தனியார் சலவை பட்டறையில் எரிந்த நிலையில் இறந்து கிடந்த வடமாநில வாலிபர் கொலையா?- போலீசார் விசாரணை

ஈரோடு மாவட்டம் தாசில்தார் தோட்டத்தில் முரளிதரன் என்பவருக்கு சொந்தமான சலவை பட்டறை செயல்பட்டு வருகிறது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நிக்கில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தனியார் சலவை பட்டறையில் எரிந்த நிலையில் இறந்து கிடந்த வடமாநில வாலிபர் கொலையா?- போலீசார் விசாரணை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் தாசில்தார் தோட்டத்தில் முரளிதரன் என்பவருக்கு சொந்தமான சலவை பட்டறை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான வடமாநில தொழிலாளிகள் பணியாற்றி வருகின்றனர்.இவர்கள் இதே வளாகத்தில் உள்ள வீடுகளில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.இந்நிலையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த நிக்கில் (23) என்ற வாலிபர் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு முரளிதரனின் சலவை பட்டறையில் தங்கிருந்து வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் இன்று நிக்கில் வேலைக்கு செல்லாததால் உடன் வேலை பார்க்கும் தொழிலாளிகள் அவரது அறைக்கு வந்தனர். அப்போது அவரது அறையில் நிக்கில் உடல் தீ பிடித்து எரிந்த நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நிக்கில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

நிக்கில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை விபத்தில் உயிரிழந்தாரா? எவ்வாறு இறந்தார் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. உடன் வேலை பார்க்கும் சக தொழிலாளிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கைக்காகவும் காத்துக் கிடக்கின்றனர். வடமாநிலத் தொழிலாளி இறந்து கடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com