search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போர் பயிற்சி"

    • அமெரிக்கா, தென்கொரியா படைகள் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
    • வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது.

    பியாங்யாங் :

    வடகொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கொரிய எல்லையில் தொடர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது. ஆனால் அமெரிக்கா மற்றும் தென்கொரியா இதனை பொருட்படுத்தாமல் கூட்டுப்போர் பயிற்சியை தொடர்ந்து வருகின்றன.

    அந்த வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் விமானப்படைகள் மிகப்பெரிய கூட்டுப்பயிற்சியை நேற்று முன்தினம் தொடங்கின. இருநாட்டு விமானப்படைகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான விமானங்கள் 24 மணி நேரமும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

    இந்த நிலையில் தென்கொரியாவுடனான கூட்டுப்போர் பயிற்சியை நிறுத்தாவிட்டால் அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து வடகொரியா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்கா தனது பாதுகாப்பு நலன்களுக்குப் பொருந்தாத எந்தவொரு தீவிரமான முன்னேற்றங்களையும் விரும்பவில்லை என்றால், அது பயனற்ற போர் பயிற்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லை என்றால், அது அனைத்து விளைவுகளுக்கும் முற்றிலும் பழியை ஏற்க வேண்டியிருக்கும். கடுமையான ராணுவ ஆத்திரமூட்டல்களில் அமெரிக்கா தொடர்ந்து நீடித்தால் வடகொரியா மிகவும் கடுமையான பதிலடி நடவடிக்கைகளை கையில் எடுக்கும்" என கூறப்பட்டுள்ளது.

    • சீனாவின் 'யுவான் வாங்-5' உளவு கப்பல் இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
    • பாகிஸ்தானின் பி.என்.எஸ். தைமூர் என்ற போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது.

    கொழும்பு :

    இந்தியாவின் எதிர்ப்புக்கு மத்தியில், சீனாவின் 'யுவான் வாங்-5' உளவு கப்பலை இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்த, அந்த நாட்டு அரசு அனுமதி அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் சீனாவில் கட்டப்பட்ட பாகிஸ்தானின் பி.என்.எஸ். தைமூர் என்ற போர்க்கப்பல் கடந்த வெள்ளிக்கிழமையன்று கொழும்பு துறைமுகத்துக்கு வந்து சேர்ந்துள்ளது. இந்த நிலையில் இலங்கை கடற்படையும், பாகிஸ்தான் கடற்படையும் கூட்டு போர்ப்பயிற்சி நடத்தப்போவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    இதை இலங்கை கடற்படை தவறான தகவல் என கூறி திட்டவட்டமாக மறுத்துள்ளது. வங்காளதேசத்தின் சட்டகிராம் துறைமுகத்தில் பாகிஸ்தானின் போர்க்கப்பலை நிறுத்த அந்த நாட்டின் அரசு அனுமதி மறுத்ததால், பாகிஸ்தான் கடற்படையில் இணையும் வழியில் கொழும்பு துறைமுகத்தில் அதை நிறுத்த இலங்கை அனுமதித்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ரஷியாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் பயங்கரவாத ஒழிப்பு போர் பயிற்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற கைப்பந்து போட்டியில் பாக். ராணுவத்தை வீழ்த்தி இந்திய ராணுவம் வெற்றி பெற்றது.
    புதுடெல்லி :

    பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் ஆகிய மூன்று தீமைகளை எதிர்த்து போராடுவதை முக்கிய நோக்கமாக கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சமீபத்தில் சீனாவில் நடைபெற்றது.  

    பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில், இந்த அமைப்பில் உறுபினர்களாக உள்ள நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஏற்பாடு செய்துள்ள பயங்கரவாத ஒழிப்பு போர் பயிற்சி ரஷியாவில் கடந்த 22-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த மெகா பயங்கரவாத ஒழிப்பு பயிற்சியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள ரஷியா, சீனா, கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன.

    மேலும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் கடந்த ஆண்டு புதிய உறுப்பினர்களாக இணைந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் ராணுவ வீரர்கள் இந்த பயங்கரவாத ஒழிப்பு போர் பயிற்சியில் பங்கேற்றனர்.

    இந்த போர் பயிற்சியின் ஒரு பகுதியாக உறுப்பு நாடுகளின் ராணுவ வீரர்கள் பங்கேற்கும் கைப்பந்து போட்டி, கை மல்யுத்தம், நீச்சல் போட்டி உள்பட பல விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

    இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் ராணுவ வீரர்கள் பங்கேற்ற கைப்பந்து போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 3 - 0 எனும் கணக்கில் பாகிஸ்தான் ராணுவத்தை வீழ்த்தி இந்திய ராணுவம் வெற்றி பெற்றது.

    விருவிருப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய ராணுவத்துக்கு ஆதராவாக ரஷிய ராணுவ வீரர்களும், பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக சீன ராணுவ விரர்களும் விளையாட்டில் ஆதரவளித்து வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

    இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த பாதுகாப்புப்படை வீரர்கள் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 
    அமெரிக்காவில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு போர் பயிற்சி அளித்துவரும் திட்டத்துக்கு டிரம்ப் அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #UScutsmilitarytraining #UScutstrainingprog
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவ கூட்டாளியாக இந்தியாவை அமெரிக்க அரசு கடந்த 2016-ம் ஆண்டில் அறிவித்தது.

    இந்நிலையில், அந்நாட்டின் தேசிய பாதுகாப்புத்துறை அங்கீகார மசோதாவுக்கு(2019) ஒப்புதல் அளிக்க அமெரிக்க பாராளுமன்ற மேல்சபையில் கடந்த 18-6-2018 அன்று வாக்கெடுப்பு நடந்தது. 71 ஆயிரத்து 600 கோடி டாலர்கள் மதிப்பிலான இந்த மசோதாவை ஆதரித்து 85 உறுப்பினர்களும், எதிராக 10 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

    பாராளுமன்ற காங்கிரஸ் சபையிலும் இரு சபைகளின் கூட்டுக் குழுவிலும் ஒப்புதல் பெற்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டதும் சட்டவடிவம் பெறும் இந்த மசோதாவில் அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவ கூட்டாளியான இந்தியாவுடனான ராணுவ உறவுகளை பலப்படுத்தும் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

    இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாகிஸ்தான் அரசுக்கு அளித்துவந்த உள்நாட்டு பாதுகாப்பு நிதியை ரத்து செய்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்தார்.

    எனினும், அமெரிக்க அரசின் சார்பில் நடத்தப்படும் சர்வதேச ராணுவ பயிற்சி பள்ளியில் பாகிஸ்தானை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு போர் பயிற்சி அளிக்கும் திட்டம் கைவிடப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அமெரிக்காவில் கடந்த 1960-ம் ஆண்டில் இருந்து இயங்கிவரும் இந்த சர்வதேச ராணுவ பயிற்சி பள்ளியில் வழக்கமாக ஆள்சேர்ப்பின்போது பாகிஸ்தானை சேர்ந்த 66 வீரர்களுக்கு இடம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அடுத்த ஆண்டில் நடைபெறும் ஆள்சேர்ப்பில் பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு நிதி அளிக்க டிரம்ப் அரசு மறுத்து விட்டதாக தெரியவந்துள்ளது.

    பாகிஸ்தானுக்கு முன்னர் ஒதுக்கப்பட்ட 66 இடங்களை வேறு நாட்டினருக்கு வழங்க அமெரிக்க ராணுவ தலைமையக அதிகாரிகள் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பாகிஸ்தான் நாட்டின் பிரபல நாளிதழும் உறுதிப்படுத்தியுள்ளது. 

    பாகிஸ்தான் முன்னாள் ராணுவ தளபதியும், அதிபருமான பர்வேஸ் முஷரப், பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. தலைவர் நவீத் முக்தார் உள்ளிட்ட பலர் அமெரிக்க அரசின் சார்பில் நடத்தப்படும் இந்த சர்வதேச ராணுவ பயிற்சி பள்ளியின் முன்னாள் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #UScutsmilitarytraining #UScutstrainingprog 
    ×