search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குந்தவை நாச்சியார் கல்லூரியில் செம்மொழி நூலகம்- எம்.பி. திறந்து வைத்தார்
    X

    குந்தவை நாச்சியார் கல்லூரியில் நூலகத்தை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. திறந்து வைத்து மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கினார்.

    குந்தவை நாச்சியார் கல்லூரியில் செம்மொழி நூலகம்- எம்.பி. திறந்து வைத்தார்

    • கல்லூரி விடுதிகளில் விடுதி ஒன்றிற்கு தலா ரூ. 1 லட்சம் செலவில் செம்மொழி நூலகம்.
    • 18 கல்லூரி விடுதிகளில் ரூ. 18 லட்சம் செலவில் செம்மொழி நூலகம் திறக்கப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி விடுதியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் செம்மொழி நூலகத்தினை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் எம்.பி. இன்று திறந்து வைத்தார்.

    பின்னர் எஸ் .எஸ். பழநிமாணிக்கம் தெ எம்.பி. கூறியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியரின் கல்வி அறிவு மற்றும் பொது அறிவினை வளர்க்கவும்.

    அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றம் அடைவதை நோக்கமாக கொண்டும், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபிரனர் மற்றும் சிறுபான்மையினர் நல துறையின் கீழ் இயங்கிடும் 259 கல்லூரி விடுதிகளில் விடுதி ஒன்றிற்கு தலா ரூ. 1 லட்சம் செலவில் செம்மொழி நூலகம் என்ற பெயரில் 250 நூலகங்களை அமைத்திட இந்த 1 லட்சம் ரூபாயில் ரூ.50,000- செலவில் புத்தகங்களையும் ரூ.50,000- செலவில் தளவாட சாமான்களையும் அரசால் வாங்கி வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரயினர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கட்டுப்பாட்டில் உள்ள 18 கல்லூரி விடுதிகளில் ரூ. 18 லட்சம் செலவில் செம்மொழி நூலகம் திறக்கப்படுகிறது.

    இந்த நூலகத்தில் ஆங்கில அறிவை வளர்க்கும் புத்தகங்கள் , உலகளாவிய தலைவர்கள் குறித்த புத்தகங்கள், தொழில் மற்றும் திறன் வளர்ச்சி சார்ந்த புத்தகங்கள், பொது அறிவு சார்ந்த புத்தகங்கள், மாணவ மாணவியர்களுக்கு ஊக்கம் அளிக்கும் புத்தகங்கள் போன்ற பல்வேறு புத்தகங்கள் இவ்நூலகத்தில் இடம்பெற்றுள்ளது.

    கல்லூரி மாணவ மாணவிகள் இடையே வாசிப்புத்திறனை மேம்படுத்திடவும் அதேபோல் புத்தகம் வாசிக்கும் வாசகர்கள் எண்ணிக்கையும் அதிகப்ப டுத்தும் நோக்கத்துடனும் இந்த நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் , துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சித் தலைவர்உஷா புண்ணியமூர்த்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்ரேணுகாதேவி, விடுதி காப்பாளர் தெய்வநாயகி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×