search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மினி லாரி, டிராக்டர்கள் மட்டும் ஊர்வலத்திற்கு அனுமதி
    X

    மினி லாரி, டிராக்டர்கள் மட்டும் ஊர்வலத்திற்கு அனுமதி

    • விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து தடையில்லா சான்று பெற வேண்டும்
    • கடும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

    நாகர்கோவில்:

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யவும், கரைக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    விநாயகர் சிலை அமைக்க உத்தேசித்துள்ள அமைப்பாளர் சிலை வைக்கப்படும் இடத்திற்கு தடையில்லா சான்று பெற்று உரிய படிவத்தில் (படிவம்-1) தொடர்புடைய சப்-கலெக்டர், கோட்டாட்சி யரிடம் உடனடியாக விண் ணப்பிக்கவேண்டும்.

    சிலை வைக்க உத்தே சிக்கப்பட்டுள்ள இடம் பொது நிலமாக இருந்தால் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, நெடுஞ்சாலைத் துறையிடமும், தனியார் இடமாக இருந்தால் நில உரிமையாளரிடமும் தடை யில்லா சான்று பெறப்பட வேண்டும்.

    தற்காலிக கூடாரம் தீ பாதுகாப்பு தர நிலையை கடைபிடிப்பதாக உள்ளது என்பதற்கு தடையில்லா சான்று தீயணைப்பு துறையிடம் பெற வேண் டும். மின் இணைப்பு வழங்கப்படுவதை குறிக்கும் கடிதம் மின்சார துறை யிடமிருந்து பெற வேண்டும்.

    சிலையின் உயரம் அதன் பீடம் மற்றும் அடித் தளத்துடன் சேர்த்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். மருத்துவமனை கள், கல்வி நிறுவனங்கள், பிற வழிபாட்டு தலங்கள் அருகில் சிலை வைப்பதை தவிர்க்க வேண்டும்.

    சிலை நிறுவப்பட்ட இடத்தில் அரசியல் கட்சி அல்லது ஜாதி தலை வர்களின் தட்டிபோர்டு கண்டிப்பாக வைப்பது தடை செய்யப் பட்டுள்ளது.

    சிலை நிறுவப்பட்ட இடத்தில் 24 மணி நேரமும் தொடர்புடைய அமைப்பைச் சார்ந்த 2 தன்னார்வ நபர்கள் பாதுகாப்புக்காக இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    நான்கு சக்கர வாக னங்களான மினி லாரி, டிராக்டர் மட்டுமே சிலை களை கரைக்க கொண்டு செல்லப் பயன்படுத்த வேண்டும்.

    விநாயகர் சிலை நிறு வப்பட்ட இடத்திலோ, கரைப்பதற்கு கொண்டு செல்லப்படும் ஊர்வ லத்திலோ, சிலையை கரைக்கும் இடத்திலோ கண்டிப்பாக பட்டாசுகள் வெடிப்பது தடை செய்யப் படுகின்றது.

    விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட பூ மற்றும் மாலைகள், துணிகள் அழகு சாதன பொருட்கள் கரைக்கப்படுவதற்கு முன்பு பிரிக்கப்பட வேண்டும்.

    விநாயகர் சிலை கரைப்பதற்கான ஊர்வலம் சிலைகள் கரைப்பதற்காக அறிவிக்கப்பட்ட இடத் துக்கு குறிப்பிடப்பட்ட நேரத்திற்குள் கொண்டு செல்லப்பட வேண்டும். சிலை கரைப்புக்கான ஊர்வ லம் காவல் துறையினர் வரையறுத்துக் கொடுத்த பாதை வழியாக மட்டுமே கொண்டு செல்லப்பட வேண்டும். சூரியன் மறை வதற்குள் (மாலை 6 மணிக்குள்) அனைத்து சிலை களும் (விஜர்சனம்) கரைக் கப்பட வேண்டும்.

    ஒலிப்பெருக்கி மற்றும் அனு மதிக்காக தடை யில்லா சான்று தொடர் புடைய போலீஸ் இன்ஸ் பெக்டரிடமிருந்து பெற வேண்டும். போலீசா ரால் தெரிவிக்கப்படும் விதிமுறைகளுக்குட்பட்டு ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்த வேண்டும். கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள் மற்றும் அதிக ஒலி எழுப்பும் ஒலி பெருக்கிகள் பயன்ப டுத்தக்கூடாது.

    விநாயகர் சிலைகள் ஏற்கனவே வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுவ வேண்டும். அனும திக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலை கள் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

    எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் கூடாரத்திலோ, சிலை அமைக்கும் இடத்திலோ இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சிலை வைக்கப்படுகின்ற பத்தலுக்குள் எளிதாக செல்லும் வகையில் உள்ளே செல்ல மற்றும் வெளியே வர விசாலமான பாதைகள் அமைக்கப்பட வேண்டும். கூரை அமைப்பதை தவிர்க்கப்பட வேண்டும்.

    களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும்

    தெர்மாகோல் (பாலிஸ்டி ரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டது மான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப் பான முறையில்கரைக்க அனுமதிக்கப்படும்.

    சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும் சிலைகளை பள பளப்பாக மாற்று வதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப் படலாம். ராசயன கல்வைகள் தவிர்க்கப்பட வேண்டும். ஒரு முறை பயன்ப டுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்ப டுத்த கண்டிப்பாக அனும திக்கப்படாது. நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்கள்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

    சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணை வண்ணப்பூச்சு களை கண்டிப்பாக பயன் படுத்தக்கூடாது, சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழ லுக்குகந்த, நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட் டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

    சிலைகள் வைக்க அனும திக்கப்பட்டுள்ள இடங்களில் வைக்கப்பட்டுள்ள அனைத்து சிலைகளின் தன்மைகளை ஆராய்ந்து அவை மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளுக்குட்பட்டிருப்பதை தொடர்புடைய அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதி செய்திட வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

    Next Story
    ×