search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போயிங் விமானம்"

    • விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானத்தை தரை இறக்குவதற்கான தகவல் விமானிகளுக்கு அனுப்பப்பட்டது.
    • அந்த அழைப்பை விமானிகள் இருவரும் எடுத்து பேசவில்லை. பல முறை அழைத்தபோதும், அந்த அழைப்புக்கு விமானிகளிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை.

    அடிஸ்அபாபா:

    சூடானில் இருந்து எத்தியோப்பியா நாட்டின் அடிஸ் அபாபா சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த 15-ந் தேதி போயிங் விமானம் ஒன்று புறப்பட்டது.

    விமானத்தை இயக்கும் பணியில் 2 பைலட்டுகள் இருந்தனர். அபாபா சர்வதேச விமான நிலையத்தை விமானம் நெருங்கும் போது விமானம் 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.

    அப்போது விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானத்தை தரை இறக்குவதற்கான தகவல் விமானிகளுக்கு அனுப்பப்பட்டது.

    ஆனால் அந்த அழைப்பை விமானிகள் இருவரும் எடுத்து பேசவில்லை. பல முறை அழைத்தபோதும், அந்த அழைப்புக்கு விமானிகளிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை.

    அதன்பின்பு தான் விமானிகள் இருவரும், விமானத்தை தானியங்கி கருவிகளுடன் இயக்கிவிட்டு, விமானிகள் அறையில் அசந்து தூங்கி கொண்டிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விமானத்தை பத்திரமாக தரை இறக்க ஏற்பாடு செய்தனர். அதன்படி விமானம் எச்சரிக்கை மணி அடித்தபடி ஓடுபாதையை நெருங்கிய போது, அலாரத்தின் தொடர் சத்தத்தால் விமானிகள் விழித்து கொண்டனர்.

    அதன்பிறகு அவர்கள் பத்திரமாக விமானத்தை தரை இறக்கினர். சுமார் 25 நிமிட தாமதத்திற்கு பிறகு விமானம் தரை இறங்கியது. விமானம் வானத்தில் பறந்தபோது விமானிகள் அசந்து தூங்கிய விவகாரம் குறித்து அதிகாரிகள் குழுவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    போயிங் நிறுவனத்தின் 737 மேக்ஸ் ரக விமானங்களில் அனைத்து மென்பொருள் அப்டேட்டுகளும் முடிந்ததாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
    நியூயார்க்:

    இந்தோனேஷியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் லயன் ஏர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 189 பேர் பலியாகினர். இதேபோல் கடந்த மாதம் எத்தியோபியன் ஏர் விமானம் விபத்துக்கு உள்ளானதில் 157 பேர் பலியாகினர்.  

    இந்த இரு விமானங்களும் 737 மேக்ஸ் ரக போயிங் விமானங்கள் ஆகும். இவ்விரு விபத்துகளும் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து உலக நாடுகள் அனைத்தும் இந்த 737 மேக்ஸ் ரக விமானங்களை தரை இறக்கியது. 



    இந்த விபத்துகளுக்கு  விமானத்தை கையாளும் அமைப்பு பழுதானதே காரணம் என கண்டறியப்பட்டது. இதனால் 737 மேக்ஸ் ரக விமானங்களை அப்டேட் செய்ய பல முயற்சிகளை போயிங் நிறுவனம் மேற்கொண்டது.

    தற்போது 737 மேக்ஸ் ரக விமானங்களில் அனைத்து மென்பொருள் அப்டேட்டுகளும் முடிந்துள்ளதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது.

    விமானங்கள் மீண்டும் சேவைக்கு செல்லும் முன் அமெரிக்க மற்றும் சர்வதேச விமான கட்டுப்பாட்டாளர்களிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும்.  

    விமானங்களின் அனைத்து தொழில்நுட்பங்களும், மென்பொருள் அப்டேட்டுகளும் முடிந்துள்ளன. விமானம் இறுதி ஒப்புதலுக்காக தயார்படுத்தப்பட்டு வருகிறது என தலைமை நிர்வாகி டென்னிஸ் முய்லேன்பர்க் தெரிவித்துள்ளார்.

    விமானங்களில் தானியங்கி முறையில் செயல்படும் பாதுகாப்பு அமைப்புகள் மென்பொருள் மூலம் அப்டேட் செய்யப்பட்டு சுமார் 207  737 மேக்ஸ் ரக விமானங்கள் சுமார் 360 மணி நேரங்களுக்கு சோதனை செய்யப்பட்டதாக போயிங் தெரிவித்துள்ளது.

     மீண்டும் விமான போக்குவரத்தை மேற்கொள்வதற்கு நிர்வாகத்திடம் இருந்து ஒப்புதல் பெறும் வகையில் ஃபெடரல் நிர்வாகத்திற்கு கூடுதல் தகவல்களை போயிங் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    737 மேக்ஸ் ரக போயிங் விமானங்களை மீண்டும் இயக்க, வரும் 23ம் தேதி டெக்சாஸ் மாநிலத்தில் ஃபெடரல் விமான போக்குவரத்து நிர்வாகம் ஆலோசனை நடத்த இருக்கிறது.

    அமெரிக்கா ஒப்புதல் அளித்த பின்னர், 737 மேக்ஸ் ரக விமானங்களை சர்வதேச அளவில் மீண்டும் இயக்க அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என ஃபெடரல் நிர்வாக அமைப்பின் டேனியல் எல்வேல் கூறினார். இதனை போயிங் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 
    டெல்லியில் விமான நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்த போயிங் விமானத்தில் திடீரென தீ பிடித்தது. இதையடுத்து தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. #Boeing777CaughtFired
    புது டெல்லி:

    டெல்லி விமானநிலையத்தில் நேற்றிரவு டெல்லியில் இருந்து சான்ஃப்ரான்சிஸ்கோ செல்ல ஓடுதளத்தில் போயிங் 777 விமானம் நின்றுக் கொண்டிருந்தது. இந்த விமானத்தின் பின்பகுதியில் இருந்த ஏசியில் பழுதடைந்துள்ளது.

    ஏசியை பழுது பார்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென எதிர்பாராத விதமாக பின்பகுதியில் தீப்பிடித்தது. இதையடுத்து ஊழியர்கள் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில்  ஈடுபட்டனர்.

    சிறிது நேரம் கழித்து தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் நடக்கவிருந்த மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. தீப்பிடித்தபோது பயணிகள், விமானிகள் என யாரும் உள்ளே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  #Boeing777CaughtFired  
    ×