search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது விற்றவர்"

    • போலீசார் அவரை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது மது பாட்டில்களை பதுக்கி விற்பது தெரியவந்தது.
    • அவரிடம் இருந்து 37 மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டன.

    நாகர்கோவில் :

    வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்சிங் தலைமையிலான போலீசார் நாடான்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர், போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது மது பாட்டில்களை பதுக்கி விற்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 37 மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர் வாத்தியார்விளை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 42) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சோதனை செய்தனர்.
    • 144 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அவினாசி :

    திருப்மாவட்டம் அவினாசி ஒன்றியத்திற்குட்பட்ட ராமநாதபுரம் ஊராட்சிகிருஷ்ணாபுரம் பகுதியில் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூர் மாநகராட்சிக்கு செல்லும் இரண்டாவது திட்ட குடிநீர் குழாயின் குழாய் உடைந்து நீர்வீழ்ச்சி போல தண்ணீர் பீறிட்டு வெளியேறியது .

    சில நாட்களாக சிறிதளவு தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று திடீரென்று நீர்வீழ்ச்சி போல தண்ணீர் 7 அடி உயரத்திற்கு அடித்தது . பள்ளி மாணவர்கள் அந்த செயற்கை நீர்வீழ்ச்சியில் விளையாடினர்.தண்ணீர் வீணாவதை தடுக்க குடிநீர் வடிகால் வாரியத்தினர் உடனடியாக உடைந்த குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர்
    • மது விற்ற ரூ.850-ஐ போலீசார் பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்தனர்.

    கன்னியாகுமரி :

    புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் அனுமதியின்றி அதிக விலைக்கு மது விற்பனை நடப்பதாக புகார் எழுந்தது. புகாரின் பேரில் புதுக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். காப்புக்காடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கிடமாக நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது உரிய அனுமதி இல்லாத 21 பாட்டில் மதுபானம் காணப்பட்டது. இதை அதிக விலைக்கு விற்க வைத்திருப்பது தெரிய வந்தது.

    தொடர்ந்து வாகனம் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். இதில் அவர் அதே பகுதி கண்ணம்விளாகத்தை சேர்ந்த கிருஷ்ணராஜன் (வயது 55) என தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து மது விற்ற ரூ.850-ஐ போலீசார் பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்தனர்.

    • டி.ஜி.புதூர் டாஸ்மாக் கடை அருகே ஒருவர் மது விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
    • போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள பங்களாபுதூர், டி.ஜி.புதூர் பகுதியில் பங்களாபுதூர் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது டி.ஜி.புதூர் டாஸ்மாக் கடை அருகே உள்ள பள்ளத்தில் ஒருவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் டி.ஜி.புதூர் பங்களாமேடு பகுதியை சேர்ந்த பெருமாள் (36) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 51 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    • அரசால் தடை செய்யப்பட்ட கர்நாடக மாநில மது பாக்கெட்களை அங்கிருந்து கடத்தி வந்து சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
    • இது குறித்து தாளவாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, சோமுவை கைது செய்தனர்.

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம், தாளவாடி – ஆசனூர் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை பின்புறம், கர்நாடக மாநில மதுவை கடத்தி வந்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாக தாளவாடி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

    அதன்பேரில், அங்கு சென்ற தாளவாடி போலீசார்,அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த நபர் ஒருவரைப் பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர், அரசால் தடை செய்யப்பட்ட கர்நாடக மாநில மது பாக்கெட்களை அங்கிருந்து கடத்தி வந்து சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    விசாரணையில் அவர், ஆசனூர், ஓங்கல்வாடி பகுதியைச் சேர்ந்த சோமு (40) என்பது தெரியவந்தது. இது குறித்து தாளவாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, சோமுவை கைது செய்தனர்.

    • மதுபானம் விற்பனை குறித்து இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டு வந்தனர்.
    • 5 லிட்டர் வீதம் மொத்தம் 15 லிட்டர் கள்ளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்,சட்டவிரோதமாக கள் மற்றும் மதுபானம் விற்பனை குறித்து இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டு வந்தனர்.

    அப்போது காட்டூர் வெள்ளநத்தத்தை சேர்ந்த பழனிசாமி (வயது 53), காட்டூரை சேர்ந்த சங்கர் (35), குள்ளம்பாளையத்தை சேர்ந்த குமரேசன்( 30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து தலா5 லிட்டர் வீதம் மொத்தம் 15 லிட்டர் கள்ளை போலீசார் பறிமுதல் செய்தனர்.அதுபோல் அனுமதியின்றி மதுவிற்ற கேத்தனூரை சேர்ந்த கோபி(42) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர். 

    • வெள்ளகோவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
    • 110 மது பாட்டில்கள் 10 பீர் பாட்டில்கள் பறிமுதல்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் நகர் பகுதியில் வெள்ளகோவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது கோயம்புத்தூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் அருகே விற்பனைக்காக மது பாட்டில்களை வைத்திருந்த திண்டுக்கல் மாவட்டம், சிலுவத்தூர் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் பாண்டியன் (வயது 43) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 110 மது பாட்டில்கள் 10 பீர் பாட்டில்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

    • அரசு மது பாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த சின்ன மாரப்பன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • மேலும் சின்ன மாரப்பன் வைத்திருந்த 60 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் குமரன் கோவில் ரோடு பள்ளத்துமேடு அருகே பங்களாப்புதூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அங்கே அரசு மது பாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த பெரிய கொடிவேரி வேட்டுவனபுதூர் பகுதியை சேர்ந்த சின்ன மாரப்பன் (58) என்பவரை போலீசார் பிடித்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் சின்ன மாரப்பன் வைத்திருந்த 60 மதுபான பாட்டில்கள் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய மொபட்டையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×