search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மினி லாரி"

    • காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி சாலையை கடந்து செல்வது வழக்கமான ஒன்று.
    • மினி லாரியில் இருந்த தார்பாயை தனது துதிக்கையால் கீழே இழுத்து போட்டு சேதாரம் செய்தது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இந்த காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி சாலையை கடந்து செல்வது வழக்கமான ஒன்று.

    சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து வெளியேரிய ஒற்றை காட்டுயானை கரும்பு லாரி வருகிறதா என சாலையில் உலா வந்தது. அப்போது அங்கு பழுதாகி நின்ற மினி லாரியின் உள்ளே காய்கறி உள்ளதா என தேடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மினி லாரியில் ஏதும் இல்லாதால் மினி லாரியில் இருந்த தார்பாயை தனது துதிக்கையால் கீழே இழுத்து போட்டு சேதாரம் செய்தது. சுமார் 30 நிமிடம் வாகனங்கள வழிமறித்த ஒற்றையானை பின்னர் வனப்பகுதியில் சென்றது. கடந்த சில நாட்களாக காட்டு யானை கூட்டம் வாகனங்களை வழிமறித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • லாரியின் கூண்டு பகுதியின் மேற்பகுதி சாலையின் குறுக்கே நின்ற மரக்கிளையின் மீது மோதி அந்தரத்தில் தொங்கியது.
    • மினி லாரி அந்தரத்தில் தொங்கிய வீடியோ தென்காசி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் இந்திரா நகர் பகுதியில் செல்லும் நெடுஞ்சாலையின் குறுக்கே மரம் வளர்ந்துள்ளது.

    அவ்வழியே செல்லும் அரசு பஸ்கள், கனரக லாரிகள் உள்ளிட்டவை செல்லும் பொழுது மரக்கிளையில் உரசுவதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறி சமூக ஆர்வலர்கள் நெடுஞ்சாலை துறையினரிடம் பலமுறை கூறியும் மரத்தை அகற்றாமல் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பாவூர்சத்திரம் மாடக்கண்ணு பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் தனது கூண்டு கட்டிய மினி லாரியில் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று தண்ணீர் கேன் போட்டு விட்டு மீண்டும் மாடக் கண்ணுபட்டி நோக்கி வந்த போது மினி லாரியின் கூண்டு பகுதியின் மேற்பகுதி சாலையின் குறுக்கே நின்ற மரக்கிளையின் மீது மோதி அந்தரத்தில் தொங்கியது.

    இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து அந்தரத்தில் தொங்கிய மினி லாரிக்குள் இருந்த சுப்பிரமணியனை பத்திரமாக மீட்டு லாரியையும் மரக்கிளையில் இருந்து லாவகமாக இறக்கினர்.

    லாரி மரக்கிளையில் சிக்கியதை வீடியோவாக எடுத்து ஆவுடையானூர் பகுதியை சேர்ந்த தமிழன் மக்கள் நலச்சங்கம் என்ற சமூக ஆர்வலர் அமைப்பை சேர்ந்தவர்கள் நெடுஞ்சாலை துறையினரின் அலட்சியத்தின் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

    தற்போது மினி லாரி அந்தரத்தில் தொங்கிய வீடியோ தென்காசி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இறால் மீன்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி நேற்று இரவு புறப்பட்டது.
    • மினி லாரி எதிர்பாராத விதமாக, ரோந்து வாகனத்தின் மீது மோதியது.

    கள்ளக்குறிச்சி:

    தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு இறால் மீன்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி நேற்று இரவு புறப்பட்டது. இந்த மினி லாரியை நாகை மாவட்டத்தை சேர்ந்த அசாருதீன் (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். இந்த வாகனம் உளுந்தூர்பேட்டையில் உள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை வந்தது. அப்போது சாலையோரம் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் ரோந்து வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ரோந்து வாகனத்தில் வந்த அதிகாரிகள் எதிர்புறத்தில் நின்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    இறால் மீன் மீன் ஏற்றிவந்த மினி லாரி எதிர்பாராத விதமாக, ரோந்து வாகனத்தின் மீது மோதியது. இதில் மினி லாரி தீப்பிடித்து எரிந்தது. அவ்வழியே சென்றவர்கள், மினி லாரியில் இருந்த டிரைவர் அசாருதீனை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனும தித்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய லாரி டிரைவர், லேசான தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உளுந்தூ ர்பேட்டை தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் மினி லாரி மற்றும் அதிலிருந்த இறால் மீன்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த விபத்து தொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையில் உள்ள தடுப்பு வேலிகள் மீதும் மோதியது
    • டிரைவர்-கண்டக்டர் படுகாயம்

    நாகர்கோவில் :

    நாகர்கோவிலில் இருந்து வெள்ளமடம். ஆண்டார் குளம். ராமபுரம் வழியாக ராஜாவூருக்கு அரசு பஸ் இன்று காலை புறப்பட்டு சென்றது.

    திருப்பதி சாரம் நான்கு வழிச்சாலையில் பஸ் சென்ற போது நெல்லை யிலிருந்து நாகர்கோவிலுக்கு காய்கறி ஏற்றி வந்த மினி லாரி, டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்து நான்கு வழிச்சாலையில் இருந்த தடுப்பு வேலிகள் மீது மோதியது.

    பின்னர் அரசு பஸ்ஸின் பின்பகுதியில் மோதியது. இதில் பஸ்ஸின் பின்பகுதி சேதமடைந்தது. விபத்தில் பஸ்சின் டிரைவர், கண்டக்டர் படுகாயம் அடைந்த னர். பஸ்ஸில் இருந்த 4 பெண் பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச் சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து ஆரல் வாய்மொழி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். முதல் கட்ட விசாரணையில், விபத்தின் போது மழை பெய்து கொண்டு இருந்தது. அப்போது நான்கு வழிச்சாலையில் வேகமாக வந்த மினி லாரியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் டிரைவர் சாலையில் இருந்த தடுப்பு வேலிகள் மீது மோதி பஸ்சின் பின் பகுதியில் இடித்து இருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஏற்கனவே நேற்று லாயம் பகுதியில் நடந்த விபத்தில் பஸ் மீது வேன் மோதியதில் 4 பேர் பலியானார்கள். இந்த நிலையில் இன்று மீண்டும் அரசு பஸ் விபத்தில் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவல்கிணறிலிருந்து தேரைக்கால் புதூர் வழியாக திருவனந்தபுரத்திற்கு நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

    தற்போது காவல் கிணறு முதல் தேரேக்கால் புதூர் வரை உள்ள சாலையில் வேலைகள் முடிந்ததை யடுத்து வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. நெல்லையில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சாலை யில் வாகனங்கள் அதி வேகமாக வருவதால் விபத்துக்கள் நடந்து வருகிறது. 4 வழி சாலைகளை கடந்து பல கிராமங்களுக்கு பொதுமக்கள் இருசக்கர வாகனங்களிலும் நான்கு சக்கர வாகனங்களிலும் சென்று வருகிறார்கள். திடீரென சாலையைக் கடக்கும் போது நான்கு வழிச்சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டு வருகின் றன. எனவே 4 வழிச் சாலையின் பிரிவு சாலை களில் விபத்தை தடுக்கும் வகையில் முன்னேற்பாடு பணிகளை செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் அதிக திறன் கொண்ட மினி லாரி வாகனத்தை பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சபா.பாலமுருகன் வழங்கினார்.
    • மருங்கூர் ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியன், எல்.என்.புரம் ஊராட்சி செயலாளர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்

    கடலூர்:

    பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மருங்கூர், எல்.என்.புரம் ஆகிய 2 ஊராட்சிகளுக்கு தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் அதிக திறன் கொண்ட மினி லாரி வாகனத்தை பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சபா.பாலமுருகன் வழங்கினார்.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீரா கோமதி, சக்தி, மேலாளர் பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் உதயகுமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் சசிகலா ஜெயசெழியன், மருங்கூர் ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியன், எல்.என்.புரம் ஊராட்சி செயலாளர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்

    • விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து தடையில்லா சான்று பெற வேண்டும்
    • கடும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

    நாகர்கோவில்:

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யவும், கரைக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    விநாயகர் சிலை அமைக்க உத்தேசித்துள்ள அமைப்பாளர் சிலை வைக்கப்படும் இடத்திற்கு தடையில்லா சான்று பெற்று உரிய படிவத்தில் (படிவம்-1) தொடர்புடைய சப்-கலெக்டர், கோட்டாட்சி யரிடம் உடனடியாக விண் ணப்பிக்கவேண்டும்.

    சிலை வைக்க உத்தே சிக்கப்பட்டுள்ள இடம் பொது நிலமாக இருந்தால் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, நெடுஞ்சாலைத் துறையிடமும், தனியார் இடமாக இருந்தால் நில உரிமையாளரிடமும் தடை யில்லா சான்று பெறப்பட வேண்டும்.

    தற்காலிக கூடாரம் தீ பாதுகாப்பு தர நிலையை கடைபிடிப்பதாக உள்ளது என்பதற்கு தடையில்லா சான்று தீயணைப்பு துறையிடம் பெற வேண் டும். மின் இணைப்பு வழங்கப்படுவதை குறிக்கும் கடிதம் மின்சார துறை யிடமிருந்து பெற வேண்டும்.

    சிலையின் உயரம் அதன் பீடம் மற்றும் அடித் தளத்துடன் சேர்த்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். மருத்துவமனை கள், கல்வி நிறுவனங்கள், பிற வழிபாட்டு தலங்கள் அருகில் சிலை வைப்பதை தவிர்க்க வேண்டும்.

    சிலை நிறுவப்பட்ட இடத்தில் அரசியல் கட்சி அல்லது ஜாதி தலை வர்களின் தட்டிபோர்டு கண்டிப்பாக வைப்பது தடை செய்யப் பட்டுள்ளது.

    சிலை நிறுவப்பட்ட இடத்தில் 24 மணி நேரமும் தொடர்புடைய அமைப்பைச் சார்ந்த 2 தன்னார்வ நபர்கள் பாதுகாப்புக்காக இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    நான்கு சக்கர வாக னங்களான மினி லாரி, டிராக்டர் மட்டுமே சிலை களை கரைக்க கொண்டு செல்லப் பயன்படுத்த வேண்டும்.

    விநாயகர் சிலை நிறு வப்பட்ட இடத்திலோ, கரைப்பதற்கு கொண்டு செல்லப்படும் ஊர்வ லத்திலோ, சிலையை கரைக்கும் இடத்திலோ கண்டிப்பாக பட்டாசுகள் வெடிப்பது தடை செய்யப் படுகின்றது.

    விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட பூ மற்றும் மாலைகள், துணிகள் அழகு சாதன பொருட்கள் கரைக்கப்படுவதற்கு முன்பு பிரிக்கப்பட வேண்டும்.

    விநாயகர் சிலை கரைப்பதற்கான ஊர்வலம் சிலைகள் கரைப்பதற்காக அறிவிக்கப்பட்ட இடத் துக்கு குறிப்பிடப்பட்ட நேரத்திற்குள் கொண்டு செல்லப்பட வேண்டும். சிலை கரைப்புக்கான ஊர்வ லம் காவல் துறையினர் வரையறுத்துக் கொடுத்த பாதை வழியாக மட்டுமே கொண்டு செல்லப்பட வேண்டும். சூரியன் மறை வதற்குள் (மாலை 6 மணிக்குள்) அனைத்து சிலை களும் (விஜர்சனம்) கரைக் கப்பட வேண்டும்.

    ஒலிப்பெருக்கி மற்றும் அனு மதிக்காக தடை யில்லா சான்று தொடர் புடைய போலீஸ் இன்ஸ் பெக்டரிடமிருந்து பெற வேண்டும். போலீசா ரால் தெரிவிக்கப்படும் விதிமுறைகளுக்குட்பட்டு ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்த வேண்டும். கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள் மற்றும் அதிக ஒலி எழுப்பும் ஒலி பெருக்கிகள் பயன்ப டுத்தக்கூடாது.

    விநாயகர் சிலைகள் ஏற்கனவே வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுவ வேண்டும். அனும திக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலை கள் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

    எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் கூடாரத்திலோ, சிலை அமைக்கும் இடத்திலோ இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சிலை வைக்கப்படுகின்ற பத்தலுக்குள் எளிதாக செல்லும் வகையில் உள்ளே செல்ல மற்றும் வெளியே வர விசாலமான பாதைகள் அமைக்கப்பட வேண்டும். கூரை அமைப்பதை தவிர்க்கப்பட வேண்டும்.

    களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும்

    தெர்மாகோல் (பாலிஸ்டி ரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டது மான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப் பான முறையில்கரைக்க அனுமதிக்கப்படும்.

    சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும் சிலைகளை பள பளப்பாக மாற்று வதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப் படலாம். ராசயன கல்வைகள் தவிர்க்கப்பட வேண்டும். ஒரு முறை பயன்ப டுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்ப டுத்த கண்டிப்பாக அனும திக்கப்படாது. நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்கள்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

    சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணை வண்ணப்பூச்சு களை கண்டிப்பாக பயன் படுத்தக்கூடாது, சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழ லுக்குகந்த, நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட் டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

    சிலைகள் வைக்க அனும திக்கப்பட்டுள்ள இடங்களில் வைக்கப்பட்டுள்ள அனைத்து சிலைகளின் தன்மைகளை ஆராய்ந்து அவை மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளுக்குட்பட்டிருப்பதை தொடர்புடைய அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதி செய்திட வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

    • விழுப்புரம் அருகே முட்டை ஏற்றி வந்த மினி லாரி மீது டிப்பர் லாரி மோதியது.
    • மினி லாரி கவிழ்ந்ததில் அருகில் இருந்த பெட்டிக்கடையின் மீது மோதியது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே சென்னை - கும்பகோணம் சாலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் பண்ருட்டியில் இருந்து விக்கிரவாண்டிக்கு முட்டை ஏற்றடி கொண்டு மினிலாரி ஒன்று வந்தது. இந்த லாரியை பண்ருட்டி சேர்ந்த வாலிபர் ஓட்டி வந்தார். இது கோலியனூர் அருகே கள்ளப்பட்டு பகுதிகள் மினி லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு டிரைவர் இயற்கை உபாதை கழிக்க சென்றார்.

    அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி ஒன்று மினி லாரியின் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் முட்டை ஏற்றி வந்த மினிலாரி அப்பளம் போல் நொறுங்கி கவிழ்ந்தது. இதில் வெண்ணிலா அருகில் இருந்த 10000 மதிப்புள்ள முட்டைகள் அனைத்தும் சேதமானது. மேலும் மினி லாரி கவிழ்ந்ததில் அருகில் இருந்த பெட்டிக்கடையின் மீது மோதியது. இதில் பெட்டி கடை முழுவதும் சேதமானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. தகவல் அறிந்த வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவிழ்ந்து கிடந்த மினி லாரியை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை
    • மணவாளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி அருகே கல்லடிவிளையை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் சிவகுமார் (வயது 32). மீன்பிடி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த டேவிட் ராஜா டேனியலுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அம்மாண்டிவிளையில் செல்லும்போது அங்கு வந்த மினி லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தனர்.அப்பகுதியினர் இருவரையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டேவிட் ராஜா டேனியல் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி கோடிமுனையை சேர்ந்த ஆன்றனிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ×