பழையகோட்டை சந்தையில் ரூ.18 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை

புகழ் பெற்ற காங்கயம் இன காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.50 மாடுகள் ரூ.18 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

 காங்கயம்:

நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் புகழ் பெற்ற காங்கயம் இன காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடைபெற்ற சந்தையில் விற்பனைக்காக 87 மாடுகள் கொண்டு வரப்பட்டன. இதில் 50 மாடுகள் ரூ.18 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. சந்தையில் திருப்பூர், ஈரோடு, திருச்சி, கரூர், கோவை, திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த காங்கயம் இன காளைகள், மாடுகள் வளர்க்கும் விவசாயிகள், வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com