search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையோரம் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடு
    X

    மருத்துவமனை வளாகத்தின் அருகே கொட்டபட்டுள்ள சிரஞ்சுகள், பிளாஸ்டிக் கையுறைகள், மருந்து பாட்டில்கள்களை படத்தில் காணலாம்.    

    சாலையோரம் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடு

    • சிகிச்சைக்காக பயன்னடுத்தபட்ட ஊசிகள், சிரஞ்சுகளை கொட்டி விட்டு சென்றுள்ளனர்.
    • கால்நடைகளுக்கும் சுகாதார சீர்கேட்டால் நோய் தொற்று ஏற்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டாரத்துக்கு உட்பட்ட பாளையம்புதூர் ஊராட்சியில் அரசு கால்நடை மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த கிராம சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் ஆடு, மாடுகள், எருமைகள் மற்றும் கோழிகள் வீட்டில் செல்ல பிராணியாக வளர்க்கப்படும் நாய்கள் உள்ளிட்டவற்றுக்கு சிகிச்சைக்காக தினம் தோறும் இந்த மருத்துவமனையை நாடி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக பயன்னடுத்தபட்ட ஊசிகள், சிரஞ்சுகள், பிளாஸ்டிக் கையுறைகள், மருந்து பாட்டில்கள் உள்ளிட்டவை சுகாதாரமற்ற முறையில் அப்புறப்படுத்தாமல் மருத்துவமனை வளாகத்தை சுற்றிலும் திறந்தவெளியில் அப்படியே கொட்டி விட்டு சென்றுள்ளனர்.

    இதனால் அங்கு நோய்வாய் உற்ற கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டு அவற்றிற்காக பயன்படுத்தப்பட்ட சிரஞ்களும் பிளாஸ்டிக் கையுறைகளும் அப்படியே வெளியே வீசப்பட்டுள்ளதால் அதிலிருந்து அருகில் இருக்கும் கால்நடைகளுக்கும், மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகளுக்கும் சுகாதார சீர்கேட்டால் நோய் தொற்று ஏற்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கால்நடைகளுக்கு சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் அனைத்து மருத்துவ கழிவுகளும் முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×