search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாடுகள் விற்பனை"

    • பெருந்துறையை அடுத்த சீனாபுரத்தில் கால்நடை சந்தை நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்த சீனாபுரத்தில் கால்நடை சந்தை நடைபெற்றது. இந்த சந்தைக்கு தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், சேலம் மாவட்டம் முத்த நாயக்க ன்பட்டி, நாமக்கல் மாவட்டம் மோர்பாளையம் உள்பட பல்வேறு பகுதி களில் இருந்து விர்ஜின் கலப்பின பசு மாடுகள் 100-ம், அதன் கிடாரி கன்றுக்குட்டிகள் 120-ம் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.

    இதோபோல் சிந்து மற்றும் ஜெர்சி இன பசு மாடுகள் 120-ம் அதன் கிடாரி கன்றுக்குட்டிகள் 150-ம் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்து இருந்தனர். ,

    இதில் விர்ஜின் கலப்பின பசு மாடு ஒன்று ரூ.40 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரம் வரையும், அதன் கிடாரி கன்றுக் குட்டி ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ. 40ஆயிரம் வரையும் விற்பனை ஆனது.

    சிந்து மற்றும் ஜெர்சி இன பசு மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரையும், அதன் கிடாரி கன்றுக்குட்டி ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்பட்டது.

    சந்தையில் மாடுகள் மொத்தம் ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாக வியாபா ரிகள் தெரிவித்தனர். திருப்பூர், கோவை, ஈரோடு மற்றும் நீலகிரி உள்பட பல வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியா பாரிகள் வந்து மாடுகளை வாங்கி சென்றனர்.

    • சீனாபுரத்தில் மாட்டு சந்தை நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.80லட்சத்துக்கு மாடுகள் விற்பனையானது.

    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ள சீனாபுரத்தில் மாட்டு சந்தை நடைபெற்றது.

    இந்த சந்தைக்கு சேலம் மாவட்டம் முத்தநாயக்கன்பட்டி, நாமக்கல் மாவட்டம் மோர்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து விர்ஜின் கலப்பின கறவை மாடுகள் 70-ம், இதே இன கிடாரிக் கன்றுகள் 50-ம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன.

    இதேபோல் சிந்து மற்றும் ஜெர்சி கறவை மாடுகள் 60-ம், இதே இன கிடாரிகள் கன்றுகள் 100-ம் விற்பனைக்கு வந்திருந்தன. வழக்கத்தை விட மாடுகளின் வரத்து குறைந்திருந்ததால் விலையும் அதிகரித்து இருந்தது.

    சந்தையில் விர்ஜின் கலப்பின கறவை மாடு ஒன்று ரூ. 50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும், இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.35 ஆயிரம் முதல் ரூ. 52 ஆயிரம் வரையிலும் விற்றது.

    சிந்து மற்றும் ஜெர்சி கறவை மாடு ஒன்று ரூ.35 ஆயிரம் முதல் ரூ. 45 ஆயிரம் வரையிலும், இதே இன கிடாரிக் கன்று ஒன்று ரூ.12 ஆயிரம் முதல் ரூ.27 ஆயிரம் வரையிலும் விற்ப னை யானது.

    மொத்தம் ரூ.80லட்ச த்துக்கு மாடுகள் விற்பனையாகி இருக்கலாம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும், வியாபாரிகளும் மாடுகளை வாங்கி வாகனங்களில் கொண்டு சென்றனர்.

    • அமராவதி பாளையம் பகுதியில் வாரம் தோறும் திங்கள்கிழமை மாட்டு சந்தை நடைபெறும்
    • கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் வந்து இருந்தனர்.

    திருப்பூர் : 

    திருப்பூர் அமராவதி பாளையம் பகுதியில் வாரம் தோறும் திங்கள்கிழமை மாட்டு சந்தை நடைபெறும். அதன்படி இந்த வாரம் அமராவதி பாளையம் மாட்டு சந்தையில் 642 மாடுகள் 146 வாகனங்களில் கொண்டுவரப்பட்டது.மாடுகளை வாங்கவும் விற்கவும் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் வந்து இருந்தனர். மாட்டுசந்தையில் கறவை மாடுகள் ரூ.47 ஆயிரம் முதல் ரூ.56 ஆயிரம் வரை விற்பனை ஆனது. பசு கன்றுகள் ரூ.11 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை ஆனது.

    எருமை மாடுகள் ரூ.45 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை விற்பனை ஆனது. எருமை கன்றுகள் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது. மொத்தம் ரூ.5 கோடி ரூபாய்க்கு அமராவதி பாளையம் மாட்டு சந்தையில் விற்பனை நடைபெற்றது.

    • கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்து வருகிறது.
    • இன்று 90 சதவீதம் வியாபாரம் நடைபெற்றது.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி சோதனை சாவடி அருகே வாரந்தோறும் வியாழ–க்கிழமை மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்.

    இந்த சந்தைக்காக கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, நேபாளம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வருவது வழக்கம்.

    இதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வருவது வழக்கம். தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்து வருகிறது.

    இன்று நடந்த மாட்டு சந்தையில் 450 பசு மாடுகள், 200 எருமை மாடுகள், 50 வளர்ப்பு கன்றுகள் என மொத்தம் 700 மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. கடந்த வாரத்தை விட கூடுதலாக 50 மாடுகள் வந்துள்ளன.

    இன்று கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்திருந்தனர். பசுமாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ. 75 ஆயிரம் வரை விற்பனையானது.

    எருமை மாடு ஒன்று ரூ.30 முதல் 65 ஆயிரம் வரை விற்பனையானது. வளர்ப்பு கன்றுகள் 15 ஆயிரம் வரை விற்பனையானது. இன்று 90 சதவீதம் வியாபாரம் நடைபெற்றது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • ஊத்தங்கரை பேரூராட்சிக்குட்பட்ட மாட்டுசந்தை உள்ளது,
    • கேரளாவைச் சேர்ந்த மாட்டு வியாபாரிகள் அதிகளவில் இந்த வார சந்தைக்கு வந்திருந்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சிக்குட்பட்ட மாட்டுசந்தை உள்ளது, வாரத்தில் வெள்ளிக்கிழமை கூடும் இந்த சந்தைக்கு கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி ,வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும், அண்டை மாநிலம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மாநிலம் போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள், இங்கு வந்து மாடுகளை வாங்கிச்செல்வது வழக்கம். இந்த வாரம் கேரளாவைச் சேர்ந்த மாட்டு வியாபாரிகள் அதிகளவில் இந்த வார சந்தைக்கு வந்திருந்தனர்.

    கேரள வியாபாரிகள் வருகையால் உள்ளூரை சேர்ந்த விவசாயிகள் அதிகளவு மாடுகளை விற்பனை செய்தனர். சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாடுகள் இன்று விற்பனையாகியது.

    சந்தையில் பசு மாடுகளின் விலை சுமார் 30,000 முதல் 60,000 வரை விற்பனையான நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பசுமாடுகள் மற்றும் விவசாயிகள் வருகையால் சந்தை களைகட்டியது. வெளிமாநில விற்பனையாளர்கள் என சந்தையில் வியாபாரம் மொத்தம் சுமார் 2 கோடிக்கு மேல் விற்பனையானதால் தொடர்ந்து விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    அதேபோல பொங்கல் பண்டிகை என்பதால் மாடுகளுக்கு அழகு சேர்க்கும் விதமாக புதியதாக மாட்டுக் கயிறுகள், குஞ்சம், மணிக்கயிறுகள் உள்ளிட்டவை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர் .

    • நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளு க்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.
    • ரூ.81 ஆயிரத்துக்கு கன்றுக்கு ட்டியுடன் காங்கேயம் இன காரி-மயிலை வகைப் பசு விற்பனையானது.

    காங்கேயம் :

    காங்கயத்தை அடுத்துள்ள நத்தக்காடையூா் அருகே பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில், காங்கேயம் இன மாடுகள் ரூ.18 லட்சத்துக்கு விற்பனையானது. திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளு க்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.

    இங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 85 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 50 மாடுகள் மொத்தம் ரூ.18 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.81 ஆயிரத்துக்கு கன்றுக்கு ட்டியுடன் காங்கேயம் இன காரி-மயிலை வகைப் பசு விற்பனையானது.

    • புகழ் பெற்ற காங்கயம் இன காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.
    • 50 மாடுகள் ரூ.18 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

     காங்கயம்:

    நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் புகழ் பெற்ற காங்கயம் இன காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடைபெற்ற சந்தையில் விற்பனைக்காக 87 மாடுகள் கொண்டு வரப்பட்டன. இதில் 50 மாடுகள் ரூ.18 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. சந்தையில் திருப்பூர், ஈரோடு, திருச்சி, கரூர், கோவை, திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த காங்கயம் இன காளைகள், மாடுகள் வளர்க்கும் விவசாயிகள், வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தலை வாசல் அருகே வீரகனூரில் நேற்று ஆட்டுச்சந்தை கூடியது.
    • ரூ.87 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தலை வாசல் அருகே வீரகனூரில் நேற்று ஆட்டுச்சந்தை கூடியது. ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, தம்மம்பட்டி, பெரம்பலூர், சின்னசேலம் பகுதிகளில் இருந்து 1000 ஆடுகள், 400 மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    சேலம், நாமக்கல், திருச்சி மட்டுமின்றி கேரளா வியாபாரிகளும் பங்கேற்றனர். இதன் மூலம் ரூ. 60 லட்சத்துக்கு ஆடுகள், ரூ.27 லட்சத்துக்கு மாடுகள் என ரூ.87 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.

    • தீபாவளி பண்டிகை வருவதால் நேற்று விற்பனைக்கு ஏராளமான ஆடு, கோழிகள், மாடுகள் கொண்டு வரப்பட்டது.
    • இந்த வார சந்தையில் தீபாவளி யை யொட்டி ஆடு, கோழி, மாடுகள் ரூ.2 கோடி அளவுக்கு வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டியில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று ஆடு, கோழி, மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தை தமிழகத்தில் 2-வது பெரிய சந்தையாகும்.

    தற்போது புரட்டாசி மாதம் முடிந்து தீபாவளி பண்டிகை வருவதால் நேற்று விற்பனைக்கு ஏராளமான ஆடு, கோழிகள், மாடுகள் கொண்டு வரப்பட்டது.

    இதை வாங்க ஈரோடு, கோவை, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடு, கோழி, மாடுகளின் விலை உயர்ந்து காணப்பட்டது. இதில் 1000-க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள் ரூ.1 கோடிக்கு விற்பனையானது. இதேபோல் மாடுகளும் ரூ.1 கோடிக்கு விற்பனையானது. இன்று காலையும் ஆட்டுசந்தை நடந்தது.

    இதிலும் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டு ஆடுகளை வாங்கி சென்றனர். இந்த வார சந்தையில் தீபாவளி யை யொட்டி ஆடு, கோழி, மாடுகள் ரூ.2 கோடி அளவுக்கு வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • ஓணம் பண்டிகை முடிந்து இரண்டு வாரம் முடிந்த நிலையில் இந்த வாரம் கூடிய சந்தைக்கு காலை முதலே மாடு வரத்து அதிகமாக இருந்தது.
    • 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை விலை போனதால் மாடுகளை வாங்க வியாபாரிகள் - விவசாயிகளிடையே போட்டி நிலவியது.

    திருப்பூர்:

    திருப்பூர் கோவில்வழி அமராவதிபாளையத்தில் நடைபெறும் மாட்டுச்சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கேரளாவில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் மாடுகளை வாங்க, விற்க வருவர்.ஓணம் பண்டிகை முடிந்து இரண்டு வாரம் முடிந்த நிலையில் இந்த வாரம் கூடிய சந்தைக்கு காலை முதலே மாடு வரத்து அதிகமாக இருந்தது.

    கோவில்வழி - பெருந்தொழுவு சாலையில் 2 கி.மீ., தூரத்திற்கு மாடுகளுடன் ஆட்டோ, வேன்கள் அணிவகுத்து நின்றன. 810 மாடுகள் வந்ததால் மாலை, 4 மணி வரை சந்தை சுறுசுறுப்பாக நடந்தது.சிறிய ரக கன்றுக்குட்டிகள் 8,000 ரூபாய்க்கும், நல்ல தரமான முதல் ரக மாடுகள் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை விலை போனதால் மாடுகளை வாங்க வியாபாரிகள் - விவசாயிகளிடையே போட்டி நிலவியது.

    இது குறித்து மாட்டுச்சந்தை ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், மாடுகளை வாங்கி இருப்பு வைத்துக் கொள்ள கேரளா வியாபாரிகள் முன்வருவதால் அதிக அளவில் வியாபாரிகள் வந்திருந்தனர்.6 மாதத்துக்கு பின் தற்போது தான் 800 மாடு வந்தது. ஒரே நாளில் 1.10 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது என்றனர்.

    • தென்னிந்தியாவில் மிகப்பெரிய கால்நடை சந்தையாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்ளது.
    • நாட்டு காளை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும், நாட்டு பசு ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும் விற்பனையானது.

    பொள்ளாச்சி:

    தென்னிந்தியாவில் மிகப்பெரிய கால்நடை சந்தையாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்ளது.

    இந்த சந்தையானது வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகள் என 2 நாட்கள் நடக்கும். செவ்வாய்க்கிழமைகளில் மாடு விற்பனையும், வியாழக்கிழமை, ஆடு, மாடு விற்பனையும் சேர்ந்து நடைபெறுகிறது.

    இந்த சந்தையில் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு வரும்.மேலும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு வருகின்றன.

    கடந்த மாதம் சில மாதங்களாக சந்தை நாட்களில் ஒரு கோடி மட்டுமே வர்த்தகம் நடைபெற்று வந்தது.தற்போது வருகிற 10-ந் தேதி பக்ரீத் பண்டிகை வருவதையொட்டி நேற்று பொள்ளாச்சி மாட்டு சந்தை களை கட்டி இருந்தது.

    வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து 3500க்கும் மேற்பட்ட மாடு மற்றும் எருமைகள் கொண்டு வரப்பட்டிருந்தது. அதனை வாங்குவதற்காக கேரளா உள்பட பல்வேறு பகுதிகளில் 350க்கும் மேற்பட்ட வியாபாரிகளும் வந்திருந்தனர்.இதனால் காலை முதலே சந்தை களை கட்டி இருந்தது. மழை பெய்து கொண்டு இருந்தாலும் விற்பனை விறு, விறுப்பாக நடைபெற்றது.

    நேற்று ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக நாட்டு காளை ஒன்று ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை விற்பனையானது.இதுகுறித்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் செல்வராஜ் கூறியதாவது:-பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து 3,500 மாடுகள் கொண்டு வரப்பட்டன. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வியாபாரம் விறு, விறுப்பான நடைபெற்றது.

    நாட்டு காளை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும், நாட்டு பசு ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும் விற்பனையானது.

    நாட்டு எருமை ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும், முராரக எருமை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும், ஜெர்சி ரக பசு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும், ஜெர்சி எச்.எப் ரக பசு ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும் விற்பனையானது. நேற்று மொத்தமாக ரூ.5 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.3 கோடி அதிகமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×