search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹாரி ப்ரூக்"

    • ஹாரி ப்ரூக் (டெல்லி கேப்பிட்டல்ஸ்), மார்க் வுட் (எல்.எஸ்.ஜி.), ஜேசன் ராய் (கொல்கல்த்தா நைட் ரைடர்ஸ்),
    • அட்கின்சன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), டேவிட் வில்லே (எல்.எஸ்.ஜி.) ஆகியோர் விலகியுள்ளனர்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து இங்கிலாந்து, வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

    ஐபிஎல் 2024 சீசனுக்கான ஏலத்தில் எடுக்கப்படும் வீரரகள் காயம் காரணமாக சில நேரங்களில் விளையாட முடியாமல் போகலாம். சில வீரர்கள் தனிப்பட்ட காரணத்திற்கான ஐபிஎல் தொடரை புறக்கணிக்கலாம். சிலர் சர்வதேச போட்டியில் விளையாட இருப்பதால் வொர்க்லோடு காரணமாக ஐபிஎல் தொடரை தவிர்ப்பது உண்டு.

    ஆனால் இந்த சீசனில் இங்கிலாந்தைச் சேர்ந்த அதிகமான வீரர்கள் விலகியுள்ளனர். ஹாரி ப்ரூக் (டெல்லி கேப்பிட்டல்ஸ்), மார்க் வுட் (எல்.எஸ்.ஜி.), ஜேசன் ராய் (கொல்கல்த்தா நைட் ரைடர்ஸ்), கஸ் அட்கின்சன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) ஆகியோர் ஐபிஎல் 2024 சீசனில் இருந்து ஏற்கனவே விலகியிருந்தனர்.

    ஜேசன் ராய், ஹாரி ப்ரூக் ஆகியோர் தனிப்பட்ட காரணத்திற்காக விலகுவாக அறிவித்திருந்தனர். மார்க் வுட் மற்றும் அட்கின்சன் ஆகியோரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விளையாட வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில்தான் தற்போது லக்னோ அணியில் இருந்து டேவிட் வில்லே தனிப்பட்ட காரணத்திற்காக விலகுவதாக அறிவித்துள்ளார்.

    பட்லர், பிலிப் சால்ட், சாம் கர்ரன், பேர்ஸ்டோ உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    • டெல்லி அணியால் ரூ.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட இங்கிலாந்து அணி வீரர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
    • குடும்பத்தை தவிர வேறு எதுவும் முக்கியமில்லை.

    டெல்லி:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. இந்த சீசனில் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் டெல்லி அணிக்காக கம்பேக் கொடுக்கவுள்ளார். நேற்று முதல் டெல்லி பயிற்சி முகாமில் இணைந்த ரிஷப் பண்ட், தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

    இந்நிலையில் டெல்லி அணியால் ரூ.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக், வரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

     

    ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டாம் என்ற கடினமான முடிவை எடுத்துள்ளேன். டெல்லி அணிக்காக ஏலத்தில் வாங்கப்பட்ட போது, இந்த சீசனில் விளையாட ஆர்வமாக இருந்தேன். ஆனால் சூழ்நிலை வேறு மாதிரி அமைந்துள்ளது. ஐபிஎல் தொடரில் இருந்து பின் வாங்கியதற்கு சொந்த காரணங்களை கூற வேண்டும் என்று நினைத்ததில்லை. கடந்த மாதம் எனது பாட்டி மறைந்துவிட்டார். சிறு வயதில் இருந்து எனது பாட்டியின் வீட்டில் வளர்ந்தவன், அவர் எப்போதும் எனக்கு ஒரு தூண் போல் நம்பிக்கை அளித்தவர்.

    இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க அபுதாபியில் இருந்து புறப்படும் போது தான் பாட்டியின் உடல்நிலை பாதிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டது. இதனால் உடனடியாக நாடு திரும்ப முடிவு செய்தேன். தற்போது எங்களிடம் இருந்து பாட்டி மறைந்துவிட்டார். இதனால் எனது குடும்பத்தினருடன் இருக்க வேண்டிய சூழலில் உள்ளேன்.

    குடும்பத்தை தவிர வேறு எதுவும் முக்கியமில்லை. அதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதே சரியான முடிவாக கருதுகிறேன். என்னிடம் இன்னும் பல ஆண்டு கால கிரிக்கெட் மீதமிருப்பதால், வரும் காலங்களில் நிச்சயம் விளையாடுவேன். இந்த கடினமான சூழலில் எனக்கு ஆதரவாக இருந்த இங்கிலாந்து நிர்வாகம் மற்றும் டெல்லி அணி நிர்வாகம் இரண்டுக்கும் நன்றி கூட கடமைப்பட்டுள்ளேன்.

    என்று ஹாரி ப்ரூக் கூறினார்.

    • ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்கவுள்ளது.
    • 2023 ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹாரி ப்ரூக்கை 13.25 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    இந்நிலையில், ஐபிஎல் தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் தனிப்பட்ட காரணங்களுக்காக டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    2023 ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹாரி ப்ரூக்கை 13.25 கோடி ரூபாய்க்கு வாங்கியது. ஆனால் அந்த தொடரில் அவர் வெறும் 190 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனை அடுத்து ஹாரி ப்ரூக்கை அந்த அணி கழட்டி விட்டது. பின்னர் 2024 தொடரில் ரூ.4 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி ஏலம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • 6-வது டெஸ்ட்டில் விளையாடும் ஹாரி புரூக்கிற்கு இது 4-வது சதம் ஆகும்.
    • கடந்த 10 ஆண்டுகளில் ஜோ ரூட் போல பேட்டிங் செய்ய வேண்டும் என்று அனைத்து குழந்தைகளும் விரும்பினர்.

    இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இங்கிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணி 21 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜோ ரூட் நிதானமாக ஆடி சதம் அடித்தார். மறுமுனையில் இருந்த ஹாரி புரூக் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.

    இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 315 எடுத்துள்ளது. ஹாரி புரூக் 184 ரன்களுடனும் ஜோ ரூட் 101 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    6-வது டெஸ்ட்டில் விளையாடும் ஹாரி புரூக்கிற்கு இது 4-வது சதம் ஆகும். 24 வயதாகும் அவர் தொடர்ந்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் 807 ரன்களை குவித்துள்ளார்.

    புரூக்கின் மிரட்டல் ஆட்டத்தை பார்த்து வியந்த இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் வெகுவாக பாராட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளில் ஜோ ரூட் போல பேட்டிங் செய்ய வேண்டும் என்று அனைத்து குழந்தைகளும் விரும்பினர். தற்போது அடுத்த 10 ஆண்டுகளில் அதே குழந்தைகள் ஹாரி புரூக்கை போல விளையாட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்' என கூறியுள்ளார்.   

    • முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
    • ஹாரி ப்ரூக் 6 போட்டியில் ( 9 இன்னிங்ஸ்) 4 சதம் அடித்து அசத்தியுள்ளார்.

    நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இங்கிலாந்து அணியின் இளம் வீரரான ஹாரி ப்ரூக் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.

    நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

    இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 267 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நியூசிலாந்தின் வெல்லிங்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான ஜாக் கிராவ்லே (2) மற்றும் பென் டக்கர் (9) ஆகியோர் விரைவாக விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தனர். அடுத்ததாக களத்திற்கு வந்த ஓலி போப் 10 ரன்களில் வெளியேறினார்.

    இதன்பின் ஜோ ரூட் - ஹாரி ப்ரூக் ஜோடி, சிறப்பான பேட்டிங்கின் மூலம் இங்கிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டது. முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்து ஆட்டநாயகன் விருதையும் வென்ற ஹாரி ப்ரூக் இரண்டாவது போட்டியிலும் மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி சதம் அடித்தார்.

    ஹாரி ப்ரூக் 169 பந்துகளில் 184 ரன்களும், ஜோ ரூட் 182 பந்துகளில் 101 ரன்களும் எடுத்திருப்பதன் மூலம் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

    இந்தநிலையில் விளையாடியுள்ள 6 போட்டியில் ( 9 இன்னிங்ஸ்) 4 சதம் அடித்து அசத்தியுள்ள ஹாரி ப்ரூக், இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.

    டெஸ்ட் போட்டிகளில் முதல் 6 போட்டிகளுக்குள் 4 சதங்கள் கடந்த வீரர்கள் பட்டியலில், கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனுடன் ஹார் ப்ரூக் இணைந்துள்ளார்.

    அதே போல் டெஸ்ட் போட்டிகளில் முதல் 9 இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சுனில் கவாஸ்கர், வினோத் காம்ப்ளி போன்ற வீரர்களை பின்னுக்கு தள்ளி ஹாரி ப்ரூக் முதலிடத்தை பிடித்துள்ளார். முன்னாள் இந்திய வீரரான வினோத் காம்ப்ளே தனது முதல் 9 இன்னிங்ஸில் 798 ரன்கள் குவித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது இதனை ஹாரி ப்ரூக் முறியடித்துள்ளார். அதே போல் முதல் 9 இன்னிங்ஸில் 800 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற பெருமையும் ஹாரி ப்ரூக்கையே சாரும்.

    • முதல் நாளான இன்று 4 பேட்ஸ்மேன்கள் சதம் அடித்து அசத்தினர்
    • ஹாரி ப்ரூக் டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது சதத்தையும் பதிவு செய்தார்.

    ராவல்பிண்டி:

    இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்தது. இது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும். தொடக்க வீரர்களான ஜாக் கிராலி, பென் டக்கட், ஒல்லி போப் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகிய நான்கு வீரர்கள் சதமடித்து அசத்தினர்.

    அணியின் சிறந்த தொடக்கத்தை மேலும் முன்னெடுத்துச் செல்லும் முனைபில் விளையாடிய ஹாரி புரூக், தொடக்கம் முதலே விறுவிறுவென ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஆட்டத்தின் 68வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் சவுத் ஷகீல் வீச வந்தார். அந்த ஓவரில் ருத்ரதாண்டவமாடிய புரூக், ஓவரின் அனைத்து பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். ஆறு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டியதன் மூலம் அந்த ஓவரில் மட்டும் 24 ரன்களை திரட்டினார். இந்த சாதனையின் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரின் ஆறு பந்திலும் பவுண்டரிகள் அடித்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையை புரூக் பெற்றுள்ளார். மேலும், டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது சதத்தையும் பதிவு செய்தார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அனைத்து பந்துகளிலும் பவுண்டரி அடித்த வீரர்கள்:

    1982: சந்தீப் பாட்டீல் - பாப் வில்லிஸ் பந்துவீச்சு

    2004: கிறிஸ் கெய்ல் -மேத்யூ ஹோகார்ட் பந்துவீச்சு

    2006: ராம்நரேஷ் சர்வான் -முனாஃப் படேல் பந்துவீச்சு

    2007: சனத் ஜெயசூர்யா -ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சு

    2022: ஹாரி ப்ரூக் -சவுத் ஷகீல் பந்துவீச்சு.

    ×