மது விற்றவர் கைது

அரசு மது பாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த சின்ன மாரப்பன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.மேலும் சின்ன மாரப்பன் வைத்திருந்த 60 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மது விற்றவர் கைது
Published on

டி.என்.பாளையம்:

டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் குமரன் கோவில் ரோடு பள்ளத்துமேடு அருகே பங்களாப்புதூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அங்கே அரசு மது பாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த பெரிய கொடிவேரி வேட்டுவனபுதூர் பகுதியை சேர்ந்த சின்ன மாரப்பன் (58) என்பவரை போலீசார் பிடித்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் சின்ன மாரப்பன் வைத்திருந்த 60 மதுபான பாட்டில்கள் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய மொபட்டையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com