search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகளுக்கு பயிற்சி"

    • மண்புழு தயாரிப்பது குறித்து செயல் விளக்கம்
    • வேளாண்மை துறை சார்பில் நடந்தது

    ஜோலார்பேட்டை:

    திரும்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ஊராட்சிக்கு உட்பட்ட நிலாவூர் கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் இயற்கை விவசாயம் செய்வது குறித்து பயிற்சி கூட்டம் நடந்தது. மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கண்ணகி தலைமை தாங்கினார்.

    ஜோலார்பேட்டை வட்டார உதவி இயக்குனர் வேல்முருகன், உதவி வேளாண்மை அலுவலர் அனிதா, திட்ட ஒருங்கிணைப்பாளர் சத்யபிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் அலுவலர் ராஜா வரவேற்றார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் கலந்து கொண்டு பேசினார். விவசாயிகள் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் ரசாயனம் மற்றும் பூச்சி கொல்லி கலப்பில்லதா இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து விவசாயிகளுக்கு மண்புழு தயாரிப்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

    • வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு பண்ணை பள்ளி பயிற்சி ஒரு தோட்டத்தில் நடைபெற்றது.
    • இந்த பயிற்சியில் விவசாயிகளுக்கு நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விளக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறினார்.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் வட்டாரம் வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு பண்ணை பள்ளி பயிற்சி மாரம்பாடி ஆரோக்கியம் தோட்டத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் புகையிலை ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி மணிவேல் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விளக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறினார்.

    பயிற்சி ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ராமசாமி. அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் உதயகுமார் செய்திருந்தார். இப்பயிற்சியில் 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    • துவரை நடவுமுறை தொடர்பான பயிற்சி மைலம்பாடி கிராமத்தில் நடைபெற்றது.
    • தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளிடம் கூறினார்.

    ஈரோடு:

    பவானி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் துவரை நடவுமுறை தொடர்பான பயிற்சி மைலம்பாடி கிராமத்தில் நடைபெற்றது.

    பவானி வேளாண்மை உதவி இயக்குநர் கனிமொழி வேளாண்மை திட்டங்கள் மற்றும் துவரை நடவுமுறை பயிரிட்டு அதிக மகசூல் பெற விவசாயிகளுக்கு ஆலோசனை கூறினார்.

    கோபி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் உதவி பேராசிரியர் சீனிவாசன் துவரை பயிரில் விதை நேர்த்தி முறைகள் மற்றும் நாற்றங்கால் அமைப்பது மற்றும் 30-35 நாட்களில் நுனிக்கிள்ளுதல் போன்ற தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளிடம் கூறினார்.

    அங்கக விதை சான்று துறை மற்றும் விதை சான்று அலுவலர் தமிழரசு துவரை பயிரில் விதை தேர்வு முறை, விதைப்பண்ணை அமைத்தல், பூச்சி மற்றும் நோய் தாக்குதல், மதிப்புக்கூட்டுத்தல் குறித்து ஆலோசணை கூறினார்.

    வட்டார தொழில்நுட்ப மேலாளர் கங்கா உழவன் செயலி பதிவேற்றம், இ-நாம் மற்றும் இ-வாடகை குறித்து விவசாயிகளிடம் கூறினார்.

    முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

    • பாரம்பரிய வேளாண் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • பயிற்சியில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ஈரோடு:

    அம்மாபேட்டை வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் இழுப்பிலி கிராமத்தில் பாரம்பரிய வேளாண் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இப்பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் ராஜமோகன் தலைமையேற்று விவசாயி களை வரவேற்று மானிய திட்டங்கள் குறித்து பேசினார்.

    பயிற்சியில் வேளாண்மை அலுவலர் ஜெயக்குமார் பாரம்பரிய ரகங்கள் பற்றியும், அங்கக வேளா ண்மையின் முக்கியத்து வம் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்து ரைத்தார்.

    மேலும் அங்கக வேளா ண்மை சாகுபடியில் உயிர் உரங்கள் பயன்பாடு விரிடி, சூடோமோனஸ் போன்ற உயிர்காரணிகள் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது.

    விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மை சான்று பெறுவதன் முக்கியத்துவம், அதை இணைய வழியில் பதிவு செய்தல் மற்றும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

    பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவ லர்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாட்டி னை ராஜேந்திரன் மற்றும் கயல்விழி ஆகியோர் செய்திருந்தனர்.

    • சென்னிமலை வட்டாரத்தில் பாரம்பரிய வேளாண் சாகுபடி முறைகள் குறித்த பயிற்சி நடைபெற்றது.
    • இதில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    ஈரோடு:

    சென்னிமலை வட்டா ரத்தில் குப்பிச்சிப்பா ளையம் கிராமத்தில் பாரம்பரிய வே ளாண் சாகுபடி முறைகள் குறித்த பயிற்சி வேளாண்மை உதவி இயக்குநர் சாமுவேல் தலைமையிலும், குப்பிச்சி பா ளையம் ஊராட்சி மன்ற தலை வர் பொன்னுச்சாமி முன்னி லையிலும் நடைபெற்றது.

    இப்பயிற்சியில் விதைச்சா ன்று அலுவலர் கணேசமூர்த்தி அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறியதோடு அதன் நன்மை கள் மற்றும் அங்ககச்சான்று பெறுவ தற்கான நடைமுறை கள் இணையதளம் மூலம் பதிவு செய்யும் முறைகள், உழவர் தொகுப்புகள் உருவா க்குதல் போன்றவற்றை தெளி வாக விளக்கிக் கூறினார்.

    சென்னிமலை வேளா ண்மை உதவி இயக்குநர் சாமு வேல் அங்கக வேளாண்மை முறையில் பயிர்சாகுபடி செ ய்வதால் என்னென்ன பய ன்கள் என்பது குறித்து பேசி னார். மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலு வலர் யுவராஜ் மண் பரிசோ தனை குறித்தும் மண் மாதிரி கள் எடுப்பது குறித்தும் விள க்க மாக எடுத்து கூறினார்.

    மேலும் இப்பயிற்சியில் பஞ்சகாவியம், ஜீவாமிர்தம், பூச்சிவிரட்டி தயாரிக்கும் முறை குறித்து அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் மோகனசுந்தரம் விள க்கமாக எடுத்துரைத்தார். இதில் 20-க்கும் மேற்பட்ட விவசா யக்குழு விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சி க்கான ஏற்பா டுகளை உதவி வேளாண்மை அலுவலர் வேலுமணி, கார்த்திகேயன் மற்றும் தொகுப்பு ஒருங்கி ணைப்பா ளர் ராஜேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.

    • வளர்ந்த கரும்பு பயிரில் இதனை கட்டுப்படுத்த, பாதிக் கப்பட்ட பயிரினை நீக்க வேண்டும்.
    • இறுதியில் வேளாண்மை உதவி அலுவலர் விஜயன் துறை ரீதியான மானிய திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சோமனஅள்ளி கிராமத்தில் விவசாயிகளுக்கு நிலையான கரும்பு சாகுபடி தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதில் வட்டார வேளாண்மை உதவி இயக்கு நர் அருள்மணி விவசாயிகள் கரும்பு சாகுபடி தொழில்நு ட்பத்தை கடைப்பிடித்து உற்பத்தியை பெருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் அங்கக வேளாண், சிறுதானிய ஆண்டு ஆகியன குறித்து எடுத்துரைத்தார்.

    உழவன் செயலி விழிப்புணர்வு மற்றும் பிரதம மந்திரி நிதி உதவி திட்டம் குறித்து தருமபுரி வேளாண்மை துணை இயக்குநர் குணசேகரன் விவசாயிகளுக்கு கூறினார்.

    பாப்பாரப்பட்டி வேளா ண்மை அறிவியல் நிலை யத்தினர் கூறுகையில் தருமபுரி மாவட் டத்தில் கரும்பில் வேர்புழுவின் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது.

    இது மறுதாம்பு கரும்பில் அதிகம் இருக்கும். இதனை கட்டுப்படுத்த பேவேரியா பேசியனா அல்லது மெட்டா ரைசியம் அனிசோ பிலே, லெக்கானி சிலியம் போன்ற வற்றை ஒரு கிலோ உயிர் கொல்லிக்கு 100 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து, நிழலில் வைத்து மூன்று தினங்களுக்கு பிறகு வயலில் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.

    வளர்ந்த கரும்பு பயிரில் இதனை கட்டுப்படுத்த, பாதிக் கப்பட்ட பயிரினை நீக்க வேண்டும். பயிர் சுழற்சி செய்வதன் மூலம் இதனை கட்டுபடுத்தலாம் எனக் கூறினார்.

    கரும்பு பெருக்கு அலுவலர் கதிரவன் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் அலுவலர் கேசவன் நாற்றங் காலில் தரமான நாற்று உற்பத்தி, கரும்பு சாகுபடி தொழில் நுட்பங்கள், கரும்பு நுனி கிள்ளுதல், பராமரிப்பு மேலாண்மை ஆகியன குறித்து எடுத்துரைத்தனர்.

    இறுதியில் வேளாண்மை உதவி அலுவலர் விஜயன் துறை ரீதியான மானிய திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

    பயிற்சியில் வேளாண் அலுவலர், கரும்பு உதவி அலுவலர்கள், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • கறவை மாடு வளர்க்கும் விவசாயிகள் கோடைகாலத்தில் மாட்டு கொட்டகைகளை காற்றோட்டமாக வைக்க வேண்டும்.
    • தீவனம் மற்றும் தண்ணீரை மாடுகளுக்கு போதுமான அளவில் வழங்க வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி குண்டல்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கறவை மாடு வளர்ப்பில் பால் உற்பத்தி மற்றும் தொழில் முனைவு மேம்பாடு குறித்து விவசாயிகளுக்கான இலவச பயிற்சி நடைபெற்றது.

    ஆராய்ச்சி மைய தலைவர் கண்ணதாசன் தலைமை தாங்கி தொடங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார்.

    கோடைகாலத்தில் வெப்பத்தின் தாக்கம் காரணமாக விவசாயிகள் தங்கள் கறவை மாடுகளில் பால் உற்பத்தியை நிலை நிறுத்தவும், பாலின் தரத்தை மேம்படுத்தவும் சிரமங்களை சந்திக்கும் நிலை உள்ளது.

    இதை கருத்தில் கொண்டு கறவை மாடு வளர்க்கும் விவசாயிகள் கோடைகாலத்தில் மாட்டு கொட்டகைகளை காற்றோட்டமாக வைக்க வேண்டும்.

    தீவனம் மற்றும் தண்ணீரை மாடுகளுக்கு போதுமான அளவில் வழங்க வேண்டும் என்று இந்த பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது.

    இதேபோல் கால்நடை களுக்கு நோய் மேலாண்மை, இனப்பெருக்க மேலாண்மை மற்றும் பால் உற்பத்தியை மேம்படுத்தும் வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த மையத்தில் அமைந்துள்ள அசோலா செயல் விளக்க திடல், மாதிரி தீவன ஆலை, கண்காட்சி கூடம் ஆகியவற்றை பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகள் பார்வையிட்டனர்.

    பால் உற்பத்தி மற்றும் தொழில் முனைவு வாய்ப்புகள் குறித்து விவசாயிகளின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு பயிற்சி கையேடு, கறவை மாடுகளில் பால் உற்பத்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து பானம் ஆகியவை வழங்கப்பட்டன.

    • இளைய தலைமுறையினருக்கு தேனீ க்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் தேனீக்களின் முக்கிய த்துவம்” என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடை பெற்றது.
    • தேன் வளர்ப்பு பெட்டிகள் தேனி மாவட்டத்திற்கு மட்டும் 1000 பெட்டிகள் வரை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

    சின்னனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் உள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் மத்திய அரசின் கதர்கிராம தொழில்கள் ஆணையத்தின் சார்பில் உலக தேனீக்கள் தினம் கொண்டாடப்பட்டது. மதுரை மண்டல கோட்ட இயக்குனர் அசோகன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    தேனீக்கள் வளர்ப்பு மற்றும் அவற்றிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை எவ்வாறு தயாரிப்பது, உற்பத்தி பொருட்களை சந்தைப்ப டுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்ச ங்கள் குறித்து விவசாயி களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    மேலும் தொழில் முனைவோர்களை உருவாக்கிடும் வகையில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு கடன் உதவி திட்டங்கள் குறித்தும், அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் நிகழ்ச்சியில் துறை சார்ந்த வல்லுனர்கள் எடுத்துரை த்தனர்.

    பின்னர் தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசின் தேன் புரட்சி திட்டத்தின் கீழ் மானியமாக தேனீ வளர்ப்பு பெட்டிகளை பெற்று வெற்றிகரமாக தொழில் செய்து வரும் பயனாளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்ப ட்டன.

    முன்னதாக இளைய தலைமுறையினருக்கு தேனீ க்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் தேனீக்களின் முக்கிய த்துவம்" என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடை பெற்றது. இதில் பங்கேற்ற பள்ளி குழந்தைகளுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்க ப்பட்டன.

    பின்னர் கதர் கிராம தொழில்கள் ஆணையத்தின் மதுரை கோட்ட இயக்குனர் அசோகன் கூறுகையில்,

    தேன் புரட்சி திட்டத்தின் கீழ் மதுரை மண்டலத்தில் மட்டும் 5000க்கும் மேற்பட்ட தேன் வளர்ப்பு பெட்டிகள் இலவசமாக வழங்கியுள்ள தாகவும் குறிப்பாக தேனி மாவட்டத்திற்கு மட்டும் 1000 பெட்டிகள் வரை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

    • விவசாயிகளின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி நிபுணர்கள் பேசினார்கள்
    • பல்வேறு விவசாய தொழில் நுட்பங்கள் குறித்தும் விளக்கம் அளித்தனர்.

    கோவை,

    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பயிர்ப்பாதுகாப்பு மையம் மற்றும் விரிவாக்க கல்வி இயக்ககம், தைவானில் உள்ள உலக காய்கறி மையம் மற்றும் ஈஷா மண் காப்போம் இயக்கத்துடன் இணைந்து நடத்திய விவசாயிகளுக்கான இலவச பயிற்சி கோவையில் நடைபெற்றது.

    செம்மேட்டில் உள்ள ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் நடைபெற்ற இந்த பயிற்சியில் ரசாயனங்களை பயன்படுத்தாமல் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் வழிமுறைகள், களை மற்றும் பூச்சி மேலாண்மை, பயிர்களைத்தாக்கும் நோய்கள் மற்றும் அதற்கான இயற்கை வழி தீர்வுகள் என விவசாயிகளின் அடிப்படை பிரச்சினைகளைப்பற்றி அந்தந்த துறையைச்சேர்ந்த நிபுணர்கள் பேசினார்கள். குறிப்பாக, நூற்புழு வகைகள், அதன் தாக்குதல்கள், அவற்றை தவிர்ப்பதற்கான வழிகள் பற்றி சீனிவாசன் விளக்க மாக எடுத்துரைத்தார்.

    பயிர்களை தாக்கும் நோய்கள், நோய்க்கா ரணிகளான பூஞ்சைகள், வைரஸ்கள் குறித்து பல தகவல்களுடன் பயிர் நோயியல் துறை யைச்சேர்ந்த அங்கப்பன் விளக்கினார். உயிரி தொழில்நுட்பவியல் துறையைச்சேர்ந்த மணி கண்ட பூபதி, உதவி தோட்டக்கலைத் துறை இயக்குநர் நந்தினி, பயிற்சிப் பிரிவு மற்றும் வேளாண் விரிவாக்க கல்வி இயக்ககத்தை சேர்ந்த ஆனந்தராஜா, ஈஷா மண் காப்போம் இயக்கத்தை சேர்ந்த பிரபாகரன் ஆகியோர் தங்கள் துறைசார்ந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டதோடு பங்கேற்பாளர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர்.

    மேலும், மண் காப்போம் இயக்கத்தின் பயிற்சியாளர்கள் மாதிரி பண்ணையை விவசாயிகளுக்கு சுற்றி காண்பித்து பல்வேறு விவசாய தொழில் நுட்பங்கள் குறித்தும் விளக்கம் அளித்தனர்.

    • மண் பரிசோதனை செய்வதன் பயன்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
    • விவசாயிகள் பயன்படுத்தும் உர செலவு குறைகிறது, மண்ணில் நுண்ணுயிர்கள் பெருக்கமடைகின்றன.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஜோதிஹள்ளி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு உழவர் பயிற்சி நிலையம் மூலம் விவசாயிகளுக்கு மண் பரிசோதனை செய்யும் முறை மற்றும் மண் பரிசோதனை செய்வதன் பயன்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

    வேளாண்மையில் பஞ்சகாவியா, பத்திலை கரைசல், மீன் அமிலம் தயாரிக்கும் முறைகள் பற்றியும் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. அங்கக வேளாண்மை செய்வதன் மூலம் விவசாயிகள் பயன்படுத்தும் உர செலவு குறைகிறது, மண்ணில் நுண்ணுயிர்கள் பெருக்கமடைகின்றன. இதனால் மண்வளம் பாதிக்கப்படுகின்றது என்று எடுத்துரைக்கப்பட்டது.

    மேலும் கால்நடை துறை மூலம் கால்நடைகளுக்கு காப்பீடு வழங்கும் திட்டம் மற்றும் மாடுகளுக்கு தடுப்பூசி அளிக்கும் திட்டம், விவசாயிகள் பட்டு வளர்ப்பின் மூலம் அதிக லாபம் பெறலாம் என்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

    பயிற்சியில் வேளாண் கல்லூரி மாணவர்கள் மண் பரிசோதனை செய்யும் செயல் விளக்கத்தினை விவசாயிகளுக்கு செய்து காட்டினர். உழவர் பயிற்சி நிலையம் வேளாண் அலுவலர், கால்நடை மருத்துவர், இளநிலை ஆய்வாளர் பட்டு வளர்ச்சி துறை மற்றும் ஆத்மா திட்டத்தின் கீழ் உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • பயிர் சாகுபடி நுட்பங்கள் குறித்து விளக்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு, வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் சார்பில். வேளாண்மை தொழில்நுட்ப முகமை, மற்றும் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் மூலம். மாநிலத்திற்குள் விவசாயிகளுக்கு பயிற்சி சேத்துப்பட்டு, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் நாராயணசாமி, தலைமையில் புதுக்கோட்டையில் உள்ள வேளாண்மை கல்வி நிலையம் தேசிய பயிறு வகை ஆராய்ச்சி மைய வளாகத்தில் பயிற்சி நடந்தது.

    வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் யுவராஜா, வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சார்பில் வெளியிடப்பட்ட விதைகள், விதைகளின் தன்மைகள், விதை தேர்வு செய்யும் முறைகள், விதை நேர்த்தி, பயிர் வகைகளில் பூச்சி நோய், மற்றும் பூச்சி நோய் மேலாண்மை, மற்றும் பயிர் வகையில் களை கட்டுப்பாடு, பயிர் வகை உற்பத்தி தொழில்நுட்பங்கள், மற்றும் மண்வள மேம்பாடு, ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    பயிற்சியில் ஜமுனாமரத்தூர், போளூர், கலசப்பாக்கம், ஆரணி, சேத்துப்பட்டு, ஆகிய வட்டாரங்களை சேர்ந்த சுமார் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    பயிற்சி முகாமில் வேளாண்மை கல்வி மைய இணை பேராசிரியர் ஞானசேகரன், உதவி பேராசிரியர் ராம் ஜெகதீசன், பயிற்சி உதவியா ளர் ராதாகிருஷ்ணன், உதவி பேராசிரியர் மேனகா, ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த பயிற்சி ஏற்பாடுகளை சேத்துப்பட்டு வட்டார தொழில் நுட்ப மேலாளர் சேகர், உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் ஆனந்த், வினோத், ஆகியோர் செய்து இருந்தனர்.

    • நாதிபாளையம் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.
    • வாழையில் ஊட்டசத்து பானம் தயார் செய்து செயல்விளக்கமாக செய்து காண்பித்தார்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே நாதிபாளையம் கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்கீழ் வேளாண்விளை பொருட்களில் மதிப்புக் கூட்டுதல் தொழில் நுட்பங்கள் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி கோபி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முரளி வழிகாட்டு தலின் படி விவசாயிகள் ஆலோசனைக்குழு தலைவர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    சிறப்பு பயிற்சியாளராக கலந்து கொண்ட வேளாண் அறிவியல் நிலைய மனையில் விஞ்ஞானி சிவா சிறுதானிய சத்துமாவு தயாரித்தல் மற்றும் சிறுதானிய சத்து உருண்டை தயாரித்தல் போன்ற தொழில்நுட்பங்களை எடுத்துக் கூறியதுடன், சிறுதானிய சத்துமாவு கஞ்சி மற்றும் நமது பகுதியில் அதிக அளவில் விளையும் வாழையில் ஊட்டசத்து பானம் தயார் செய்து செயல்விளக்கமாக செய்து காண்பித்தார்.

    இப்பயிற்சியில் வேளாண் அலுவலர் சந்திரசேகரன், வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் சுப்பிரமணியம், உதவி வேளாண்மை அலுவலர் ஜனரஞ்சனி, உதவி தோட்டக்கலை அலுவலர் சுரேஷ் உள்பட 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை கோபி வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருவரங்கராஜ், உதவி தொழில்நுட்ப மேலாளர் அன்பழகன் மற்றும் ஆதவன் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×