search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடமாநில வாலிபர் கொலை"

    • ஈரோடு மாவட்டம் தாசில்தார் தோட்டத்தில் முரளிதரன் என்பவருக்கு சொந்தமான சலவை பட்டறை செயல்பட்டு வருகிறது.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நிக்கில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாசில்தார் தோட்டத்தில் முரளிதரன் என்பவருக்கு சொந்தமான சலவை பட்டறை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான வடமாநில தொழிலாளிகள் பணியாற்றி வருகின்றனர்.இவர்கள் இதே வளாகத்தில் உள்ள வீடுகளில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.இந்நிலையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த நிக்கில் (23) என்ற வாலிபர் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு முரளிதரனின் சலவை பட்டறையில் தங்கிருந்து வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் இன்று நிக்கில் வேலைக்கு செல்லாததால் உடன் வேலை பார்க்கும் தொழிலாளிகள் அவரது அறைக்கு வந்தனர். அப்போது அவரது அறையில் நிக்கில் உடல் தீ பிடித்து எரிந்த நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நிக்கில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நிக்கில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை விபத்தில் உயிரிழந்தாரா? எவ்வாறு இறந்தார் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. உடன் வேலை பார்க்கும் சக தொழிலாளிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கைக்காகவும் காத்துக் கிடக்கின்றனர். வடமாநிலத் தொழிலாளி இறந்து கடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருட முயன்ற வட மாநில வாலிபர் கிராம மக்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கொலையுண்ட வடமாநில வாலிபர் கேசட்ரா மோகன் பர்மன் குறித்தும், அவரது பின்னணி மற்றும் குற்ற வழக்குகள் குறித்தும் போலீசார் விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.

    திருப்போரூர்:

    திருப்போரூர் அடுத்த தாழம்பூர் பகுதியில் பிரபல கட்டுமான நிறுவனங்களின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இங்கு மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த கேசட்ரா மோகன்பர்மன் (43) என்பவர் தங்கி தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார்.

    அதிகாலை கேசட்ரா மோகன்பர்மன் அருகே உள்ள காரணை நேரு தெருவில் உள்ள ஒரு குடியிருப்புக்குள் புகுந்து திருட முயன்றார். இதற்குள் சத்தம் கேடு எழுந்த வீடுகளில் இருந்தவர்கள் திரண்டு வந்தனர்.

    அவர்கள் கேசட்ராவை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களிடம் சிக்காமல் கேசட்ரா தப்பி ஓடினார். மேலும் பிடிக்க வந்தவர்கள் மீதும் கற்களை வீசி தாக்கினார்.

    இதைத்தொடர்ந்து அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் கேசட்ராவை சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அவரை கட்டி வைத்து இரும்பு கம்பி கட்டையால் சரமாரியாக தாக்கினர்.

    இதில் தலை, முகம், மார்பில் பலத்த காயம் அடைந்த கேசட்ரா ரத்த வெள்ளத்தில் மயங்கினார். இதுகுறித்து தாழம்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

    அவர்கள் ஆபத்தான நிலையில் இருந்த கேசட்ராவை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை கேசட்ரா பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர். இது தொடர்பாக காரணை பகுதியை சேர்ந்த ஆனந்த், ராஜா, உதயசங்கர், விக்னேஷ், பாலமுருகன், ரமேஷ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கொலையுண்ட வடமாநில வாலிபர் கேசட்ரா மோகன் பர்மன் குறித்தும், அவரது பின்னணி மற்றும் குற்ற வழக்குகள் குறித்தும் போலீசார் விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.

    கேசட்ரா மட்டும் தனியாக திருட சென்றாரா? அல்லது அவருடன் கூட்டாளிகள் வேறு யாராவது சென்றனரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுதொடர்பாக கட்டுமான நிறுவனத்தில் தங்கி இருந்து வேலைபார்த்து வரும் அனைத்து வடமாநில வாலிபர்கள் குறித்த விவரங்களையும் சேகரிக்க முடிவு செய்து இருக்கிறார்கள். திருட முயன்ற வட மாநில வாலிபர் கிராம மக்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி கூடுதல் எஸ்.பி. சந்தீஸ் மற்றும் புதுக்கோட்டை போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
    • துஷபன்ட் பேகரா அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    ஒடிசா மாநிலம் கோவிந்தப்பூர் கஞ்சம் பகுதியை சேர்ந்தவர் துஷபன்ட் பேகரா (வயது 24). இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.

    இதற்காக புதுக்கோட்டை பாத்திமா நகரில் ஒரு வீட்டில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் இன்று காலை இவர் உடலில் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி கூடுதல் எஸ்.பி. சந்தீஸ் மற்றும் புதுக்கோட்டை போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது துஷபன்ட் பேகரா அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து துஷபன்ட் பேகராவை கொலை செய்தது யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×