தென்தாமரைகுளம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த தொழிலாளி படுகாயம்

கீழே விழுந்ததில் பிரவீன் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
தென்தாமரைகுளம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த தொழிலாளி படுகாயம்
Published on

கன்னியாகுமரி :

தென்தாமரைகுளம் அருகே உள்ள சந்தையடியை சேர்ந்தவர் திரவியதாஸ். இவரது மகன் பிரவீன் குமார் (வயது 28). இவர், சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் மணக்குடியில் இருந்து ஈத்தங்காடு நோக்கி சென்றார். ஆண்டிவிளை டாஸ்மாக் கடை அருகில் வந்தபோது, மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியது. இதனால் கீழே விழுந்ததில் பிரவீன் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவி லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து அவரது மனைவி ரோஜா கொடுத்த புகாரின் பேரில் தென்தாமரைகுளம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com