search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ கழிவுகள்"

    • கனரக லாரிகளில் கொண்டு வரப்படும் கழிவுகள் மறை முகமாக கொட்டப்பட்டு வருகின்றன.
    • கழிவுகள் மீது தீ வைப்பதால் அருகில் இருக்கும் தென்னை மரங்கள் கருகி உள்ளன.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அடுத்து உள்ள பெத்த நாடார்பட்டி கிராமத்தில் இருந்து செல்லதாயார்புரம் கிராமத்திற்கு செல்லும் சாலை ஓரம் அமைந்துள்ள விவசாய நிலங்களில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவ மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை மர்ம நபர்கள் டன் கணக்கில் கொட்டி சென்றுள்ளனர்.

    விவசாயிகளுக்கு தெரியாமல் இரவில் கனரக லாரிகளில் கொண்டு வரப்படும் கழிவுகள் மறை முகமாக கொட்டப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி கழிவுகள் மீது அவ்வப்போது தீ வைத்து எரித்து விடுகின்றனர்.

    இதனால் அருகில் இருக்கும் தென்னை மரங்கள் கருகி உள்ளன. பொதுமக்களுக்கும் சுவாச கோளாறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே பெத்தநாடார்பட்டி அருகே விவசாய நிலத்தின் அருகே டன் கணக்கில் கொட்டப்பட்டுள்ள கேரள கழிவுகளை உடனடியாக அகற்றவும், அதனை தமிழக பகுதியில் கொட்டி வரும் கனரக லாரி ஓட்டுனர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிகிச்சைக்காக பயன்னடுத்தபட்ட ஊசிகள், சிரஞ்சுகளை கொட்டி விட்டு சென்றுள்ளனர்.
    • கால்நடைகளுக்கும் சுகாதார சீர்கேட்டால் நோய் தொற்று ஏற்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டாரத்துக்கு உட்பட்ட பாளையம்புதூர் ஊராட்சியில் அரசு கால்நடை மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த கிராம சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் ஆடு, மாடுகள், எருமைகள் மற்றும் கோழிகள் வீட்டில் செல்ல பிராணியாக வளர்க்கப்படும் நாய்கள் உள்ளிட்டவற்றுக்கு சிகிச்சைக்காக தினம் தோறும் இந்த மருத்துவமனையை நாடி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக பயன்னடுத்தபட்ட ஊசிகள், சிரஞ்சுகள், பிளாஸ்டிக் கையுறைகள், மருந்து பாட்டில்கள் உள்ளிட்டவை சுகாதாரமற்ற முறையில் அப்புறப்படுத்தாமல் மருத்துவமனை வளாகத்தை சுற்றிலும் திறந்தவெளியில் அப்படியே கொட்டி விட்டு சென்றுள்ளனர்.

    இதனால் அங்கு நோய்வாய் உற்ற கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டு அவற்றிற்காக பயன்படுத்தப்பட்ட சிரஞ்களும் பிளாஸ்டிக் கையுறைகளும் அப்படியே வெளியே வீசப்பட்டுள்ளதால் அதிலிருந்து அருகில் இருக்கும் கால்நடைகளுக்கும், மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகளுக்கும் சுகாதார சீர்கேட்டால் நோய் தொற்று ஏற்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கால்நடைகளுக்கு சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் அனைத்து மருத்துவ கழிவுகளும் முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கழிவுகளை இரவு நேரங்களில் தினமும் மூட்டை மூட்டையாக சிலர் எடுத்து சாலையோரங்களில் வீசி செல்கிறார்கள்.
    • மர்ம நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி உள்பட்ட பகுதிகளில் தனியார் மருத்துவமனைகள், கோழி, ஆடு, இறைச்சி கடைகள், மற்றும் முடி திருத்தும் கடைகளில் இருந்து வெளியாகும் கழிவுகளை இரவு நேரங்களில் தினமும் மூட்டை மூட்டையாக சிலர் எடுத்து சாலையோரங்களில் வீசி செல்கிறார்கள். இதனால் மர்ம நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

    இதனை சம்மந்தபட்ட ஊராட்சி நிர்வாகிகள் அதிகாரிகள் உடனடியாக இவர்கள் மேல் நடவடிக்கை எடுத்து கழிவுகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களின் வழியே தான் இந்த கழிவுகள் தமிழகத்தை சென்றடைகிறது.
    • கடமை தவறும் அனைத்து தமிழக அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசு மற்றும் முதலமைச்சரின் கடமை மற்றும் பொறுப்பு.

    சென்னை:

    பா.ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தூய்மையில் கேரளா முதலிடம் வகிப்பதாகவும், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அபராதம் விதிக்காத ஒரே மாநிலம் கேரளா என்றும், கழிவு மேலாண்மைத் துறையில் கேரளா குறிப்பிடத்தக்க தலையீடுகளை செய்துள்ளது என்றும் பசுமைத் தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது என்று பெருமையாக மார்தட்டி கொண்டு சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

    ஆனால், மருத்துவ கழிவுகள், மின்னனு கழிவுகள் உள்ளிட்ட அனைத்து கழிவுகளையும் லாரிகளில் எடுத்து சென்று அண்டை மாநிலமான நம் தமிழகத்தின் எல்லையோர கிராமங்களில் குறிப்பாக நீர்நிலைகளில் கொட்டி 'கேரளாவின் குப்பைத் தொட்டியாக' தமிழகத்தை மாற்றி கொண்டிருக்கிறது என்பதே உண்மை. இதனால், சுற்றுப்புற சூழலுக்கு கேட்டை விளைவிப்பதோடு தமிழர்களின் உயிரோடு விளையாடி கொண்டிருக்கிறது கேரள அரசு இந்த ஆபத்தான விளையாட்டை அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது தமிழக அரசு.

    கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களின் வழியே தான் இந்த கழிவுகள் தமிழகத்தை சென்றடைகிறது. ஆனால், இந்த மாவட்ட எல்லைகளில் அமைந்துள்ள உள்ள போக்குவரத்து மற்றும் காவல்துறை சோதனை சாவடிகளில் உள்ள அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பது தான் பிரச்சினையின் துவக்கம். மேலும், இந்த கழிவுகளை கொட்டி விட்டு சென்ற பிறகு இதை எரித்து அழிப்பது யார்? அந்தந்த ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் இந்த கழிவுகள் குறித்து ஏன் குரல் எழுப்புவதில்லை என்பது புரியாத மர்மமாகவே உள்ளது.

    இனியும் அமைதி காக்காமல், தமிழகத்தின் சுற்றுப்புற சூழலை அழிக்கும் கேரள அரசை கண்டிப்பதோடு, கடமை தவறும் அனைத்து தமிழக அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசு மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடமை மற்றும் பொறுப்பு ஆகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உள்ளாட்சி அமைப்புகளுக்கு கலெக்டர் உத்தரவு
    • தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் 18004256750 என்கிற எண்ணில் தொலைபேசி வாயிலாக தெரிவிக்கலாம்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட அள விலான மருத்துவ கழிவுகள் மேலாண்மை குழு வின் முதல் கூட்டம் கலெக்டர் அரவிந்த் தலை மையில் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசிய தாவது:-

    மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை நிலையங்கள் உயிர் மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகள் - 2016-ல் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும். அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை நிலையங்கள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உரிய இசை வாணை மற்றும் அங்கீகாரம் பெறுதல் வேண்டும் .

    மாவட்டத்தில் உருவாகும் அனைத்து மருத்துவக் கழிவுகளையும் முறையாக சேகரித்து திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பாப்பான்குளம் கிராமத்தில் இயங்கும் பொது உயிர் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு மற்றும் அகற்றும் நிறுவனம் மூலம் அப்புறப்படுத்த வேண்டும்.

    மருத்துவக் கழிவுகளைக் கையாளும் மருத்துவப் பணியாளர்களுக்கு மருத்துவக் கழிவுகளை கையாளும் முறை குறித்து சுழற்சி முறையில் பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும்.

    பொதுக்கழிவுகளுடன் மருத்துவக்கழிவுகள் கலக்கப்படாமல் இருப்பதை உள்ளாட்சி அமைப்புகள் தொடர்ந்து கண்காணித்தல் வேண்டும்.மருத்துவக்கழிவுகள் பொது உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு மற்றும் அகற்றும் நிறுவனம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்கள் மூலம் மட்டுமே எடுத்துச் செல்வதையும் பிற வாகனங்களில் எடுத்துச் செல்லாமல் இருப்பதையும் போலீசார் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மருத்துவக் கழிவுகள் கையாளுதல் குறித்த புகார்களுக்கு பொது மக்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் 18004256750 என்கிற எண்ணில் தொலைபேசி வாயிலாக தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

    கேரள மாநிலத்திலிருந்து மருத்துவக் கழிவுகள் வாகனங்களில் வராதவாறு உறுதி செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சோதனை சாவடிகளில் கண்காணிக்கவும், கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் வட்டார போக்கு வரத்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பாண்டிய ராஜன், மருத்துவம் மற்றும் சுகாதார அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ×