search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார் சைக்கிள"

    • சி.சி.டி.வி.காமிரா பதிவுகளை கைப்பற்றி தனிப்படை விசாரணை
    • மோட்டார் சைக்கிளில் சமையல் செய்வதற்கான பாத்திரங்களும் இருந்தது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் அருணாங்குளம் சந்திப்பில் கடந்த 3 நாட்களாக மோட்டார் சைக்கிள் ஒன்று அனாதையாக நின்று கொண்டிருந்தது. அதில் இருந்து துர்நாற்றம் வீசியதால் வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டை ஒன்று இருந்தது. அந்த சாக்கு மூட்டையில் இருந்து தான் துர்நாற்றம் வீசியது தெரிய வந்தது. போலீசார் அந்த சாக்கை பிரித்து பார்த்த போது மயில் ஒன்றை கொன்று தோலை உரித்து வைத்திருந்தனர். இதை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மோட்டார் சைக்கிளில் சமையல் செய்வதற்கான பாத்திரங்களும் இருந்தது.

    எனவே மயிலை கொன்று சமைத்து சாப்பிட கொண்டு வந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இருப்பினும் அதனை மோட்டார் சைக்கிளுடன் விட்டுச் சென்றது ஏன்? என்பது தெரியவில்லை. வேறு ஏதும் காரணங்களுக்காக அதனை கொண்டு வந்தவர்கள் மோட்டார் சைக்கிளை பாதியில் நிறுத்திவிட்டு தப்பி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.

    இதனை தொடர்ந்து போலீசார் மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். இதில் அது வடசேரி பகுதியைச் சேர்ந்த ஒருவருடையது என்பது தெரிய வந்தது. வனத்து றையினர் அவரிடம் விசாரணை நடத்தி னார்கள். அப்போது தனது மோட்டார் சைக்கிள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே மாயமாகி விட்டதாகவும் இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தி ருப்பதாகவும் அவர் கூறினார்.

    இதை கேட்டு வனத்துறை யினர் அதிர்ச்சி அடைந்தனர். மோட்டார் சைக்கிளை திருடிய நபர் தான் மயிலையும் கொன்று சமைத்து சாப்பிட எடுத்துச் சென்றிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    மயிலை கொன்ற கும்பலை பிடிக்க வனத்துறையினர் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை பற்றி விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.

    • மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் தப்பி ஓட்டம்
    • சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளையும் கைப்பற்றி போலீசாரிடம் வழங்கி உள்ளார்கள்.

    நாகர்கோவில் :

    மத்திய பாரதிய ஜனதா அரசின் 9 ஆண்டு சாதனை களை விளக்கி குமரி மாவட்டம் முழுவதும் பார திய ஜனதாவினர் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

    மேலும் நாகர்கோவில் நாகராஜா திடலில் வருகிற 2-ந்தேதி குமரி சங்கமம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகிறார். இது தொடர்பாகவும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்டம் முழுவதும் வாகன பிரசாரங்கள் நடந்து வருகிறது. தோவாளை ஒன்றியத்துக்குட்பட்ட இளைஞரணி சார்பில் பூதப் பாண்டி, செண்பகராமன்புதூர் பகுதியில் வாகன பிரசாரம் நேற்று நடந்தது.

    கல்லுமடமுக்கு பகுதியில் நேற்று இரவு இளைஞரணியினர் பிரசாரம் மேற்கொண்டு வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் திடீரென பிரசார வாகனத்தை தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டனர். இந்த பகுதியில் பிரசாரம் செய்யக் கூடாது என்று கூறினார்கள். திடீரென அந்த பகுதியில் கிடந்த கல்லை எடுத்து வாகனத்தின் மீது வீசினார்கள்.

    இதையடுத்து பாரதிய ஜனதா நிர்வாகிகளுக்கும், அந்த வாலிபர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பா.ஜ.க. நிர்வாகிகள் அங்கே திரண்டனர். இதற்கிடையில் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் பத்மநாபன் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்துள்ளார்.

    புகாரில் பாரதிய ஜனதா சார்பில் நடந்த வாகன பிரசார வாகனத்தை தடுத்து நிறுத்தி கல்வீசி தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியதுடன் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளையும் கைப்பற்றி போலீசாரிடம் வழங்கி உள்ளார்கள்.

    அந்த சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளில் அந்த வாலிபர்களின் மோட்டார் சைக்கிள் எண் தெளிவாக பதிவாகியுள்ளது. அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கீழே விழுந்ததில் பிரவீன் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

    கன்னியாகுமரி :

    தென்தாமரைகுளம் அருகே உள்ள சந்தையடியை சேர்ந்தவர் திரவியதாஸ். இவரது மகன் பிரவீன் குமார் (வயது 28). இவர், சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் மணக்குடியில் இருந்து ஈத்தங்காடு நோக்கி சென்றார். ஆண்டிவிளை டாஸ்மாக் கடை அருகில் வந்தபோது, மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியது. இதனால் கீழே விழுந்ததில் பிரவீன் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவி லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து அவரது மனைவி ரோஜா கொடுத்த புகாரின் பேரில் தென்தாமரைகுளம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிசிடிவி கேமராவில் காட்சிகள் பதிவு
    • இரவு ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கை

    நாகர்கோவில் :

    தென் தாமரைகுளம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு வருவது தொடர் கதையாக நடைபெற்று வருகிறது.

    போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. திருடப்பட்ட மோட்டார் சைக்கிளும் மீட்கப்ப டவில்லை என்பது பொது மக்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் சாமி தோப்பு பகுதியில் நிறுத்தப்ப ட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை நேற்று மர்மநபர்கள் திருடி சென்று ள்ளனர். இதுகுறித்து தெ ன்தாமரைகுளம் போலீ சில் தகவல் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

    மேலும் கொள்ளையர்கள் திருடிச் சென்ற பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்ம நபர்கள் 2 பேர் நீண்ட நேரமாக நோட்டமிட்டு மோட்டார் சைக்கிளை திருடி செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தென்தாமரைகுளம் போலீஸ் நிலைய பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் போலீசாரின் இரவு ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    போலீசார் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதால்தான் இந்த திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர்
    • மது விற்ற ரூ.850-ஐ போலீசார் பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்தனர்.

    கன்னியாகுமரி :

    புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் அனுமதியின்றி அதிக விலைக்கு மது விற்பனை நடப்பதாக புகார் எழுந்தது. புகாரின் பேரில் புதுக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். காப்புக்காடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கிடமாக நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது உரிய அனுமதி இல்லாத 21 பாட்டில் மதுபானம் காணப்பட்டது. இதை அதிக விலைக்கு விற்க வைத்திருப்பது தெரிய வந்தது.

    தொடர்ந்து வாகனம் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். இதில் அவர் அதே பகுதி கண்ணம்விளாகத்தை சேர்ந்த கிருஷ்ணராஜன் (வயது 55) என தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து மது விற்ற ரூ.850-ஐ போலீசார் பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்தனர்.

    • மோட்டார் சைக்கிளில் சென்றபோது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.
    • சிகிச்சை பலன் இன்றி ராஜா பரிதாபமாக இறந் தார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் இரு ளப்பபுரத்தை சேர்ந்த வர் ராஜா (வயது 41). இவர் அஞ்சுகிராமம் அருகே தெற்கு பகவதிபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். உடனடியாக அவரை அந்த வழியாக சென்ற வர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்தி ரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் இன்றி ராஜா பரிதாபமாக இறந் தார்.

    இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் கள்.

    • போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர்
    • மோட்டார் சைக்கிளை திருடி தனி தனியாக பிரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    கன்னியாகுமரி :

    குலசேகரம் பகுதியில் கடந்த சில நாட்களாக வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் காணவில்லை என்று குலசேகரம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு புகார்கள் வந்தன. சுமார் 5-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் காணாமல் போயிருந்தன. இதனால் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் குலசேகரம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ஸ்ரீகண்டன் தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை என்று புகார் கொடுத்திருந்தார்.

    இந்த நிலையில் குலசேகரம் அருகே செறுதிக்கோணம் அரியம்போடு பகுதியில் ஒருவர் வீட்டின் அருகில் பழைய மோட்டார் சைக்கிளை பிரித்து வைத்திருப்ப தாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது சுமித் (வயது 27) என்பவர் வீட்டின் அருகில் மோட்டார் சைக்கிளை பிரித்து வைத்திருந்தை பார்த்து விசாரித்தனர். இவர் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளை திருடி தனி தனியாக பிரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் சுமார் 5 மோட்டார் சைக்கிளின் பாகங்களை பறிமுதல் செய்து சுமித்தை கைது செய்தனர். இவர் எங்குயிருந்து எல்லாம் மோட்டார் சைக்கிள் திருடியிருக்கிறார். எந்த பகுதியில் விற்பனை செய்து இருக்கிறார் என்று போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மோட்டார் சைக்கிளில் இருந்தபடி வசந்தாவிடம் ஏதோ பேச்சு கொடுத்துள்ளனர்.
    • நகை பறித்த நபர் மீது வேறு ஏதேனும் வழக்குகள் உள்ளனவா? என்பது குறித்தும் விசாரணை

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ஆசாரிபள்ளம் தொல்ல விளையை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மனைவி வசந்தா (வயது 58). இவர் இன்று அதிகாலை 6 மணி அளவில் வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். வசந்தா அருகே வந்ததும் அவர்கள் மோட்டார் சைக்கிளில் இருந்தபடி வசந்தாவிடம் ஏதோ பேச்சு கொடுத்துள்ளனர்.

    பின்னர் திடீரென வசந்தா கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்தனர். இதை சற்றும் எதிர்பாராத வசந்தா கூச்சலிட்டார். உடனே சுதாரித்துக் கொண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். அதற்குள் வசந்தாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து மர்ம நபர்களை பிடிக்க முயற்சி மேற்கொண்டனர். அப்போது மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மா்ம நபர் பொதுமக்களிடம் பிடிபட்டார்.

    ஆனால் மோட்டார் சைக்கிளை ஓட்டிய மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து பிடிபட்ட மர்ம நபர் ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவாிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பிச் சென்ற மர்ம நபர் பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நகை பறித்த நபர் மீது வேறு ஏதேனும் வழக்குகள் உள்ளனவா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    நாகர்கோவிலில் அதிகாலை வீட்டு முன் நின்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் நகை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பிளஸ்-2 மாணவியை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற வாலிபர் போதையில் இருந்தாரா?
    • இன்ஸ்டா காதல் மூலம் பழகிய மாணவி விபத்தில் பலியான சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கன்னியாகுமரி :

    சமூக வலைதளங்கள் பல்வேறு நன்மைகளை அளித்தாலும் சில விரும்பதகாத செயல்களுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் குமரி மாவட்டத்தில் நடைபெற்று பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் மாணவியை மயக்கிய வாலிபர் அவரை கடத்திச் சென்றபோது, விபத்தில் சிக்கி உள்ளார். இதில் மாணவி பலியான சம்பவம் தான் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

    குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள தருவையைச் சேர்ந்தவர் லாசர்மணி. இவர் இறந்து விட்ட நிலையில் மகள் அபர்ணா (வயது 16) தனது தாய் மற்றும் சகோதரியுடன் உறவினர் பராமரிப்பில் இருந்து வந்தார். பிளஸ்-2 தேர்வு எழுதிய இவருக்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குளச்சல் களிமார் பகுதியைச் சேர்ந்த விஜூ (19) இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமானார்.

    இது பற்றி தெரியவந்ததும் அபர்ணாவை அவரது தாயார் தமிழரசி கண்டித்துள்ளார். மேலும் விஜூவையும் அவர் எச்சரித்துள்ளார். இதனால் அவர் கடந்த சில நாட்களாக அபர்ணாவை சந்திக்காமல் இருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று அபர்ணா வீட்டில் தனியாக இருந்ததை தெரிந்த விஜூ, மோட்டார் சைக்கிளில் அங்கு வந்துள்ளார்.

    மாணவி அபர்ணாவை சந்தித்த அவர், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார். பின்னர் அவர் அபர்ணாவை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றுள்ளார். மண்டைக்காடு அருகேஉள்ள வெட்டு மடை பகுதியில் சென்ற போது, மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதற்கிடையில் அபர்ணா மாயமானது குறித்து, அவரது தாயார் போலீசில் புகார் கொடுத்தார். அப்போது தான் மகள் கடத்தப்பட்டதும், விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் இருப்பதும் தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தார். தொடர்ந்து மகள் அபர்ணாவை, ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அபர்ணா பரிதாபமாக இறந்தார். இன்ஸ்டா காதல் மூலம் பழகிய மாணவி விபத்தில் பலியான சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதற்கிடையில் அபர்ணாவை கடத்திச் சென்ற விஜூ, போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. விபத்து ஏற்பட்ட பிறகு தலையில் காயம் அடைந்த அபர்ணாவை சாலையில் அப்படியே விட்டுவிட்டு விஜூ சென்று விட்டதாகவும், பின்னர் அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது. விஜூ, மோட்டார் சைக்கிளில் செல்லும் போது போதையில் இருந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    • பெட்ரோல் இல்லாததால் தீ வைத்ததாக வாக்குமூலம்
    • போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோட்டார் வாகையடி தெருவை சேர்ந்தவர் ஹரிஹரசுதன் (வயது 35). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். கடந்த 6-ந்தேதி இரவு வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் பார்த்தபோது மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து கிடந்தது. இதுகுறித்து ஹரிஹரசுதன் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் தனிப்படை போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் ஹரிஹரன்சுதன் மோட்டார் சைக்கிள் எரித்தது வாகையடி தெருவை சேர்ந்த தாணு மூர்த்தி (21), மீனாட்சி செட்டிதெருவை சேர்ந்த ராம்கி (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்திய போது பைக்குக்கு பெட்ரோல் இல்லாததால் ஹரிஹரசுதன் மோட்டார் சைக்கிளில் பெட்ரோலை எடுக்க முயன்றோம். அப்போது அவரது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் இல்லை. இது எங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. பெட்ரோல் இல்லாத மோட்டார் சைக்கிள் எதற்கு என்பதற்காக அவரது மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தோம் என்று கூறினார்கள். கைது செய்யப்பட்ட தாணுமூர்த்தி, ராம்கி இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

    • மளிகை கடை முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி பூட்டிவிட்டு கடைக்கு சென்றுள்ளார்.
    • திருடன், திருடன் என்று சத்தம் போட்டவாறு அவரை துரத்தியுள்ளார்.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துகந்தம்பாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது38). இவர் ' சேவூர் அருகே பந்தம்பாளையத்திலிருந்து கந்தம்பாளையத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது வழியில் ஒரு நபர்லிப்ட் கேட்டுள்ளார். எனவே அவரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றுள்ளார். அப்போது வழியில் ஒரு மளிகை கடை முன் சந்தோஷ் மோட்டார் சைக்கிளை நிறுத்தி பூட்டிவிட்டு கடைக்கு சென்றுள்ளார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி லிப்ட் கேட்டு வந்த நபர் மோட்டார் சைக்கிளின் பூட்டை உடைத்து மோட்டார் சைக்கிளை தள்ளி சென்றார்.

    இதைப்பார்த்த| சந்தோஷ் திருடன், திருடன் என்று சத்தம் போட்டவாறு அவரை துரத்தியுள்ளார். இதை பார்த்த பொதுமக்கள் சிலர் அவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளை தள்ளி சென்ற நபரை பிடித்து அவினாசி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் போத்தம்பாளையத்தை சேர்ந்தவேலு சாமி மகன் சாமிநாதன் என்பது தெரியவந்தது. போலீசார் அவர்மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இவர் ஏற்கனவே அவனாசி, சேவூர், கருவலூர் உள்ளிட்ட பகுதிகளில் 8 மோட்டார் சைக்கிள்கள் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×