புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிளில் மது விற்றவர் மீது வழக்கு

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர்மது விற்ற ரூ.850-ஐ போலீசார் பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்தனர்.
புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிளில் மது விற்றவர் மீது வழக்கு
Published on

கன்னியாகுமரி :

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் அனுமதியின்றி அதிக விலைக்கு மது விற்பனை நடப்பதாக புகார் எழுந்தது. புகாரின் பேரில் புதுக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். காப்புக்காடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கிடமாக நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது உரிய அனுமதி இல்லாத 21 பாட்டில் மதுபானம் காணப்பட்டது. இதை அதிக விலைக்கு விற்க வைத்திருப்பது தெரிய வந்தது.

தொடர்ந்து வாகனம் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். இதில் அவர் அதே பகுதி கண்ணம்விளாகத்தை சேர்ந்த கிருஷ்ணராஜன் (வயது 55) என தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து மது விற்ற ரூ.850-ஐ போலீசார் பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com