வெளியீடு எப்போ தெரியுமா?

    • இந்திய முன்பதிவு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    • ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படும்.

    சாம்சங் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை கேலக்ஸி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை ஜனவரி 17-ம் தேதி நடைபெற இருக்கும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிகழ்வு சான் ஜோஸ் நகரில் நடைபெற உள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதி அறிவிக்கப்பட்டதும், அதன் இந்திய முன்பதிவு பற்றிய அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

    அந்த வகையில், இந்திய பயனர்கள் புதிய கேலக்ஸி S24 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்ய முடியும். புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு சாம்சங் இந்தியா ஸ்டோரில் மேற்கொள்ளலாம். முன்பதிவு கட்டணம் ரூ. 1999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்பதிவு செய்வோருக்கு ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    சாம்சங் கேலக்ஸி S24 சீரிஸ் இந்திய வெளியீட்டு தேதி மற்றும் விலை குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு ஜனவரி 17-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    பயனர்கள் தற்போது செலுத்தும் முன்பதிவு கட்டணம் ரூ. 1999, ஸ்மார்ட்போன் வாங்கும் போது அதன் விலையில் இருந்து தானாக குறைக்கப்பட்டு விடும். ஒருவேளை புதிய ஸ்மார்ட்போன்களை வாங்கும் முடிவை மாற்றிக் கொள்பவர்கள், தாங்கள் செலுத்திய முன்பதிவு கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற முடியும்.

    Next Story
    ×