search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுதிகள்"

    • செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் உரிமம் பெற்றிட வேண்டும்.
    • 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;- கல்வி நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் விடுதிகள் தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் முறைப்படுத்தும் சட்டம் 2014-ன் கீழ் உரிமம் பெறுவது கட்டாயம் ஆகும். எனவே, கடலூர் மாவட்டத்தில் அரசு சாரா, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் 18 வயது வரையுள்ள மாணவ மாணவியருக்கான விடுதிகளானது வருகின்ற செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் உரிமம் பெற்றிட வேண்டும்.

    அவ்வாறு உரிமம் பெற்றிடாமல் விடுதிகள் இயக்கி வரும் நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களை தேர்விற்கு தயார்படுத்தும் நோக்கில் கல்வி நிறுவனங்களில் தற்காலிகமாக தங்கி பயில்வதற்கும் விடுதி உரிமம் பெறுவது கட்டாயமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு மாணவியர் விடுதியில் 55 பேர், அரசு விடுதியில் 58 பேர் தங்கி படிக்கின்றனர்.
    • அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா என பார்வையிட்டார்.

    கடலூர்:

    திட்டக்குடியில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அரசு மாணவியர் விடுதியில் 55 பேர், அரசு விடுதியில் 58 பேர் தங்கி படிக்கின்றனர். இந்த விடுதிகளில் மங்களூர் வட்டார மருத்துவ அலுவலர் திருமாவளவன் திடீரென ஆய்வு செய்தார். அப்போது விடுதிகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா என பார்வையிட்டார்.

    மேலும் இதில் டாக்டர் ஆனந்தி, மருந்தாளுனர் சரவணன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் மாணவிகளை உடற்பரி சோதனை செய்து மருந்து, மாத்திரை வழங்கினர். விடுதியை சுற்றியுள்ள புதர்களை சுத்தம் செய்யவும், கழிவறைகளை சுத்தமாக பராமரிக்கவும் அறிவுரை வழங்கினர். ஆய்வின் போது விடுதி காப்பாளர் செல்வரா ணி, வார்டு கவுன்சிலர் சுரேந்தர் உடனிருந்தனர்.

    • மாணவ- மாணவிகளுக்கு உணவு, தங்கும் வசதி அளிக்கப்படும்.
    • அடுத்த மாதம் (ஜூலை) 15-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    மயிலாடுதுறை மாவட்ட த்தில் பிற்படுத்தப்பட்டோர்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல மாணவ- மாணவிக ளுக்கென 15 பள்ளி விடுதி கள், 4 கல்லூரி விடுதிகள் மற்றும் 1 தொழி ல்நுட்ப கல்லூரி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்புகள் படிக்கும் மாணவ- மாணவிகளும் சேர தகுதி உடையவர்கள்.

    விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் பின்வரும் சலுகைகள் இலவசமாக வழங்கப்படு கின்றன. அனைத்து விடுதி மாணவ- மாணவிகளுக்கும், உணவு, தங்கும் வசதி அளிக்கப்படும். 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு 4 இணைச்சீ ருடைகள் வழங்கப்படும். 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும்.

    விடுதிகளில் சேருவதற்கு பெற்றோர்/ பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    இருப்பிடத்தி லிருந்து படிக்கும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ-க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவி களுக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ- மாணவிகள் விண்ணப்ப ங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்/ காப்பாளி னிகளிடம் இருந்தோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவல கத்திலுள்ள பிற்படுத்தப்ப ட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நல அலுவலகத்தில் இருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதிகா ப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சிறுபா ன்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 28-ந் தேதிக்குள் கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதிகா ப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 15-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    மாணவர்கள் விண்ணப்பி க்கும் போது ஜாதி மற்றும் பெற்றோர் ஆண்டு வருமானம் குறித்த சான்றி தழ்கள் அளிக்க தேவையி ல்லை. விடுதியில் சேரு ம்போது மட்டும் இச்சான்றி தழ்களை அளித்தால் போதுமானது. ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்த ப்பட்டுள்ளன. எனவே, மாணவ- மாணவிகள் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கல்லூரி விடுதிகளில் விடுதி ஒன்றிற்கு தலா ரூ. 1 லட்சம் செலவில் செம்மொழி நூலகம்.
    • 18 கல்லூரி விடுதிகளில் ரூ. 18 லட்சம் செலவில் செம்மொழி நூலகம் திறக்கப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி விடுதியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் செம்மொழி நூலகத்தினை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் எம்.பி. இன்று திறந்து வைத்தார்.

    பின்னர் எஸ் .எஸ். பழநிமாணிக்கம் தெ எம்.பி. கூறியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியரின் கல்வி அறிவு மற்றும் பொது அறிவினை வளர்க்கவும்.

    அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றம் அடைவதை நோக்கமாக கொண்டும், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபிரனர் மற்றும் சிறுபான்மையினர் நல துறையின் கீழ் இயங்கிடும் 259 கல்லூரி விடுதிகளில் விடுதி ஒன்றிற்கு தலா ரூ. 1 லட்சம் செலவில் செம்மொழி நூலகம் என்ற பெயரில் 250 நூலகங்களை அமைத்திட இந்த 1 லட்சம் ரூபாயில் ரூ.50,000- செலவில் புத்தகங்களையும் ரூ.50,000- செலவில் தளவாட சாமான்களையும் அரசால் வாங்கி வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரயினர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கட்டுப்பாட்டில் உள்ள 18 கல்லூரி விடுதிகளில் ரூ. 18 லட்சம் செலவில் செம்மொழி நூலகம் திறக்கப்படுகிறது.

    இந்த நூலகத்தில் ஆங்கில அறிவை வளர்க்கும் புத்தகங்கள் , உலகளாவிய தலைவர்கள் குறித்த புத்தகங்கள், தொழில் மற்றும் திறன் வளர்ச்சி சார்ந்த புத்தகங்கள், பொது அறிவு சார்ந்த புத்தகங்கள், மாணவ மாணவியர்களுக்கு ஊக்கம் அளிக்கும் புத்தகங்கள் போன்ற பல்வேறு புத்தகங்கள் இவ்நூலகத்தில் இடம்பெற்றுள்ளது.

    கல்லூரி மாணவ மாணவிகள் இடையே வாசிப்புத்திறனை மேம்படுத்திடவும் அதேபோல் புத்தகம் வாசிக்கும் வாசகர்கள் எண்ணிக்கையும் அதிகப்ப டுத்தும் நோக்கத்துடனும் இந்த நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் , துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சித் தலைவர்உஷா புண்ணியமூர்த்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்ரேணுகாதேவி, விடுதி காப்பாளர் தெய்வநாயகி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர எஸ்.சி., எஸ்.டி,. மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • இருப்பிடம் 5 கிேலா மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் சேர மாணவ,மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மாவட்டத்தில் 13 ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிகளும், 7 ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிகளும், 1 ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியும், 1 ஆதிதிராவிடர் நல ஐ.டி.ஐ மாணவர் விடுதியும் உள்ளன. பள்ளி விடுதிகளுக்கு விண்ணப்பம் பதிவு வரும் 27ந் தேதி வரையிலும், கல்லூரி விடுதிகளுக்கு வரும் 18-ந் தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம்.மாணவ, மாணவிகள் தெரிவு செய்யப்பட வேண்டிய நாள் அடுத்த மாதம் 10-ந் தேதியாகும். மாணவ,மாணவிகள் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

    4-ம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகள் விடுதியில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

    மாணவர் இருப்பிடத்திற்கும், பள்ளிக்கும் இடைவெளி 5 கிேலா மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு இந்த விதி பொருந்தாது. எனவே அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×