பல்லடம் அருகே மது விற்ற 4பேர் கைது

மதுபானம் விற்பனை குறித்து இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டு வந்தனர். 5 லிட்டர் வீதம் மொத்தம் 15 லிட்டர் கள்ளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பல்லடம் அருகே மது விற்ற  4பேர்  கைது
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்,சட்டவிரோதமாக கள் மற்றும் மதுபானம் விற்பனை குறித்து இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது காட்டூர் வெள்ளநத்தத்தை சேர்ந்த பழனிசாமி (வயது 53), காட்டூரை சேர்ந்த சங்கர் (35), குள்ளம்பாளையத்தை சேர்ந்த குமரேசன்( 30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து தலா5 லிட்டர் வீதம் மொத்தம் 15 லிட்டர் கள்ளை போலீசார் பறிமுதல் செய்தனர்.அதுபோல் அனுமதியின்றி மதுவிற்ற கேத்தனூரை சேர்ந்த கோபி(42) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com