search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sale of cows"

    • மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 69 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
    • அதிகபட்சமாக ரூ.78 ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலை வகை பசு விற்பனையானது.

    காங்கயம் :

    திருப்பூா் மாவட்டம் காங்கயம் அருகே நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 69 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.இதில் 40 மாடுகள் மொத்தம் ரூ.16 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.78 ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலை வகை பசு விற்பனையானது.

    • நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளு க்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.
    • ரூ.81 ஆயிரத்துக்கு கன்றுக்கு ட்டியுடன் காங்கேயம் இன காரி-மயிலை வகைப் பசு விற்பனையானது.

    காங்கேயம் :

    காங்கயத்தை அடுத்துள்ள நத்தக்காடையூா் அருகே பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில், காங்கேயம் இன மாடுகள் ரூ.18 லட்சத்துக்கு விற்பனையானது. திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளு க்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.

    இங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 85 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 50 மாடுகள் மொத்தம் ரூ.18 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.81 ஆயிரத்துக்கு கன்றுக்கு ட்டியுடன் காங்கேயம் இன காரி-மயிலை வகைப் பசு விற்பனையானது.

    • புகழ் பெற்ற காங்கயம் இன காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.
    • 50 மாடுகள் ரூ.18 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

     காங்கயம்:

    நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் புகழ் பெற்ற காங்கயம் இன காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடைபெற்ற சந்தையில் விற்பனைக்காக 87 மாடுகள் கொண்டு வரப்பட்டன. இதில் 50 மாடுகள் ரூ.18 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. சந்தையில் திருப்பூர், ஈரோடு, திருச்சி, கரூர், கோவை, திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த காங்கயம் இன காளைகள், மாடுகள் வளர்க்கும் விவசாயிகள், வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஓணம் பண்டிகை முடிந்து இரண்டு வாரம் முடிந்த நிலையில் இந்த வாரம் கூடிய சந்தைக்கு காலை முதலே மாடு வரத்து அதிகமாக இருந்தது.
    • 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை விலை போனதால் மாடுகளை வாங்க வியாபாரிகள் - விவசாயிகளிடையே போட்டி நிலவியது.

    திருப்பூர்:

    திருப்பூர் கோவில்வழி அமராவதிபாளையத்தில் நடைபெறும் மாட்டுச்சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கேரளாவில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் மாடுகளை வாங்க, விற்க வருவர்.ஓணம் பண்டிகை முடிந்து இரண்டு வாரம் முடிந்த நிலையில் இந்த வாரம் கூடிய சந்தைக்கு காலை முதலே மாடு வரத்து அதிகமாக இருந்தது.

    கோவில்வழி - பெருந்தொழுவு சாலையில் 2 கி.மீ., தூரத்திற்கு மாடுகளுடன் ஆட்டோ, வேன்கள் அணிவகுத்து நின்றன. 810 மாடுகள் வந்ததால் மாலை, 4 மணி வரை சந்தை சுறுசுறுப்பாக நடந்தது.சிறிய ரக கன்றுக்குட்டிகள் 8,000 ரூபாய்க்கும், நல்ல தரமான முதல் ரக மாடுகள் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை விலை போனதால் மாடுகளை வாங்க வியாபாரிகள் - விவசாயிகளிடையே போட்டி நிலவியது.

    இது குறித்து மாட்டுச்சந்தை ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், மாடுகளை வாங்கி இருப்பு வைத்துக் கொள்ள கேரளா வியாபாரிகள் முன்வருவதால் அதிக அளவில் வியாபாரிகள் வந்திருந்தனர்.6 மாதத்துக்கு பின் தற்போது தான் 800 மாடு வந்தது. ஒரே நாளில் 1.10 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது என்றனர்.

    ×