search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமான பயணிகள்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பனிபொழிவால் டெல்லியில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது
    • இரவு உணவு கூட கிடைக்காமல் பயணிகள் தவித்துள்ளனர்

    கடந்த நவம்பர் 2023 முதல், வட இந்தியாவில் பனிப்பொழிவு மிக கடுமையாக உள்ளது.

    குறிப்பாக, தலைநகர் புது டெல்லியில், பனிப்பொழிவின் கடுமை அதிகரித்துள்ளதால் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று கோவாவில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய 6E 2195 எனும் விமானம், பனிப்பொழிவின் காரணமாக டெல்லிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, மும்பை விமான நிலையத்தில் தரையிறங்க, விமான நிலைய அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    கோவாவில் இருந்து புறப்படும் போதே இவ்விமானம் அதிக தாமதத்திற்கு உள்ளானதால், பயணிகள் மிகுந்த கோபத்தில் இருந்தனர்.

    மும்பையில் தரையிறக்கப்பட்டதும் அவர்களுக்கு முறையான இரவு உணவு கூட கிடைக்காமல் திண்டாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


    நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டி இருந்ததால், சில பயணிகள், விமான நிலைய ஓடுபாதையிலேயே அமர்ந்து உணவு உண்டனர். இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

    இந்நிலையில், இச்சம்பவம் குறித்து, மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் அனைவருடனும் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    தொடர்ந்து, அத்துறையின் சார்பில் மும்பை விமான நிலையத்திற்கும், இண்டிகோ விமான அலுவலகத்திற்கும் விளக்கம் தர கோரி, "ஷோ காஸ் நோட்டீஸ்" (showcause notice) அனுப்பப்பட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

    இண்டிகோ மற்றும் மும்பை சர்வதேச விமான நிலையங்கள் சூழ்நிலையை எதிர்கொள்ளும் விதமாக ஆலோசித்து நடவடிக்கை எடுக்கவில்லை.

    பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திருந்தால் இச்சம்பவம் நடந்திருக்காது. பயணிகள் இறங்கியவுடன் நிலையத்திற்கு விரைந்து செல்லும் வகையில் விமானத்தை நிறுத்த இடத்தை ஒதுக்காமல், தொலைவில் புதிய இடத்தை நிலையம் வழங்கியது பெரும் தவறு. இதனால் பல பயணிகள் நடக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.

    பயணிகளுக்கு இதனால் உணவு விடுதி மற்றும் ஒப்பனை அறைக்கான வசதி உடனடியாக கிடைக்கவில்லை.

    இந்த தவறுகளுக்கு அந்த நோட்டீசில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

    • நடுவானில் விமானத்தில் நடந்த சண்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • விமானத்தில் நடந்த சண்டையை பயணிகள் சிலர் செல்போனில் படம் பிடித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டனர்.

    பாங்காக்:

    தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் இருந்து கொல்கத்தாவுக்கு விமானம் ஒன்று புறப்பட்டது.

    விமானம் பறக்க தொடங்கியதும் அதில் இருந்த 2 பயணிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை அருகில் இருந்த பயணிகள் சமரசம் செய்து வைக்க முயன்றனர்.

    ஆனால் அவர்கள் அதனை கேட்காமல் மாறிமாறி ஆவேசமாக பேசினர். சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி அவர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. நடுவானில் விமானத்தில் நடந்த இச்சண்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சண்டையை நிறுத்த விமான பணிபெண்களும் முயற்சி மேற்கொண்டனர். பின்னர் கூடுதல் ஊழியர்கள் வந்து அவர்கள் இருவரையும் சமரசம் செய்து வேறுவேறு இருக்கைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    விமானத்தில் நடந்த இச்சண்டையை பயணிகள் சிலர் செல்போனில் படம் பிடித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டனர். தற்போது இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

    • புதிய வகை உருமாறிய கொரோனா (பிஎப்.7) அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நுழைந்துவிட்டது.
    • இந்த கொரோனா இந்தியாவில் பரவாமல் தடுக்க மத்திய அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    புதுடெல்லி:

    சீனாவில் புதிய வகை உருமாறிய கொரோனா (பிஎப்.7), வேகமாகப் பரவி வருகிறது. இது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் நுழைந்துவிட்டது. இந்தியாவிலும் 3 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய வகை கொரோனா இந்தியாவில் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதுதொடர்பாக மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா டெல்லியில் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். பிரதமர் மோடியும் கொரோனா நிலைமை பற்றி டெல்லியில் அவசர ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், சர்வதேச விமான பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்தது. இதில் முக்கியமாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே சனிக்கிழமை முதல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்து துறைக்கு, சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:

    வெளிநாடுகளில் இருந்து சர்வதேச விமானங்களில் வரும் பயணிகளில் 2 சதவீதத்தினருக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும். மரபணு பரிசோதனை பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் பயணிகளை அவர்களின் நாடுகளின் அடிப்படையில் விமான நிறுவனங்களே தேர்வு செய்யலாம். அந்த பயணிகளிடம் இருந்து மாதிரிகளை சேகரித்த பின்னரே விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும். பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டால், அந்த மாதிரிகளை மரபணு சோதனைக்காக அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட ஏமன் நாட்டில் இருந்து மதுரை வந்த விமான பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    • அரபு நாடுகளில் ஒன்றான ஏமன் நாட்டில் பணிபுரிந்து பின்னர் துபாய் வழியாக 3 பேர் விமானம் மூலம் மதுரை வந்தது கண்டறியப்பட்டது.

    அவனியாபுரம்

    துபாயில் இருந்து நேற்று மதுரைக்கு தனியார்விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் குடியேற்ற துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அரபு நாடுகளில் ஒன்றான ஏமன் நாட்டில் பணிபுரிந்து பின்னர் துபாய் வழியாக 3 பேர் விமானம் மூலம் மதுரை வந்தது கண்டறியப்பட்டது.

    இதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் பந்துரான் வட்டம், நாயன தெருவை சேர்ந்த சின்ன தம்பி மகன் ராஜா குட்டி (30), தஞ்சை மாவட்டம் திருவிடை மருதூர் மகாராஜபுரம் அக்ரகாரத்தை சேர்ந்த சின்னப்பிள்ளை மகன் ராஜ்குமார் (28), திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா பாரதி நகரை சேர்ந்த வேலு கவுண்டர் மகன் சின்னப்பன் (39) ஆகிய 3 பேரும் ஏமன் நாட்டில் இருந்து மதுரை வந்தது தெரியவந்தது.

    இந்திய பாஸ்போர்ட் விதிகளின்படி தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டுக்கு சென்றது குறித்து விசாரணை நடத்துவதற்காக 3 பேரும் அவனியாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

    ×