வெள்ளகோவிலில் மது விற்றவர் கைது

வெள்ளகோவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.110 மது பாட்டில்கள் 10 பீர் பாட்டில்கள் பறிமுதல்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் நகர் பகுதியில் வெள்ளகோவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது கோயம்புத்தூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் அருகே விற்பனைக்காக மது பாட்டில்களை வைத்திருந்த திண்டுக்கல் மாவட்டம், சிலுவத்தூர் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் பாண்டியன் (வயது 43) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 110 மது பாட்டில்கள் 10 பீர் பாட்டில்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com